வெட்டிவேலை என்றால் பலர் பயனற்ற வேலை என்று கருதுகின்றனர்.
www.heritager.in
உண்மையில் கூலி கொடுக்காமல், குடிமக்களிடம் உடல் உழைப்பை கட்டாயமாகப் பெறும் பணிகளே வெட்டி வேலை எனப்பட்டது. பெரும்பாலும் இவை ஊர் பொதுவேலை அல்லது நாடு பராமரிப்பு வேலையாக இருந்துள்ளன.
இந்த, வெட்டி என்ற சொல், “விஷ்டி வெஷ்டி विष्टि” என்ற சமஸ்கிருத சொல்லின் மூலத்தை ஒத்துள்ளது. இதற்கு கட்டாயப் பணி என்று பொருள். இதனை மக்களிடம் இருந்து பெறவேண்டிய ஒருவகை வரி என்றும் அதனை உடல் உழைப்பின் மூலம், அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதும், அன்றைய நடைமுறையாக இருந்துள்ளது.
வேதம் ஓதி வேள்வி செய்யும் கற்றரிந்த பிராமணர்களைத் தவிர அனைவரிடமும் அரசன் இந்த கட்டாயப் பணியை வாங்க வேண்டும் என கௌடில்யர் கூறுகிறார். அதே நேரத்தில் இரண்டாம் நிலை பிராமணர்களிடம் விஷ்டி எனும் வெட்டிவேலையை வாங்கிக்கொள்ளலாம் என மற்றொரு நூல் கூறுகிறது.
இந்த வேலை விவரங்களை ஊர் கணக்கரால் வைத்து குறித்துக்கொள்ளப்பட்டது. இது பல வேளைகளில் அரசுக்கு நேரடியாக செலுத்தும், வரி என்று கூறப்பட்டாலும், சில வேளைகளில் நில உடைமையாளர்களும், இந்த விஷ்டி (Vishti – Forced Labour) எனும் கட்டாய வேலை வரிவிதிப்பை மக்கள் மீது திணித்துள்ளனர். இந்த வெட்டிவேலைக்கு ஆள் தரும் கிராமங்களுக்கு வரி தள்ளுபடியும் சில நேரங்களில் தரப்பட்டன. இந்த கட்டாயவேலையை செய்வோரை விஷ்டிக்காரர் என சோழர் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 13 நூற்றாண்டுக்குப் பிறகு இம்முறை மறையத்துவங்கியுள்ளது.
போர்க்காலங்களில், சாலை, பொது கட்டடங்கள், நீர்நிலைகள், கோவில் குளங்கள், வாய்க்கால்கள் போனறவை இவ்வாறான பண்களுக்கு கூலி இல்லாமல் கட்டயாமாக ஒவ்வொரு மக்களிடமும் இருந்து வேலை வாங்கப்பட்டன. திபெத் பெருவழியும் இவ்வாறே உருவாக்கப்பட்டது என்பது வரலாறு.
அதனால் தான் இன்றும், ஊரில் வேலைக்கு போகலையா என்பதை “வேலைவெட்டிக்கு” போகலையா என்று கேட்பர். வேலையே கிடைக்கவில்லை என்றாலும் எதாவது பணியை எடுத்து தன்னார்வமாக செய்யவேண்டும் பெரியவர்கள் குறிப்பிடுவர்.
ஆக, அந்த காலத்தில் அனைவரும் வெட்டிவேலை செய்துள்ளனர்.
மூலம்: மௌரியருக்குப் பிற்பட்ட குப்தர் கால வருவாய் அமைப்பு முறை
₹175
அதிகம் விற்பனையானவை
செட்டிநாட்டு நகரத்தார் வீடுகளும் கட்டடக்கலை மரபும் – முனைவர் இராசு. பவுன்துரை
தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு – டாக்டர் இராசு பவுன்துரை
தமிழகத்தில் அடிமை முறையும் ஆள் விற்பனையும் – புலவர். செ. இராசு
தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (800-1500) – நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு
உளி ஓவியங்கள் (மதுரை புதுமண்டபச் சிற்பங்களின் கோட்டு ஓவியங்கள்)
நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி – 1 & 2 (Hero Stone Inscriptions and Sculptures)