முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 2

சாளுக்கிய தூதுவனுக்கு பெண் வேடம்

Join us telegram: www.t.me/teamheritager

சாளுக்கிய படைத் தலைவர்களான கண்டப்பையன், கங்காதரன் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்ஆகவ மல்லனின்  மக்களான விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும், படைத் தலைவனான சங்கமையனும்  செருக்களத்தில் இருந்து  ஓடி மறைந்தனர் ராஜாதிராஜன் போர்க்களத்தில் தனக்கு கிடைத்த கரிகளையும், பரிகளையும் விலை உயர்ந்த பொருட்களையும் கைக்கொண்டான். சிறுதுறை, பெருந்துறை, தைவபீமகசி என்னும் முத்துறைகளிலும் போர் யானைகளை நீராடி, சாளுக்கியரின் இலட்சினையாம் பன்றி குறிக்கப்பட்ட குன்றுகளின் மீது சோழரின் லட்சினையாம்  புலி பொறித்து மீண்டுடான்.   சோழர்களை  வெல்வது அரிது என்று எண்ணிய ஆகவ மல்லன் ராஜாதிராஜன் பால் ஒரு தூதுர் சிலரை அனுப்பி வைத்தான். சோழன் அத்தூதுவருள் ஒருவருக்கு ஐங்குடுமி வைத்தும், மற்றவற்குப்  பெண் உடை அணிவித்தும், அவர்களுக்கு முறையாக ஆகவ மல்லன் என பெயரிட்டு சாளுக்கிய மன்னன் பால் அனுப்பி வைத்தான்.

(முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1 படிக்க)

இக் காட்சியை கண்ணுற்ற மாமல்லன் கடுஞ்சினம் கொண்டான் பெரும்படை திரட்டி சோழர்களை பூண்டி போர்க்களத்தை சந்தித்தான். இருப்பினும் தோல்வியால் துவண்டு போனான். ராஜேந்திரன் சாளுக்கியர் தலை நகரான கல்யாணபுரம் கைப்பற்றி அங்கு வீராபிடேகம் செய்துகொண்டான்இதன் நினைவாக விசயராஜேந்திரன் என்னும் விருதினை கொண்டான். கல்யாணபுரம் சூறையாடப்பட்டு பல அரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றுள் வாயிற்காவலர் சிலை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாயிற்க்காவலர்சிலை முன்பு தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது.

இது தஞ்சை இராஜராஜேச்சுரத்தில் உள்ளது.   இச்சிலையின் பீடத்தின் கண்  ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீவிசய ராஜேந்திர தேவர்    கல்யாணபுரம் எறிந்து கொண்டுவந்த துவாரபாலகர் என பொறிக்கப்பட்டுள்ளது. இராஜாதிராஜனின் 26 வது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட, கிபி 1044 தேதியிட்ட கல்வெட்டிலிருந்து இவன் ஆகவ மல்லனுடன். மேற்கொண்ட போர் நிகழ்ச்சி பற்றி காண முடிகிறது. ஆகவ மல்லன் கி.பி 1042ஆம் ஆண்டு அரியணை ஏறினான் என்பதை நாம் முன்பே கண்டோம். எனவே,  ராஜாதி ராஜனின் மேலைச் சாளுக்கிய போர் கி. பி 1042,1043-ஆம் ஆண்டுகளில் நடந்திருக்க  வேண்டும் என கருத முடிகிறது.

இவ்விதமாக இராஜேந்திரனின் ஆட்சிக்கால  இறுதியில் நடைபெற்ற சோழ சாளுக்கிய போராட்டம், ராஜேந்திரனின் மகன் இராஜாதி இராஜன் ஆனால் மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிகிறோம். ராஜாதி ராஜன் அந்த காலத்து படை தலைமை ஏற்று பெற்ற வெற்றி ராஜேந்திரனுக்கு கிடைத்த வெற்றியாக கொள்ள வேண்டும்.  

இராஜாதிராஜனின் மேலை சாளுக்கிய போரானது மெய்க்கீர்த்தி வழி அறியமுடிகிறது,

ஆகவ மல்லனும் மஞ்சற் கேவுதன் 

தாங்கரும் படையால் ஆங்கவன் சேனையுட்

கண்டப் பயனும் கங்கா தரனும்   

வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல்

விருதர் விக்கியும் விசயாதித்தனுங்

கருமுரட் சங்க மய்யனும் முதலினர்  

சமர பீருவொத் துடைய விரிசுடர்ப்

பொன்னோ டைக்கரி புரவியொடு பிடத்துத்

தன்னா டையிற் சயங்கொண் டொன்னார்

கொள்ளும் பாக்கை யிள்ளெரி மடுப்பித்து.

ராஜாதி ராஜனின் மெய்க்கீர்த்தி வழி ஆகவ மல்லனிடமிருந்து, வேங்கி மீட்டெடுக்கப்பட்ட கீழை சாளுக்கிய ராஜாதிராஜனிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும். ராஜராஜன் தொடர்ந்து வேங்கி நாட்டினை அமைதியாக ஆண்டு வந்தது நம்மால் கருத இடமுண்டு. இருப்பினும் ராஜாதி ராஜன் ஆகவ மன்னனுடன்  செய்த போரில் இறுதியாக வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.

கொள்ளிப்பாக்கையில் ராஜாதி ராஜனை கடுமையாக எதிர்த்துப் போர் செய்த ஆகவ மல்லன், தனது மகனை இழந்து விடவில்லை என தெரிய முடிகிறது.    அதே காலத்தில் அதே நேரத்தில் அவன் வேங்கி நாட்டின் மீதும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினான் என்பதை பல ஆதாரங்கள் உறுதி செய்கிறது. ஆகவ மல்லனின் ஆணைக்கு உட்பட்ட சிற்றரசனாகிய சோபனராஜா என்பவன் கி.பி 1044இல தன்னை வேங்கி புரவரேஸ்வரா என கூறிக் கொண்டான். இவனுக்குப் பின் ஆண்ட மன்னர்களும் இப்பட்டத்தினை சூடிக்கொண்டனர்.

இதனால் வேங்கி பகுதியை ஆகவ மல்லன். தன் ஆட்சிக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்ற செய்தி தெரிய முடிகிறது. கி.பி 1047 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று ஐதராபாத்து அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.  அக்கல்வெட்டு மூலமாக ஆகவ மல்லன் வேங்கி நாட்டு மன்னனையும் கலிங்க நாட்டு மன்னனையும் அடித்து நொறுக்கினார் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆனால்.   கி.பி 1047ஆம் தேதியிட்ட திராக்சாரமாவில்  கிடைத்த இராஜாதிராஜன் கல்வெட்டு ஒன்று இவன் பீஸ்மேஸ்வரா கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்தது பற்றி கூறுகிறது. எனவே,   வேங்கி நாடு முழுமையும் ஆகவ மல்லன் ஆட்சிக்கு உட்பட்டு இருக்குமா என்ற ஐயப்பாடும் உண்டு.  இது குறித்து சாளுக்கியஇராஜராஜனின் சோழர்களின் ஆதரவினை விட்டு மேலை சாளுக்கியருடனான பழைய விரோதத்தை மறந்து, ஆகவ மல்லனுடன்  உடன்பாடு செய்துகொண்டிருக்க வேண்டுமென்பதே தென்னிந்திய வரலாற்று மேதை திரு நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கருத்து.

இக்கருத்து ஆகவ மல்லனின் பிரதானயான நாராயண பட்டர் என்பார், சாளுக்கிய ராஜராஜனின் அரசவையில் இடம் பெற்றிருப்பதால், அவனுக்கு நந்தம் பூண்டி என்ற சிற்றூர் தாடகையை அளிக்கப்பட்டிருந்தாலும் வலுப்பெறுகிறது. நாராயணனின் மகளான குப்பம்மா கி.பி 1055-1056இல் திராக்கிரமா கோவிலுக்கு அறக்கொடை அளித்தாலும் இது உறுதிப்படுகிறது. ராஜேந்திரனுக்கு பின்பு அரசோச்சிய சோழப் பெருமன்னர்களின் கல்வெட்டுகளை.   நாம் பார்க்கும் பொழுது. வேங்கி நாட்டின் மீது அக்கறை கொண்டு ஆர்வத்துடன் உதவி புரிந்த்தாக எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை.    எனவே, ராஜேந்திரனின் பின்னோர்கள் தம் முன்னோர்களை போல்வேங்கிநாட்டின் நடவடிக்கைகளில் நாட்டம் கொள்ளாது  இருப்பது தெரியவருகிறது.

முதலாம் ராஜேந்திரன் கடல் கடந்த வெற்றி  புலிக்கொடியை பல இடங்களில் பறக்க விட்டது. ஆற்றல் மிகுந்த படைகொண்டு சேர நாடு பாண்டிய நாடு, மேலைச் சாளுக்கிய நாடு, கங்கைக்கரை நாடு போன்ற பல நாடுகளை வென்றதுமட்டுமல்லாது தன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்திறன்.   அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி ஈழம்,கடாரம், சுமத்ரா,மாரக்கவாரம் போன்ற நாடுகளையும் வென்று பெரும் புகழ் உச்சத்தில் நின்றான்

Join us telegram: www.t.me/teamheritager

காம்போஜ மன்னன்

பல நாடுகளை வென்றது மட்டுமல்லாது பிற நாட்டின் நட்புறவும் கொண்டிருந்தான். ராஜேந்திரன் அது பெருமையை அறிந்த காம்போஜ மன்னன் இவனுடன் நட்புறவு கொள்ள விருப்பம் கொண்டான். தனக்கு செய்த பேருதவியை எண்ணி செய்நன்றி மறவாத காம்போஜ மன்னன், அந்த நட்பின் அடையாளமாக ராஜேந்திரனுக்கு. தேரளித்து காட்டினான். இவன் தேர் அளித்து நட்புறவு கொண்ட செய்தியை ராஜேந்திரனது கரந்தைச் செப்பேடு கூறுகிறது.

ராஜேந்திர சோழனின் துணை கொண்டு தான் நல்லாட்சி நடத்த முடியும் என்று காம்போஜ மன்னன் ராஜேந்திரனிடம் நட்பு கொண்டது இதன் மூலம் அறிய முடிகிறது. தாய்லாந்து என அழைக்கப்படும் சயாம் நாட்டிற்கு கிழக்குள்ளதும்,   கம்போடியா என அழைக்கப்படுவதான ஆசிய நாடே பண்டு நாடு என வழங்கப்படுகிறது. ராஜேந்திரன் அது வெற்றியை அவனது கீர்த்தியே சிறப்பு ஏற்றுகிறது. அயல்நாட்டு மன்னர்களுடைய மதிப்பை, மரியாதையை தேடித்தந்தது. பலநாட்டு மன்னர்கள் இவனுக்கு மரியாதை செலுத்தினர். 

சீனாவுடன் நட்பு

நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாடும்சீன நாடும் நட்புறவு கொண்டிருந்தது இதன் மூலம் அறியமுடிகிறதுநம் சோழர்களும் 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் சீனாவுடன் நட்பு கொண்டிருந்தனர் தூதுவிடுத்தனர் போன்ற செய்திகள் மூலம் அறியமுடிகிறது. இதனை சீன நூல்களே எடுத்துக் காட்டுகிறது. நம் ராஜேந்திரன் ஆட்சி காலத்திலும் கடல் வாணிகத்தின் பொருட்டு சீன மன்னனுக்கு தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்டன. கி.பி 1020,1033 ஆம் ஆண்டுகளில் நம் மன்னன், தூதர்கள் மூலம் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை சீன அரசவைக்கு அனுப்பினதும். அவ்வாறே சீன தூதர்கள் சோணாட்டிற்கு வந்ததும்,இதனால் சோழ நாட்டிற்கும் சீன நாட்டிற்கும் இடையே வாணிக உறவு உயர்ந்து சிறந்து விளங்கியது தெரியவருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 20 சீன நாணயங்களும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம்  ஒலயக் குன்னம். கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்ட 323 சீன நாணயங்களும் தஞ்சை மாவட்டம் மன்னார்குடி வட்டம் தல்லி கோட்டை கிராமத்தில் கிடைத்த 1822 சீன நாணயங்களும்இராஜேந்திரன் காலத்தில் சோணாட்டிற்க்கும், சீன நாட்டிற்கும் நடைபெற்ற வாணிபத்தை நமக்கு சான்றாக காட்டுகிறது.

இந்நாணயங்கள் அனைத்தும் ராஜேந்திரனது  சம காலத்தில், சீனாவில் ஆண்டுவந்த மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள். தற்போது இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் கிழக்கிந்திய தீவுகள் ஆண்ட மன்னர்களுடன் நட்புறவு கொண்டிருந்ததும். அதனால்,தான் ராஜராஜனும், ராஜேந்திரனும் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க நாகப்பட்டினத்தில் புத்த விகாரை கட்டுவித்து, தேவையான உதவிகளை புரிந்தது அறிய முடிகிறது. இவனால் மாளவப் பரமார  மன்னனான  போஜ மன்னனுடனும்சேரி காளி சூர மன்னனுடனும் நட்புக் கொண்டிருந்தார் என்பதை கூறும் குலேனூர் கல்வெட்டு கூறுகிறது.

இவ்வாறு முதலாம் ராஜேந்திர சோழனது பரந்துபட்ட வெற்றிகள் அவன் நாட்டின் எல்லையை போல பரந்துபட்ட வெற்றியாக காணப்படுகிறது. இவர் போர் மீது கொண்ட  ஆர்வம் பல நாடுகள் வெற்றிகொள்ள காரணமாக இருந்தது.   அது மட்டுமல்லாது இளவயதிலேயே இவன் கற்ற கல்வி முறை, போர்ப்பயிற்சி ,பெற்றோரின் பேரன்பு போன்றவை முதலாம் ராஜேந்திரனுக்கு வெற்றியின் வழி துணையாக நின்றது.

ராஜேந்திர சோழனின் குடும்பம்

முதலாம் இராஜராஜனுக்கு வானவன் மாதேவிக்கும் பிறந்த தவப் புதல்வனாம் முதலாம் ராஜேந்திரன்ராஜேந்திர சோழனின் உடன்பிறப்புகள் ஆன மாதேவடிகள், குந்தவை என்ற இருசகோதரிகள் இருந்தனர்  மாதேவடிகள்மூத்த பெண்ணாகவும் ,குந்தவை இளைய பெண்ணாகவும் இருந்தனர்.    குந்தவை கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்தனர்.    எனவே ராஜேந்திரன் தன் மைத்துன்னின் கூழைச சாளுக்கிய நாட்டின் நிகழ்ச்சிகளில் பெரும் அக்கறை வைத்திருந்தான்.

முதலாம் ராஜேந்திர சோழன் தன் தந்தையைப் போன்றே பல மனைவியரை பெற்றிருந்தான்.    ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு பொதுவாக அக்கால மன்னர்கள் பின்பற்றப்படவில்லை. சோழப் பெருமன்னர் மொகலாயப் பெரு மன்னர்களைப் போல் பெண்ணாசை கொண்டோர் என்று கூற முடியாது. இருப்பினும் முதலாம் ராஜேந்திரன் மனைவியர்கள் முக்கோடிக்கிழானடிகள், அரிந்தவன் மாதேவி, திருபுவன மாதேவி என்று அழைக்கப்படும் வானவன்மாதேவி, பஞ்சவன்மாதேவி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர் ஆவர்.

ஆனால்இவர்களுள் ராஜேந்திர சோழனின் பட்டத்தரசியாக விளங்கியவள் யாரென்பது பற்றிய சான்றுகள் கிடைக்கவில்லைஇவர்களில் வீரமா தேவி என்பவள் ராஜேந்திரன் மேல் பேரன்பு கொண்டவள். ராஜேந்திரன் இறந்தபோது பிரிவாற்றாமை தாங்கமுடியாமல் கணவனுடன் உடன்கட்டை ஏறினால் என்று பிரம்மதேசம் கல்வெட்டு கூறுகிறது.  சோழர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் அருகிய நிலையில் இருந்த போதிலும், வீரமாதேவி உடன்கட்டை ஏறிய நிகழ்ச்சி அவள் கணவன் மேல் கொண்டிருந்த பேரன்பை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.   ராஜேந்திர சோழனின் மக்கள் செல்வத்தினை நிரம்பப் பெற்று இருந்தார்கள்.

அறிவும் ஆற்றலும் நிரம்பியவர்களாக இருந்தார்கள். மூன்று ஆண் மக்களும் இரண்டு பெண் மக்களும் இருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறுதியிட்டுக் கூற முடிகிறது.

ஆண் மக்கள்

கன்னியாகுமரி கல்வெட்டில் வேள்வியில் தோன்றும் முத்தியை போல் ராஜேந்திர சோழனின் மூன்று புதல்வர்களும் சிறந்து விளங்கினர் என்று கூறப்படுவதால், ராஜேந்திர சோழன் மூன்று ஆண் மக்களை பெற்றிருக்க வேண்டும் என்ற செய்தி தெரிகிறது. வேறு ஆண் மக்களும் சிலர் இருந்ததாக சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. ராஜேந்திரனின் இறப்புக்குப் பின்பு சோழப் பெரு நாட்டை ஆண்டு வந்த அவனுடைய மூன்று ஆண் மக்களை பற்றி அனைவரும் அறிவர். அவர்களில் ராஜேந்திரனின் மூத்த மகனான முதலாம் ராஜாதிராஜன் கி.பி 1018 முதல் கி.பி 1054 முடிய சோழநாட்டை ஆட்சி புரிந்தான்.

முதலாம் இராஜதிராஜனுக்கு பின் ராஜேந்திரனின் மற்றொரு மகனான இரண்டாம் ராஜேந்திர சோழன் கி.பி 1051 முதல் கி.பி 1063 முடிய சோழ நாட்டை ஆண்டு வந்தான். வீரராஜேந்திரன்  என்பவன் இரண்டாம்  ராஜேந்திரனுக்கு  பின்பு கி.பி 1063 முதல் கி.பி 1070 முடிய சோழ நாட்டை ஆண்டு வந்தான்.  மதுரையில் ராஜேந்திரனால்  புதியதாக அமைக்கப்பட்ட அரண்மனையில் வீற்றிருந்த சேர, பாண்டிய நாடுகளின் அரச பிரதிநிதியாக ஆட்சி புரிந்த,   சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்னும் பெயர் கொண்டவன்.   ராஜேந்திரனின் மற்றொரு மகன் ஆவான் என்பது அறிஞர்களின் கருத்து

ராஜேந்திரனுக்கு சுந்தர சோழன் என்று ஒரு மகன் இருந்தான். அவன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவன் சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று பெயர் பெற்றான். பிறகு சேர நாட்டையும் சேர்த்து ஆளும் உரிமையைப் பெற்றான். ஆனால், சோழ கேரளன் என்ற பெயர் பெற்றான் என்று, கங்கை கொண்ட சோழன் எனும் நூலின் கண் கூறப்பட்டுள்ளதால் இக்கருத்து வலிமை பெறுகிறது. இவன் 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

அரச குமாரர் சிலர் வேறு சில மண்டலங்களில், ஆட்சி தலைவர்களாக மன்னனால் நியமிக்கப் பெற்றனர் என்பது கல்வெட்டுச் சான்றுகள் உறுதிப்படுகிறது. ராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதி ராஜனின் மெய்க்கீர்த்தியில் இருந்தும், இரண்டாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி லிருந்தும், ராஜேந்திரனின் புதல்வர்களில் சிலர் வடநாட்டின் பகுதிகளில் அரச பிரதிநிதி ஆக்கப்பட்ட தகவல் நமக்கு கிடைக்கிறது. தன் புதல்வர்களை தான் வென்ற நாடுகளில் அரச  பிரதிநிதிகளாக அமர்த்தும்புதிய முறையை சோழ மன்னர்களில் இராஜேந்திரன்     முதலில் புகுத்தினான்இதன் மூலம்   ராஜேந்திரனின் நுண்ணிய அரசியல் திறனை நம்மால் அறியமுடிகிறது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் வெளியிட்டுள்ள சிறப்பு மலரில் ராஜேந்திரனுக்கு ஆறு ஆண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில்,

  1.   ராஜாதிராஜன் கி.பி 1042 1053 
  2.   ராஜமகேந்திரன் கி.பி 1053 -1056 (இவன் விசய ராஜேந்திரன் என்றும்    இரண்டாம் ராஜேந்திரன் என்றும் அழைக்கப்படுகிறான்)
  3.  விக்ரம சோழ பாண்டியன்
  4.   பராக்கிரம சோழ பாண்டியன்
  5.  மும்முடிச்சோழன் (இவன் சோழ பாண்டியன்,சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயரில் அழைக்கப் படுகிறான்)
  6.  வீரராசேந்திரன் கி.பி 1062 1070 (இவன் வீரசோழ தேவன், ராஜகேசரி வர்மன் ,மூன்றாம் கரிகாலன் என பல பெயர்களால் அழைக்கப் படுகிறான்)

அண்மை கால ஆய்வுகளின் அடிப்படையில் ராஜேந்திரனுக்கு ஐந்து ஆண்மக்கள் இருந்தது தெரிகிறது. அவை

  1. இராஜாதிராஜன்  பட்டத்து இளவல். கி.பி 10181054.
  2. சோழ கேரளன்  1018–  1021 மனுகுல கேசரி ஜெயமல்லன்
  3. சோழபாண்டியன் 1021 1051 சுந்தர சோழன் 
  4. சோழ கங்கன் 1037 1054 மும்முடிச் சோழன் 
  5. சோழ லங்கேஸ்வரன் 10171063 வீரசோழன்
  6. சோழ கேரளன்  எனும் மன்னன் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

ராஜேந்திரனுக்கு 4 மக்கள் இருந்ததாக சில குறிப்புகள் கூறுகிறது. இந்த நிலையில் வசிஸ்டபுரம், பிரம்மதேசம் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து சோழ கேரளன் என்பவன் சேர நாட்டின் அரசப் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டு இருந்தான் என்றும், இவன் 1018 முதல் 1921 முடிய ஆட்சி புரிந்தான் என்று பேராசிரியர் இல. தியாகராஜன் நிறுவியுள்ளார். அறிஞர் சேதுராமன் அவர்கள் இரண்டாம் இராஜேந்திரனின் மகனாகவும் முதல் ராஜேந்திரனின் பேரனாகவும், குறிப்பிட்டுள்ள சோழகேரளன் என்பவன் முதலாம் ராஜேந்திரன் மகனே என்று சான்று காட்டுகிறார். இல.  தியாகராஜன் சோழகேரளன் எனும் நூலில் சோழ கேரளன் நினைவாக எழுப்பப்பட்ட திருக்கோவில், மண்டபம்,ஏரி ஆகியவற்றை அடையாளம் காட்டுகிறார். 

இவன் பல போர்களில் ராஜேந்திரனுக்கு உதவி புரிந்துள்ளான். தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் கி.பி  1021 சாளுக்கியருடன் நடந்த போரில் இவன் வீரமரணம் அடைந்தான். ராஜேந்திரனுக்கு பின் ஆட்சி செய்து வந்த முதலாம் ராஜாதிராஜன் இறந்த தன் தம்பி நினைவாக, அரியலூர் மாவட்டத்தில், தீயனூர் என்னும் ஊரின் பெயரை மனுகுலகேசரி நல்லூர் என மாற்றினான். அதுமட்டுமல்லாது, சோழ கேரள நாகர்கோவில், சோழ கேரள விண்ணகரம், சோழ சதுர்வேதி மங்கலம், சோழ கேரளன் மாளிகை, சோழன் வாய்க்கால், சோழ கேரளன் சாலை, மனுகுல கேசரி ஈஸ்வரம் முதலான சோழ கேரளன் நினைவால் உருவாக்கப்பட்டவை, என கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன.

சோழர் வரலாற்றில் முதன்முதலாக அரச பிரதிநிதிகளை (வைசிராய்) நியமித்து தன்னால் வெல்லப்பட்ட நாடுகளை ஆட்சி புரிய ஆரம்பித்த பெருமை முதலாம் ராஜேந்திரனை சேரும். முதலாம் இராஜேந்திரனின் மகனான இரண்டாம் ராஜேந்திரன் திருமாது புலிஎன்னும்’ என்ற தொடக்கத்தை உடைய      மெய்க்கீர்த்தியில் அவன் ஆட்சியில் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த, அவன் தம்பிகளை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அவனுடைய தம்பிகள் நால்வரைப் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. 

தன் திருத்த தம்பியர் தம்முள்  வென்றிகொள் 

மும்முடிச்சோழனை  தெம்முனை அடு திறல் 

சோழ பாண்டியன் என்றுங் கோழிமன்

தொடுகழல் வீர சோழனை படிப்புகழ்

கரிகால சோழன் என்றும் பொரு தொழில் 

வாள் வலியத் தடக்கை  மதுராந்தகனை 

சோழ கங்கன் என்றும் தோள்வலி 

மேவிகல் பராந்தக தேவனை சோழ

வயோத்திய ராஜன் என்றும் 

கூறப்பட்டுள்ளது,  மெய்க்கீர்த்தி வழி, மும்முடிச்சோழன்,வீரசோழன்,பராந்தக வேந்தன், மதுராந்தகன் ஆகிய நால்வரும் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பிகள் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. திருவல்லம், திருமழபாடி என்னும் ஊர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மும்முடிச் சோழன் என்பவன் இரண்டாம் ராஜேந்திரனுக்கு தம்பியும், வீர ராஜேந்திரனுக்கு தமையனும் ஆவான் என்பது கூறப்படுகிறது. எனவே, மதுரை மாநகரில் வீற்று இருந்த பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் ஆண்டு வந்தது மும்முடிச் சோழனே. சோழ நாட்டில் இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது ராஜ மகேந்திரன் எனப் பெயர் பெற்று இருப்பான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பெண்மக்கள்

ராஜேந்திரனுக்கு இரண்டு பெண்கள் இருந்தது முன்பே நாம் அறிந்தோம். பிராமணர் என்று அழைக்கப்படும் அருள்மொழி நங்கை ஒரு பெண், அம்மங்கை தேவி ஒரு பெண்.

