“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.” (குறள் 611)
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
அனைவருக்கும் வணக்கம்,
மரபுசார் வரலாறு மீது ஆர்வமுள்ள வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வரலாற்றுத் தேடலைப் பதிவு செய்யும் களமாக நமது ஹெரிட்டேஜர் இதழ் திகழ்ந்து வந்துள்ளது. இனி ஹெரிட்டேஜர் “மரபாளர்” என்ற பெயரில் மின்னிதழாக வெளிவருகின்றது. மரபாளர் இதழின் நோக்கம் மக்களிடையே உள்ள பண்பாட்டுத் தொடர்புகள், வரலாற்று அடையாளங்கள், சடங்குகள், மரபுசார் அறிவு, பதியப்படாத வரலாற்றுத் தகவல்களைத் திரட்டி அளிப்பதோடு, இலக்கியம் மற்றும் வரலாற்றை மீண்டும் வாசிக்கும் தளமாக இது இருக்க வேண்டும் என்பதே.
இவ்விதழுக்கு ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் முதல், ஆர்வலர்கள், மரபுசார் அறிவுடையோர், கல்வியாளர்கள், மாணவர்கள் என பங்களிக்க விருப்பமுள்ளோர், பின் வரும் தலைப்புகளில் தங்களின் கட்டுரைகளைத் தகுந்த மேற்கோள்களுடன் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
 1. தொல்லியல்,
 2. கல்வெட்டு,
 3. மரபு பயணங்கள்,
 4. நிகழ்வுகள்,
 5. மரபுசார் தொழில்கள்,
 6. கலைஞர்கள்,
 7. பழைய கட்டுமானங்கள்
 8. கோவில்,
 9. இலக்கியம்,
 10. வரலாற்றில் முக்கியம் வாய்ந்த இடங்கள், மனிதர்கள், நாட்கள்,
 11. திணைக் குடிகள்,
 12. பழங்கால அரசியல்,
 13. பழங்கால வணிகம்,
 14. சமூக இனக்குழு வரலாறு,
 15. நாட்டார் வழக்காற்றியல்,
 16. பன்னாட்டு தமிழர் வரலாறு,
 17. தென்னக வரலாறு,
 18. ஊர் வரலாறு,
 19. தொழில் நுட்ப வரலாறு,
 20. பழம் பொருட்கள் வரலாறு,
 21. பன்னாட்டு வரலாறு,
 22. புகைப்படத் தொகுப்பு
 23. ஆய்வு நூல் அறிமுகம்
 24. சுற்றுலா தளங்கள்

இதழ் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் வெளிவரும். உங்கள் கட்டுரைகளை ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் அனுப்பவும்.

மின்னிதழ்களைப் படிக்க: https://bit.ly/heritager2024

நன்றியும் அன்புடன்
இராஜசேகர் பாண்டுரங்கன்

இணையம்: www.heritager.in
மின்னஞ்சல்: [email protected]
கைப்பேசி: +91 9786068908
முகநூல்: www.facebook.com/heritagerstore/
WhatsApp: https://whatsapp.com/channel/0029Va5c6aK7Noa1kPzMjY2O
Instagram:  www.instagram.com/heritager.in/

Share your love