Category மற்ற மன்னர்கள்

பாண்டியரின் வரலாற்றை முதலில் எழுதிய மங்கள அரையன் என்னும் வைத்தியக் குல வீரர்கள்

பாண்டியனது ஆட்‌சியில்‌ முற்பகுதியில்‌ எல்‌லாப்‌ படைகட்கும்‌ மாசாமந்தானாக (மகா சாமந்தாதிபதி – பெரும் படைத்தலைவன்) விளங்கியவன்‌ சாத்தன் கணபதி ஆவான். அதனால் சாமந்‌த பீமன்‌ என்று வழங்கப்பெற்றவன்‌. இவன் வைத்திய குலத்தில் பிறந்தவன். இவன்‌ திருப்பரங்‌குன்றத்திலுள்ள கோயிலுக்குத்‌ திருப்பணி புரிந்து அங்குள்ள திருக்குளத்தையும்‌ திருத்தி அறச்செயல்ககளையும்‌ ஒழுங்குபடுத்தினான்‌ என்று அவ்வூரிலுள்ள பாண்டியன் பராந்தகனது ஆறாம் ஆண்டு…