அருள்மொழி நங்கை

தற்போதுள்ள அரியலூர் மாவட்டத்தில் திருச்சியிலிருந்து கிழக்கே 31 கல் தொலைவில், கொள்ளிடத்தின் வடகரையில்  அமைந்ததும், அப்பரின் பாடல் பெற்ற புண்ணியத் தலமான, திருமழபாடி  கோவிலுக்குள் அருள்மொழி நங்கை ராஜாதிராஜன் ஆட்சிக்காலத்தின், முற்பகுதியில் விலையுயர்ந்த முத்துக்குடை அளித்து நிபந்தம் அளித்துள்ளாள் என்று கல்வெட்டு கூறுகிறது. எனவே, தந்தையைப் போலவே மகளும் சிறந்த சிவபக்தி உடையவளாய் அதுமட்டுமல்லாது கொடைத் தன்மைமிக்கவளாய்யும்  காணப்படுகிறாள். பல கோவில்களுக்கு அறக்கொடை அளிக்கும் உள்ளம் கொண்டவளாக காணப்படுகிறாள்.

அம்மங்கை தேவி

ராஜேந்திரனின் மற்றொரு மகளான அம்மங்கை தேவி என்னும்   குந்தவை. கீழை சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மகனான  ராஜராஜ நரேந்திரன் என்பவனை மணந்து கொண்டாள்.  வேங்கைநாட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள். இவர்களுக்கு தோன்றிய மகனே சோழரின் மகள் வழி உரிமையை கொண்டு, சோழ நாட்டை ஆண்ட முதலாம் குலோத்துங்கன் ஆவான்.    அம்மங்கை தேவி முதலாம் குலோத்துங்கன் காலம் முதல் மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை வாழ்ந்தார் என்று குறிக்கப்படுகிறது. அம்மங்கை ஆழ்வார் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார்

சிவ பக்தியிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவர் அதனால் அம் மங்கை ஆழ்வார் என அழைக்கப்படுகிறார். முதலாம் ராஜராஜனின் தமக்கை, ராஜேந்திரனை  சீராட்டி பாராட்டி வளர்த்தால் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் எனும் பெயரால் கல்வெட்டுகளில் குறிக்கப் படுகிறது.  

எனவே ராஜேந்திரனின் அருமந்த செல்வியாம் அம்மங்கை தேவி, வாழையடி வாழையாக சீரிய சிவபணியாற்றிய செம்பியன்மாதேவி, குந்தவை போன்ற அரசியரைப் போன்று சிவனுக்கு பணிபுரிந்து. சிறப்புடன் ஆண்ட ராஜேந்திரன்  மகளாக பிறந்த இவளும் தந்தைக்கு ஏற்ப மகளாய் தோன்றி, தனது தந்தைக்குப் பெருமை தேடித்தந்தார்.   

அரசு குடும்பம் சிறந்த இருந்தால்தான் அரசனும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நடத்த முடியும். அவ்வகையில் அன்பும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற மனைவியரையும், அன்பு,அறிவு, ஆற்றல்,கீழ்ப் படிதல் போன்ற நன் மக்களையும் பெற்றதால்முதலாம் ராஜேந்திரன் சிறிதும் ஐயம் இன்றி அரும்பெரும் குணம் கொண்டவனாய் விளங்கினான். 

அரச குடும்பம் பெரும்பாலும் பழையாறை ஆயிரந்தளி அரண்மனையில்  இருந்தது போலும், பழையாறை முடிகொண்ட சோழபுரம் என அழைக்கப்பெற்றது. இந்நகர் இப்பொழுது அழிந்த நிலையில் காணப்படுகிறது. ராஜேந்திரனின் பழைய நகரில் இருந்து கொண்டு அறக்கொடைகள் அளித்துள்ளான் என்பதை கூழம்பந்தல் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது.   இவன் பழையாறை அரண்மனையில் அடிக்கடி  தங்கி இருக்க வேண்டும் என கருத முடிகிறது. காஞ்சியிலுள்ள அரண்மனையிலும் சில சமயங்களில் ராஜேந்திரன் தங்கி இருக்க வேண்டும் என கல்வெட்டுக்கள் கூறுகிறது. ராஜேந்திரன் சிலகாலம் தில்லையம்பதி கண்ணுள்ள தனது மாளிகையில் தங்கி இருந்தான் என்பதை செப்பேடு சான்றுகள் மூலம்  அறியமுடிகிறது. பெரும்பற்றப்புலியூர் வீட்டின் உள்ளால் மாளிகையில் மண்டபம் பிரமாதி ராஜனால் என்றும் வியாக்கிரா அக்ரஹாரத்தில் வாழ்ந்தவன் ராஜேந்திரன் என்ற செய்தியை கரந்தை செப்பேடு பகுதிகளில் காண முடிகிறது. 

ராஜேந்திரனின் தந்தையான முதலாம் ராஜராஜசோழன் கி.பி 1014ஆம் ஆண்டு சிவனடி சேர்ந்தார். இராஜேந்திரனின் தாயார் திருபுவன மாதேவியார் கி.பி1020-ஆம் ஆண்டு இறைவனடி எய்தியிருக்க வேண்டும். என திரு.சி. கோவிந்தராஜன் அவர்கள் கூறுகிறார். இதனை அவரது ஆண்டிலேயே தன் தாயின் பெயரால் பிரம்மதேய  நிலதானம். செய்திருப்பதால் இவன் திரிபுவன மாதேவி அவ்ஆண்டில் இறந்ததனால் உண்டான துன்பத்தையே குறிக்கின்றது என்று கூறுகிறார்.

ராஜேந்திரனின் சிறப்பு பெயர் பின்னணி

சோழர் ஆட்சியில் முதலாம் ராஜேந்திரன் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று இருந்தான், என்பது அவன் சிறப்புப் பெயர்களில் வழியே அறிய முடிகிறது. அவ்வகையில் கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான், பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன், உத்தம சோழன், விக்கிரமசோழன், அதிசய சோழன், பண்டித சோழன்,சய சிம்ம சிம்ம சரபன், மலைநாடு கொண்டான், சோழேந்திர சிம்மன், முடிகொண்ட சோழன், வீர ராஜேந்திரன் என பல சிறப்புகளைக் கொண்ட பட்ட பெயர்களுக்குப் பின்னால், ஒவ்வொரு போரும், முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் திறமையும் அறியப்படுகிறது.

முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட வெற்றி, கடாரம் கொண்ட வெற்றி, பூர்வ தேசமும் கொண்ட வெற்றி பற்றி நாம் முன்பே கண்டோம்.

அதிசய சோழன்

ராஜேந்திரனது 29 ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இரண்டு, உக்கல் சிவன் கோவிலில் காணப்படுகிறது. அவைகளில் குமாரகாலன் வாசுதேவன் என்ற அதிசய சோழ மூவேந்த வேளார் என்ற அதிகாரி கோவில் ஒன்று கட்டியதாக கூறப்படுகிறது. அந்த அதிகாரியைக் கொண்டு இவன் அதிசய சோழன் எனும் விருதை பெற்று இருந்திருக்க வேண்டும் என அறியமுடிகிறது.

ஜெயசிம்ம சரபன்

முதலாம் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய மன்னனான ஜெயசிம்மனை வென்றதால், ஜெய சிம்ஹ சிம்ஹ சரபன். விருது பெற்றார் என்று கரந்தைச் செப்பேடு கூறுகிறது.

சோழேந்திர சிம்மன்

போர்க்களத்தில் ஆண் சிங்கமென பகைவர் மீது பாய்ந்து பெரிய வெற்றி பெற்றதால் சோழேந்திர சிம்மன் என பெயர் பெற்றான். சோழேந்திர சிம்மன் எனும் விருது பற்றி திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது.

முடிகொண்ட சோழன்

ஈழநாட்டின் மீதும் படையெடுத்து ஈழவேந்தனை வென்று அவன் முடியும், அவனது தேவியர் முடியையும் வென்றதால், மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர் ஈழத்தில் அடைக்கலப்படுத்திய பாண்டியர் முடியினையும், கைப்பற்றியதால் முடிகொண்ட சோழன் என பெயர் பெற்றான். முதலாம் பராந்தகனும் முதலாம் இராஜராஜனும் ஈழம் நோக்கி சென்று கைப்பற்ற இயலாத, பாண்டியர் முடியினை கைப்பற்றியதால் இவனுக்கு இச்சிறப்பு பெயர் வழங்கப்பட்டது. சோழ வேந்தர்கள் முடிசூட்டிக் கொண்ட பழைய பெரும் நகரங்களில் ஒன்றானதும், அரச குடும்பத்தினர் பலர் வாழ்ந்து வந்ததும், சோழச் சிற்றரசர்கள் அடங்கி கிடந்ததுமான பழையாறை நகர் இவனது ஆட்சிக்காலத்தில், இவனின் முடி கொண்டதன் நினைவாக முடிகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டது.

மேலும் நகரின் தென்பகுதியில் ஓடும் ஆறும் இவனால் வெட்ட பெற்று முடி கொண்ட சோழப் பேராறு எனப்பட்டது. நெல்லை நாட்டின் வழியாக பாயும் பொருநை ஆறு முடி கொண்ட சோழப் பேராறு எனப்படுகிறது. நெல்லை நாட்டின் வழியாக பாயும் பொருநை ஆறு முடி கொண்ட சோழப் பேராறு என்று அக்கால சாசனங்களில் குறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இச்சிறப்பு பெயர் கொண்ட பல ஊர்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சிதம்பரம் வட்டத்திலுள்ள முடிகண்டநல்லூர், மாயவரம் வட்டத்திலுள்ள முடிகண்டநல்லூர், சிவகங்கை மாவட்டத்திலுள்ள முடிகுண்டம், கோவை மாவட்டத்தில் கொள்ளக்கால் வட்டத்திலுள்ள முடிகுண்டம், இவ்வூரிலுள்ள முடிகொண்ட சோழன் சோளச்சரம் ஆகியவை குறிப்பிடத்தக்கது.

வீரராஜேந்திரன் (வீரசோழன்)

தன் போர்க்களத்தில் பெரு வீரத்துடன் போர் செய்து வீரத்தின் இருப்பிடமாய், தன் வாழ்நாளில் இருபது வருடங்களைக் கழித்தலால் வீரசோழன் என்று பெற்றிருக்க வேண்டும். வீரசோழன் அனுக்கன் ஆய்ப்பாடி மழபாடி என்ற அதிகாரி திருநாமநல்லூர் சிவன் கோயிலுக்கு, நிவந்தங்கள் அளித்துள்ளதால் இவனது பட்டப்பெயரினை கொண்டு ராஜேந்திர சோழனும் என்னும் சிறப்புப் பெயர் பெற்றிருக்கலாம். இவனுடைய தாய் தந்தையர் இவனுக்கு மதுராந்தகன் எனும் பெயரினைச் சூட்டியதும், இவன் பட்டல் பெற்றதால் ராஜேந்திரன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடப்பட்டது என்று நாம் முன்பே பார்த்தோம்.

சோழ வேந்தர்கள் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி புனைந்துகொண்ட ராஜகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களும் இவன் பரகேசரி எனும் பட்டம் இதனை புரிந்து கொண்டான். திரிபுவனச் சக்கரவர்த்தி என்றும் கோனேரின்மை கொண்டான் என்றும் தனது கல்வெட்டின் தொடக்கத்தில் மிக தோரணையாக கூறிக் கொண்டான்.

மகிபால குல காலன்

வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் கூழம்பந்தல் என்ற சிற்றூரில் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில், காணப்படும் கல்வெட்டில் மகிபாலன் எனும் பெயர் கொண்ட அதிகாரி ஒருவர் பணியாற்றினார். என்ற செய்தியை அறிகிறோம். இக்கல்வெட்டு ராஜேந்திரனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. அரசியல் துறையில் போற்றத் தகுந்த முறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மன்னன் தனது சிறப்பு பெயரிட்டு பாராட்டி ஊக்குவித்தார் . அக்கால வழக்கமாய் இருந்தது அது போல நம் ராஜேந்திரனும், ஓலைஎழுதுவோனுக்கு தனது சிறப்பு பெயராகிய மகிபால குல காலன் என்பதை இட்டுஇருந்தான்.

வங்க நாட்டு வேந்தனான மகிபாலனை வென்று அடக்கின நினைவாக மகிபாலன் என்ற விருது பெயரைப் பெற்றிருந்தான். இதேபோன்று தன்னிடம் தோல்வி கண்ட மன்னனின் பெயரை இணைத்து விருது பெயர் கொள்வது வழக்கம் என்பதை நம் ராஜேந்திரன் ஜெயசிம்மனை வென்று விருது பெயர் கொண்டிருந்தான்.

மண்ணை கொண்ட சோழன்

மண்ணை கடக்கத்தினை வென்று தன் அடிமைபடுத்தினான். மண்ணைக் அ
கடக்கம் என்பது மான்யகேடம்,மால்கெட் என்று அழைக்கப்படுகிறது. இப்போரை ராஜேந்திரன் படை தலைமை ஏற்று படை நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்போரில் மான்யகேடம் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. ராஜேந்திரன் ஒரே சமயத்தில் வனவாசியின் மீதும் தாக்குதல் நிகழ்த்திய செய்தி இவனது படை வலிமையை காட்டுகிறது. இப்படையின் நினைவாக மண்ணை கொண்ட சோழன் என்ற விருது பெயரைப் பெற்றான். ஆதலால் மண்ணைகொண்டார் என்ற விருது பெயர் திருவொற்றியூரில் உள்ள மண்டபத்திற்கு மண்ணை கொண்ட சோழன் என்றும் பெயரிட்டான்.

தற்கால ஆய்வுப்படி இந்த வேந்தனுக்கு சிவ சரண சேகரன், ராஜேந்திர சோழன், நிருப திவாகரன்,மனகுல சோழன், தான வினோதன், சோழ கேரளன், பார்த்திவேந்திரன் போன்ற விருதுப் பெயர்கள் வழங்கி வந்தது அறியப்படுகிறது. ராஜராஜ பெருமன்னன் சிவபாதசேகரன் என்றும் ராஜசிம்ம பல்லவன் சிவ சூடாமணி எனவும் அழைக்கப்பட்டது கல்வெட்டு வழி அறிய முடிகிறது.

Join us telegram: www.t.me/teamheritager

ராஜேந்திர சோழனது இறுதி காலம்

சோழரின் வரலாற்றில் இரு கண்களாக விளங்கிய ராஜராஜனும் ராஜேந்திரனும் சோழர் குலத்திற்கு பெருமை சேர்த்தவர்கள். இவர்கள் நடத்திய போர்கள், தான தருமங்கள், ஆட்சிமுறை போன்றவை பல நாட்டவருக்கும் வியப்பைத் தந்ததுமுதலாம் ராஜராஜன் இறந்தபின்பு சோழர் ஆட்சியில் ராஜேந்திர சோழன் பரந்துவிரிந்த ஒரு  சோழப் பேரரசை நிறுவினான்

தென்னிந்திய வரலாற்று மேதையான திரு. நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய சோழர்கள் என்ற நூலில், முதலாம் இராஜேந்திரன் ஆட்சியில் இறுதி காலம் சோழர் குல வரலாற்றில் பொற்காலம் என்று புகழ்கிறார். சோழர் வரலாற்றில் தனது சாம்ராஜ்யத்தை பெருமளவு பரப்பி நிலப்படையின்  இன்மையும், கடற்படையின் வன்மையும் உச்சநிலைக்கு நிறுத்திய ராஜேந்திரனது காலம் பொற்காலமே

     அறிவும், ஆற்றலும், அனுபவமும் கொண்ட அரசியல் அலுவலர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், ஆற்றல்மிக்க ஆண்மக்களை பெற்றிருந்த ராஜேந்திரன். தன் இறுதி காலத்தில் மன அமைதியோடு கழித்துக்கொண்டான். இந்த பெரும் சிங்கம் கிழடு பட்டு விட்டாலும் இதன் கர்ஜனையும், கம்பீரமும் குறைந்ததாக தெரியவில்லை. அப்போது அரசியல் வானில் ஒரு பொற்காலத்தினை வரைந்து கொண்டிருந்தான் என்பது உண்மை. இவனது இறுதி காலத்தில் அன்புமிக்க மனைவியர்கள் அவனிடம் பேரன்பு கொண்டு, பேணிக் காத்தனர். அவர்களுள் வீரமாதேவி  இவனை கண்ணுக்கு கண்ணாக பார்த்துக்கொண்டார்.   

ஏறத்தாழ 50 ஆவது அகவையில் ஆட்சி பொறுப்பற்ற மன்னன் தனது தள்ளாத பருவத்திலும், திறமையான ஆட்சியை நிலைகொள்ள தவறவில்லை. 80 வயதை தாண்டிய நிலையிலும் உடல்நிலை தளர்ந்திருந்த போதிலும் அரசியல் நடவடிக்கையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பாமல்  திறமையாக ஆட்சி செய்தார். கடாரம் சென்று வெற்றி கண்டு தமிழ்மக்கள் வீரத்தை வேகத்தை அங்கே நிலைநாட்டி.   அலைகள் பாய்ந்து ஒலி எழுப்ப கருங்கடலில் வெற்றிகள் பலமுறை கண்டார்.  

சோணாடு திரும்பிய பின்னர் ராஜேந்திரன் அமைதியாக வாழ்க்கையை மேற்கொண்டார். தன்னுடைய நெஞ்சில் படிந்திருந்த போர் வெறியை, பக்தி உணர்வால் நிலைநாட்டினார் . கோவில் பணிகளிலும், கோவில் பூஜை செய்யும் அந்தணர்களுக்கு உதவுவதிலும், சைவ சமயத்தைப் பரப்பும் முற்பட்ட சான்றோர்களுக்கு தக்க உதவி செய்வதிலும்  ஈடுபட்டார்.

கடார எழுச்சிக்குப் பின் இவரது ஆட்சிகாலத்தில் 20 ஆண்டு காலம், அமைதியான காலமாக இருந்தது, என எஸ் கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறுகிறார்.    இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி பொருத்தவரையில் ராஜேந்திரனின் போர் நிகழ்ச்சிகள் கடாரம் படையெடுப்பிற்குப் பின், முடிவுற்றதாக தெரியவில்லை.  ஆனால், ராஜாதி ராஜனின் மெய்க்கீர்த்தியை பார்க்கும் பொழுது, இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தினை  அமைதியான காலமாக நாம் கூற முடியாது. இக்காலத்தில் ராஜேந்திரன். தானே நிகழ்ச்சியில் படை தலைமை ஏற்று, படைநடத்தி செல்லா விட்டாலும். அவருடைய மகனும் இளவரசனாகிய ராஜாதிராஜனிடம். படை பொறுப்பை ஏற்க பணித்து கலகங்களை அடக்கினான் என்று அறியப்படுகிறது.

சேரர், பாண்டியர், ஈழவர், மேலைச் சாளுக்கியர் ஆகியோர் அச்சம் தவிர்க்கவில்லை. அவர்கள் சோழர்களின் துச்சமென மதித்து போரில் ஈடுபட்டனர்.   சோழருக்கு எதிராக அவ்வப்பொழுது புரட்சிகொடி உயர்த்தினர். மேலைச் சாளுக்கிய மன்னர்களின் பெரும் புலியாக திகழ்ந்த, ஆகவ மாமல்லன் என்னும் சோமேஸ்வரன் அப்புரட்சிக்கு தலைமை தாங்கி நடத்தி வந்தான். வீறுகொண்ட ராஜாதி ராஜன் இப்புரட்சியினை அடக்கி எதரிகளை ஓடவிட்டான்.  

அண்டை நாடுகளில் தோன்றிய கலகங்கள் அடக்கப்பட்ட போதிலும் ராஜேந்திரன் மகிழ்ச்சி மிக்கவனாக காணப்படவில்லைஉடல் தளர்ந்து இருந்த நேரத்திலும் மனம் தளர்ந்து இருந்ததால் இவரது உடல்நிலை பெருமளவு  பாதிக்கப்பட்டது. எவ்வளவுதான் உடல் பலவீனம் என்றாலும்  தன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்கள் நிலையைப் பார்வையிடுவது, திருத்தலங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது, அரசியல் சூழ்நிலை பார்வையிடுவது என பல வேலைகளில்.  ஈடுபட்டிருந்தான்.  

இவனுடைய 83 ஆவது வயதில் ஒருநாள் சான்றோர்கள் நிறைந்த தொண்டைநாட்டு பகுதிக்கு சென்று வர திட்டமிட்டிருந்தார்.       சோழ பெரும்படையின் அணியென திகழ்ந்த , அரிய பல  தியாகங்களை புரிந்த நாட்டுப்பற்று மிக்க இளம் சிங்கங்களை கொண்டு விளங்கியதொண்டை நாட்டை பார்ப்பதில்  ராஜேந்திர சோழன் பேரார்வம் கொண்டார் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது மாமன்னன் பிரம்மத்தேயத்தையும் பார்வையிட்டான் அங்கு அவன் தங்கியிருந்த போது அவன் உடல் பலவீனமடைந்து விட்டது.  

தனது. 33 ஆண்டுகள் சோழநாட்டை வளமுடன் ஆண்டுவந்த மன்னன் 83 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். ராஜேந்திரன் அது உடல் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பிரம்ம தேசம் எனும் ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேந்திரனின்  தேவியான வீரமாதேவி தனித்திருக்க முடியாமல் ராஜேந்திர சோழன் இறப்பின் போது உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். ராஜேந்திரன் அவனுடன் உயிர் துறந்த வீரமாதேவி ஆகிய இருவர் நினைவாக, நீர்வேட்கை தணித்தல் பொருட்டு சேனாதிபதி மதுராந்தகன் பரகேசரி, மூவேந்த வேளான் தண்ணீர் பந்தல் ஒன்று நிறுவினான் இவன் வீரமாதேவி உடன் பிறந்தவன் ஆவான் என பிரம்மதேய கல்வெட்டு கூறுகிறது.

பெருங்குணம் கொண்ட ராஜேந்திர சோழன்

சோழ வேந்தர்களில் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படும் நம் ராஜேந்திரன், ஒரு வேந்தனுக்கு உரிய எல்லா நற்பண்புகளையும் ஒருங்கே பெற்று திகழ்ந்தவன் ஆவான். பரந்த நோக்கமும் விரிந்த மனப்பான்மையும் கொண்ட ராஜேந்திரன் தன்  முன்னோர்களைப் போன்று அஞ்சா நெஞ்சம், வீரம், கருணை, இறையன்பு, கொடைத்திறன், அறிவு, புலமை, கலை உணர்வு, பெருந்தன்மை, நீதிநெறி வழுவாத நீர்மைமக்களிடத்தில் அன்பு, பரிவு, சமய பொதுநோக்கு போன்றவற்றில் செங்கோலுக்கு இணையாய் திகழ்ந்தான்.

     முதலாம் ராஜேந்திர சோழனின் பல குணங்களில் முதலாவதாக இருப்பது வீரமே. ஒரு வீரனுக்கு ஏற்ற சிங்கத்தினையொத்த  உடற்கட்டும், வீரமும், தீரமும்துணிச்சலும், போர்க் கலை அறிவும் கொண்டவன் முதலாம் ராஜேந்திரன் சிறந்த குதிரை வீரனும், குறி தவறாத வில் வீரனும். வள் வீரனுமாவான்.  வாளேந்தும் வாய்ப்பு இவனுக்கு தந்தை வழி ஏற்பட்டது. வீரத்தோடு கூடிய விவேகமும், தெளிந்த அறிவும் இவன் சிறந்த வீரனாகத் திகழ வழி செய்தது.

சோழப் பேரரசர்களின் வழி தோன்றலாகிய இவனுடைய நரம்புகளிலும் தன் முன்னோரின் வீர இரத்தம் நிறைந்திருக்கிறது. ஆதலால் இயற்கையிலே இவன் வீரமறவன் ஆவான்.   வீரனின் அணியாக அஞ்சாமை நிறைந்த அளவில். தம் அஞ்சாநெஞ்சன் கொண்டிருந்தான். வாழையடி வாழையாக வீரம் செறிந்த பழங்குடியில் தோன்றிய வேந்தன், தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் பார் புகழ் வீரராக திகழ்ந்து பல போர்களை  படை நடத்திச் சென்று, தன் வீரத்தை வெளிக் காட்டி வெற்றி வீரனாகத் திகழ்ந்தான். சேர, பாண்டியரையும் ,சாளுக்கியர்களையும், ஈழத்தினரையும்,கலிங்கரையும், இவன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்திலேயே வென்று அடக்கினான் என்பதை இவன் வீரத்தின்  எடுத்துக்காட்டாய் விளங்குகினான்.

சோழர்களுக்கு இடைவிடாது தொல்லை தந்து வந்த மேலைச் சாளுக்கியர்களான  , சத்யாசிரையன், ஜெயசிம்மன், ஆகவ மல்லன் போன்றோரை போரில் தோற்கடித்து வெற்றி வீரனாய் திகழ்ந்தது சிறிதும் ஐயமின்றி கூறலாம்வங்கச்சிங்கமான்  மகிபாலனை வென்று மகிபாலகுல காலன்  என்ற விருதுப் பெயரும் பெற்றான். தரைப்படை வெற்றி கண்டது மட்டுமல்லாமல், கடல் கடந்த நாடுகளில் பல கலம் செலுத்தி கண்ட வெற்றிகளும் இவனுக்கு உயர்வைத் தந்தது. இலங்கை வேந்தன் பெண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்து அச்சத்தினால் ராஜேந்திரனின் இரு திருவடிகளையும் தொழு தான் என்று, 

தடைபடாத நிறைந்த பராக்கிரமத்தையும் 

உடையவனுமான ராஜேந்திரன் எனவும், 

பகைவர்களை முறியடித்தவனும்.. எனவும்,

 ராஜேந்திரன் குதிரையேற்ற,ம் யானையேற்றம் ,தேரேறுதல்,  முதலிய வற்றில் மிக்க பயிற்சி கொண்டவனாய், வாள்போரின் நுட்பங்களை அறிந்தவனாய், ஏறி படை கலங்களில்  தேர்ச்சி பெற்றவனாக உள்ளான் என்று கரந்தைச் செப்பேடு முதலாம் இராஜேந்திரனின் வீரத்தை கூறுகிறது.

