தென் தமிழ்நாட்டில் உருக்கு ஆலை – கோட்டாறின் கதை

இயற்கையாகவே திருவிதாங்கூர், குறிப்பாகத் தென் திருவிதாங்கூர் தாது வளங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.

கன்னியாகுமரியிலும் மணவாளக்குறிச்சியிலும் உள்ள கடற்கரையில் படிந்துள்ள கனரக இயற்கைத் தாதுக்களாகிய மானோசைட் (Manosite), இல்மெனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile), சிற்கோம்ப் (Zircomb), ទាល់ीम (Sillimanite), शाल (Garnet) ஆகியவை உலகப் புகழ்பெற்றவையாகும். கன்னியாகுமரிக்கு அருகில் கிடைக்கும் சிப்பி வகைகள் பொதுவாக வீடு கட்டுவதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

(கோட்டாறின் கதை வர்த்தகமும் நகரிய வளர்ச்சியும் – ஆ. மனுவேல்
₹250

buy Online https://www.heritager.in/shop/kotraatrin-kathai-varthagamum-nagariya-valarchiyum/)

தென் திருவிதாங்கூரில் கிடைத்துவந்த இரும்புத் தாதுவிலிருந்து மரக்கலப்பைக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு உபகரணங்கள், விவசாயக் கருவிகள் கைத்தொழிலாக உருவாக்கப்பட்டுவந்தன. ஆனால், ஏற்றம் இறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் முற்றிலும் பயன்பாட்டில் இல்லாமலிருந்தது”.

வீட்டு உபயோகப் பொருட்களைப் பொறுத்தவரைக்கும் வளைந்து கொடுக்கும் தன்மையில்லாத வெண்கலத்திலான எண்ணெய் விளக்குகள், வீட்டு உபயோகத்திற்கான உணவருந்தும் தட்டு வகைகள் ஆகியவை கைத்தொழிலாகத் தயாரிக்கப்பட்டன. ஆனால், வெளி மார்க்கெட்டில் விலை குறைந்த பொருட்கள் இவற்றுக்குப் பதிலாகக் கிடைத்ததால் இத்தொழிலும் பாதிக்கப் பட்டது. இருப்பினும் நாகர்கோவில், கோட்டாறில் பித்தளை, வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் ஏராளமாகக் கிடைத்தன.

கோட்டாறு வர்த்தக மையம் எந்த அளவிற்கு மஸ்லீன் துணி நெசவிற்குப் பேர் பெற்றதோ அந்த அளவிற்குக் கைத் தொழிலுக்கும் புகழ்பெற்றதாகக் காணப்பட்டது. இந்தியாவில் ஆரம்ப காலந்தொட்டே உருக்குத் தொழிற்சாலை முழுவளர்ச்சி யடைந்திருந்தது. அதைப்போன்று திருவிதாங்கூரிலும் வளர்ச்சி யடைந்திருந்தது. உருக்கினாலான பல பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டன. வாள், குதிரையின் முகத்தில் அணியும் சாதனங்கள், பலவகை வெட்டுக் கருவிகள், விவசாயக் கருவிகள், பீரங்கிகள், மணிவகைகள் ஆகியவை தயாரிக்கப்பட்டதற்கான சான்றாதாரங்கள் உள்ளன. படைவீரர்கள், வாள், வளைந்த குறுவாள், கவசஉடை, துப்பாக்கி ஆகியவற்றைத் தரித்திருந்தனர். இக்கருவிகள் யாவும் கிராமங்களில் உற்பத்திசெய்யப்பட்டன. மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக்கு முன்னரே ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்குத் தேவையான படைக்கலன்களைத் தாங்களே தயாரித்துக்கொண்டன.

உதாரணமாக அரசு அருங்காட்சியகத்தில் காணப்படும் பல உலோகத்தினாலான சாதனங்கள் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள வட்டியூர்க்காவு என்னும் கிராமத்திலிருந்து பெறப்பட்ட இரும்புத் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உருக்கினால் செய்யப்பட்டதற்கான சான்றாதாரங்கள் உள்ளன. வட்டியூர்க்காவு ஒருகாலத்தில் உருக்கு உலோகத்திற்குப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்ந்தது.

தென் திருவிதாங்கூரில் சுசீந்திரத்துக்கு அருகிலுள்ள மருங்கூர் என்னும் சிறிய கிராமம் உலோக உற்பத்தி மையமாகத் திகழ்ந் துள்ளது. இங்கு வாழும் முதியவர்கள், தங்கள் இளமைப்பருவத்தில் இரும்பை உருக்கிப் பல்வகைக் கருவிகள் செய்வதை நேரில் பார்த்ததாக நினைவுகூருகிறார்கள். அவர்களிடம் சேகரித்த தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. அருகிலுள்ள பர்வத மலை விருந்து சரிந்த பகுதிகளில் ஆழமான குழிகள் தோண்டி LOGIST கலந்த தற்போது கூட அவ்வாசசக்தாண்டப்பட்ட குழிகளைக் கற்பெலாம். அவ்வாறு சேகரிக்கப்வர இரும்புத் தாதுக்கள் மருங்கூர் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு உருக்கப்பட்டன் அக்காலத்தில் மருங்கூர் கிராமத்தில் இரும்புவேலை செய்பவர்கள் அகாளமானோர் வளமுடன் வசித்துவந்தார்கள். விவசாயக் கருவிகள், ராணுவ வீரர்களுக்கான தளவாடங்கள் ஆகியவற்றைச் செய்வதில் கைதேர்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். வீடு களுக்கு அருகிலேயே வார்க்கப்படும் தொழிற்சாலைகள் அமைந்திருந்தன. ஆனால், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட உருக்கில் பல்வகைக் கருவிகளைச் செய்துவருகின்றனர். இரும்பு, உருக்கினை ஊதுலையில் பக்குவமாக வாட்டி, பதப்படுத்திக் கருவிகளை வார்ப்பதற்குத் தனித்திறமையும் அனுபவமும் பெற்ற தொழிலாளர்கள் தேவை. தற்போது மருங்கூரில் வசிக்கும் பல தொழிலாளர்கள் அத்திறனைத் தங்கள் முன்னோர்களிடம் பாரம்பரியமாகக் கற்றதாக நினைவுகூருகிறார்கள். இவர்கள் கூர்மையான ஆயுதங்களைத் தயார் செய்வதிலும் வல்லவர்கள்!. பெறப்பட்டுள்ளன. ட்டன.

