Category கட்டடக்கலை வரலாறு

தமிழகத்தில் அதிகம் அறியப்படாத பாரம்பரிய கோயில்களை ஆய்வு செய்ய இந்தியத் தொல்லியல் துறை முடிவு

சென்னை: இந்தியத் தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் ஒரு ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், அங்குள்ள கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிய நீங்கள் விரைவில் பதில் பெறலாம். மாமல்லபுரத்தில் உள்ள குகைக் கோயில்கள் பாதாமி சாளுக்கியர்களால் ஈர்க்கப்பட்டவை என்று கூறப்பட்டாலும், கற்கோவில்களின் பரிணாமம் அறியப்படவில்லை. பல்லவ மன்னன்…

சங்க காலத்தில் வீடுகளுக்கு கூரை ஓடுகள் உண்டா?

To Buy: சங்க கால இலக்கியங்களில் கூரை ஓடு பற்றி ஓரிடத்தில் கூடக் குறிக்கப்படவில்லை. “புல் வேய்ந்த கூரைகள்”, “வேயா மாடங்கள்” பற்றிப் பல செய்திகள் அக்காலப் புலவர்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓடு பற்றிய செய்தியைக் கூறவில்லை. இலக்கியத்தில் “ஓடு” என்னும் சொல்லாட்சி இடம்பெறவில்லை என்பதால் ஓடுகளே அக்காலத்தில் இல்லை எனக் கூறும் முடிவிற்கு…

சிற்பச் செந்நூல் – வை . கணபதி ஸ்தபதி (புதிய பதிப்பு)

சிற்பச் செந்நூல் – வை . கணபதி ஸ்தபதி (2023 புதிய பதிப்பு) தமிழ்மொழிக்கு அகத்தியனைப் போல சிற்பக் கலைக்கு மயனே முதலாசிரியன் ஆவான். இவன் இயற்றிய நூல் ‘மயமதம்’ எனப்படும். கட்டடக் கலையிலும், சிற்பக்கலையிலும், இவன் வகுத்தளித்த கொள்கையே ‘மயமதம்’ எனப்படுகிறது. இன்றளவும், இந்நூல் சிறப்பான நூலாக, அறிஞர்களாலும் சிற்பிகளாலும் போற்றிப் பின்பற்றப்படுகிறது. இவன்…

வெங்கனூர் ஸ்ரீ சமுத்திரத்து அம்மன் கோவில் (சமுத்ர கன்னி அம்மன்)

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் இயற்கை எழிலில் அமைந்துள்ள சமுத்திரத்து (சமுத்ர கன்னி) அம்மன் கோவிலில், சப்த கன்னியர் திருவுருவக் கற்கள், பாப்பாத்தி அம்மன் திரு உருவங்கள், மதுரை வீரன் உருவங்கள் உள்ளன. சமுத்திர அம்மன் என்பது நீரில் வந்த தெய்வம் என்பது இதனை வழிபடும் மக்களின் கருத்தாக உள்ளது.  இதனை கடல் தெய்வம் என்றும், கடலின்…

சாளரம் – கட்டடக்கலை வரலாறு

கோயிற்கட்டடக்கலைக் கூறுகளில் சாளரங்கள் அலங்கார வேலைப்பாட்டிற் காகவும், பயன்பாட்டுத் தேவைக்காகவும் இடம்பெறும் ஒரு கூறாகும். துவக்க காலத்தில் எளிமையாக இருந்த இவை காலம் செல்லச் செல்லப் புதிய வடிவங்களைப் பெற்று நன்கு வளர்ச்சியடைந்தன. சாளரம் என்பது கருவறையின் வெளிச் சுவரிலும் அர்த்தமண்டபச் சுவரிலும் இடம்பெறும். சாந்தார வகைக் கோயில்களின் கருவறையானது மூடிய திருச்சுற்றுடன் விளங்கும். இதில்…