இறையன்பு

முதலாம் ராஜேந்திரன் புறத்தோற்றத்தில் வீரனாய் திகழ்ந்தாலும், அகத்தில் அருட்பெருஞ்ஜோதி விளங்கினான் என்பது இவன் இறையன்பு காட்டுகிறது. தன் கங்கை வெற்றி நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் நகரை நிரூவித்து. தன் வெற்றிக்கு வழி புரிந்த சிவபெருமானுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கும் வகையில், கங்கை கொண்ட சோழீச்சுரம் என்ற பெயரில் சிவன் கோயிலைக் கட்டியதால். இவன் சிவன் மீது கொண்டிருந்த அன்பும், பக்தியும், ஈடுபாடும் நமக்கு தெரிகிறதுராஜேந்திரன் மாண்டு விட்டான், அவன் பெற்ற வெற்றிகளும் மறைந்து விட்டன, அவன்  நிறுவிய சோழப் பேரரசும் அழிந்துவிட்டது, ஆனால் அவர் நிறுவிய கங்கை கொண்ட சோழீச்சுரம் ஒன்றும் இம்மண்ணுலகில் நின்று நிலவுகிறது. இதன் மூலம் இவனின் ழ இறையன்பு நமக்கு தெரிகிறது

தில்லையம் பதிகத்தின் கண்ணுள்ள பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் புரியும் ஆடவல்லான் சோழர்களின் குலதெய்வம். எனவேதான் ராஜேந்திரனும் தில்லை நடராஜப் பெருமான் மீது அளவற்ற அன்பு கொண்டான். சிவநேய செல்வனாகிய ராஜேந்திரன் தனது தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றியதன் காரணமே, தன் குலதெய்வமாகியதில்லைக் கூத்தனை தான் வணங்கச் செல்லும் போது, ஆறுகள் தடையாக அமைந்து உள்ளன என்பது கல்வெட்டறிஞர் திரு.சுந்தரேச வாண்டையார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

மேலும் வரலாற்று அறிஞர் பண்டாரத்தார் திரு.என். சுப்பிரமணியன் அவர்கள் ராஜேந்திரன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினதன்.    காரணம் அவரது சமய தலைநகரான சிதம்பரத்திற்கு அருகில் அமைந்து இருத்தலால்  இருக்கக்கூடும் என்று கூறுகிறார். எனவே தில்லைக்கூத்தன் மீது கொண்ட எல்லையற்ற அன்பு இவன் தலைநகரை மாற்றும் பணியில் ஈடுபடுத்தியது. இதிலிருந்து இவ்வேந்தன் பக்தி சிரத்தை நம்மால் அறிய முடிகிறது.

தன் இளமைக் காலத்திலேயே சைவத் திருமுறைகளை கற்றுத் தேர்ந்ததால் பக்தி நெறியில் தன் வாழ்நாள் முழுவதும் ஒழுகி வந்தான். வடநாடு சென்று பகைவரை வென்று திரும்பிய சோழநாட்டு படைத் தலைவனை, இவன் கோதாவரி கரையில் வரவேற்று தன் நாட்டிற்கு திரும்பும் பொழுது. இடையில் உள்ள திருத்தலங்களில் இறைவனை தொழுது நிவந்தங்கள் அளித்த செய்தி கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

 “ ராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளிகின்ற  இடத்துத் திருவடி தொழுது’ என்ற திரைலோக்கிய மாதேவி சதுர்வேதி மங்கலத்து கல்வெட்டு செய்தியாலும் இதனை அறிய முடிகிறது.  

கொடைத்திறன்

        “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

       ஊதியம் இல்லை உயிர்க்கு.”

இக்குறளின் உயிருக்கு உணர்வூட்டி ஊதியம் தந்தவன் முதலாம் ராஜேந்திர சோழன் என்று கூறுவது சிறிதும் ஐயமாகாது தவறாகாதுவரியார்க்கு வரையாது வாரி வாரி வழங்கும் கொடைத் தன்மை கொண்டவன். முதலாம் ராஜேந்திர சோழன் மன்னர்களில் தலை சிறந்த கொடை வள்ளலாக திகழ்ந்தவன். இவன் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தில் சுற்றியுள்ள கிராமங்கள் 51தக்கார்க்கு தானமாக அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கரந்தைச் செப்பேடு மூலம் கொடைவள்ளல் ராஜேந்திரன், 1073  பேருக்கு கொடையளித்தான் என்ற செய்தியைக் காண முடிகிறது. இதனை எண்ணும்போது, இவ் வேந்தனின் கருணையுள்ளம், கொடைத் திறத்தையும் கண்ட புலவர்கள் ராஜேந்திரன் கொடை வழங்கியதை. செப்பேட்டில்  எழுத நாட்டில் செப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது என்று உயர்வு நவிற்சியாக கூறுகின்றனர்.

ராஜேந்திரன் திருக்கோவிலுக்கும், பார்ப்பனர்களுக்கும் ஒல்லும் வகையெல்லாம் அருட்கொடை அளித்து வந்தான் என்பது கல்வெட்டு வழி அறியமுடிகிறது. 1080 சதுர்வேதி பட்டசிரேஷ்டவர்களுக்கு 2595 முக்காலே மூன்றும் மாகாணிகீழ் முக்காலேயொரு  மாவரைக்  கீழரையே இரண்டு மா நில பரப்பு, கொண்ட ஐம்பத்தொரு ஊர்களை நில தானம் செய்த ராஜேந்திரன் சிறந்த கொடை வள்ளல் என்பதில் ஐயமில்லை. இந்நிலங்களில் ஆண்டு வருவாய் ஐம்பத்தோராயிரத்து ஐம்பதின் கலம் நெல்லும், 32 அரை மீன் பாட்டங்காசும், 65 அக்கமும் பிரம்மதேய இறையிலியாக விடப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒன்று.

சதுர்வேதி பட்டர்களைப் போன்று குளப்பாட்டு உவச்சன் அமலன் தேவன், உவச்சன் கரிகாலன் மண்டகன் போன்ற உவச்சவர்களும், திரிபுவன மாதேவி நல்லூர் பிரம்மன் திருவடிகள், சருப்பேதி மங்கலத்து மண்டகவன் போன்ற நாவிதர்களுக்கும் மற்றும் தொழிலாளர் பலருக்கும் தானம் பெற்றுள்ளனர்.    மக்களுக்கு வாரி வாரி வழங்கியவன் திருக்கோவிலுக்கு நிறைய நிலதானம் செய்துள்ளான் என்பதை கரந்தைச் செப்பேடு கூறுகிறது.

இவ்வூர்  ஸ்ரீ கைலாசமான ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையாருக்கு நிலம் எண் வேலி 11இவ்வூர் நடுவில் ஸ்ரீ கோயிலான் முடிகொண்ட சோழ விண்ணகர தேவருக்கு நிலம் எண் 11,  இவ்வூர் திருமேற்றளியான திருபுவன மாதேவி விண்ணகருக்கு நிலன் நால்வேலி 11, இவ்வூர் ஐந்தாம் விண்ணகர தேவருக்கு நிலன் எண்வேலி 11,  இவ்வூர் கேரளாந்தக விண்ணகர தேவருக்கு  நிலன் வேலி 11,   இவ்வூர் சுப்ரமணியர் தேவருக்கு நிலம் வேலி11, இவ்வூர் சபையாருக்கு நிலம் வேலி11, இவ்வூர் மகா சாஸ்தாவுக்கு நிலம் வேலி11,   இவ்வூர் பிடாரியார்க்கு நிலம் வேலி 11, இவ்வூர்  திரிபுவன மாதேவி பேரேரி கரைகள் கணபதிக்கு நிலம் மூவேலி 11, என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

இவன் வேத, சாஸ்திரம் ஆகம புராண வளர்ச்சிக்கும்,   பாரதம் வாசிப்புக்கும் நூற்றுக்கணக்கான வேலி நிலங்களை, இறையிலியாக அளித்துள்ளான் என்ற செய்தியை கரந்தைச் செப்பேடு நமக்கு கூறுகிறது. ஈழநாட்டின் கண் மாந்தோட்டம், மாதோட்டம் என்னும் இடங்களில் இவன் சிவன் கோயிலைக் கட்டுவித்து அதன் நாள்  வழிபாட்டிற்கு நிவந்தமாக விட்டுள்ளான். கூழம்பந்தல் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலுக்கு 2150 கலம் நெல்லும், அறுபத்தைந்து கழஞ்சு பொன்னும் வரியிலிடு கொடுத்துள்ளான்.

திருவொற்றியூர் கோயிலின். உட் கோயிலை கட்டி முடித்து நிவந்தங்கள் விட்டுள்ளான். தென்னாற்காடு மாவட்டம், சிதம்பரம் வட்டத்தின் கண்ணுள்ள திரு சின்னபுரம்  கல்வெட்டின் வாயிலாக, இவன் அக்கோவிலில் மாலை முதல் நடு இரவு முடிய விளக்கெரிய பணம் அளித்துள்ளார் என்று செய்தியும் காணமுடிகிறது.

கும்பகோணத்துக்கு கிழக்கே 4 கல் தொலைவில் உள்ள திருவியலூர் சோழ மார்த்தாண்டன் சதுர்வேதிமங்கலம் என்ற, வேம்பற்றூர் கோயிலுக்கு ராஜேந்திரன் நிவந்தம் அளித்துள்ளான். இவனது மூன்றாம் ஆட்சியாண்டில் இக்கோவிலில் திருச்சுற்றில் ஆலயமும், கோபுரமும் இவனால் கட்டப்பட்டன என்பது கல்வெட்டு வழி அறியமுடிகிறது.   மைசூர் மாநிலத்தில் உள்ள கோலார் என்னுமிடத்தில் துர்க்கை கோயில் எழுப்பி அதன் நாள் வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்துள்ளான்.

திருச்சி மாவட்டத்தின் கண் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள, திருமழபாடி வைத்யநாதசுவாமி கோயிலினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டான்கி.பி 1026 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. கங்கைகொண்ட சோழபுரத்தில் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் சிவாலயத்தை மிகுந்த பொருட் செலவில் கட்டி முடித்தான் என்பதை முன்பே கண்டோம்.   திருச்சி மாவட்டம் காமரசவல்லி கோவிலுக்கு இவன் நிலதானம் செய்துள்ளதாக, எட்டாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்ற காமராசவல்லி கோவில் கல்வெட்டு கூறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருவாலங்காட்டிலுள்ள சிவன் கோயிலுக்கு பழையனூர் என்னும் சிற்றூரை இவ்வேந்தன் தேவதானமாக அளித்துள்ளதாக, திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. இக்கோவிலில் ஊழியம் செய்கின்ற குடும்பங்களும் தேவதான நிலத்தில் வீடு கட்டிக் கொள்ளவும், தேவதான  நிலத்தில் பயிரிட்டு பயனடையவும் அனுமதிக்கப்பட்டனர்.

ராஜேந்திரன் இறை அன்பு மிக்கவன் என்பது இவன் அளவற்ற தானம் செய்ததன் மூலம் அறியமுடிகிறதுபல கோவில்களுக்கு எல்லையற்ற தானங்கள் செய்துள்ளான். பார்ப்பனர்களுக்கு வேத விருத்தி, பட்ட விருத்தி, அத்தியாயன விருத்தி. போன்றவற்றிற்கு எண்ணிறந்த பொருளை தானம் செய்துள்ளார். பார்ப்பனர்களை உண்பிக்கும் அக்கிரசாலை புரங்களை நிறுவுவதற்கும் நிறைய தானங்கள் செய்துள்ளான். 

கல்வி வளர்ச்சியின் பொருட்டு இவ்வேந்தன் எண்ணிறந்த பொருள்கள், மதிப்புள்ள நிலங்களை தானம் செய்துள்ளார். தென் ஆற்காடு மாவட்டம் எண்ணாயிரத்தில்  அமைக்கப்பட்டிருந்த, மறைநூல்  விடுதிக் கல்லூரிக்கு மட்டும் இவன் 300 ஏக்கர் நிலம் மான்யமாக அளித்துள்ளான்வேப்பத்தூர், திருமுக்கூடல், திருபுவனி போன்ற கல்லூரிகளுக்கு இவ்வேந்தன் நிறைய நிலதானங்கள் செய்துள்ளார்.

கல்வி வளர்ச்சிக்கு அளவிறந்த கொடை அளித்து உள்ளான் என்பது புலனாகிறது. தனக்கு சைவாச்சாரியராக  விளங்கிய சர்வசிவ பண்டிதரிக்கு ஆச்சரிய போகமாக ஆண்டுதோறும் 2 ஆயிரம் கலம் நெல் அளிக்க ஏற்பாடு செய்துள்ளதான்.  தன் மற்ற ஆசிரியர்களுக்கும் தானம் செய்துள்ள தாலும் இவன் கொடைத்திறனை அறியமுடிகிறது.  

Join us telegram: www.t.me/teamheritager

அரசியல் திறன்

தந்தை அறிவு மகன் அறிவு என்பது போல், அரசியல் அறிஞராக விளங்கிய முதலாம் ராஜராஜனின் மகனான ராஜேந்திரனும் அரசியல் துறையில் உன்னத நிலையில் இருந்தார். தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே இவன் சோழ நாட்டை முழுவதும் சுற்றிப்பார்த்து ஆட்சி முறையில் பயிற்சி பெற்றார். கி.பி 1012  இளவரசனாக நியமிக்கப்பட்டு தந்தையுடன் இணைந்து ஆட்சி பொறுப்பை எடுத்துக் கொண்டார். தன் தந்தை தன்னை இளவரசனாகவும்மாதண்ட நாயகனாகவும் நியமித்ததை போன்று தானும் தன் மூத்த மகனாகிய முதலாம் ராஜாதிராஜனை கி.பி 1018 ஆம் ஆண்டு இளவரசனாகவும்,  மாதண்ட நாயகனாகவும் நியமித்தான்.  

        இராஜராஜன் காலத்தே பின்பற்றப்பட்ட போதிலும் ராஜேந்திரன் செய்த செயலே போற்றத் தகுந்தது.   ஏனெனில் தன் தந்தையின் இறுதிக் காலத்தில் இளவரசனாக்கப்பட்டான். ஆனால், நம் ராஜேந்திரன் தனது ஆட்சி ஆண்டிலேயே தன் மகனுக்கும் இலவச பட்டம் கட்டினான்.  தான் சிறந்த அரசியல் அறிஞர் ஆதலின் தன் மகனுக்கு, தொடக்க காலத்திலிருந்தே அரசியல் கருமங்களில் பயிற்சி அளித்தார். ஏறத்தாழ 27 ஆண்டுகாலம் தந்தையும் மகனும் இணைந்து ஆட்சி நடத்திய வேறு எங்கும் காணமுடியாது.

 தன் மூத்த மகனை இளவரசனாக நியமித்த போன்றே, ராஜேந்திரன் தன் இரண்டாம்  மகனான இராஜேந்திர சோழதேவரையும், மூன்றாம் மகனான வீரராஜேந்திரனையும், சோழ நாட்டியினை சுற்றி வருவதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் பயிற்சி அளித்தான். பின்பு பாண்டிய நாட்டை வென்று வென்று  தன் மகனிடம் பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்தது, தமிழக வரலாற்றில் ராஜேந்திரன் செய்த புதுமையாகும். அதுமட்டுமல்லாது, நாட்டுப்பற்று மிக்க பாண்டிய நாட்டு மக்களை திருப்திப்படுத்தவே சோழ- பாண்டியன் என்னும் பெயர் சூட்டியதோடு, பாண்டிய நாட்டின் ஒழுகலாற்றின்படி சடைய வர்மன் என்னும் பட்டத்தினையும் இராஜேந்திரன் தன் மகனுக்கு சூட்டினார்.  

இவ்வேந்தனது  தெளிந்த மேம்பட்ட அரசியல் திறன் இதன் மூலம் வெளிப்படுகிறது. இராஜேந்திரன் பாண்டிய நாட்டில் அரச பிரதிநிதியை நியமித்தமை இவன் தந்தையும் சிறந்த அரசியல் அறிஞர் என்பது தெரியவருகிறது.

பாண்டிய நாடு நல்ல முறையில் தன் மகனால் ஆளப்படுவது கண்ட ராஜேந்திரன், சேர நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை அவனிடம் ஒப்படைத்தது போற்றத்தக்க ஒன்றாகும். தன் மற்ற மக்களையும் சில மண்டலங்களுக்கு தலைவர்களாக  ஆட்சி புரிய செய்தான். இவன் ஆட்சிப் பொறுப்பினை தனது மகளிடம் ஒப்படைத்த காரணத்தால் தான். இவன் புறநாட்டு பயிற்சிகளில் முழுமையாக ஈடுபடவும்முதுமை காலத்தில் மன நிறைவுடன் அமைதியுடன் வாழவும், சிவ. பூசையிலும், சமயப் பணிகளில் நாட்டம் கொள்ளவும் முடிந்தது. கடமைகளை செய்து முடித்து வெற்றிக்கண்ட ராஜேந்திர சோழன் அரசியல் அறிவு போற்றத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.

தன் மகளாகிய அம்மங்கை தேவியை, சாளுக்கிய மன்னனான ராஜராஜ நரேந்திரனுக்கு மணம் செய்வித்து. சோழ சாளுக்கிய உறவை வலுப்படுத்தியது, இவனின் உள்ளார்ந்த அரசியல் திறத்தை எடுத்துக் காட்டுகிறது. மேலைச் சாளுக்கியரும்,  கீழைச்  சாளுக்கியரும் இணைந்துவிட்டால். சாளுக்கியர்களின் கை ஓங்கி விடும் என்றும், சோழர்கள் நிலை தாழ்ந்து விடும் என்றும் கருதிய நம்வேந்தர்கள் கீழைசாளுக்கிய உறவை துண்டித்து  விடாது   விரிவுபடுத்தினர். தக்க தருணத்தில் கீழை சாளுக்கியர்களுக்கு படை உதவி அளித்து.

மேலை சாளுக்கியரை வென்று, இராஜராஜ நரேந்திரனை வேங்கி அரியணையில் அமரச் செய்தது  ராஜேந்திரனின் அரசியல் திறத்தை காணமுடிகிறது. ஈழ நாடு முழுமையும் வென்று சோழ மண்டலத்துடன் இணைந்து சோழர் மேலாண்மையை, அங்கு நிறுவியதும் குறிப்பிடத்தக்க ஒன்று. காம்போஜம், சீனம், கிழக்கிந்திய தீவுகள் இவற்றுடன் கொண்டிருந்த நட்பும், நல்லுறவும் இவனின் சிறந்த அரசியல் அறிவை காட்டுகிறது. ராஜேந்திரன் கி.பி 1020, கி.பி 1033 ஆம் ஆண்டுகளில் சீன மன்னனிடம் தூதுக் குழுவை அனுப்பி நட்புறவும், வணிக உறவும்   கொண்டான்.

     சோழ நாட்டின் தென்கோடியில் அமைந்திருந்த தலைநகராகிய தஞ்சையை, நாட்டின் மத்திய பகுதியான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றியமை ராஜேந்திர சோழனின் அரசியல் அறிவை நன்கு வெளிப்படுத்துகிறது.   தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அரசியல் துறைகளிலும், படைத் துறைகளிலும் பணியாற்றி, சிறந்த தகுதி படைத்தோரை தனது ஆட்சிக் காலத்திலும் பயன்படுத்திக் கொண்டார்.   எடுத்துக்காட்டாக கிருஷ்ணன் ராமனான மும்முடிச் சோழ பிரம்மராயன், ஈராயிரவன் பல்லவராயரான உத்தம சோழ பல்லவராயன் ஆகியோரைக் கூறலாம்.

மேற்கூறியவை மட்டுமல்லாது நாட்டினை வெல்லுதலும்அவற்றினை ஆட்சிக்கு உட்படுத்துதலும், நாடு முழுமையும் அமைதி நிலவச் செய்து மக்களை பாதுகாத்தலும்நாட்டின் நிலைகளை பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன அருஞ்செயல்கள் செய்தமையும், ராஜேந்திரன் தலை சிறந்த அரசியல் அறிஞர் என்பதை மெய்ப்பிக்கின்றது. சைவ சமயத்தினை போற்றுவதுடன் அமையாது மற்ற மதத்தினருக்கு மத உரிமை வழங்கி. எல்லாம் மக்களின் நன்மதிப்பையும், ஒத்துழைப்பை பெற்று மாமன்னன் அசோகன் போல் சமயத் துறையிலும் சிறந்தவனாக விளங்கினான்.

 போற்றத் தகுந்த அரசியல் அறிஞராகத் திகழ்ந்த காரணத்தால்தான். தன் தந்தை விட்டுச் சென்ற சோழப் பெரு நாட்டை கட்டி காத்து விரிவுபடுத்தி நல்ல ஆட்சி செலுத்தினான். இவன்  இறப்பிற்குப்பின் தான் விட்டுச்சென்ற சோழநாடு நீண்ட நெடுங்காலமாக  இவன் தந்தை, மகன், மக்களையும் அரசியல் துறையில் நன்கு பக்குவப்படுத்தி அரசியல் அறிஞர் என்பதை வெளிப்படுத்தினான். தன் மக்களுக்கு பட்டத் தகராறு ஏற்படாதவாறு தடுக்க வேண்டும் என நினைத்தவன். தன் மூத்த மகனை இளவரசனாக்கினான்  என்பது இவனின் ஆளுமையும் அரசியல் திறனும் அறிய முடிகிறது.

 பண்டிதசோழன்

சங்க காலத்தில் நம் நாட்டை ஆண்டு வந்த சேர, சோழ,பாண்டிய வேந்தர்கள் கல்வி கேள்விகளில் மேம்பட்டு இருந்தது நாமறிந்த ஒன்று. செஞ்சொற் கவி பாடும் வன்மை பெற்று விளங்கினர்.   கற்றோரை போற்றினர். சங்ககால வேந்தர்கள் போலவே பிற்கால சோழ மன்னர்களும் புலமை மிக்கவராக விளங்கினார்.  ராஜேந்திர சோழனும் தாய்மொழியினையும், தாய் நாட்டையும் தன் இரு கண்களாகப் போற்றி வந்தான். தாய்மொழியாம் தித்திக்கும் தமிழ் மீது அளவற்ற காதல் கொண்டான் போற்றி வந்தான். தமிழ்ப் புலவர் பெருமக்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்து வந்தான். சிறந்த சிவனடியாராக போற்றப்படும்

கங்கை கொண்ட சோழபுரத்தின் மீது திருவிசைப்பா பாடிய  கருவூர் தேவர் என்பவர் அக்காலப் புலவர் பெருமக்கள் ஒருவர். நம்பியாண்டார் நம்பியும் இவனால் ஆதரிக்கப்பட்டவர். தமிழ் மொழியின் கண் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட ராஜேந்திரன். வடமொழியின் பால் ஆர்வம் கொண்டு புலமையும் பெற்றிருந்தான். இவனது வடமொழி பட்டங்களையும் கல்வெட்டுக்களும் சிறந்த காவிய நடையில் வரைந்தவனான நாராயணகவி என்பார் பெரிதும் மதிக்கப்பட்டார்.    

இவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான். யாப்பருங்கலம்யாப்பருங்கலக் காரிகை என்பன செய்த அமிர்தசாகரர் இவற்றுக்கு உரை வகுத்த, குணசாகரர் காலத்தவர் என்று சோழர் வரலாறு நூலில் மா. இராசமாணிக்கர்கூறுகிறார். தமிழிலும், வடமொழியிலும் தேர்ச்சி பெற்று கற்றோரை போற்றி பாதுகாத்த ராஜேந்திரன் சிறந்த அறிஞன் என்பதையும் கரந்தை செப்பேடு நுட்பமாக கூறுகிறது. நுட்பமான மதிபுலவருடைய குழாங்களில்  பண்டிதர்களை அளந்து காட்டும் உரை கால்வாய் இருப்பவனும் என்று கூறுகிறது. இவன் இளம் பருவத்திலேயே எல்லா வேதங்களையும், சாஸ்திரங்களையும், அறிந்தவனாயும், இலக்கியங்களையும் ஆராய்ந்து அறிந்தவன் என்றும் கரந்தைச் செப்பேடு கூறுகிறது.

நம் ராஜேந்திரன் அறிஞனான  காரணத்தால் தான்  எண்ணாயிரம், திரிபுவனம்,வேப்பத்தூர், திருமுக்கூடல் ஆகிய வடமொழிக் கல்லூரிகளுக்கு நிறைய நலதானங்கள் அளித்துள்ளான். இவ்வாறு, கல்வியறிவு, பட்டறிவும்,பெற்ற ராஜேந்திரன் புலமையில் சிறந்தும்,கற்றொரைப் போற்றியும் பண்டித சோழனாய் விளங்கினான்.

பெற்றோரிடத்து பேரன்பு

 முதலாம் ராஜேந்திர சோழன் தன் தந்தையை போலவே, தன் பெற்றோர் இடத்தில். எல்லையற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். தன் தாயின் மீதும் தன்னை வளர்த்த தந்தையின் மீதும் அளவில்லா அன்பும், பக்தியும் கொண்டு இருந்ததால் தான் இப்பெரும் நாட்டினை கட்டியாளும் உள்ளம் படைத்தவராக விளங்கினார்.

செய்நன்றி மறவாமை

தன் இளமைக்காலத்தில் அன்புடன் தன்னை வளர்த்து கல்வி, கேள்வி, ஒழுக்கம், இறையன்பு போன்ற நற்பண்புகள் தோன்றி வளர வழி செய்த, சைவ சமயத்துக்கு தாய் போன்றவர் ஆன சிவஞான கண்டராதித்தரின் மனைவியான, செம்பியன் மாதேவிக்கு தஞ்சை மாவட்டம், நாகப்பட்டினம் வட்டம் செம்பியன் மாதேவி எனும் ஊரில் உள்ள கோவிலில் படிமம் ஒன்றினை நிறுவி். அதன் வழிபாட்டிற்கு தேவையான நிவந்தம் அளித்துள்ளான். தனக்கு சைவராக விளங்கிய சர்வசிவ பண்டிதரின் தொண்டினை என்றும் மறவாத நம் ராஜேந்திரன். அவருக்கும் அவர் சீடர்களுக்கும் ஆச்சாரிய போகமாக ஆண்டுதோறும் 2000கலநெல் அளித்து மகிழ்ந்ததும் இவன் செய்நன்றி மறவாமை கூறுகிறதுராஜேந்திரனுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது போன்றவை பல தானங்கள் செய்துள்ளான்.

