Category கட்டுரைகள்

காஞ்சிபுரத்தின் வரலாறு – சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை

சங்க காலத் தமிழக வரலாற்றினை அறிவதற்குத் துணை நிற்பவை சங்க இலக்கியங்களாகும். பாண்டியர் தலைநகரான மதுரையைச் சங்க இலக்கியங்கள் மதுரை, கூடல் என்ற இருபெயர் களால் சுட்டுகின்றன. அதுபோல் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியைச் சங்க இலக்கியங்கள் காஞ்சி, கச்சி என்ற இரு பெயர்களால் குறிப்பிடுகின்றன. காஞ்சி, காஞ்சிபுரம், கஞ்சி, கஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சீபுரம், காஞ்சி…

தென் தமிழ்நாட்டில் உருக்கு ஆலை – கோட்டாறின் கதை

இயற்கையாகவே திருவிதாங்கூர், குறிப்பாகத் தென் திருவிதாங்கூர் தாது வளங்களுக்குப் பெயர் பெற்றதாகும். கன்னியாகுமரியிலும் மணவாளக்குறிச்சியிலும் உள்ள கடற்கரையில் படிந்துள்ள கனரக இயற்கைத் தாதுக்களாகிய மானோசைட் (Manosite), இல்மெனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile), சிற்கோம்ப் (Zircomb), ទាល់ीम (Sillimanite), शाल (Garnet) ஆகியவை உலகப் புகழ்பெற்றவையாகும். கன்னியாகுமரிக்கு அருகில் கிடைக்கும் சிப்பி வகைகள் பொதுவாக வீடு கட்டுவதற்கு…

முனைவர் வெ. வேதாசலம் – சான்றோர் வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் பிறந்த இவர், முதுகலைப் பட்டத்தோடு தொல்லியல், கல்வெட்டு, அருங்காட்சியசு இயல் தொடர்பான முதுநிலைப் பட்டயமும் பெற்றவர். பாண்டிய நாட்டுச் சமுதாயம், பண்பாடு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ் நாடு தொல்லியல் துறையில் முப்பத்து நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தொல்லியல் துறையில் அருங்காட்சியகக் காப்பாட்சியர், முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளர் ஆகிய பணிப்…

கோவில் திருக்குளங்களை பராமரித்த சோழ நாட்டு வணிகர்களான கவறை செட்டிகள்

சோழ நாட்டில் திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் நாயனார் என்பவர் பிறவியில் பார்வையற்றவர். கோவில் திருக்குளத்தில் இறங்கி மண்ணை (குளங்கல்ல) வெட்டியெடுத்துக் குளக்கரையில் இருந்து ஒரு கயிற்றை கட்டி அதைத் தடவிக் கொண்டே கரையிலே போடுவார். இறுதியில் தான் குளங்கல்லிய (தூர்வாரிய) குளத்தில் மூழ்கி எழுந்து இறைவன் அருளால் கண் பார்வை பெற்றார். சோழ தேசத்தில் திருவிடைமருதூர்…

கிழக்கத்திய சாமி கதையும் சில வரலாற்று உண்மைகளும்

தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டம் வட்டத்தில் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்ற கொற்கை. முற்காலத்தில் பாண்டியர்களின் முத்துக்குளி துறைமுகமாக இருந்துள்ளது. கொற்கையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாழவல்லான் என்ற ஊர் இருக்கிறது. இங்கு கிழக்கத்திய சாமி கோயில் என்று ஒரு பீடம் மட்டும் காணப்படுகிறது. வாழவல்லானைச் சேர்ந்த திரு.பக்கிள் என்பவரின் குடும்பத்தவர் ஓர் ஓலைச் சுவடிக் கட்டினை…

சோழர்கள் கடற் போர்கள் துவங்க காரணமான வணிகக் குழுக்கள்.

படம்: இலங்கையில் சோழ கடற்படைகளை வரவேற்கும் ஐநூற்றுவ வணிகர்கள். தென்னக மற்றும் சோழ மன்னர்கள் கடல்கடந்து மற்ற நாடுகளில் காலடித்தடம் பதிப்பதில் பேருதவியாகவும், நாட்டின் நிலமை, படைபலம், எந்த நேரத்தில் தாக்கவேண்டும் என்ற தகவலும் அளித்தவர்கள் வணிகர்கள். குறிப்பாக சோழர்களின் இலங்கை வெற்றியை சரியான நேரத்தில் கணித்து, தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்தவர்கள் ஐநூற்றுவ வளஞ்சியர்…

பாண்டியரின் வரலாற்றை முதலில் எழுதிய மங்கள அரையன் என்னும் வைத்தியக் குல வீரர்கள்

பாண்டியனது ஆட்‌சியில்‌ முற்பகுதியில்‌ எல்‌லாப்‌ படைகட்கும்‌ மாசாமந்தானாக (மகா சாமந்தாதிபதி – பெரும் படைத்தலைவன்) விளங்கியவன்‌ சாத்தன் கணபதி ஆவான். அதனால் சாமந்‌த பீமன்‌ என்று வழங்கப்பெற்றவன்‌. இவன் வைத்திய குலத்தில் பிறந்தவன். இவன்‌ திருப்பரங்‌குன்றத்திலுள்ள கோயிலுக்குத்‌ திருப்பணி புரிந்து அங்குள்ள திருக்குளத்தையும்‌ திருத்தி அறச்செயல்ககளையும்‌ ஒழுங்குபடுத்தினான்‌ என்று அவ்வூரிலுள்ள பாண்டியன் பராந்தகனது ஆறாம் ஆண்டு…

நாணய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாங்க வேண்டிய , தமிழக அரசுளின் காசுகள் 38 நூல்கள் கொண்ட தொகுப்பு.

நாணய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாங்க வேண்டிய , தமிழக அரசுளின் காசுகள் 38 நூல்கள் கொண்ட தொகுப்பு. நாணயவியல் சார்ந்த நூற்கள் தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) தொகுதி – 1 (1994) Rs. 40 தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) தொகுதி – 3 (2004) Rs. 60 தமிழகத்…

தமிழகத்தில் அதிகம் அறியப்படாத பாரம்பரிய கோயில்களை ஆய்வு செய்ய இந்தியத் தொல்லியல் துறை முடிவு

சென்னை: இந்தியத் தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் ஒரு ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், அங்குள்ள கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிய நீங்கள் விரைவில் பதில் பெறலாம். மாமல்லபுரத்தில் உள்ள குகைக் கோயில்கள் பாதாமி சாளுக்கியர்களால் ஈர்க்கப்பட்டவை என்று கூறப்பட்டாலும், கற்கோவில்களின் பரிணாமம் அறியப்படவில்லை. பல்லவ மன்னன்…