முனைவர் வெ. வேதாசலம் – சான்றோர் வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் பிறந்த இவர், முதுகலைப் பட்டத்தோடு தொல்லியல், கல்வெட்டு, அருங்காட்சியசு இயல் தொடர்பான முதுநிலைப் பட்டயமும் பெற்றவர். பாண்டிய நாட்டுச் சமுதாயம், பண்பாடு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் நாடு தொல்லியல் துறையில் முப்பத்து நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தொல்லியல் துறையில் அருங்காட்சியகக் காப்பாட்சியர், முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளர் ஆகிய பணிப் பொறுப்புகளில் இருந்து ஏராளமான தொல்பொருட்கள், தொல்பழங்கால வாழ்விடங்களோடு இடுகாடுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள், கலை 131 வரலாற்றுச் சின்னங்கள். ஓவியங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளார்.

கரூர், கோவலன்பொட்டல் (மதுரை), திருத்தங்கல், மாங்குடி, தொண்டி அழகன்குளம், கீழடி, கொடுமணல் முதலிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் பங்கு கொண்டுள்ளார். தமிழ்நாட்டுத் தொல்லியல், கல்வெட்டு, கோயிற்கலை, சமயம், அரசியல், வரலாறு தொடர்பாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘பராக்கிரம பாண்டியபுரம்’ என்ற இவரது நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் இலங்கையிலும் மாணவர்களுக்குத்தொல்லியல், கல்வெட்டு, கலை வரலாறு குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதோடு அவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் பங்குகொண்டு ஆய்வுக்கட்டுரைகளையும் அளித்துள்ளார். வகைப் அவ தமிழ்நாட்டில் விரிவான களப்பணிகள் செய்ததோடு, இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளார். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, கிரீஸ், ஜோர்டான், இஸ்ரேல், எகிப்து, இலங்கை, கம்போடியா, இந்தோனேசியா, சீனா ஆகிய பல் நாடுகளுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மதுரை தானம் அறக்கட்டளையோடு இணைந்து முன்னூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நடைபயணம் நடத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் ஊர் வரலாற்றை எடுத்துக்கூறி வருகிறார். தொல்லியலையும் கல்வெட்டையும் கலைவரலாற்றையும் யும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கில் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் இன்றும் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தி பயிற்சியளித்து வருகின்றார்.

இவர் வெளியிட்டுள்ள நூல்கள்:

  1. பாண்டியன் நின்றசீா் நெடுமாறன்
  2. பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400)
  3. பாண்டியநாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல் (கி.பி.600-1400)
  4. பாண்டியநாட்டு ஊர்களின் வரலாறு (ஊர், பிரமதேயம், வணிகநகரம், படைப்பற்று)
  5. பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் கி.பி. 600 – கி.பி. 1400
  6. பாண்டியநாட்டில் சமணசமயம் (கி.மு.300 – கி.பி.1800)