கங்கை படையெடுப்பின்போது அருள்கூர்ந்து தனக்கு வெற்றி தேடித்தந்த குலதெய்வமான, தில்லைக் கூத்தனுக்கு நன்றி  தெரிவிக்கும் பொருட்டு கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டுவித்தான். ராஜேந்திர சோழன் மடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும் அவனது விழுமிய பேரரசு அழிந்து போகவில்லை.  இவனது நன்றிக்கடன் இன்றும் நின்று நிலவுகிறது இதன் மூலம்  அறிய முடிகிறது.

சமய பொது நோக்கு       

தான் வழிபடும் மதத்தினை போற்றுவதுடன், பிற மதங்களும் இகழாது போற்றுவதே சமயப்பொறை என்று அசோகன் கூறுவதுபோல, ராஜேந்திர சோழனும் அதை கைக்கொண்டான்.  சிவபாதசேகரனும் ராஜனின் தவபுதல்வனாம்  ராஜேந்திரனும் சிவனடி போற்றும் சிந்தை யோகத்தில் இருந்தார். சைவம் தழைத்தோங்க அயராது உழைத்த இவர் கங்கை கரையில் இருந்து சமயாச்சாரியர்களை அழைத்து வந்து சோழநாட்டின் கண் குடியமர்த்தி, சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டு புரிந்தான்சைவ சமயத்தினை கொடுமுடியில் ஏற்றி வைத்த ராஜேந்திரன் ஒரு மதாச்சாரியார்  எனக் கூறுமளவிற்கு நற்பணி புரிந்தான்.

சைவ சமயத்தினை வாழ வைத்ததோடு அமைதி பெற்றிருப்பின்இவனது பெரும் புகழ் பாரெங்கும் பரவி இருக்காது. மாறாக எம்மதமும் சம்மதம் என்ற செம்மையான கொள்கையை கைப்பற்றியதன் மூலம், எல்லா சமயத்திற்கும் ஒல்லும் வகையெல்லாம் நல்லறம் செய்தான், நிவந்தங்கள் அளித்தான்,   நல்லாதரவு கொடுத்தான். தன் அளவில்  சிறந்த சிவபக்தனாக விளங்கிய போதிலும், பல சமயத்தவருக்கும் மன்னன் என்ற முறையில் சமய பொது நோக்கம் உடையவனாய் இருந்தான்.

திருமந்திர ஓலை நாயகம் கங்கை கொண்ட சோழபுரத்தை ராஜ வித்யாதரன் தெருவில், சோனகன் சாவூர் பரஞ்சோதி என்ற  இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் இவன் சமயம், மொழி, நாடு என்ற பாகுபாடு இன்றி அராபியனுக்கும் உயர் பதவி வழங்கி இருந்த செய்தி அறியப்படுகிறது. சமரச நோக்கத்தினை எப்படிப் போற்றுவது, சமய பொதுநோக்கு பெற்ற காரணம், எப்படி என நாம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது. இவன் இளமை காலத்தில் வளர்த்து, வந்த செம்பியன்மாதேவியும், குந்தவை யாரும்இவனிடம் சமயப்பொறையினை ஊட்டினார்.

சிவ, வைணவ, சமண, புத்த ஆலயங்களுக்கும்எவ்வித வேறுபாடுமின்றி வரையாது வழங்கிய அம்மையார் ஆவார். இவர் வையை திருமலையில் குந்தவை ஜினாலயம் என்னும் சமணப் பள்ளி நிறுவிய பெருமைக்குரியவர். எனவேநம் ராஜேந்திரனும் சமயபொறையினை இளமைக்காலத்திலேயே இவரிடம் கற்றார். சமயபொறையை செம்மையான முறையில் மேற்கொண்டு தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விகாரை. என்னும் புத்த ஆலயத்திற்கு பள்ளிச்சந்தமாக அளிக்கப்பட்ட ஆனைமங்கலம் எனும் ஊரினை, இவன் தனது ஆட்சிக்காலத்தில் சாசனம் மூலமாக வழங்கினார் என்ற செய்தி அறியப்படுகிறது.

அதுமட்டுமல்லாது ஈழதை வென்ற பின்பு நாட்டின் பல பகுதிகளில், சைவ வைணவ ஆலயங்கள் எழுப்பினான் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இவன். ஆட்சிக் காலத்தில் கல்வியில் கரையில்லா காஞ்சி மாநகரின் கண் எண்ணற்ற புத்த மதத்தினரும், சமய சமயத்தினருக்கு. சம உரிமையுடன் வாழ்ந்தனர் என்பது பலனாகிறது.  சைவ ஆலயங்களை கட்டுவித்ததோடு மட்டுமல்லாமல் கங்கபாடி நாட்டின்கண் குவலாளபுரத்தில் (கோலார்) ஒரு பிடாரி கோயிலையும் எழுப்பினான். வைணவ கோவில்களுக்கும், சமணப் பள்ளிகளும், புத்த விகாரைகளுக்கும் முறையே திருவிடையாட்டமும், பள்ளிச்சந்தமும் அளித்தான்வைணவ கோவில்களில் பிரபந்தங்கள்  ஓதவகை செய்தான்.சைவ செல்வனாக திறந்த ராஜேந்திரன் இதில் மேம்பட்டு விளங்கினார்.

Join us telegram: www.t.me/teamheritager

கலையார்வம்

பண்டையகால மன்னர்களில் பெரும்பாலும் கலை ஆர்வம் மிக்கவர்களாக இருந்ததை நாம்  வரலாறு மூலம் அறிந்திருப்போம். அவ்வகையில் ராஜேந்திரனும் கலை ஆர்வத்தில் சளைத்தவன் என்று கூறமுடியாது. சோழ மன்னர்கள் அதிலும் சிறப்பாக பிற்கால சோழ மன்னர்கள் கலையார்வம் கொண்ட கலைஞர்களாக காணப்பட்டனர். அவ்வகையில் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் இவர்களின் ஆட்சி காலத்தில் உச்ச நிலையில் இருந்தது. இவற்றுக்கெல்லாம் முழு முதல் காரணம் கலையார்வம் மிக்க மன்னன் நல்ல ஆதரவும் தான். கங்கை கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழேச்சரம் நமது வேந்தனின் கலை ஆர்வத்திற்கு தலைசிறந்த இடுகாடடு எடுத்துக்காட்டு.

கங்கை கொண்ட சோழபுரம் பாழடைந்த நிலையில் காணப்பட்ட போதிலும், கங்கை கொண்ட சோழண்சுரம் தன் நிலையை இழந்த போதிலும் செம்மாந்து நின்று நிலைக்கிறது ராஜேந்திரன் கலையார்வம்.  இவ்வாலயம் பொலிவிழந்து காணப்பட்டாளும் கலைச் சிறப்பு கெடாமல் உருவத்தில் மாவீரன் ராஜேந்திரன் போலவே உயர்ந்திருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரம் ஓர் எழில் மிகுந்த சிற்பக்கூடம் ஆகவே காணமுடிகிறது. கலைமகள்திருமகள், சண்டிகேஸ்வரர், நடராஜர்,கணேசர், சுப்பிரமணியர், பிரம்மன், பிக்சாதனா, கசலக்குமி போன்ற சிற்பங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.   

கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் பல சிற்பங்கள் ராஜேந்திரன் காலத்தில் ஆடல், பாடல், ஓவியம், நாடகம் போன்ற கலைகள் வளர்ச்சி பெற்றிருந்தன. ராஜேந்திரன் முகலாயப் மன்னன் ஔரங்கசீப்பை போல பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான் ,கலை ஆர்வம் இல்லாது இருந்திருப்பின் இங்கு விமானத்திலும், கோவிலின் வெளிப் புறத்திலும் காணும் சிற்பங்களை காட்டிலும் உயர்ந்த சிற்பங்கள்  தென் இந்தியாவில் மட்டுமின்றி, தென்னிந்திய கலையை பின்பற்றிய சாவக்க கலையிலும் இல்லை’ என்று, மேலைநாட்டு அறிஞர்கள்  புகழும்படி சிறப்பை கொண்ட சிற்பங்களை காணமுடியாது. ராஜேந்திரன் கலையார்வம் கொண்ட கலைஞர்களை போன்ற காரணத்தால் தான் இவனை எல்லா சாஸ்திரங்களையும் கடந்த அறிவுடையவன், கலைகளில் தேர்ச்சி பெற்றவன் என்று புகழ்கிறது.

வடமொழி ஆர்வம்

தமிழ் மொழி மீது தனியாத பேர் அன்பும், பற்றும் கொண்ட ராஜேந்திரன் வட மொழியின் மீது பேரார்வம் கொண்டவர், என்பது கல்வெட்டு வழி அறியமுடிகிறது. தமிழகமெங்கும் வடமொழி ஆர்வம் நிறைந்திருந்தது. வடமொழி கற்பதே பெருமை என எண்ணப்பட்டது. பல்லவர் ஆட்சிக் காலத்திலிருந்தே தமிழகத்தில் வடமொழி ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. எனவே, தான் ராஜேந்திரனும் வடமொழி ஆர்வம் கொண்டு இருந்தான். கல்வெட்டுகளில் வடமொழியை பயன்படுத்தி உள்ளதாலும், இவனது கரந்தைச் செப்பேடு ஒரு பகுதியும், திருவாலங்காட்டுச் செப்பேடும், வடமொழியில் காணப்படுவதாலும், கரந்தைச் செப்பேட்டில் காணப்படும் இலச்சினையில் வடமொழி சுலோகம் பொறிக்கப் பட்டுள்ளதாலும். இவன் வடமொழி ஆர்வம் கொண்டவன் என்பது தெரியவருகிறது. 

ராஜேந்திரனது ஆட்சிக் காலத்தில் வடமொழிக் கல்வி வளர்ச்சிக்காக, பல வடமொழி கல்லூரிகளை நிறுவி வேதம்,இலக்கணம், வேதாந்தம்மீமாம்சை  போன்றவை கற்பிக்க பேருதவி செய்தார். தென் ஆற்காடு மாவட்டம் எண்ணாயிரம் எனும் ஊரில் மறைநூல் விடுதி கல்லூரி ஒன்றும், வடமொழிக் கல்லூரி ஒன்றும், பாண்டிச் சேரிக்கு அருகில் திருபுவனை எனும் ஊரில் வடமொழிக் கல்லூரி ஒன்றும் அமைத்தான்இவர்களின்  பராமரிப்புச் செலவுக்கும், பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காகவும், மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்பதற்காகவும், இவன் நிறைந்த அளவில்லாத மானியங்களை கொடுத்துள்ளான்.

ஒவ்வொரு கல்லூரியிலும் ஏறத்தாழ 350 மாணவர்கள் கல்வி பயின்றனர். வடமொழியில் உயர்கல்வி கற்க இத்தனை அரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தான் ராஜேந்திரன்.  வடமொழி புலவர்களை ஆதரித்துள்ளார் அவர்களில் நாராயணகவி என்பவன் குறிப்பிடத் தக்கவன். திரிபுவன மாதேவிக்கும், ராஜேந்திரனுக்கும் பேராசிரியராக திகழ்ந்தான் என்பதை கரந்தைச் செப்பேடு கூறுகிறது.

புதியன புனைதல்

  • ராஜேந்திரனுக்கு முன்பு ஆட்சி செய்த தன் முன்னோர்கள் இச்சத்தான முறையை பின்பற்ற வில்லை. ஆனால் அதனை ராஜேந்திரன் பின்பற்றினான்.
  • பல திருக்கோயில்களை கட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ராஜேந்திரன். அம்மனுக்கும் தனிக் கோயில் அமைக்கும் புதியமுறை பின்பற்றினான்.  புதிய பாதை அமைத்தான் இவை பிற்காலத்தில் திருகாமக் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இதனை திருக்கோயில் அமைப்பு முறையில் ராஜேந்திரன் புதுமையாக புகுத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று.
  • ராஜேந்திரன் தனது தலைநகரம் தஞ்சையிலிருந்து, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றியதே மாபெரும் புதுமையாகும்.
  • தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் புனித தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தம் உள்ளது. புண்ணிய தீர்த்தக் கிணறு கோயிலுக்குள் காணப்படும். முதலாம் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் புண்ணிய தீர்த்தம் சிவகங்கை குளம் ஆகும். இதன் பெயர்தான் சிவகங்கை குளமே தவிர இங்கு இருக்கும் நீர் கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டது. ஆனால் ராஜேந்திரன் கங்கை நதியில் இருந்து கங்கை நீரைக் கொணர்ந்து, அதன் ஒரு பகுதியை புண்ணிய தீர்த்த கிணற்றில் ஊற்றினான். கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிங்க தீர்த்தம் க்(கிணறு)புதுமையான அமைப்பினைக் கொண்டது.
  • நாட்டில் நீர்ப்பாசன வசதியை விரிவாக்க, உணவு உற்பத்தியை பெருக்க விரிவான திட்டத்தை தீட்டி சோழகங்கம் ஏரி உருவாக்கினான்.
  • குன்றும் மலையும் இல்லாத இடத்தில் ஏறத்தாழ பதினாறு கல் தொலைவில் நீளமும், மூன்று கல் தொலைவு அகலமும் கொண்ட அந்த ஏரியை அமைத்தான் அதன் கரைகளை உயர்த்தி நீரை தேக்கியதே  புதிய முறை ஆகும்.
  • ராஜராஜன்  இருபத்தி எட்டாம் ஆட்சியாண்டில் தன் மகனான ராஜேந்திரனுக்கு இளவரசு  பட்டம் சூட்டினார். ஆனால் ராஜேந்திரனோ ஏழாவது ஆட்சி ஆண்டிலேயே தன் மகனுக்குப் பட்டம் கட்டி ஆட்சி துறையில் ஈடுபடுத்தி, 27 ஆண்டுகள் தந்தையும் மகனுமாக இணைந்து ஆட்சி செய்தது புதுமையான ஒன்றாகும்.

இவ்வாறு எல்லா சாஸ்திரங்களையும் கடந்த அறிவை உடையவன் ராஜேந்திரன், இளம்பருவத்திலேயே எல்லாம் வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவனாக இருந்து. புது விதமான நல திட்டங்களை மக்களுக்கு செய்து, பல நற்குணங்களையும்,  அன்பு நெறியான பக்தி நெறியையும் பின்பற்றி சிறப்புடைய குணாமாணவனாக திகழ்கிறான்.

ராஜேந்திரனின் திறத்துக்கு வழி வகுத்தோர்

       ராஜேந்திரன் திறத்தை பெருமளவு  உயர்த்தி வைத்துக்கொள்ள காரணமாக விளங்கியவர்களுக்கு பெரும் வகையில் நன்றி செய்துள்ளான்.  அவர்களில் முதலாவதாக சர்வசிவ பண்டிதர் காணப்படுகிறார். ராஜராஜனின் கல்வெட்டு களில் ராஜேந்திரனின் கல்வெட்டுகளிலும் ஈசான பண்டிதர், சர்வசிவ பண்டிதர், பவனபிடாரன் ஆகிய குருமார்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் போன்ற மன்னர்களும் தன் ஸ்வாமி தேவர் அறிவுரைப்படி நடந்தனர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

காஷ்மகிராரி ஆராவமுது புருஷோத்தமனான ராஜேந்திர சிம்மப்பேராசிரியர் ராஜேந்திரனின் பேராசிரியராக இருந்து மன்னனுக்கு நற்கல்வி பயிற்றுவித்தார். பேராசிரியருக்கு தக்க ஊதியம் அளித்து பெருமைப் படுத்தினான் ராஜேந்திரன்.    இவர்தான் ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு பகுதி இயற்றிய பெருமைக்குரியவர் ஆவார்.  காஷ்மகாரி கிருஷ்ண ரங்கனான திரிபுவன மாதேவி பேராசிரியன் இப்பேராசிரியரையும் ராஜேந்திரன் ஆதரித்து ஆதரவு காட்டினார் கரந்தைச் செப்பேடு பகுதிகளில் இயற்றிய பெருமையும் பெற்றார்.

 இலகுவீச பண்டிதர்

ராஜேந்திர சோழன் அறிவுத் துறையிலும், ஆன்மிகத் துறையிலும் தேர்ச்சிபெற அரும்பாடுபட்டவர்களில் இவரும் முக்கியமானவர். அப்பரடிகள் அது காலத்தில் அறுவகை சமயங்கள் தமிழகத்தில் நிலவியதாக அப்பரடிகள் குறிக்கின்றார். சைவ நெறியின் அறுவகை பிரிவுகளான காளாமுக சைவம் சிறப்பானது. சாக்தர்கள், சன்மார்க்கர் போன்ற சைவ சமயப் பிரிவினரும் அக்காலத்தில் வாழ்ந்து வந்தனர். ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் காளாமுக சைவம் மக்கள் மத்தியில் சிறப்பிடம் பெற்றிருந்தது. ராஜேந்திரன் காலத்தில் இக்கோட்பாட்டை நன்குணர்ந்து இப்புலவருக்கு ஆதரவு தந்து வந்தார்.

ஈசான சிவ பண்டிதர்

      ஈசான சிவ பண்டிதர் முதலாம் ராஜேந்திர சோழனின் குருவாவார். அதுமட்டுமல்லாது, ராஜேந்திர சோழனுக்கு நண்பராய்தத்துவஞானி, வழிகாட்டியாய் இருந்தார்இவர் தான் இவரின் குரு என்று வட ஆற்காடு மாவட்டத்தில் காஞ்சியிலிருந்து வந்தவாசிக்கு செல்லும் நெடுஞ்சாலையில், பதிமூன்றாம் கல் தொலைவில் உள்ள கூழம்பந்தல்  என்னும்  ஊரில் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் கல்வெட்டில் அறியமுடிகிறது. இந்த சிவன் கோவில் நம் இராஜேந்திரனின் கங்கை படை எழுச்சியின் வெற்றி சின்னம் கட்டப்பட்டது.   இதனை கட்டியவர் ஈசான சிவ பண்டிதர் என்பதை கல்வெட்டுச் செய்திகள் வழி அறிய முடிகிறது. இவரால் பெரிதும் ஆதரிக்கப்பட்டார்.

நம்பியாண்டார் நம்பி, கரூர் தேவர்

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் தமிழ் தொண்டு புரிந்த இவ்விரு புலவர்கள் மீதும் ராஜேந்திரன் அளவுக்கரிய மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்.

நம்பி காடநம்பி

இவர் திருவாரூர் இறைவன் மீதும்,சிதம்பரம் இறைவன் மீதும் இரு பாக்கள் பாடி புகழ் பெற்றவர். இவர் கிபி 1050 ஆம்  ஆண்டினதாக குறிக்கப்பட்டுள்ளது திருவையாற்றில் காணப்படும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள, ஆத்நேய நம்பி காட நம்பி என்னும் அர்ச்சகரே என்று அறிஞர் சிலர் கருதுகிறார்கள். ராஜேந்திரன்  அவரை நன்கு ஆதரித்தார்.     

சைவா ஆசாரியர்கள் 

     கங்கைப் பகுதியில் இருந்து சைவ சமயச்சாரியர்களையும், சிவ பிராமணர்களையும் அழைத்து வந்து காஞ்சி மாநகரிலும், சோணாட்டிலும் குடியேற்றி அவர்களுக்கு நல்ல ஆதரவு அளித்தான்.. 

அமிர்தசாகரர் குணசாகரர்

யாப்பருங்கலம்,  யாப்பருங்கலக்காரிகை  போன்றவை இயற்றிய அமிர்தசாகர்ரும், இவற்றிற்கு உரைசெய்த குணசாகர்ரும், இராஜேந்திரன் காலத்தவர்  என்று பண்டாரத்தார். மா் இராசமாணிக்கனார்  கூறுகிறார்.

நாராயண கவி

வடமொழியில் பேரார்வம் கொண்ட இவர் கவிஞராகத் திகழ்ந்தார். ராஜேந்திரன் அது வட மொழிப் பட்டங்களையும், கல்வெட்டுகளையும் அழகிய நடையில் எழுதி புகழ் பெற்றவர் இவரே. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் வரைந்தவரும் இவரேஇவர் சங்கரரின்  மகனாவார். ராஜேந்திரன் வடமொழி கவிஞர்களுக்கு நல்ல ஆதரவு நல்கி தேவையான வசதிகளை செய்து தந்தான்இவர் இரண்டாம் புலிகேசியின் ஐகோல் வெட்டெழுத்தினை வரைந்த ரவி கீர்த்தியுடன் ஒப்புமை நோக்கத் தக்கவர்.  ஏனெனில் இவர்கள் வரைந்த வெட்டெழுத்துக்கள் இலக்கிய நயம் கொண்டவையாக காணப்படுகிறது, போற்றப்படுகிறது.

அலுவலர் முதல் சிற்றரசர் வரை

சோழப் பெரு நாட்டை ஆண்ட ராஜேந்திர சோழன், நாட்டினை நல்ல ஆட்சி முறையில் நடத்தி வந்தான். அமைதியும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டது. கை தொழிலும், வாணிகமும் பெரு வளர்ச்சி பெற்றது. சமயமும், கலையும் உன்னத நிலையில் இருந்தது. இவ்வாறு பல துறைகளிலும் சிறந்து விளங்க காரணம், ஒரு மன்னனின் தனித்திறமையே என்று கூறமுடியாது. அரசியல் துறைகளிலும் போர் துறைகளிலும் மன்னனுக்கு பெரும் துணை புரிந்த அரசு அலுவலர்,படைத்தலைவர்களும், சிற்றரசர்களும் மக்கள் நலம் கருதி தன் நலம் கருதாது உழைத்தனர் என்பதை கூற மறுக்க முடியாது.

அவ்வகையில் ராஜேந்திரன் துணையாக வல்லவரையன் வந்தியத்தேவன், அரையன் ராஜராஜன்கிருஷ்ணன் ராமன், மாராயன் அருண்மொழி, ஈராயிரவன் பல்லவனான உத்தம சோழ பல்லவரையன், உத்தம சோழன் கோன், பாண்டியன் சீவல்லபன், உத்தம சோழ மிலாடுடையான், கங்கைகொண்ட சோழ மிலாடுடையான், சத்திரிய சிகாமணி கொங்காள்வான், போன்றோர் மிகவும் திறமையாக ராஜேந்திரனுக்கு உதவி புரிந்து நாட்டினை வழிநடத்த துணை புரிந்தனர்.

ராஜேந்திரன் கால கலை பணிகள்

பண்டைய காலம் முதலே தமிழகத்தில் கலை ஆர்வம் மிக்கவர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் உணவு, உடை, உறையுள் ஆகிய வற்றின் அடிப்படை தேவைகள் குறைவறப்  பெற்றால்தான் கலையில் ஆர்வம் செலுத்த இயலும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ,  சோழர் காலத்து மக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்தனர் என்பது உறுதி பெறுகிறது. ஆயக்கலை 64 என்பது மரபு இவை மன்னனுக்குரிய கலைகள், அந்தணருக்குரிய கலைகள், வணிகருக்கு உரிய கலைகள், வேளாளர் கூறிய கலைகள், மகளிருக்கு உரியர்கலைகள்,  பொதுவான கலைகள் என பல விதமாக பகுக்கப்பட்டுள்ளது.

 

  • கங்கைகொண்ட சோழபுரம், ராஜேந்திரன் வடநாடு சென்று பகைவர்களை வென்று, பெருமை கொண்டதன் விளைவாக கங்கையைக் கொண்டுவந்தான் அதன் அடையாளமாக அமைத்த புதிய நகரம் கங்கை கொண்ட புரம்.
    • கங்காதரர் வெற்றித்திருநகர் கங்காபுரி என்றும் கங்காபுரம் என்றும் புலவர் புலவர்களால் போற்றப்படுகிறது.
    • உட்கோட்டை தற்போது ஏறத்தாழ 250 வீடுகளை கொண்ட சிற்றுராக காணப்படுகிறதுஇதுவே கோட்டை இருந்த இடமாக கூறப்படுகிறது. மக்கள் இதை உட்கோட்டை என அழைக்கின்றனர். இது தற்போது ஒரு உயர்நிலைப் பள்ளியும் உள்ளது.
    • மாளிகை மேடு என்பது சோழ மன்னர்களின் மாளிகை இருந்த இடமாகும். இந்தயிடம் வயலாக தற்போது காணப்படுகிறதுஇது உட் கோட்டைக்கு மேற்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உடைந்த மண்பாண்ட ஓடுகளும், காறைப் கலப்புள்ள செங்கற் சிதைவுகளும் காணப்படுவதால், இவ்விடத்தில் முன்பு அரண்மனை இருந்தது என்பது உறுதி பெறுகிறது. இம்மாளிகை மேட்டில் தோண்டி எடுக்கப்பட்ட கற்தூண்கள் புதுச்சாவடி குளத்தின் படிக்கட்டுகளாக பயன்படுத்தப்பட்டது.   மாளிகைமேடு கிழக்கு மேற்கில் ஒரு கல் நீளமும், தெற்கு வடக்கில் ஒன்றரைக் கல் நீளமும் கொண்டதாகும். இப்பெருமாளிகை பல பகுதிகளால் தடுக்கப்பட்டிருந்தது. இம்மேட்டின் கிழக்கில் ஒரு நீளமான செங்கல் சுவர் இன்று உள்ளது. இங்கு காணப்படும் செங்கல் 15 அங்குல நீளமும் 8 அங்குல அகலமும் 4 அங்குல கனமும் கொண்ட தாகவும்  காணப்படுகிறது. இக்கால்லாலான மதகின் சிதைவுகள் காணப்படுதலால், அரண்மனையில் இருந்து கழிவுகள் கொண்டு செல்லவும், மழைநீர் செல்லவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அறியமுடிகிறது. கோயிலுக்குப் பின்புறம் காணப்படும் ஓடை தற்காலத்தில் கட்டப்பட்டதாகும். அதன் இருபுறமும் காணப்படும் இடிந்த செங்கற் சுவர்களின் சிதைவுகள் பண்டைய காலத்தவை ஆகும்எனவே பரந்த மேட்டில் தான் முன்பு அரண்மனை கட்டப்பட்டு இருந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது.
    • சுண்ணாம்பு குழி அரண்மனையின் கோவில், உட்கோட்டை, நந்தி மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கு தேவையான சுண்ணாம்பு தயாரித்த இடம் ஆகும். எனவே சுண்ணாம்பு தயாரிக்க பயன்பட்ட குழி சுண்ணாம்பு குழி எனப்பட்டது.
  • மெய்க்காவலர் புத்தூர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மெய்க்காவல் செய்த வீரர்கள் வாழ்ந்த இடம் மெய்க்காவல் புத்தூர் ஆகும். மன்னனுக்கு மெய்க் காவல் புரிந்தோரும் இங்குதான் வாசித்திருக்க கூடும்.