பெளதீக அடிப்படையில் தென் திருவிதாங்கூர் குறிப்பாக நாஞ்சில் நாடு கனிமவளம் நிறைந்த அடுக்குப் பாறைகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. சுமார் ஒரு நூற்றாண்டிற்குப் முன்னால் வரைக்கும் மைலாடி கிராமத்தில் இரும்புத் தாதுக்கள் உருக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. அருகிலுள்ள மலைக்குன்றுகளில் கிடைத்த மண்ணுடன் கலந்த இரும்புத் தாதுவைச் சலித்து எடுத்து உருக்கப்பட்ட இரும்பைக் கொல்லர்கள் வாங்கிவந்து அவற்றை விவசாயக் கருவிகளாக உருவாக்கினர். இவ்வாறு மைலாடிக் கொல்லர்களால் உருவாக்கப்பட்ட இரும்பிலான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டவற்றைக் காட்டிலும் தரத்திலும் உழைப்பிலும் நீடித்து விளங்கின. மைலாடி போன்று, ஆரல்வாய்மொழியிலும் இரும்பை உருக்கும் ஆலைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

நாஞ்சில் நாட்டின் பலபகுதிகளில் குறிப்பிட்ட தொழில்
சார்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்துவந்துள்ளனர். குறிப்பாகச் சுசீந்திரம் கோயிலுக்கு அருகில் உலோகம் சம்பந்தமான மதுரை மாவட்டத்தின் வடகிழக்குப் பாகத்தின் மண்ணின மேற்பரப்பு இரும்புத்தாது கனிமம் நிறைந்ததாகக் ஒரே சீரான கலவை நிதைந்ததாகக் காணப்பட்ட இப்பறது. காணப்பட்டுள்ளது கவரப்பிரசாதமாகும். அங்லியற்கை வளத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வட்டாரத்தைச் சுற்றி இரும்புத் தொழிற்சாலைகள் இருந்துள்ளன. இதன் காரணமாக வைகை நதியின் தென்பகுதியைச் சுற்றியிருந்த காடுகள் அழிக்கப்பட்டன. இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதன் காரணமாக இரும்புத்தாது நிறைந்த களிமண் நிலப்பரப்பு மாறி, சரளமண் நிறைந்த பகுதியாகக் காட்சியளித்தது. இதைப்போன்று தென் திருவிதாங்கூரின் பெரும்பகுதியின் மேற்பரப்பு இரும்புத்தாது நிறைந்ததாகக் காணப்பட்டது”.

சேலம் மாவட்டம், பரங்கிப்பேட்டை, தென் ஆற்காடு ஆகிய ஊர்களிலுள்ள இரும்புத் தாதுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உருக்கிற்கு இங்கிலாந்தில் நல்ல வரவேற்பிருந்தது. மேலும், 1833ஆம் ஆண்டு இந்தியாவின் உருக்கு, இரும்பு, குரோமியம் கம்பெனிகள் மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளிலிருந்து இரும்புத் தாதுவைப் பெற்றுவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இரும்புத் தாதுவைப் போன்று திருவிதாங்கூரில் கிராபைட் என்னும் வேதிப்பொருள் கி.பி. 1845ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. திருவனந்தபுரத்தின் தெற்கிலும் வடக்கில் கொச்சி வரையிலும் இவ்வேதிப்பொருள் கிடைத்துள்ளது. திருவனந்தபுரத் திற்குத் தெற்கே கிடைத்த கிராபைட்டைப் பரிசோதனை செய்து பார்த்ததில் நல்ல மென்மை படைத்ததாகக் காணப்பட்டது. மேலும், பழைய முறையில் பென்சில் தயாரிப்பதற்கு இது ஏற்றதாகக் காணப்பட்டது”.

– ஆ. மனுவேல்

====

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ‘கோட்டாறு’ என்ற சிறிய பகுதியைப் பற்றி வரலாற்று, சமூகவியல், பொருளாதாரப் பார்வையில் எழுதப்பட்டது இந்த நூல். கோட்டாறு 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் வரலாறு 1818 வரை தொடர்ச்சியாகக் கிடைக்கிறது; பண்டைய வர்த்தகத் தளங்களில் இதுவும் ஒன்று. இன்றும் (2018) இதன் நீட்சி தொடருகிறது. இந்தக் காலகட்டங்களில் ஆரம்பகாலப் பாண்டியர், சோழர், நாயக்கர் எனப் பலரின் படையெடுப்பால் இப்பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது. சாதி, மதரீதியான மாற்றங்களும் இந்நகரைப் பாதித்துள்ளன. இவற்றை விரிவாக முதல்முறையாக அபூர்வமான சான்றுகளுடன் விளக்குகிறது இந்நூல்.

கோட்டாறின் கதை வர்த்தகமும் நகரிய வளர்ச்சியும் – ஆ. மனுவேல்
₹250

Buy Online https://www.heritager.in/shop/kotraatrin-kathai-varthagamum-nagariya-valarchiyum/

Order on WhatsApp: wa.me/919786068908