 

  • ஆயிர கலம், உட் கோட்டைக்கு அருகில் போர்படை ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் ஆதலால் ஆயுதக்களம் என அழைக்கப்பட்டது. இது தற்காலத்தில் ஆயிரம்கலம் எனும் பெயருடன் ஒரு சிற்றூராக இருக்கிறது. ஆயுதம் என்பது ஆயிரம் என்று மருவி வழங்கியது.
  • வாணதரையன் குப்பம், இது கோவிலுக்கு தெற்கே உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது முதலாம் குலோத்துங்க சோழன் படைத்தலைவன் ஆகிய வாணகோவரையன் தங்கியிருந்த இடமாகும். இது வானவேடிக்கை நிகழ்த்துதற்கு தேவையான வாணவெடிகள் உற்பத்தி செய்யும் வாணவர்கள் வாழ்ந்த இடம் என்றும் சிலர் கூறுகிறார்கள்இன்று வானடுப்பு  எனப்படுகிறது.
  • வீர ரெட்டி தெரு, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இங்கு சோழ வீரர்கள் தங்கி இருந்ததால் இது வீர்ரெட்டி தெரு என்று அழைக்கப்பட்டது.
  • செங்கல்மேடு,  கங்கை கொண்ட சோழபுரம், அரண்மனை, உள்கோட்டை ஆகிய கட்டடங்கள் கட்டுவதற்கு தேவையான செங்கற்கள், அறுக்கப்பட்ட இடம் செங்கல்மேடு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
  • குருகை பாலப்பன் கோவில், குருகை காவலப்பன் கோவில் எனவும் அழைக்கப்படுகிறதுஇச்சிற்றூர் கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்து அறைகல  தொலைவில் அமைந்துள்ளதுஇங்கு தான் ஸ்ரீ நாதமுனிகள் அவதாரம் செய்தார் என்று கூறப்படுகிறது.
  • தொட்டிக்குளம், இது ஒரு பெரிய ஏரியாக இருந்தது. 
  • தீர்த்தகுளம், இங்குதான் புனித்தெப்பக் குளம் இருந்தது. தெப்பத் திருவிழா இங்கு சிறப்பாக  நடைபெற்றது. 
  • தேர் மேடு, கோவில் தேர் நிறுத்தப்பட்டிருந்த இடம் தேர்மேடு என்று அழைக்கப்பட்டது
  • குயவன்பேட்டைகுயவன் மண்பாண்டம் செய்யும் இடம்.  குயவர்கள் வாழ்ந்த பகுதி குயவன் பேட்டை என்றும் வழங்கப்பட்டது
  • மீன்சுருட்டி, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் மீன்சுருட்டி என்ற ஊர் ஒன்று உள்ளது. இவ்வூர் பெயர் காரணம் பற்றியும் ஒரு செவிவழிச் செய்தி கூறப்படுகிறது. ராஜேந்திரன் தன் படைகளை கங்கை கரைக்கு  அனுப்பிய  பின்பு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து சோழபுரம் நோக்கி புறப்பட்டன என்றும், சோழப் படைகள் தயார் நிலையில் விழித்து இருக்கவே, பாண்டியர்கள் தங்கள் மீன்கொடிகளை சுருட்டிக் கொண்டு ஓடியதால் மீன்சுருட்டி என்ற பெயர் பெற்றது என்று கூறுகிறார்கள். கோவிலுக்கும் மாளிகைமேட்டிற்க்கும். இடையில் உள்ள ஓடையில் செங்கற் சுவர்களையுடைய  நிலவறைப்பகுதி இன்றும் காணப்படுவதால். பண்டை காலத்தில் கோயிலையும் மாளிகைமேட்டையும் சுரங்கம் ஒன்றியிருந்தது அறியமுடிகிறது. இந்நகர் அமைப்பினை தெளிவாக அறிந்து கொள்ள போதிய சான்றுகள் இல்லை. நான்கு கல் சதுரங்க கொண்ட பெரு நகரம் என்பதை முன்பே கண்டோம்.
  • இதில் சோழமாளிகை என்ற பெரிய அரண்மனை நகரின் நடுவே அமைந்திருந்தது. இதில் சோழ கேரளன் திருமாளிகை, கேரளம் திருமாளிகை, முடிகொண்ட சோழன் திருமாளிகை, வீரசோழன் திருமாளிகை போன்ற பல மாளிகைகள் அடங்கியது. அரண்மனையில் தங்கியிருந்த ஒரு பகுதி திருமஞ்சனத்தார் வேளம் எனப்பட்டது. அரண்மனையை சுற்றி அமைச்சர், படைத்தலைவர் போன்ற அலுவலர் வாழத்தக்க வீடுகளைக் கொண்ட அகன்ற தெருக்கள் அமைந்திருந்தன. மக்கள் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அமைந்த பெரிய கடைத் தெருவும் அமைந்திருந்தன. அரச விருந்தினரும், வெளிநாட்டினரும் தங்குவதற்கு என தனி மாளிகைகளும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. சுருங்கக் கூறின் ஒரு சிறந்த தலைநகருக்கு தேவையான எல்லா அமைப்புகளும் கங்கை கொண்ட சோழபுரம் பெற்றிருந்தது.
  •  
  • அங்கு காணப்படும் பாழடைந்த கட்டடச் சிதைவுகளின் துணைகொண்டு இந்நகர் அமைப்பினை நாம் அறியலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த பெற்றதால்தான் பல அரிய உண்மைகள் நமக்குத் புலனாகும்.. அது வரையில் நகர அமைப்பு பற்றி தெளிவாக விரிவாக நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இங்கு காணப்படும் அழிவுச் சின்னங்களை கொண்ட மேடுகளையும் அதை சுற்றிய காடுகளையும் நோக்கும்போது, பழைய பாபிலோன் நகர அடையாளங்களாக  இருந்த மேடுகளே வரலாற்று ஆசிரியர்களின் கண் முன் தோன்றுகிறது. 

கங்கை கொண்ட சோழீச்சுரம்

கங்கை கொண்ட சோழனான ராஜேந்திரன் அமைத்த புதிய நகரம் கங்கை கொண்ட சோழபுரம், எனப் பெயர் பெற்றது போல அவன் கட்டிய புதிய கோவில் கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற பெயர் பெற்றது.  இக்கற்றளி தஞ்சை பெருவுடையார் கோயில் அமைப்பிலேயே அமைக்கப்பட்ட  மாடக்கோயில் போல் அமைந்த கோவில் ஆகும்

    • ஆறு கோபுரங்களைக் கொண்டு இக்கோயில் அமைகிறது.
    • பெரும்பாலான கோவில்களில் அடிமட்டம் தரைமட்ட தோடு ஆரம்பிக்கும் . ஆனால் கங்கை கொண்ட சோழேச்சுரத்தின் அடி மட்டம் தரையில் இருந்து 20 அடி உயரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோவிலின் உப பீடமும் தரையில் இருந்து ஆறடி உயரத்தில் ஆரம்பமாகிறது.
    • உப பீடத்தில் பதும வரி, குமுத வரி, வாளி வரி, பட்டியல் வரி, மற்ற வரி போன்ற ஐந்து வரிகள் பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மீது கருப்ப கிரகத்தின் சுற்று சுவர் உயரமாக எழுப்பப்பட்டுள்ளது. இக்கருப்ப கிரகத்தின் மீது 9 மாடங்கள் கொண்ட பெரியதொரு கூருருளை கோபுரம் வைக்கப்பட்டுள்ளது.
  • விமானம்- கர்ப்பக்கிரகம் ஏறத்தாழ 240 அடி உயரம் இருக்கிறது. மேலே உள்ள விமானம் 174 அடி உயரம் கொண்டது. இது 100 அடி சதுரம் அமைந்துள்ளது. இவ்விமானம் ஒன்பது அடுக்குகளை கொண்டுள்ளது. இவற்றில் முதல் இரண்டு அடுக்குகள் ஒன்றன்மீது ஒன்றாகவும் எஞ்சியவை மேலே செல்லச் செல்ல சிறத்துச் சரிவாகவும் அமைந்துள்ளன.
  •  விமானத்தின் நாற்புறங்களிலும்வாயில்களும், மாடங்களும் பெரியவனாக அமைக்கப்பட்டுள்ளன. முழுவதிலும் அழகு கவர்ச்சி மிக்க பதுமைகள் காட்சி அளிக்கின்றன. தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் காணப்படும் விமானங்கள் செங்கல்லும் சுண்ணாம்பும் சேர்த்து கட்டப்பட்டவையாகும்.   ஆனால், தஞ்சை பெருவுடையார் கோயிலும், கங்கைகொண்ட சோழேச்சுரமும், கருவறையிலிருந்து சிகரம் வரை கல்லால் அமைக்கப்பட்டவை ஆகும்.
  •  கோபுரங்களின் அடி பீடமும், நாற்புறமும் ஒத்த சம சதுரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலே செல்லச் செல்ல எல்லா பக்கமும் குறுகி வந்து, உச்சியில் நான்கு பக்கங்களிலும் கூடுகின்ற இடத்தில், ஒரே கல்லால் ஆன வட்டமான சிகரத்தை கொண்டுள்ளது.
  •  இச்சிகரத்தின் மீது தான் ஒற்றைக்கலசம்  பெற்ற அழகிய தோற்றத்துடன் காணப்படுகிறது.   இக் கலசம் இப்பொழுது காணப்பெறவில்லை. பிரமாண்டமான அடி பீடத்தின் அகலத்திற்கு ஏற்ப கோபுரம், எழுப்பப்பட்ட வேண்டுமெனில் அத்துணை உயர்ந்த கோபுரத்திற்கு கற்களை மேலெடுத்துச் செல்வதென்பது கடினமான செயலாகும். எனவே இக்கோயில் கோபுரம் தஞ்சை பெருவுடையார் கோயில் போன்ற அதிகமான உயரத்தில் அமைக்க பெறவில்லை.
  • இக்கோவிலின் அடிப்பீடம் அமைத்த மாபெரும் சிற்பி இறந்து விட்டதால். அவன் மகன் இதைத்தொடர்ந்து கட்டி முடித்தான் என்று கூறப்படுகிறது. கற்களை மேலே கொண்டு செல்ல கோயிலைச் சுற்றி மண்மேடிட்டு, அதன்மீது காரக்கட்டைகளை அமைத்ததாக கூறப்படுகிறது. கோவிலில் இருந்து 7 கல் தொலைவில் உள்ள  பரணைமேடு என்னும் ஊரிலிருந்து பருத்தி மூட்டைகள் அடுக்கி, பரணைக் கட்டி விமானங்கள் மேல் எடுத்து செல்லப்பட்டு பொருத்தப் பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தின் சரிவு தஞ்சை பெருவுடையார் கோவிலை போல் ஒரே நேர்கோட்டில் அமையவில்லை. விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள மிகப் பெரிய வட்ட வடிவ கல் 34 அடி குறுக்களவு கொண்டதாய் உள்ளது. இது ஒரே கல்லால் அமைக்கப்பட்ட விமானமாகும். உச்சியில்  குறுகி வரும் விமானத்தின் நாற்புறமும் இதனோடு இணைக்கப்படுகின்றனஇதை தாமரை இதழ் போன்று அழகாக செதுக்கி உள்ளனர்.

சிவலிங்கம்

இக்கோவிலில் உள்ள பெரிய லிங்கத்தை போல் தமிழ் நாட்டில் மட்டுமன்றி தென்னாட்டில் வேறு எந்த கோயிலிலும் காண இயலாது. இதன் உயரம் 13 அடி ஆகும். இதன் குறுக்களவு 3 அடி. இக்கோவிலில் உள்ள லிங்கம் தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள லிங்கம் போல் காட்சிதருகிறது . இச்சிவலிங்கம் ஒரே கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றுஇது 13 முழச் சுற்றளவு உடையது. இதன் பீடம் 40 முழச் சுற்றளவு உடையது். பீடத்தை தாங்க 8. கற்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சிவலிங்கத்திற்கு நாற்பது முழு ஆடை அணியப்படுகிறது. சிவலிங்கத்தின் அங்கவஸ்திரம் ஒன்பது முழம் கொண்டது.

சிவலிங்கமும் கோயிலும்

கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், லிங்கத்தை போன்று அடியில் சதுர அமைப்பு கொண்டதாயும் இடையில் எண் பட்டை வடிவாயும், முடிவில் உருண்டையாயும் அமைந்துள்ளது. இவ்விமானத்தை உற்று நோக்கு பவர் லிங்க உருவம் உள்ளதை காண்பர்.  லிங்கம் மிக உயரத்தில் இருப்பதால் சாரம் கட்டி அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்வது வழக்கம். இது இப்பொழுது இடி விழுந்து இரண்டாக பிளந்து உள்ளது என்று கூறப்படுகிறது. 

சிவலிங்கம் பெருமான் மீது கருவூர்த்தில் எழுந்தருளியுள்ள இறைவன் மீது பாடியுள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது பாடிய பாக்கள் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. கல்லையும் கசிந்துருக செய்யுமாறு பக்திச்சுவை  சொட்ட பாடியுள்ளார். இவர் இயற்றியுள்ள  பாக்களை படித்து சுவைத்து தான், கருவூர்தேவர் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது கொண்ட கரை காணாத காதல் உணரமுடியும்.

பொதுவாக கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும். சில கோவில்கள் தெற்கு அல்லது வடக்கு நோக்கியும் அரிதாக காணப்படும். பொதுவாக தமிழகத்தில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய கோயில்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. கங்கைகொண்ட சோழீசுவரம் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. இங்கே கோயில் கொண்டுள்ள இறைவன் பெருவுடையார் பிரகதீஸ்வரர் என்ற பெயர் பெறுகிறார். தஞ்சை பெரியகோவிலில் உள்ள இறைவன் பெயர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. கர்ப்பக் கிரகமும் அதற்கு முன்னால் அர்த்த மண்டபமும் உள்ளன. கர்ப்பகிரகத்திற்க்கும் அர்த்த மண்டபத்திற்க்கு இடையில் வாயில்கள் தெற்கிலும், வடக்கிலும் உள்ளன

சிற்ப நூல் வல்லார் கர்ப்பகிரகத்தை அகநாழிகை என்றும் அர்த்த மண்டபத்தை இடைநாழிகை என்றும் குறிப்பிடுகிறார்இதன் தெற்கு வாயிலில் சிற்பம் மேற்கு நோக்கி தாமரை மலரில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளுடன் கமலம் ஏந்திய வண்ணம் அமர்ந்துள்ளாள். தலையின் இருபுறமும் யானைகளைக் கொண்டு அபிஷேகம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

 திருமதில்

திருமதில் உயர்ந்தும் அகன்றும் பகைவரை தாக்கும் நிலையிலும் தஞ்சைக் கோயிலைப் போலவே அமைந்துள்ளது. 600 அடி நீளமும், 450 அடி அகலமும், நான்கடி அகலமும் கொண்ட இம்மதில் முழுவதும் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. திருமதிலையடுத்து இரண்டு அடுக்கு திருச்சுற்று மாளிகை இருந்தது. ஆனால் அதன் ஒரு பகுதியை மட்டுமே இன்று நாம் காண முடியும்.

திருச்சுற்று

திருச்சுற்று மாளிகை சிறந்த முறையில் இரண்டு அடுக்கு மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் காலத்தால் சிதைந்தும் இடிக்கப்பட்டு நிலைகுலைந்து போய் விட்டது. இப்பொழுது உள்ள பிரகாரமும் சுற்றுச்சுவரும் 584 அடி நீளமும் 372 அடி அகலமும் கொண்டுள்ளது. திருச்சுற்றில் அழிந்த நிலையில் காணப் பெறும் சந்திரசேகர் கோயிலும் மற்ற பல கோவில்களும் காணப்படுகிறது. சண்டீஸ்வரர் சிறு கோவில் தவிர மற்றவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டது என்றும், அம்மன் கோவிலும் பிற்காலத்தில் உள்ளே கொண்டமைக்கப் பெற்றது என்று கூறுகின்றனர்.

கோயிலின் பிரகாரத்தில் ஒரு கிணறு உள்ளது. அசுரனின் பக்தியைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த சிவபெருமான் கங்கையை அங்கே கொண்டு வந்ததாக ஐதீகம். மதிலின் முன்புறம் மூலைகள் இரண்டிலும் பின்புறம் மதிலின்  நடுப்பகுதியிலும் அரைவட்ட வடிவமான கூடம் ஒன்று காணப்படுகிறதுஇது காவற்கூடமாக இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.

நந்தி

உட்கோயிலுக்கு எதிரே பெரிய நந்தி ஒன்று படுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தஞ்சை பெரிய கோவிலில் அமைந்துள்ளது போல் கல்லால் அமைக்கப்படாமல் முற்றும் செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி உயரம் 12 அடி, நீளம் 9 அரை அடி, அகலம் எட்டரையடி என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். தோற்றத்தில் ஒன்றாகவே காட்சியளிப்பதை காண முடிகிறது.

Join us telegram: www.t.me/teamheritager

சிங்கமுக கிணறு

சில ஆலயங்களில் தீர்த்த கிணறுகளுக்கு மேல் சிங்கத்தைப் போன்ற உருவம் அமர்ந்திருப்பது உண்டு. அந்த தீர்த்தங்களுக்கு சிங்க தீர்த்தம் என்று பெயர் அந்த உருவத்திற்கு கீழ் சுரங்கம் போன்ற படிகள் இருக்கும். அவைகளின் வழியாக இறங்கி தீர்த்தம் எடுப்பது உண்டு. இவ்விதமான சுரங்கவழி கிணறுகள் பழைய காலத்து அரண்மனைகளில் இருந்தது. ஹம்பி என்ற விசயநகர தலைநகரில் இப்படிப்பட்ட கிணறுகள் பல காணப்பட்டன.

கங்கை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தூய நீரில் ஒரு பகுதியினை இக்கிணற்றில் ஊற்றி ராஜேந்திரன் தூய்மை செய்தல் என்பது ஐதீகம். இந்நத்திக்கு வலப்புறம் நேர் எதிரே 27 அடி குறுக்களவுள்ள சிங்கமுக. கிணறு ஒன்று வியக்கத்தக்க அளவில் அமைந்துள்ளது. படிகட்டு வரிசைக்கு மேல் செங்கற்களால் ஆன சிங்கம் காட்சியளிக்கிறது. படிக்கட்டுகள் டகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன.     உட்கார்ந்த நிலையில் சிங்கத்தின் வயிற்றில் உள்ள வாயில் வழியே படிகட்டுகள் செல்கின்றன.   இவற்றின் வழியே இறங்கிச் சென்றால் 20 படிக்கட்டுகள் தாண்டிய பின் நீரை காணலாம்.

ஏறத்தாழ முப்பது படிக்கட்டுகள் நீரில் உள்ளனவாம்எனவே இக்கிணற்றில் கருங்கற்களால் ஆன 50 படிகட்டுகளை காணலாம். இவ்வியக்கத்தகு. கிணற்றை நேரில் காணும் பொழுது தான் தமிழர்களின் கலை, அழகுணர்ச்சி, நுண்ணிய வேலைப்பாடு, கலை உணர்வை அறிய முடிகிறது. தமிழகத்தில் கிணறுகளையும் அழகுற பல பாணிகளில் அமைக்கும் பழக்கம் நிலவி இருந்தது. பல்லவர் காலத்திலிருந்து திருவெள்ளறை கோவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்வஸ்திகா அமைப்பிலுள்ள கிணறும். கங்கைகொண்ட சோழபுரத்து சிங்கக் கிணறு குறிப்பிடத்தக்க ஒன்று. கங்கைகொண்ட சோழபுரத்தின் கண்ணுள்ள சிங்கமுக கிணறு மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் அருகில் உள்ள சிங்கமும் பார்வைக்கு ஒரே மாதிரியாக தோற்றமளிக்கின்றன. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிங்கத்திற்குள் கிணறு உள்ளது. மாமல்லபுரத்திலோ, சிங்கத்தினுள் கடவுள் படிமம்  வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை காட்சிக்கு ஒன்றே போல் தோன்றுகின்றது.

  Join us telegram: www.t.me/teamheritager

உட்கோவில்

       உட் கோவிலின் நீளம் 340 அடி; அகலம் 100 அடி; இதனுள், அமைந்துள்ள மகாமண்டபம் 175 அடி நீளமும், 95 அடி அகலமும் கொண்டது. அர்த்தமண்டபம் இறை அளிக்கும் மகாமண்டபத்திற்க்கும் இடையில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தின் தெற்கிலும், வடக்கிலும் படிகளுடன்  அழகிய திருவாயில்கள்  உள்ளது. கோயிலை அணுகும் திருவாயில் கிழக்கே உள்ளது. மகாமண்டபத்தில் எட்டு பகுதிகளாக 140 கற்தூண்கள் அணி அணியாக நிறுத்தப்பட்டுள்ளன.   நடுப்பகுதி 18. அடி உயரம் கொண்டதாக இருபக்கமும் 16 அடி உயரம் கொண்டதாக மேலே கல்கொண்டு மூடிய மண்டபமாகும். கோவிலின் அடிப்பாகம் 100 அடி சதுர  அளவு உடையது ஆகும். இதன் மீது உள்ள விமானம் 186 அடி உயரமுள்ளது.

அர்த்தமண்டபம்

.     அர்த்த மண்டபம் இடை நாழிகை என சிற்ப நூல்  வல்லுநர்களால் அழைக்கப்படுகிறது. இது ஒரு வரிசைகளாலான  பெரிய சதுரக் கற்தூண்களாலானது.  இது சிற்பக்கலையின் இருப்பிடமாக காணப்படுவதால் இதை சிற்பக்கூடம் என்று கூறுதல் மிகை ஆகாது.   மண்டபத் தூண்களில் நடன சிலைகள் பல செதுக்கப்பட்டுள்ளது. பலவகையான நடன நிலைகள் குறிக்கப்பட்டுள்ளது. இலிங்கத்தை நோக்கியுள்ள எதிர் சுவர் மீது ஆறு வரிசைகளில் மிக நுண்ணிய வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

     இவற்றுள் சண்டீசப்பதம்,தடாதகை திருமணம், பார்த்தனும் பரமனும் போர் புரிதல், மார்கண்டன் ஆகியோரின் வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் சுவர் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் இவைகளுடன் ஒப்பு நோக்கத்தக்கது. பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட சிற்பக்கலை ராஜேந்திரன் காலத்தில் மலர்ந்து மணம் பெற்று சிற்பக்கலையின்   மணிமுடியாக இருந்தது எனக் கூறலாம். அர்த்த மண்டபத்தின் இருபுறமும் படிகள் 20 அடி உயரத்திற்கு பக்கவாட்டில் மேலேறி செல்கின்றன. படியைக் கடந்து ஏறியதும் வாயிற்காவலர் சிலைகள் இரண்டு காணப்படும்.

மகா மண்டபம்

.        பெயருக்கேற்ப இம்மண்டபம் பெரியதாக அமைந்திருக்கும், பிற்காலத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்ப பெறுவதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது என்பர்இங்கு தமிழ் ஞானசம்பந்தரின் கற்சிலை மிக்க எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளது. துர்க்கை அம்மன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. துர்க்கை கொற்றவை தெய்வம் என்று அழைக்கப்பெறுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்துக்கு சிற்பங்கள் நாலடி சதுரக் கொண்ட ஒரே கல்லில் அமைக்கப்பட்ட நவகிரகங்கள் மிகச்சிறந்தவை. இவ்வமைப்பு வேறு எங்கும் காணப்படாத  புதுமை வாய்ந்தது என்று கூறலாம்.  

        சூரிய பீடம் தாமரை இதழ்களோடு கூடிய சக்கர வடிவில் அமைந்துள்ளது. சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் எட்டு திசை நோக்கிய வண்ணம் இருக்கின்றனர். சூரியன் ஏழு புரவிகள் பூட்டப் பெற்ற இரதம், இழுத்துச் செல்லப்படும் நிலையில் அமைக்கப் பட்டுள்ளது அருணன் தேரோட்டியாக உள்ளான். இவை அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாகும்இச்சதுர சிற்பம் இப்பொழுது அர்த்த மண்டபத்தில் இருக்கிறது. மகாமண்டபத்தில் உள்ள இரு அறைகளிலும் விமானத்தின் கலசமும் பல சிலை படிமங்களும் திருமேனிகளும் இருக்கின்றன.

வாயிற்காவலர்

.      கங்கைகொண்ட சோழபுரத்தில் கம்பீரத் தோற்றம் உள்ள 12 வாயிற்காவலர் சிலைகள் காணப் படுகிறது. இவை ஏறத்தாழ 12 அடி உயரம் கொண்டவையாக உள்ளது. வாயிற்காவலர் முகம் பயங்கர  தோற்றத்தைக் கொண்டுள்ளது. இவற்றுள் முதல் இரு சிலைகள் காணப் படுகிறது. வாயிற்காவலர்கள் ஒவ்வொரு வாயிலிலும் இருமருங்கிலும் நிறுத்தப்பட்டிருக்கும்எனவே கோவில் வாயில், அர்த்த மண்டப வாயில், உள்ளறை வாயில், வடக்கு வாயில், தெற்கு வாயில் ஆகிய ஐந்து வாயில்களிலும், வாயிலுக்கு இரண்டு சிலைகளாக நிறுத்தப்பட்டுள்ளன. இவை காண்போரின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட செய்கிறது.

சிற்பங்கள்

     விமானத்திலும், கோவிலின் தூண்களிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பேரழகு வாய்ந்தவையாக அமைக்கப்படுகிறது.  தென்மேற்கில் சபாபதி சிற்பமும், விநாயகர் சிற்பமும், வடக்கில் திருவாயிலருகே சண்டேஸ்வரர் சண்டேசப்பதம் வழங்கும் காட்சியை விளக்கம் சிற்பமும் வியக்கத்தக்க வேலைப்பாடு ஆகும்  இவற்றில் அமைந்துள்ள லக்குமி, கலைவாணி போன்ற பேரழகு மிக்க சிற்பங்களும் கண்ணையும், கருத்தையும் ஈர்ப்பதாக உள்ளன.   இவை அனைத்தும் உயிர் ஓவியங்களாக காட்சி அளிக்கின்றன. இவைகளை காணும்பொழுது தென்னிந்தியாவிலுள்ள சிற்பங்களிலும் அதிலுள்ள, சாவகத்தில் உள்ள சிற்பங்களினும், இச்சிற்பங்கள் சிறந்து உள்ளன எனவும் எழில்மிகுந்து  உள்ளன என்பது அறிஞர்கள் கருத்து.

       சுற்றுப்பிரகாரத்தில் விமானத்துக்கு. எதிரிடையாக தெற்கிலும் வடக்கிலும் இரு சிறிய கைலாச விமானங்கள் உள்ளது. இவ்விரண்டில் ஒன்றில் பிருகந்த நாயகியின் சந்நிதி உள்ளது. அம்பிகைகாட்சி, தேவியின் உருவம் ஏறத்தாழ 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேவியின் இரு கரங்கள் பாசாங்குசங்கள் ஏந்தி இருகைகளும் அடைக்கலம் அடைந்தவர்க்கு அருள் வழங்குகிறது. காளியின் சிற்பம் நம்மை வியப்பில் ஆழ்த்தி நடுங்க வைக்கிறது. அசுரனை காலடியில் வைத்து மிதித்த வண்ணம் காட்சி தரும் காளி 20 திருக்கரங்களுடன் இந்திரலோகத்தில் உத்திரத்தில் சீரும் அழகுடன் விளங்குதல். அருகிலுள்ள சிங்கம் அசுரனின் குருதி உறிஞ்சி குடிப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. காளி கொடுமையே உருவானவன்  ஆதலால். இச்சிற்ப்பமும் கொடிய காட்சியை  நல்குகின்றதுதேவமகளிரும், இராட்சத கூட்டங்களும் எவ்விடத்தும் அமைந்துள்ளதை நோக்குமிடத்து இக்கோவிலின் கம்பீரமான தோற்றத்தைப் பெற்று காணப்படுகிறது.

     இந்திய சிற்ப வரலாற்றில் கங்கை கொண்ட சோழபுர சிற்பங்கள் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுள்ளது. கலை அழகு,  புதுப்பொலிவு, மென்மை குழைவுகவர்ச்சி கொண்ட சிற்பமாக கங்கைகொண்டசோழபுரம் காணப்படுகிறது. இத்தனை சிறப்பு மிக்க சிற்பங்களை உருவாக்கிய சிற்பிகள் எத்துணை கலை நுணுக்க தேர்ச்சி, பெற்றிருந்தனர் என்பது வியக்கத்தக்க ஒன்று. இத்துணை கலை நுணுக்கம் வாய்ந்த சிற்பங்களில் ஒன்றை பற்றி நாம் இங்கு விரிவாகக் காண வேண்டும்.

      சண்டேசுவரர் அருள்புரியும் மூரத்தியின் கற்சிலை சிற்பக்கலைக்கு சிகரம் போல் அமைந்துள்ளது. இது கருவரை முக மண்டபத்தின் வடக்கு, கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. இச்சிற்பம், சண்டீச சப்பதம் தரும் காட்சியை தத்ரூபமாக விளக்குகிறது.   ஒரு சிற்பத்தில், பசு லிங்கத்தின் மீது பால் சொரிந்து அபிஷேகம் செய்கிறது. மரத்தின் மீது அமர்ந்து கொண்டு எச்ச தத்தன் இதனை பார்க்கின்றான். சண்டேஸ்வரர் தம் தந்தையின் காலை வெட்டுவது போன்ற நிலையில் மற்றொரு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    அடுத்து ஒரு பெரிய சிற்பம் நடுவில்  செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்ப்பத்தில்  தென்னாடு உடைய சிவபெருமான் உமாதேவியாருடன் அமைந்துள்ளார். சிவபெருமான் தமது கொன்றை மாலையை சண்டீச்சர் முடிமீது சூட்டி அவருக்கு தம் கோயில் மேலாளர் பதவியை வழங்குகிறார்.   அருகில் அமர்ந்துள்ள உமாதேவி ஆசிர்வாதம் செய்கிறார். மேலே சூரிய சந்திரர்கள் காட்சி தருகின்றனர்.   இவை கோவில் நடு மண்டபம் சுவற்றில் நான்கு வரிசையில் செதுக்கப்பட்டு உள்ளன. இவை கலை நுணுக்க சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. சிற்பங்களைக் கண்டு கழிப்பவர்கள் வரலாறு பற்றி அறிந்து கொண்டால்தான் இச்சிற்பத்தை முழுவதும் காணமுடியும்.

மேலும் சில கலை பணிகள்

    கலைவேந்தனாக திகழ்ந்த ராஜேந்திரன். ஏறத்தாழ 24 கோயில்களுக்கு மேல் கட்டியுள்ளான் புதுப்பித்தும்விரிவுபடுத்தியும் உள்ளான் என்பதை நாம் கண்டோம்.    ஆனால் அண்மைக்கால ஆய்வுகள் மேலும் சில கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் திருவல்லம் திருவையாறு ஈஸ்வரன், எசாலம் ராமேஸ்வரம் சிவன் கோயில், 1017இல் புதுப்பிக்கப்பட்ட கரூர்- ஈரோடு சாலையில் உள்ள நாட்டாற்றீஸ்வரர் கோவில், பிரம்மதேசம் கோவில், மங்கலம் ராஜேஸ்வரம் உடைய மகாதேவர் கோயில், முடிகொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து பட்டூரில்  ஜயமல்லீஸ்வரம்,  (பள்ளிப்படை) அரியலூர் மாவட்டம், முனியன் குறிச்சி புத்தூரில் சூரியகொடி ஈஸ்வரர் கோவில், செட்டி திரிகோணத்தில் ரணசிங்க ஈஸ்வரம், பெரிய திரிகோணத்தில் மதுராந்தகம் என்னும் சிவன் கோயில், ராஜேந்திர சோழ விண்ணகரம் என்னும் பெருமாள் கோவில் ஆகியன குறிப்பிடத் தக்கது.

      ராஜேந்திரன் சிறப்புப் பெயரால் விக்ரம சோழபுரம் என்ற வணிக  நகரத்தை உருவாக்கி அங்கு சிவன் கோவிலை அமைத்தார். .உடையவர் தீயனூரைச் சுற்றி வணிக நகரமும், பிரம்மதேய ஊரும், அரண்மனையும் கட்டினான். பாண்டிய நாட்டை ஆண்ட சோழ பாண்டியன் திருநெல்வேலி மாவட்டம், மன்னார் கோவிலில் ராஜேந்திர சோழ விண்ணகரம் என்ற பெரிய நகரம் ஒன்றை எழுப்பித்தான். இதன் மூலம் இவன் கோயில் பணி அறியமுடிகிறது.

 கட்டடக்கலை

      ராஜேந்திரனது ஆட்சிக்காலத்தில் கட்டட நூலின் துணைகொண்டு கங்கை கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழேச்சரம் கட்டப்பட்டன என்பதை அறியமுடிகிறது. கங்கை  கொண்ட சோழபுரத்தில் மன்னர், வணிகர் முதலிய பலரும் தனித்தனி வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தனர் என்றும், நாளங்காடி, அல்லங்காடி முதலியன கொண்ட கடைவீதிகளில், கோட்டைவாயில் போன்ற நகர அமைப்பின் சிறந்த அங்கங்களை கொண்டு, இருந்தன என்பதை அறியமுடிகிறது. 

      அழகிய அரச மாளிகைகள், விண்ணை முட்டும் திருக்கோவில்கள், பரந்து அகன்ற மண்டபங்கள், ராஜேந்திர ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே. கட்டடக் கலையின் சிறப்பினை நாம் இதன் மூலம் அறியமுடிகிறது. திருக்கோவில் திராவிட பாணியிலே கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சோழ கலைஞர்கள் அரக்கர்களை போல செயல் தொடங்கி நுண்வினை  பொற்கொல்லர் போல் செய்து முடிக்கும் திறன் வாய்ந்தவர் ராஜேந்திரன். பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பெற்ற புத்தம் புதிய முறையிலான கட்டடக்கலை ராஜேந்திர ஆட்சிக் காலத்தில் உச்ச நிலையை எய்தியது.

சிற்பக்கலை

     சிற்பக்கலை தலையாய கலையாக வைத்து எண்ணப்படுகிறதுசெம்பு, பொன், வெள்ளி,ஐம்பொன் முதலிய உலோகங்களாளும், மண்ணாளும், சுண்ணாம்பாளும், கல்லாலும், மரத்தாலும்,நெட்டியாலும், பாவைகள் அமைப்போர் சிற்பிகள். அவர்கள் படைக்கும் சிற்பங்கள் வாய்பேசாதவை ஆனால் சிற்பியின் திறனைப் பற்றி நம்மை பேச வைப்பவை. ராஜேந்திரன் காலத்து சிலை வடித்த சிற்பங்கள், இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் குன்றா அழகுடன் காட்சி தருகின்றன. 

      இங்கு காணப்படும் சிற்பங்களில் கலைமகள், திருமகள், சண்டேச அனுக்கிரக மூர்த்தி ஆகியவை கண்ணையும், கருத்தையும் ஏற்கத் தக்கதாக உள்ளது. பலவகையான நுண்ணிய வேலைப்பாடு அமைந்த ஆடவல்லான் படிமங்கள், ராஜேந்திரன் காலத்தில் சிற்ப கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு உள்ள சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், துர்க்கை, போகசக்தி, அதிகார நந்தி போன்ற பேரழகு மிக்க செப்புப் படிமங்கள் பாராட்டத்தக்க ஒன்று் ராஜேந்திரன் காலத்தில் கட்டப்பட்ட எசாலம் சிவன் கோவிலில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பேரழகு கொண்டவை. எசாலம்  புதையலில் கிடைத்த விநாயகர், பைரவர், சண்டேஸ்வரர் கொற்றவை, பாசுபத மூர்த்தி, ஆளுடைய பிள்ளை முதலான கவின்மிகு படிமங்களும் இங்கு உள்ளன.

தனித்திருக்கும் திருமால் சிற்பம்

      கங்கைகொண்ட சோழபுரத்தில் திருமகளோடும், நிலமகளோடும்  காட்சி அளிக்கும் திருமால். எசாலம் கோவிலில் தேவியர் இன்றி தனித்து உயர்ந்த தாமரை இருக்கை மீது நான்கு கரங்களுடன் கிரீட மகுடம் தரித்து அருள் சுரக்கும், மலர்ந்த கண்களுடன் கீழ் வலக்கையில் அபய முத்திரை காட்டி நேராக நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அழகு தனி அழகு.

திருமேனிகள்

         சூரியன் செப்புத் திருமேனி. –  எசாலம் புதையலில் பேரழகு வாய்ந்த செப்புத் திருமேனிகள் பல கிடைத்துள்ளன. இவற்றுள் தமிழகத்தில் உள்ள சூரிய தேவனின் திருமேனிகளில் உருவத்தில்  மிகச் சிறியதாய்  சீறிய கலை செழுமையும் கவர்ச்சியும் ,மிக்கதாக இக்கோவில் சூரியன் திருமேனி காணப்படுகிறது்அரியலூர் மாவட்டத்தில் ராஜேந்திரனின் புகழ்பாடும் பல கருவூலங்கள் உள்ளன என்பது கல்வெட்டுகளால் அறியமுடிகிறதுஇல. தியாகராஜன் முயற்சியால் ராஜேந்திர சோழனின் பலகலை பணிகள் வெளி வரப்பட்டது. ராஜேந்திரன் ஆட்சிக் காலம் சோழர் சிற்பக் கலையின் பொற்காலமாகும்.

நாடகமும் இசையும்

.    நாடகமும் இசையும் முத்தமிழில் அடங்குபவை. பண்டு நாடகமும் இசையும் மன்னரால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவை மக்களின் இன்ப பொழுதுபோக்கிற்காக தோன்றியமையால். கிராமங்களிலும், நகரங்களிலும் இவை சிறப்பு பெற்றது. நாடகங்கள் பெரும்பாலும் புராணக்கதைகள் பின்னணியாகக் கொண்டும், மன்னனது வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டும் திகழ்ந்தன.  இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் ராஜராஜேச்சுர நாடகம், சாக்கைக் கூத்து போன்றவை மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.

      அக்காலத்தில் நாடகம் கூத்து எனும் பெயரால் பாமர மக்களால் வழங்கப்பட்டது.   மார்கழி, வைகாசி மாதங்களில் திருவாதிரைத் திருநாளில் சாக்கைக் கூத்து நிகழ்த்துவதற்கு மாராயன் விக்கிரம சோழனுக்கு, காமரவல்லி சதுர்வேதி மங்கலத்தார் நிலம் அளித்தனர்முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ராஜராஜ விஷயம் என்னும் நூலினைப் படித்து வருவதற்காக நாரணன் பட்டாதித்தன் என்ற சவரணன் ஒருவன் நிலதானம் பெற்றான். எனவே, நாட்டில் கலைஞர்கள் ஆதரிக்கப்பட்ட கலை வளர்ச்சி மேம்பட்டது என்பது தெரிகிறது. ராஜேந்திரன் காலத்தில் திருக்கோவில்களில் ஓதுவார்களும், கந்தர்வர்களுக்கும், இசைக்கருவி வாசிப்போருக்கும், நியமனம் செய்ய பெற்றிருப்பது இசை  வளர்ச்சியை கூறுகிறது.

Join us telegram: www.t.me/teamheritager

இலக்கியம்

.    ராஜேந்திரன் கல்வி கேள்விகளில் மேம்பட்டவனாய் தமிழ் மொழியிலும், வடமொழியிலும் ஈடுபாடு கொண்டதை நாம் முன்பே அறிந்தோம். பண்டித சோழன் என்று இவன் அழைக்கப்பட காரணம் இதுவே. இவன் ஆட்சிக் காலத்தில் பக்தி பரவசமூட்டும் பக்திப் பாடல்களும், காவிய வளம் கொண்ட வடமொழி பாடல்களும் பெருமளவில் இயற்றப்பட்டது. இவன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ்  கல்வெட்டுகளும், வட மொழிக் கல்வெட்டுகளும் எண்ணற்ற சிறந்த இலக்கியமாக வைத்து காணப்படும். தகுதி படைத்தவை திருக்களர் செப்பேடு தனித்தமிழில் காணப்படுதல்  காணப்படுதலின், அக்கால தமிழ் வளர்ச்சியை நாம் காண இயலும்.

      நாராயண கவி என்னும் வடமொழி புலவரால் கவின்மிகு காவிய நடையில் எழுதப்பெற்ற,  இவனது திருவாலங்காட்டுச் செப்பேடு சொற் செறிவும், பொருட்செறிவும் கொண்டு விளங்குகிறது. கருவில் உருவாகும் சிசு கூட கசிந்துருகும் சிறப்பாக கொண்டசோ ளேச்சரத் தானே படைத்த கரூர் தேவர் சிறந்த கவிஞர் என்பது யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று.

      இலக்கிய நயமும்,    பக்தி சுவையும் கொண்ட திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் காலத்து இலக்கிய வளர்ச்சிக்கு திருவிசைப்பா மட்டுமே சான்றாக கொள்ளுதல் ஆகும்.   இவனது ஆட்சி காலத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, இலக்கிய கலை ஆகியவை உன்னத நிலையில் இருந்தது அறியமுடிகிறது. அக்காலத்தில் ஆண்மக்களும், பெண் மக்களும் ஆடற்கலையில் பெரிதும் போற்றப்பட்டன. திருக்கோவிலில் பணிபுரியும் பதியிலாரும், ஆடற்கலை தேர்ச்சி பெற்று தெய்வ சன்னதிகளிலும், மன்னன் அவையிலும் ஆடும் ஆண்களும் அக்காலத்தில் இருந்தனர். அவர்களுக்கு மன்னன் மானியங்கள் வழங்கியதோடு சிறப்பு பெயர்களும்  வழங்கினார். அக்கூத்தர்களில் சாக்கையர் என்பார் புகழ் பெற்றவர்.

         அதுமட்டுமல்லாது, ஓவியக்கலை, ஜோதிட கலை, வாணர் நூல்கலை, மருத்துவக்கலை, மல்யுத்தக் கலை,   சமையற்கலை, மலர்தொடுத்தல், அணிகலன் செய்யும் கலை போன்றவை ராஜேந்திரன் காலத்தில் சிறப்புற்று விளங்கியது. சில கலைகளுக்கு என்று தனித்தனியாக கலை மன்றம் அமைக்கப்பட்டது.   அனைத்து மன்றங்களும் ஒருசேர திகழ்ந்த இடம் திருக்கோவில்மக்களை நெறிப்படுத்திய துடன் பயனுள்ள வழிகளில் பொழுதுபோக்கும் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தது. கோவில் பணிகளுக்கு போக எஞ்சிய பணத்தை  கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவிட பெற்றான். ராஜேந்திர சோழன் காலத்தில் பல துறைகளில் முன்னேற்றமும், வழிகாட்டியும் அமைத்த திருக்கோவில்கள் நன்முறையில் செய்யப்பட்டன. கலையும் நன்கு வளர்ச்சி பெற்றன.

ராஜேந்திர சோழனின் அரசியல் முறைகள்

        சோழர்களின் ஆட்சி முறையில் கிராமசுய ஆட்சிமுறை குறிப்பிடத்தக்க முறையில் சிறந்திருந்தது. இவர்களின் குடவோலை முறை பன்னாட்டு புகழ் பெற்றுள்ளது பாராட்டத்தக்க ஒன்று. இக் குடவோலை முறை சில அம்சங்களில் தற்கால தேர்தல் முறையினை ஒத்துள்ளது. பன்னெடுங்காலமாக தமிழகத்தில் நிலவிவந்த சோழர் ஆட்சி முறை குறிப்பிடத்தக்க ஒன்று . சோழர் வரலாற்றை விளக்கும் இலக்கியச் சான்றுகள், சோழர் காலத்திலிருந்த கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை துணைகொண்டு சோழர் ஆட்சி முறையை நாம் அறிய முடிகிறது.

மன்னன் நிலை

      சோழப் பேரரசில் அரசாங்க உள்துறை அமைச்சரும்,உடன் கூட்டத்து அதிகாரிகளும்மகா சபை தலைவராக நின்று நிர்வகித்து வந்தார்கள். உள்நாட்டுக் கலகம், வெளிநாட்டு படையெடுப்பு ஆகியவற்றை தடுத்து அமைதி காத்து வந்தவர்கள். மண்டலமாக்களும், படைத் தலைவரகளுமான சாமந்தர்களே ஆவர்எனவே மன்னன் தனது ஆட்சிப் பொறுப்பினை அமைச்சர், அதிகாரி,சாமந்தர் ஆகியோரின் துணைகொண்டு ஏற்று நடத்தி வந்தான்.

       மன்னனும் அவனது தகுதிக்கேற்ப பல அரசு சின்னங்களும் உள்ளது. அவை குலம், பெயர், முடி, கோல், மாலை, கட்டில், குடை, கொடி, முரசு, முத்திரை, கடிமரம், குதிரை, யானை, தேர், மனை  என பதினைந்து வகைப்படும். அரசாள்வோன் மகன்அடுத்து மன்னனாக அமரும் வழிமுறை கொள்கை, அக்காலத்து நிலவிய மரபாகும். பொதுவாக  மன்னுடைய கோப்பெருந்தேவியின் மூத்த மகன் அரியணை ஏறுதல் மரபு. மூத்த மகன் இறந்துவிட்டான் இளைய மகனும், ஆண் மக்களே இல்லாத போது, கோப்பெருந்தேவியின் அடுத்த தேவியின் ஆண்மக்களுள் மூத்தோனும், அரியணையில் ஏறுதல்  வழக்கம். இப்படி யாரும் இல்லாத போது மன்னனின் பிற நெருங்கிய உறவினர்கள் அரியணை ஏற்றப்படுவர்.

பேரரசனும் இளவரசனும்

       சோழ மன்னனே சோழப் பெரு நாட்டின் தனித் தலைவன் ஆவான். இவனே சட்டம் இயற்றுதல், கருமமாற்றுதல்நீதி வழங்குதல் என்னும் முத்துறை அதிகார கூறுகளையும் பெற்று திகழ்ந்தான். சோழப் பெருமன்னர் பட்டத்திற்குரிய தம் புதல்வருக்கு, இளவரசு பட்டம் கட்டி ஆட்சி துறைகளில் நன்கு பழகி வருவது வழக்கம். இம்முறையினை முதல் முதலில் ஏற்படுத்திய பெருமைக்குரியவர் முதலாம் ராஜராஜசோழன். இச்செயலால் பட்டத் தகராறு ஏற்ப்படுவதை தவிர்க்கப்படுவதோடு, வருங்கால மன்னன் ஆட்சியில் பயிற்சி பெறுகின்ற பொன்னான வாய்ப்பு பெறப்படுகிறது.

 ராஜேந்திரனும் தனது எட்டாம் ஆட்சியாண்டுக் காலத்திலேயே, தன் மகனாகிய முதலாம் இராஜராஜனுக்கு இளவரசு பட்டம் கட்டினான். இவ்விதம் இளவரசுப் பட்டம் பெற்ற இளவரசன், தன் பெயராலேயே ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றிருந்தான்.   இவன் தன்  மகனிடம் அரசியலை ஒப்படைத்ததால் தான் வியக்கத்தகு வெற்றிகள் பெற்ற பெரு வீரனாகத் திகழ்ந்தான். ராஜாதி ராஜனை நாட்டு ஆட்சியிலும்போர்  நிகழ்ச்சியிலும் 26 ஆண்டுகள் பழகி வந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

     ராஜேந்திரனின் இறுதி காலங்களில் பட்டத்து இளவரசனான, முதலாம் ராஜாதிராஜன் பல போர்களில் தலைமை ஏற்றுச் சென்று வெற்றி வாகை சூடினான். மேலை சாளுக்கிய போர், ஈழப்போர் போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றுஇவ்விதமாக தந்தைக்கு உறுதுணையாக விளங்கிய முதலாம் ராஜாதிராஜன், ராஜேந்திர சோழனின் இறப்பிற்குப் பின்னர் சோழ நாட்டை மன்னனாக முடிசூட்டி ஆண்டு வந்த்தான். இளவரசராக நியமிக்கப் பெற்றோர் தமது ஆட்சியாண்டினை இளவரசு பட்டம் பெற்ற ஆண்டிலிருந்தே கணக்கிடுவர்.

பேரரசின் உட்பிரிவுகள்

.     சோழப் பேரரசு அக்காலத்தில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மண்டல அதிகாரிகள் மண்டலம் முதலி என அழைக்கப்பட்டனர்.  ஆள்விலை பொருட்டு, முதலாம் இராஜராஜன் காலத்தில் சோழப்படை சிறியதும், பெரியதுமான ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பெருமன்னர் அண்டை நாடுகளை வென்று அவர்களை சிற்றரசர்களாக பாவித்து. அவர் நாடுகளைத் தன் பேரரசுக்கு உட்பட்ட மண்டலங்களாக இணைத்துக் கொண்டு. அவற்றிற்கு தன் விருதுப் பெயர்களை இடுவது வழக்கம் ஆகும். முதலாம் ராஜராஜன் பெரும் வீரனாக விளங்கியதால், பேரரசு பல மண்டலங்களை பெற்றிருந்தது.  

நாட்டுப் பெயர்.                  மண்டல பெயர்

  • சோழ நாடு.                          சோழமண்டலம் 
  • பாண்டிநாடு                          ராஜ ராஜ பாண்டி மண்டலம் 
  • சேர நாடு.                               மலை. மண்டலம் 
  • கொங்கு நாடு                      அதிராஜராஜ மண்டலம் 
  • தொண்டை நாடு                ஐயம் கொண்ட சோழ மண்டலம் 
  • கங்கபாடி                               முடிகொண்ட சோழ மண்டலம் 
  • நுளம்பபாடி                           நிகரிலி சோழ மண்டலம் 
  • வேங்கை நாடு                   வேங்கைமண்டலம் 
  • இலங்கை                              மும்முடிச் சோழ மண்டலம்

சோழமண்டலம் என்பது இன்றைய தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களையும், தென்னாற்காடு மாவட்டத்தின் தென் பகுதிகளையும் கொண்ட நிலப்பரப்பாகும். ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்பது தென்னாற்காடு மாவட்டத்தின் பெரும் பகுதியையும், செங்கற்பட்டு, வடார்க்காடு, சித்தூர் மாவட்டங்களையும் கொண்ட நிலப்பரப்பாகும்.

நகரங்கள்

     நகரங்களில் தலைசிறந்து விளங்குவது தலைநகரமாகும். பண்டைய காலத்தில் சோணாட்டின்கண் புகழ்பெற்ற நகரங்கள் பல இருந்தது. சோழ வேந்தர்களின் ஆட்சி காலத்தில் உறையூர்க், கருவூர், அழுந்தூர், குடவாயில், திருவாரூர், தஞ்சை, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், ராஜ ராஜபுரம் என அந்நாட்டு தலைநகர் காவிரிப்பூம்பட்டினம் போன்ற நகரங்களை தலைநகரங்களாக விளங்கின. பழையானை நகர், நந்திபுரம், ஆயிரந்தளி, முடி கொண்ட சோழபுரம் எனவும் அழைக்கப்பட்டது.   

விஜயாலயன் வழியில் வந்த சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் பழையாறை,  தஞ்சை கங்கைகொண்ட சோழபுரம்,ராஜ ராஜபுரம் என்பன தலை நகரங்களாக இருந்தன.   ராஜேந்திர சோழனது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் தஞ்சையை தலைநகராக இருந்து இருக்க வேண்டும்ஏனெனில் ராஜேந்திர சோழன் தனது தங்கை வெற்றிக்கு பின்னரே கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தனது தலைநகரை மாற்றினார். இவன் ஏறத்தாழ கிபி 1025ல் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு இருக்க வேண்டும் என்பது கருத இடமுண்டு. பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலயன்  கிபி 846 முத்தரையர்களை வென்று தஞ்சையை கைப்பற்றி அதனை தலை நகராகக் கொண்டான்.

மத்திய அரசு

மன்னன் தான் விரும்பிய செயலை தானே செய்ய அதிகாரம் பெற்று இருப்பினும், அரசியல் அதிகாரிகளிடமிருந்து ஆராய்ந்து அதை செயல்படுத்திறன். ஆட்சித் துறையின் பல்வேறு கிளைகளில் நிர்வாகத் தலைவர்கள் மன்னனுக்கு ஆட்சி நிர்வாகத்தில் உற்ற துணையாக ஊன்றுகோலாக இருப்பர் என்பது ஆதாரங்கள் மூலம் அறியமுடிகிறது. அன்றாட நிர்வாகத்தில்உடன் கூட்டத்து அதிகாரிகள் என்று அழைக்கப்படும். உயர்மட்ட அதிகாரிகள் மன்னனுக்கு பெருந்துணை புரிந்ததாக கல்வெட்டு கூறுகிறது .

     இவர்கள் மன்னனின் தேவைகளை கவனித்து வந்தனர். அரசாட்சியில் மன்னனுக்கு பெருந் துணை புரிந்தவர். அமைச்சர்களும், தலைமை செயலாளர் இவர்களை கலந்து கொண்டு தான் தன் ஆணையை பிரிப்பது வழக்கமாயிருந்தது. சோழ மன்னர்கள் அமைச்சர் குழு ஒன்றினையும், அதன் தலைவரான முதலமைச்சரையும் நியமனம் செய்து அவர்களின் ஆலோசனைகளை அவ்வப்பொழுது கேட்டு நாட்டை ஆட்சி புரிந்து வந்தனர். அரசியல் அலுவலர்கள் இரு பிரிவுகளாக. உள்ளன, உயர்தர செயலாளர் பெருந்தனத்தார் எனவும்,  கீழ்ப் பிரிவு செயலாளர்  சிறுதனத்தார் என்றும் அழைக்கப்படுபவர். இவ் அலுவலர் பதவிகள் பெரும்பாலும் பரம்பரை உரிமை  பெற்றவராவர்.

        மத்தியஸ்தம் எனப்படும் அலுவலரும் மன்னனுக்கு பேருதவி புரிந்தவன். இவன் காரணத்தான் என்று அழைக்கப்பட்டான். ஊரார் தீட்டிய ஆவணங்களில் கையொப்பம் இட்டு மன்னன் சார்பாக, தன் இசைவைத் தெரிவித்தது இவனது கடனாகும். ராஜேந்திரனது கரந்தைச் செப்பேட்டினைக்  கொண்டு சதுர்வேதி ஸ்ரீ ஜெகநாதன் என்பவன்  அமைச்சராகப் பணிபுரிந்த புகழ் பெற்றவன் என்பதை அறியமுடிகிறது.

       ஐம்பெருங்குழு என்ற அதிகார சுற்றம் மன்னனுடைய ஆட்சிக்கு அடிப்படை துணையாய் இருந்தது. ஐம்பெரும் குழுவிற்கு அடுத்து அதனினும் சற்று விரிவாக விளக்கிய அதிகார சுற்றம் எண்பேராயம் என்பதாகும். ஊறுதி சுற்றம் என்ற குழு மன்னனுடைய நன்மையையும், உடல் நலத்தையும் கவனித்து வந்தது. அரசியற் பொறுப்பு சுற்றம் என்ற குழு மன்னன் இல்லாத காலத்து அல்லது நோயுற்ற பொழுது அரசியலை கவனித்தனர்.

     அரசியல் அலுவலர்களுக்கு சில மானியங்கள் வழங்கப்பட்டதன் மூலம் ஊதியம் அளிக்கப்பட்டது. இதனை ஜாகிர் முறையுடன் ஒப்பிட்டு உணரலாம். இதை தவிர பொருள்களிலும், அலுவலர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. சோழர் காலத்தில் அதிகாரம் மையப்பட்டிராமல் பன்முகப்படுத்தப்பட்டு இருந்தது போற்றத் தகுந்தத ஒன்றாகும்அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டதால் அலுவலர்கள் முறையாக தன் கடமையை ஆற்ற முடிந்தது. தன் மனம் சென்ற வழி ஆட்சி நடத்தாமல்.    அறிஞர் பெருமக்களின் அறிவுரை கேட்டு ஆட்சி நடத்தினான்.

அரசியல் அதிகாரிகளும் கடமைகளும்

       சோழ மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் பல்வகை துறைகளையும் நிர்வகித்த பெருமை, அதிகாரிகளை சாரும் இவர்களுள் அமைச்சர் முதன்மை பெற்றவராவர்.

ஐம்பெருங்குழு

.     அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதர், ஒற்றர் என்றும் ஐவர் குழுவின் தொகுதியே ஐம்பெருங்குழு என அழைக்கப்படுகிறது. சோழநாட்டில் தூதர்கள் பெரும் தொகையினராக இருந்தனர் என்பது உறுதி. அரச தூதர் சட்டையும்,   தலைப்பாகையும் அணிந்து இருந்தனர். தூதர் மன்னன் விடுத்த செய்திகளை பிற மன்னரிடத்துக் கொண்டு சேர்ப்போர் என்றும்மன்னனின் கட்டளையை நாட்டதிகாரிகளிடத்தும், ஊரதிகாரிகளிடத்தும் கொண்டு சேர்ப்போர் என்றும், மன்னனின் கட்டளையை நாட்டதிகாரிகளாடத்தும், ஊரதிகாரிகளிடத்தும் கொண்டு செல்வோர் என்றும் இரு வகைப்படுவர். இவர்கள் அதிகாரிகள், மன்னர், இளவரசர் ஆகியோரால் மதிக்கப்பட்டனர்.

Join us telegram: www.t.me/teamheritager

எண் பேராயம்

     கரணத்தியலவர் (கணக்கர்), கரும விதிகள் (மன்னது கட்டளையை நிறைவேற்றும் அதிகாரிகள்), கனகச்சுற்றம் (பண்டாரம் எனப்படும் நிதியாக அதிகாரிகள்), கடைக்காப்பாளர் (அரண்மனை வாயில் காவலர்) நகரமாந்தர் (நகர பெருமக்கள்), வணிகப் பெருமக்கள், படைத்தலைவர், யானை மறவர், இவுளி மறவர், குதிரைச் சேவகர் என்னும் கூட்டத்தாரின் பெரும் தொகுதியே எண்பேராயம் ஆகும்.

உறுதி சுற்றம்

      குறிக்கப்பட்ட படைத்தலைவர், நிமித்திகர், மருத்துவர்,நட்பாளர், அந்தணராகிய ஐவராவர் சேர்ந்த குழு உறுதி சுற்றமாகும்.மன்னனை பேணிக்காப்பது இக்குழுவின் கடமையாகும்.

அரசியற் பொறுப்பு சுற்றம்

     ஆசான் (புரோகிதன்), பெருங்கணி (கணியர் தலைவன்), அரக்களத் தந்தணர் (நியாய சபையினர்), காவிதி (வரியதிகாரிகள்), மந்திர கணக்கர் (அரசகட்டளை எழுதுவோர்) ஆகிய ஐந்திறத்தை கொண்டது, அரசியல் பொறுப்பு சுற்றமாகவும். மன்னன் இல்லாதபோது நாட்டாச்சியினை மேற் கொள்ளும் பெரும் பொறுப்பு இக்குழுவை சார்ந்தது.

அரசவை

     மன்னன், சூழ்வினை அமைச்சர், படைத்தலைவர் பல்வேறு ஆள்வினை திணைக் களத்தலைவர், பெருங்கணி, ஆசான், பல்வகை புலவர், மற்றும் நாள்தோறும் குழுமியிருக்கும் நிலையான கூட்டம் அனைத்தும் அரசவை எனப்படும். அரசவை கூடுமிடம் அவைக்களமாகும்.அவை களத்தின்  கண் மன்னன் முக்கிய இடத்தை வகிப்பதும், அடுத்த முதலமைச்சர் தலைமை வகிப்பதிம் உண்டு.

படைத்தலைவன்

    மன்னனது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, இவற்றிற்கு தலைமை வகித்து போர் நிகழும் காலங்களில் படை நடத்திச் சென்று போர் செல்வோன் படைத் தலைவனாவான். மன்னனின் வெற்றிகளுக்கு இவனே பெரும் காரணம்.

நாட்டு அதிகாரிகள்

நாட்டு அதிகாரிகள் ஒவ்வொரு நாட்டிற்கும் தலைவர்களாய் விளங்கும் இவர்கள். தமது கண்காணிப்புக்கு உட்பட்ட நாட்டை சுற்றி பார்த்து குடி மக்களின் நலன்கள், அறநிலையங்கள், நீதி வழங்கும் முறை, முதலானவற்றை மேற்பார்வையிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வர்.

நாடு காவல் அதிகாரி

.    நாட்டில் உள்ள ஊர்களில் களவு, கலகம், அமைதியின்மை போன்ற தீச்செயல்கள் நடவாமல் காத்துவரும் அதிகாரி, நாட்டு காவல் அதிகாரி ஆவார்இதனால் நாட்டில் குழப்பங்கள் அப்போதைக்கு அப்போதே அடக்கப்பட்டன.

நாட்டை அளப்போர்

      ஒவ்வொரு நாட்டையும் கூறு பட அளவிட்டு கணக்கில் வைப்போர் நாட்டை அளப்போர் ஆவர். முதலாம் ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு முழுவதும் அளக்கப்பட்டது.

நாடு கண்காட்சி

.   நாடு கண்காட்சி என்போர், நாட்டை அளப்போர் சரியாக நாட்டை அளந்து உள்ளனரா என்பதை மேற்பார்வையிடும் அதிகாரிகள் ஆவர்.

வரியிலார்

     இவர்கள் கூறுபட அளந்திட்ட நாட்டின் நிலங்களின் மீது வரியிட்டு, வரிகளின் மூலம் தண்டப்படும் தொகையை கணக்கில் எழுதி வைத்தவர் ஆவர். ஊர்களிலும்தலைநகரிலும் தண்டப்பட்டு வந்த வரித் தொகையின் கணக்கையும் இவர் பதிவர்கள்.

வரிக்கு கூறு செய்வோர்

.    ஒவ்வொரு ஊரிலும் மன்னனுக்கு வரவேண்டிய காணிக்கடனின் கணக்கினை வைப்போர் வரிப் பொத்தகம் என அழைக்கப்பட்டனர். காணிக்கடன் என்பது நிலவரியாகும். அரக்கன் வீதிவிடங்கன் என்பான் ராஜேந்திரனின் காலத்து வரிப் பொத்தகமாக அமர்த்தப்பட்டான். இறையான்  சேரிக் கிழவன் புழமதனிராமன்  என்பானும் இப்பணியில் அமர்த்தப்பட்டான்.

புரவு வரி

      புரவு வரி என்போர் நிலவரி நீக்கிய இறையிலி நிலங்களில் இருந்தும், ஊர்களிலிருந்தும், வருவதற்குரிய வரிகளில் கணக்கினை பதிவு செய்பவர் ஆவர்.

புரவு வரி திணைக்களம்

      புரவு வரி தொகுதி புரவு வரி திணைக்களம் எனப்படும். நம் ராஜேந்திரன் காலத்தில் பொன்னன் கொண்டயன், சிறுகுடையான் அடிகள் திருமணி, ஆலங்குளவன் ஆதித்தன், சூல பாணி அருமொழி ஆகிய நால்வரும் வரி திணைக்களம் பணியாற்றினார் என்பது கல்வெட்டால் அறியமுடிகிறது.

புரவு வரி தணைக் களத்து கண்காணி

     புரவு வரித் திணைக்களத்து கண்காணி என்போர், புரவுவரி திணைக்களத்து அதிகாரிகளை கண்காணிக்கும் உயர்ரதிகாரி ஆவர். பெரும்பேற் கிழான் பட்டன் வாசுதேவன், ஸ்ரீகண்டன் சேந்தன்  ஆகிய இருவரும் இராஜேந்திரனின் ஆட்சி காலத்தில் புரவரி திணைக்களத்து கண்காணிப்பாளர் ஆவர்.

புரவு வரிச் சீகரணம்

     புரவு வரி திணைக்களம் தலைமையை கணக்கனின் தலைவன் புரவுவரி திணைக்கள நாயகம் எனும் பெயரால் அழைக்கப்பட்டான்.

கருமி

     ஓலை நாயகம் என்னும் அதிகாரியால் சரிபார்க்கப்பட்ட மன்னனது ஆணையை பதிவேட்டில் பதிவு செய்யும் அதிகாரி கருமி எனப்பட்டார். இவ்வாறு பதிவு செய்யப்படுதலே வரியிலிட்டுக்கொள்வது  ஆகும்.

வரியிலீடு, புரவரி திணைக்கள முகவெட்டி

      மேற்கூறிய அதிகாரிகளைப் போல இவ்விருவரும் வரி அதிகாரிகள் ஆவர்.

ஓலை எழுதுவோன்

           மன்னனது ஆணையினை ஓலையில் எழுதுவதால் இவன் ஒலை எழுதுவோன் எனப்பட்டான். ராஜேந்திரன் அது கூழம்பந்தல் கோயில் கல் வெட்டினால் மகிபால குலகான் என்பான் இப்பணியை செய்தான் என அறிய முடிகிறது.    இப்படி வரியிலிடு கொள்க வென்று நாம் சொல்ல நம் ஓலையில் எழுதும் சயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டு கோட்டத்து பாலையூர் நாட்டு பாலையூர் கிழவன் அரையன் முடிகொண்ட சோழன் எழுதினாலும் என ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு கூறுவதால். அரையன் முடிகொண்ட சோழன் என்பான் ஓர் எழுதுவனாக பணிபுரிந்தான் என்பதை அறிய முடிகிறது

ஓலை நாயகன்

       ஓலை எழுதுவோரால் எழுதப்பட்ட மன்னனின் ஆணைகளை சரிபார்க்கும் பொறுப்பினை உடையவர்கள்தான் ஓலை நாயகமாவர். 1.விக்கிராம சோழசோழிய வரையன், 2.ராஜராஜ பிரம்மராயன், 3.உய்யக் கொண்டார் வளநாட்டு வெணாட்டுக் கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்து கிருஷ்ணன் ராமன் ஆன ராஜேந்திர சோழ பிரம்மராயன்,4.  உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர் நாட்டு பாம்புணிக்  கூற்றத்து அரை  சூருடையான் ஈராயிரவன் பல்லவயனான உத்தம சோழ பல்லவராயன்,5. அருமொழித் தேவ வளநாடு நென்மலிநாட்டு உத்தம சோழ நல்லூர் உடையார் பாளூர் அம்பலத் தடியான முடிகொண்ட சோழன் ஆகியோர் இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் ஓலை நாயகம் என்ற அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டனர் என்பது கல்வெட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

நாழிகைக் கணக்கர்

.     அத்தாணி மண்டபத்திலும், அரண்மனையிலும்அவ்வப்பொழுது நாழிகை அறிந்து (காலத்தை) மன்னனுக்கு அறிவிப்போர், நாழிகைக் கணக்கர் என்பர். இவர்கள் நாழிகை வட்டிலின் துணைகொண்டு நாழிகை பார்ப்பர்.

 

திருவாய் கேள்வி

      இது அரசு ஆணை வாய் கேள்வி என வழங்கப்பெற்றதுமன்னன் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளும் ஆணைகளைக் கேட்டு வந்து, திருமந்திர ஓலையிடம் அறிவிப்போர்  திருவாய் கேள்வி என அழைக்கப்பட்டனர்.

திருமந்திர ஓலை

.    திருமந்திர ஓலையென்போர் மன்னனின் ஆணையை திருவாய் கேள்வி என்னும் அதிகாரி அறிவிக்க அறிந்து அவ்வரச ஆணையினை எழுதியும். இன்னின்ன காலத்து இன்னின்ன நடக்கும் என்பதை மன்னனுக்கு நினைவூட்டி அவனால் நடக்க கூடிய காரியங்களை  நிர்வகித்து பார்த்தும், அவனின் அந்தரங்க செயலனாக இருந்து பணிபுரிவோர் ஆகும்.

முறையிட திருமந்திர வோலையாண் 

முன் வணங்கி முழுவதும் வேந்தர் தம் 

திரையிடப். புற நின்றனர் என்றாலும் 

செய்கை நோக்கி வந் தெய்தி இருக்கவே 

என்று ஜெயங்கொண்டார் கூறுவதால் இது விளங்க முடிகிறது.

திருமந்திர ஓலை நாயகம்

.    திருமந்திர ஓலை என்னும் அதிகாரிகளுக்கு தலைவராக இருந்து, செய்திகளை கண்காணிப்பாளர்கள் திருமந்திர ஓலை நாயகம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர். பொதுவாக நாயகம் என்றாலே தலைவன் எனப் பொருள். ராஜேந்திரன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்து ராஜ வித்யாதரன் பெருந்தெருவில் சோநகன்சாவூர் பரஞ்சோதி ஆகியோர் திருமந்திர ஓலை நாயகம் ஆக பணிபுரிந்தார் என்பது அறிய முடிகிறது.

 

 பட்டோலை பெருமான்

.     நாள்தோறும் நடக்கும் அரசியல் நிகழ்ச்சிகளைநிகழ்ச்சி புத்தகத்தில் குறித்து வைப்பவன் பட்டோலை பெருமான் எனப் பெயரிடப்பட்டான்.

பட்டோலை

      தபால் எழுதுவோன் பட்டோலை எனப்பட்டான்.

வாயிற் கேட்போர்

.     வாய் கேள்வி எனப்படும் அரசு ஆணையை கேட்டு எழுதும் அதிகார சுற்றத்திற்கு வாயில் கேட்போர் என பெயர்.

விடையில்

.    கிராம சபைகளில் இருந்தும், நாட்டு அதிகாரிகள் இடத்தில் இருந்தும்பிற அதிகாரிகள் இடத்தில் இருந்தும், வரும் ஓலைகளை படித்து அறிந்து. அவற்றிற்கு ஏற்றவாறு அரசாங்க சட்ட திட்டப்படி விடை எழுதி அனுப்புவோர் விடையில் எனப்பட்டார். மற்றும் மன்னருடைய ஆணை திருமுகத்தை தூதுவர் மூலமாக உரியவருக்கு அனுப்புவர்.

விடை அதிகாரி

.     மேலே கூறியது போல தக்க விடைகளை எழுதி அனுப்பும் விடையில்  என்னும் அலுவலர்களின் தலைவனுக்கு விடை அதிகாரி என பெயர்.

ஆணத்தி

     ஆணத்தி என்பவர் மன்னனது ஆணையாகிய திருமுகத்தை எடுத்துச் செல்லும்.

கரும விதிகள்

.    கருமிகள் என்னும் ஆக்க வினை துறையர்களை, ஏவி நடத்தி மேற்பார்வையிடும் அதிகாரிகள் ஆவர்.

உடன் கூட்டம்

       மன்னன் தலைநகரில் தங்கியிருக்கும்போதுநாடுகாவல் மேற்கொண்டு வெளியில் செல்லும் போது, அவனுடன் கூட இருக்கும் அரசியல் வினை கூட்டத்தார் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர்பல அரசியல் துறைகளின் தலைவர்கள் இக்குழுவில் இடம் பெறுவர். வரி, தொழில், வாணிகம் செலவு பற்றி மன்னர் இவர்களுடன் கலந்து ஆலோசித்து செயல்படுவார்கள் இவர்கள் மன்னனின் உயர்மட்ட அதிகாரிகள் என்பதை கல்வெட்டு கூறுகிறது.

உடன் கூட்டத்து அதிகாரங்கள்

         உடன் கூட்டத்தினருள் அதிகாரிகளாய் இருப்போர், உடன் கூட்டத்து அதிகாரிகள் ஆவர். ராஜேந்திரன் ஆட்சியில் உதய திவாகரன், தீயன ராஜராஜ மூவேந்த வேளான்,  சுற்றியன் சோழ வேளான் என்பவர்கள் உடன் கூட்டத்து கருமம் ஆராய்பவர்களாக இருந்தனர் என்று கல்வெட்டு மூலம் நம்மால் அறிய முடிகிறது. பொதுவாக வினையாற்றும்  போது மன்னனை சூழ்ந்திருக்கும் பரிவாரம் மூன்று வகைப்படும். அவை எவற் பரிகாரம், காவற் பரிகாரம்,வினைப் பரிகாரம் ஆகும்.

கட்டியங்காரன்

     மன்னன் அரண்மனையில் இருந்து வெளியில் புறப்பட்டு நாடு நகரங்களை சுற்றி செல்லும் பொழுது. அவனது பரிகாரத்திற்கு முன்சென்று மன்னனது வருகை அறிவித்து மக்களை வழியிலிருந்து விலகி போக்குவரத்து வசதியை ஏற்படுத்துபன்  கட்டியங்காரன்.  தற்காலத்தில் அமைச்சர்களும் பெரும் தலைவர்களும் நகரங்களுக்கு வருகை புரியும் பொழுது மக்கள் கூட்டத்தை நேர்படுத்த துரித போக்குவரத்து தகுந்த ஏற்பாடுகள் செய்யும் காவல் துறைக்கு ஒப்பாகும் இந்த கட்டியங்காரன் வேலை.

படையுள் படுவோன் அல்லது சின்ன மூதி

      மன்னன் போர் தொடர்பாக பிறப்பிக்கும் ஆணைகளை அவ்வப்போது காளமூதி படைகளுக்கு தெரிவிப்பவன். இவன் படைக்கிழவன், சிறுகன்,  படைச் சிறுகன், படை சிறு பிள்ளை என்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான்.

அரசாங்க செயலாளர்

உடன் கூட்டத்தாரின் முடிவுகளை மன்னன் ஆணைப்படி அந்தந்தத் துறை அதிகாரிகளுக்கு அறிவித்து  எப்போதும் மன்னன் அருகே இருந்து அரசியல் செய்திகளை மன்னனுக்கு அறிவிப்பவன் அரசாங்க செயலாளர் ஆவான்.

மாளிகை நாயகம்

அரண்மனை காரியங்களை மேற்பார்வை செய்வோன் மாளிகை நாயகம் எனப்பட்டான். அக்காலத்தில் அரண்மனை மாளிகை எனவும் அழைக்கப்பட்டது.

திருமுகக் கணக்கு

       திருமுக கணக்கு என் போன் அரண்மனை வரவு செலவுக் கணக்கை எழுதுபவன் ஆவான்.

அரசப் பரிவாரம்

    அரண்மனையில் பணிபுரியும் ஏவலர்கள் அகப் பரிவாரம் என அழைக்கப்பட்டனர்.

அணுக்கச் சேவகம்

     மன்னனுடன் நெருங்கிய பணி செய்வோர் அணுக்கச் சேவகம் எனப்பட்டனர்.

உழைச் சுற்றாளர்

     மன்னனுக்கு கவரி, ஆலவட்டம் போன்றவை வீசுவாரும், குடை, கொடி ஆகியவை பிடிப்பாரும் உழைச்சுற்றாளர் ,அடையாளக்காரர் என்றும் அழைக்கப்பட்டனர்.

ஊர்களில் இருந்த வினைஞர்

     ஒவ்வொரு ஊரிலும் மன்னனின் ஆணைப்படி ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபை நிர்வாகத்தை கவனித்து வந்தது. அச்சபையார் ஆளுங்கணம் என்றும், கணகப் பெருமக்கள் என்றும், வாரியப் பெருமக்கள் என்றும், கண வாரியப் பெருமக்கள் என்றும், அழைக்கப்பட்டனர்

நகரத்தார்

    நகர மக்களால் என்போன் ஊர்ச்சபை கணக்கினை எழுதி வந்தான். கணக்கு மிகுதி இல்லை என்றால் அச்சிற்றூரில் கணக்கு வாரியமும், கரணத் தானும் தேவையில்லை.

 

பாடிகாவல்

   ஊரைக் காவல் புரிவோர் பாடிகாவல் என அழைக்கப்பட்டனர். காவல் புரிவோரின் தலைவன் பெரும் பாடிகாவல் என்றும், இவன் தலையாரி என்றும் அழைக்கப்பட்டான். இவனுக்கு கீழ்பட்ட வரை சிறு பாடிகாவல் என்று கூறுவது மரபு.

வேலி நாயகம் 

     கொடிக்கால், தோட்டம், தோப்பு ஆகியவற்றின் வேலைகளைக் கவனிக்கும் அலுவலன் வேலி நாயகம் எனப்பட்டான்.

வெட்டி

     ஒவ்வொரு சபைகளில் உள்ள கீழ் வேலைகளை கவனிப்பவன் வெட்டி என்றான். இவன் வெட்டியான் எனவும் வெட்டியாள் எனவும் அழைக்கப்பட்டனர்.

அறம் கூறும் அவையம்

     தலைநகர், பேரூர் போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் வழக்குகளை கேட்டு, முறை செய்வதற்கு அற மன்றங்கள் அப்போது இருந்தன.  அம்மன்றத்தில் பல உறுப்பினர்கள் இருப்பார்கள். அம்மன்றமே அறம்கூறும் அவையம் என வழங்கப்பட்டது. அறம் கூறும் அவையம், அறக்களம், மன்றம், நியாய சபை, தருமாசனத்தார் என்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டது.   இச்சபை உறுப்பினர்களும் நியாயத்தார், அறக்களத்தார், மன்றத்தார்,தருமாசனத்தார் என்று அழைக்கப்பட்டனர்.

அறப்புறங் காவலர், புண்ணியக் கணப் பெருமக்கள்

     பல்வேறு இடங்களில் உள்ள மடம், மருத்துவமனை போன்ற நிலையங்களை மேல் பார்வையிடுவதற்கு தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களில் இடம்பெற்றோர் அறங்காவலர் என்றும் புண்ணிய பெருமக்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

நாடு கண்காணி நாயகம்

    வலியூர் உடையான் ஐயப்படி குணநிதி என்பவன் இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில், கோயில் வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்தான் என்று கோயல் கல்வெட்டால் அறியமுடிகிறது. எனவே நாடு கண்காணி நாயகம் கோவில் கணக்குகளை சரிபார்க்கும் அதிகாரி என எண்ணலாம்.

வண்ணக்கர்

    பேரூர்கள் தோறும் பொற்காசுகளையும், காசாக வழங்கின பொற்க் கட்டிகளையும் அளவிட்டு, ஆராய்ந்து, நோட்டம் செய்து, முத்திரையிடும் அலுவலர் வண்ணக்கர்  என அழைக்கப்பட்டனர். இவ்விதம் முத்திரையிடப்பட்ட பொன்னே அரசாங்கத்தால் புழக்கத்திற்கு வெளியிடப்பட்டன்

தண்டுவான்

     ஊர்தோறும் வரிகளை தண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசியல் வினைஞன் தண்டுவான் எனப்பட்டான். இவன் தண்டாளன் என்றும் அழைக்கப்பட்டான்.

          இவர்கள் மட்டுமல்லாமல் வேறு சில அலுவலர்கள் பற்றிய குறிப்புகளும் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது. அலுவலர்களின் வினை அறுதியிட்டு உறுதியாக கூறமுடியவில்லை. இருந்தாலும் அவர்களின் பெயர்களை மட்டும் இங்கு காண்போம். இவர்கள் முதலிகள், பழ நியாயம், அரசு மக்கள், தெரிப்பு, முகவெட்டி, பெரும்பணைக்காரன், நடுவுருக்கை, சிறுதனம், பெருந்தனம், சிறுதரம், பெருந்தரம்,பெருந்தரத்து மேல் நாயகம் ஆவர்.

       இவற்றுள் நடுவிருக்கை என்போன் அறம் கூறும் அவையத்தானாய் இருக்க வேண்டும் என எண்ண இடமுண்டு. ஏனெனில் நடுவிருக்கை என்பது அரசாங்க பதவிகளில் ஒன்று. குறித்த செயல் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று வேந்தனிடம் விண்ணப்பித்தல் இவனது கடமை ஆகும். எனவே ராஜேந்திரனின் கரந்தை செப்பேட்டிற்க்கு விளக்க உரை எழுதியுள்ள கல்வெட்டு அறிஞர், பேராசிரியர் திரு சி. கோவிந்தராஜன் அவர்கள், தமிழ்ப்பொழில் எனும் இதழில் குறிப்பிட்டுள்ளார்.

       இதுவும் பொருத்தம் உடையதாக காணப்படுகிறது. கிராம சபையில் நடுவிருக்கை என்பான் நியாயஸ்தனாவான். மத்திய ஆட்சியில் நடுவிருக்கை என்பான், அரசினால் எல்லை நிர்ணயிக்க நாட்டாருடன் அனுப்பப்பட்ட அதிகாரியாவார். எனவே இரு விதமான நடுவிருக்கை எனப்படுவர், என்று திரு கு. தாமோதரன் குறிப்பிடுகின்றார். முதலாம் ராஜேந்திரன் செப்பேட்டின் மூலம் அவனது காலத்தில் அருமொழிதேவ வளநாட்டு, இங்கணாட்டு, இளையான்குடியான்  ராஜாதித்தன் கூத்தாடியான விழுப்பரையன்,  என்பான் நடுவிரல் மன்னனாக இருந்தான் என்பது தெரியவருகிறது.   

     பெருந்தரத்து மேல் நாயகம் என்பவன் வள நாட்டுஅதிகாரிகளுக்கு தலைவனாகவும் இருந்திருக்க வேண்டும். சதாசிவ பட்ட சோமயாஜி, பரமேஸ்வரப் பட்டர்  ஆகிய இரு, நடுவிருக்கும் அதிகாரிகள் இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் பணி புரிந்தனர் என்பதை கூழம்பந்தல் கங்கைகொண்ட சோளேச்சரர் கோவில் கல்வெட்டு அறியமுடிகிறது.

      இச் செப்பேட்டின் மூலம் இவ்வோலையை  சரி பார்த்த அரசகரும அணுகத்தினராக பணிபுரிந்த அதிகாரிகள் யார் என்பதைக் கூறுகிறது.

  1. வயலூர் கிழவன் தத்தன் சேர்ந்தனான ராஜேந்திரசோழ அணுக்கப் பல்லவரையன்
  2. பரகேசரி நல்லூர் உடையான் மாணிக்கன் எடுத்தபாதம் ஆன சோழ மூவேந்த வேளான்
  3. சிறிஞார் கிவன் தன்னிச்சை ஆதித்தன்
  4. வைப்பூர் கிழவன் தீரன் பாஸ்கரன்

    இவ்வோலை நான்கு அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். நிலவரி நிர்வாகத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்பப்படும்அறக்கட்டளைகுரிய ஊர்களின் முன்னால் பெயர், வரிவகை போன்றவற்றை கண்காணிப்பு செய்வது  இவ்வதிகாரி கடமை

        புரவு வரித் திணை களத்து கண்காணி என்னும் அதிகாரியான விசாலூர்க் கிழவன் கணபதி அழகியான் அறக்கட்டளைகரிய ஊர்களின்  விவரம் பற்றி கண்காணிப்பு செய்தான். பின்பு  புரவு வரி திணைக் களம் என்று அழைக்கப்படும் நில வருவாய் துறை அதிகாரிகளான 1. பூங்சாற்று உடையான் நக்கன் நக்கன் அரங்கன்,2. தலையூருடையான் நக்கன் தாமோதரன்,3. அழிஞ்சில் மங்கல  உடையான் நாக நாக்கன், 4. பெரும்பேடு கிழன்  பட்டன் வாசுதேவன் போன்றோர் வழிமுறை தணிக்கை செய்தனர்.

 அதனை வரிப் பொத்தகம் என்னும் அதிகாரியான இறையான் சேரிக்கிழவன் புழ மதனி ராமன் பார்த்து, முகவெட்டி எனும் அதிகாரிகளான 1. உவர்க் குடிக்கிழான் அரையன் கனகபுரம் 2. இழப்பையூர்ருடையன் ராம அமலன்,3.வீராண உடையாய் நூற்றெண்மன் கருணாகரன்,4.மனையூருடையான்  காவிதி வெண்காடன் போன்றோரிடம் ஒப்படைத்தான். அவர்கள் தம்மிடம் உள்ள கணக்குகளுடன் ஒப்பிட்டு சரி பார்ப்பான். பின், வரிப்பொத்தக கணக்கு என்னும் அதிகாரியான செல்காரூருடையன் நாதுங்கன் கருத்தன்  நிலத்தின் கணக்கோடு இறையிலி அளவையும், குறித்து வைத்து பின்பு அதனை வரியிலிடு என்னும் அதிகாரியான நிலவரி கணக்கில் புது வரிகளை சேர்க்கும் பணி, பூதிக் குடையான் சிங்கன் புலியன்  மேற்பார்வையிட்டு கணக்கில் இறையிலியாக இட்டு எழுதி அரசகட்டளை ஓலையை பூர்த்தி செய்வான்.

 இதன் பின்பு பட்டோலை எனும் அதிகாரியான நரிக்குடையான் சக்திராமன் அரச ஆணை ஓலையை ஒரு முகமாக தீட்டினான். பின்பு அரசாணைகளை தணிக்கை செய்யும் துறைகளின் தலைமை அதிகாரிகள் ஒன்றுகூடி கையெழுத்திட்டு ஒப்புதல் தெரிவித்தனர்.

     இவ்விதமாக பல முறையாகத் தணிக்கை செய்யப்பட்ட பின்பு மன்னர் ராஜேந்திரன்  தான் பிரமதேயமாகும்  கிராமங்களை அறிவொலை செய்யக் கருதி.1. வீரசோழ வளநாட்டினை அளந்து வகை செய்யும் கண்காணி நாடுவகை புரியும் அதிகாரி களத்தூர் கிழவன் சிறியான் ஆதித்தன் 2. புரவிதிணைக்களம் என்னும் அதிகாரி பூஞ்சிற்றூருடையான் நக்கன்  அரங்கன்,3. விளநாட்டு ராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ண மாற்பட்டன் ஆகிய மூவரையும் மன்னனே நியமித்து தானக்குரிய ஊரவர்களுடன் அருகிருந்து எல்லைகளை காட்டி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து எல்லைகளுக்கு கல்லிம்,கள்ளியும் நாட்டி அறவோலை  செய்து போகவும்’ என்று  தன் வாயால் கூறுவான்.

       இம்மன்னனது ஆணையை திருமந்திர ஓலை என்னும் அதிகாரியான ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்று காட்டு கோட்டத்து பாலையூர் கிழவன் முடிகொண்ட சோழன் எழுதினார். இத்திருமுகத்தை திருமந்திர ஓலை நாயகம் எனும் அதிகாரிகள் பார்த்து ஒப்புதல் செய்தனர்பின் முறைப்படி அவ்வோலை சாசனம் செய்யப்பட்டது. இவ்அறவோலை மூலம் ராஜேந்திர சோழன் 51 ஊர்களையும் ஒரு ஊராக இணைத்து. தனது தாயின் பெயரால் திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என பெயரிட்டு தமது எட்டாம் ஆட்சியாண்டில் பிரமதேயம் ஆக்கினான்.

அரசிறை

      சோழர்காலத்தில் மன்னனுக்கு செலுத்தி வந்த நில வரியே அரசிறை எனப்பட்டது. இது காணிக்கடன் என்று அழைக்கப்பட்டது. நிலம்விளை நிலம், விளையா நிலம்  என இருவகைப்பட்டது. இக்காணிக்கடன், விளையும் நெல், வரகு போன்ற தானியங்களில் ஒரு பகுதியாகவோ , பொன்னும், காசுமாக செலுத்தப்படுவது வழக்கம். குடிமக்களிடமிருந்து ஊர் சபையால் ஆண்டுதோறும் வசூலிக்கப்பட்டு மன தலைநகரத்தில் அரசாங்கக் கருவூலத்தில் உள்ள தலைமை பண்டாரம் பெற்றுக்கொண்டு பதிவு செய்து கொள்வார். கடந்த ஓராண்டிற்கும் நில வரி செலுத்தாத குடிமகன் நிலங்கள் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவது வழக்கம். அங்கனம் விற்றமையால் கிடைத்த பொருள் அரசாங்கத்தில் சேர்க்கப்படும். இவ்வதிகாரம் ஊர்ச் சபையார்க்கே கொடுக்கப்பட்டதால் வரிவசூல் எளிதாக இருந்தது.

வரிவகைகள்

     சோழர் காலத்தில் 400வகையான வரிகள் வசூலிக்கப்பட்டன. நிலவரியேயன்றிக் கண்ணாலக்காணம்,குசக்காணம்,நீர்க்கூலி,தயிறியை,தரகு,தட்டாரப்பாட்டம்,இடைப்பாட்டம்,ஓடக்கூலி,செக்கிறை,வண்ணாரப்பாறை,நல்லா,நல்லெருது,நடுகாவல்,உலகு, ஈழப்பூட்சி,முதலான வரிகளும் சோழர் அரசியலில் இருந்துள்ளன. கடன்,கூலி,குறை,பாட்டம்,பூச்சி என்பன வரிகளையுணர்த்தும் மொழிகளாகும்.  

       வரிகளின் பட்டியல் அதிகமாக உள்ளதால் சோழர் காலத்தில் அரசாங்க வரிகள் மிகுந்து இருக்கும் என எண்ணுதல் கூடாது. அக்காலத்தில் பல தொழில்களுக்கும் வரி விதிக்கப் பட்டிருந்ததை என்ன வேண்டும். ஒவ்வொரு தொழில் பெயரையும், சூட்டி பெயரும், குறிக்கப்பட்டு இருப்பதால் வரி பெயர்கள் மிகுந்து காணப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் தொழில்வரி என்று பொதுப் பெயரால் பல்வகை  தொழிலாளர்களிடம் வரி வசூலிக்கப்படுகிறது. தொழில்வரி எனும் பெயரில் பல வகையான தொழிலாளர்களின் தொழில் வரிகளும் அடங்கியுள்ளன என்பதை உணரும்போது இவை நன்கு விளங்கும்.

        கண்ணாலக் காணம் என்பது திருமணம் வரி.  இது மணமகன், மண மகளுக்கு திருமண நாளன்று அரசாங்கத்திற்கு செலுத்தும் வரியாகும். இந்த வரி குறைந்த அளவில்தான் வசூலிக்கப்படும். முதலாம் பராந்தகனின் ஈரோடு கல்வெட்டை கொண்டு கண்ணாலக் காணம் எனும்  பெயரில் அரைக்கால் பணம் வசூலிக்கப்பட்டது  என்று அறிய முடிகிறது. இடைப்பாட்டம் என்பதை இடை பூச்சி அல்லது இடைவரி என்று அழைப்பர். தறியிறை  என்பது தறிப்புடவை எனப்படும். தட்டாரப் பாட்டம்  என்பது தட்டு காயம் எனவும் தட்டொளி எனவும் வழங்கப்பட்டது.

       நாடு காவல் எனும் வரி  பாடிகாவல் என்று வழங்கப்பட்டதுஇது ஊர்களை காத்தல்  பொருட்டு வாங்கப்பட்ட ஒரு தனி வரி ஆகும். உல்கி என்பது சுங்க வரி ஆகும். கள் இறக்குவோர் மீது போடப்பட்ட  ஈழம் பூட்சி எனப்படும். மேல் கூறப்பட்ட வரிகள் எல்லாம் எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் எல்லாரிடத்திலும் வசூலிக்க பட்டவை அல்ல. சங்க காலத்தை காட்டிலும் பிற்காலச் சோழர் காலத்தில் வரிகள் மிக ஆகும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பாசன வரி

     ராஜேந்திரன் காலத்தில் ஏரி குளங்களிலும், நிலை நீரையும், ஆற்று நீரையும் பார்த்துக் கொள்வதற்கு நீர்ப்பாசன வரியும் வசூலிக்கப்பட்டது என  அறிய முடிகிறது. இதனை நீர்நிலைப்  பாட்டம் என கல்வெட்டு கூறுகிறது. இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் வழங்கப்பட்டிருந்த வரிகள், கூழம்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் சிலவற்றின் பெயர்கள் அறிய முடிகிறது. உழவிறை, எச்சோறு, கூற்று நெல், வெட்டி, அமிஞ்சி போன்றவையாகும். உழவிறை என்பது உழவுத் தொழில் செய்வோர் மீது விதிக்கப்பட்ட வரி ஆகும். எச்சோறு என்பது நிலங்களை கூறு செய்யும் அதிகாரி களுக்கு அளிக்கப்படும் சோறு ஆகும் . வெட்டி என்பது நிலங்களை கண்காணித்து வருவதாற்க்காக வசூலிக்கப்படும் வரியாகும். நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு வசூலிக்கப்படும் வரியை அமஞ்சி என்ற பெயரால் அழைப்பர்.

இறையிலி நிலங்கள்

        பொதுவாக நிலத்தை அளக்கும்போது ஊர்மக்கள் பயன்படக்கூடிய பகுதியில் இறை இல்லாதவைகளாக ஒதுக்கப்பட்டன. ராஜராஜன் காலத்தில் இறையிலி நிலங்கள் ஸ்ரீகோவில், பிடாரி கோவில், அய்யனார் கோவில், சேட்டையார் கோவில், காடு காண்கோவில், ஊர் இருக்கை, ஊர் நந்தனம், கம்மாளச் சேரி, தளிச்சேரி, பறைச்சேரி, தீண்டாச்சேரி,உழைப்பளையர் இருக்கும் சேரி, குளம், குளக்கரை தெரு,  ஊருணி குளம்,அதன் கரைக், உறைகிணறு, அதன் தொட்டி, வெள்ளான் சுடுகாடு, பறை சுடுகாடு போன்றவை என பல வகை நிலங்கள் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.

மன்னன் வழங்கும் நில தானங்கள்

.     சோழர் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் மீது வரி விதிக்கப்படவில்லை. பலவகைப்பட்ட கோவில்களுக்கும், அரசுகளுக்கும், புலவர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் நில தானம் செய்தனர். சங்க கால சோழர்கள் யாகங்களையும், வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து சடங்குகளையும், ஆடம்பரமான முறையில் நிகழ்த்தினர் என்பதை அறியமுடிகிறது. இந்திய மன்னர்கள் பெரும்பாலும் விரும்பி செய்த அசுவமேத யாகத்தை சோழ மன்னர்கள் செய்ததாக தெரியவில்லை

      சோழ வேந்தர்களில் ராஜாதிராஜன் மட்டும் இந்த  அசுவமேத யாகம் செய்தான் என்ற செய்தி வெட்டு எழுத்து மூலம் அறிய முடிகிறது. சோழர்கள் தானத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்து நிலக்கொடை பல அளித்தனர். அதில் இறையிலியாக அளித்த பலவிதமான கொடைகள் உள்ளது. தேவதானம், பள்ளிச்சந்தம், சாலபோகம், திருவிடையாட்டம், பிடாரிப்பத்தி, ஐயன்போகம், புலவர்  முற்றூட்டு, கணி முற்றூட்டு, பிரம்மதேயம்  என பல வகை உள்ளதுராஜேந்திரன் தன் எட்டாம் ஆட்சியாண்டில் வான மங்கை என்னும் ஊரினை அமைத்து, அதில் 4 ஆயிரம் அந்தணர்களை குடியேற்றினான் என்பது கல்வெட்டுச் செய்தி ஆகும். 

      ராஜேந்திர சோழன் தனது எட்டாம் ஆட்சியாண்டில்  107  ஆம் நாளில், பெரும்பற்றப்புலியூர் மாளிகையில் உள்ள, ராஜேந்திர சோழ பிரமாதிராஜன் என்ற மண்டபத்திலிருந்து விரதம் மேற்கொண்டு போதுஒரு பிரமதேய தானம் செய்வதான் என கரந்தைச் செப்பேடு கூறுகிறது. மூவாயிரத் தொருநூற்று முப்பத்தைஞ்சே நான்மாவரைஙமுந்திரிகைக்கீழ் ,முக்காணி நிலவளவு கொண்ட ஐம்பத் தோருகளை திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என பெயரிட்டு, அவ்வக்கிரகாரம் முழுவதையும் அங்கு வாழ்ந்திருந்த அந்தணர்கள், பெரியோர்களுக்கு நீர் வார்த்துக் கொடுத்தான்.

       செம்பங்கடி, குளப்பாடு, துளார், நல்லம்பர் திரிபுவன மாதேவி நல்லூர், வீச்சூரன சிக்கல், மிஞ்ஞாவல்,கூத்தனூர், கமுகன் சேந்தன்குடி, வைகுந்தநல்லூர், மகிபாலய நல்லூர், கீழமாத்தூர் பரகேசரி நல்லூர், பெண்ணாகடம், இறத்தூர், சிறையூர், சோற்றுத்துறை, நெடுவாயில், ஏறுபாடி, புளிகை குட, பெருங்குடி, முண்டநூர், தாமோதரன் நல்லூர், அரசூர், வாளுவ நல்லூர், குணசீலன் நல்லூர், செய்யா நல்லூர்,சிறிறில நல்லூர், நித்த வினோத நல்லூர், வேங்கூர், நியாய நடை நல்லூர், சேந்தமங்கலம், இகழா காலநிலை நல்லூர் வீரநாராயண மங்கலம், கருவூர், கோவிந்த நல்லூர், வீரசோழ நல்லூர் மணிமங்கலம், துறைய நல்லூர், வாமன நல்லூர், மேட்டு மேற்படி, பூதமங்கலம் பால்காடன்காரி குறிஞ்சி,

      பருத்தி நியமத்து திறப்பான தேவதான்குடி, விளங்குடி,வெண்ணிக் கணிமுற்றூட்டிறங்கல் நெடுங்கணகுடி, பூதமங்கலத்துப் பால்அயலூட்டி காணி, பள்ளிச்சந்தம் இறங்கின ஸ்ரீகரன் அமங்கலமான கொட்டாரக்குடி பள்ளி, புறக்குடி, என இவ்வூரின் வாயிலாக ஆண்டுதோறும்  5150  கல நெல்லும், மீன் பாட்டம் காசு 32 அறையும் அக்கம் 65 வருவாயாக கிடைத்து. இத்தானத்தால் 1009 சதுர்வேதி பட்டர்கள் தானம் பெற்றதாக கரந்தைச் செப்பேடு கூறுகிறது. ராஜேந்திரன்  போன்று பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் தமிழக வரலாற்றில் வேறு எவரும் இல்லைகரந்தைச் செப்பேடுகள் இராஜேந்திர சோழனின் கொடைத்தன்மை இதில் நன்கு வெளிப்படுகிறது.

அம்பல மானியம் 

    அரசியல் வினைஞரும் ஒரு தலைவனுக்கு அழைக்கப்படுபவை அம்பலமானியம் ஆகும்.

அமர நாயகம்

     போர்ப் படைத் தலைவனுக்கு அளிக்கப்படும் மானியம் அமர நாயகம் எனப்படும்.

எட்டிப் புரவு

     வணிகரின் சிறந்தோர்க்கு வழங்கப்படுவது எட்டி என்ற பட்டம் ஆகும். அதில் வணிகத்தில் சிறந்தோருக்கு வழங்கப்பட்ட மானியம், எட்டிப் புரவு என்ற பெயர் பட்டது. ராஜேந்திர சோழன் வேத, வேதாந்த, வியாகரண ஆகம புராண வளர்ச்சிக்கு அளவிறந்த தானங்கள் செய்து, நாட்டின் ஆன்மீகக் கல்வி வளர்ச்சிக்கு வழி செய்தான் என்பதை கரந்தைச் செப்பேடு நமக்கு கூறுகிறது. அவைகளில் மீமாம்சை பட்ட விரித்திக்கு ஐவேலி நிலமும், வேதாந்த பட்ட விருத்திக்கு நால் வேலி நிலமும், பிரகணப் பட்ட விருத்திக்கு நாள் வேலி நிலமும், பவிழிய கிடைக்க புறத்து ஒரு வேலி நிலமும்,  சாதோக்க் கிடப் புறத்துக்கு ஒரு வேலி நிலமும், காப்பிய கிடைப்புறத்திற்க்கு ஒரு வேலி நிலமும்,

      காப்பிய கிடைப்பிறத்துக்கு ஒரு வேலி நிலமும், சமிதி  முலச்சரயம்  ஓதுவிப்பானுக்கு ஒரு வேலி நிலமும், மகாபாரதம்  ஓதுவானுக்கு ஒரு வேலி நிலமும், அம்பலம் மெழுகி தொட்டி நீர் தண்ணீர் ஆட்டுவானுக்கு ஒரு வேலி நிலமும்,  தானம் செய்யப்பட்டதாக ராஜேந்திரன் கரந்தைச் செப்பேடு கூறுகிறது. இவ்வூர் சாசனம் வெற்றி பூச்சையாக பெற்ற காஷ்மகாரி கிருஷ்ணரங்கனான திருபுவன மாதேவி பேராசிரியருக்கு, துணி நிலம் வேலி என பல தானம் அளித்தான், இவை அனைத்தும் கரந்தைச் செப்பேடு வழியே அறிய முடிகிறது

மடப்புறம்

   மடத்திற்கு விடப்படும் இறையிலி நிலம் மடப்புறம் ஆகும்.

தண்ணீர் பட்டி

.     தண்ணீர் பந்தலுக்கு விடப்பட்ட மானியம் தண்ணீர் ப ட்டியாகும்.

ரத்த காணி

      போரில் இறந்துவிட்டவன்  மகனுக்கோ மனைவிக்கோ வழங்கப்படும் மானியம் ரத்தகாணி எனப்படும். இரத்தக் காணிக்கை, ரத்த மானியம், உதிரப்பட்டி என அழைக்கப்படும்.

இதுபோன்ற தானங்கள் கணக்கன், வெட்டியான், நட்டுவனார், போன்ற பல அரசு ஊழியர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது.

ஆவணக் களரி

    அரசன் முத்திரையோடு கூடிய முறியோலை தற்கால பத்திரம் போன்று அந்த காலத்தில் ஊர்கள் தோறும் எழுதப்பட்ட, ஆவணங்களை வெளியிட ஆவண களரி நிறுவப்பட்டது. ஒரு நிலத்தை விற்பவனும், வாங்குபவனும் அல்லது அடமானம் வைப்பவர் தாமாகவே முன்வந்து. எழுதினால் அதை எடுத்துக்கொண்டு போய் அவரின் முன்பு தன்னுடைய விருப்பத்தை கூறி, உறுதிமொழி அளித்து ஆவணத்தை காப்பிடும்படி செய்துகொள்வர். ஆவணத்தில் அரசு முத்திரையிட்டு பதிவு செய்யப்படுகிறது. காப்பிடுதல் என்று அழைக்கப்பட்டது. நிலத்தின் எல்லைகளையும், விலையிம் இவ்வாண்ணத்தில் குறிக்கப்பட்டிருக்கும். இவ்வாவணம் என்றென்றும் பயன்படக்கூடிய கூடியதாகும். அவ்வூரில் உள்ள கோயில் சுவரிலும் இதனை பொரித்து வைத்த வழக்கமாகும்.

ஆவணம்

     ஆவணம் என்பது அந்தந்த வினைக்கு எழுதப்பட்ட கருவிக்கும் ஏற்ப ஏடு,  ஓலை, கரணம், சீட்டு, செய்கை, தீட்டு, நறுக்கு, பட்டிகை,பட்டயம்,முறி என்ற பல பெயர்களும் உண்டு.ஆவணம் என்பது பத்திரம்,பிறமானம் எனும் பல சொற்களில் தற்காலத்தில் வழங்கப்படுகிறது. இனி நான் எல்லைக்குட்பட்ட தர மிதி மிகுதிகுறைவுபட்ட குழிகள், 600க்கு எமி சைந்தவிளைசான பொருள் அன்றாட  நாற்காசு 20. இப்படி 20ம் ஆவணங்களரியே காட்டி காப்பிட்டு கைக் செலவறக்கொண்டு விற்று, பிராமணன் செய்துகொண்டு  மண்ணற விற்றிப் என்று சாசன பகுதி கூறுகிறது.

நிலங்கள்

     அந்த காலத்தில் நாடு முழுவதும் அளக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.  நிலவரியை துல்லியமாக நிர்ணயிக்க நிலத்தை அளத்தல் அவசியமாகிறது. ஒரு நாட்டில் உள்ள ஊர்களை முறையாக அளந்தால் தான். அங்குள்ள விளைநிலங்களின் சரியான அளவு அவற்றிற்குத் தேவையான நிலவரி, குடிமக்களிடமிருந்து எவ்வளவு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிபடக் கூறமுடியும். ஆதலால் தான் இந்த நிலம் அளத்தல் அவசியமாகிறது. சோழநாட்டில் முழுமையும் முதலாம் ராஜராஜன் காலத்தில்தான் அளக்கப்பட்டது. நிலம் அளக்கும் கோலினை உலகளந்த கோல் என்று அழைப்பர். இது சிற்றம்பலம் கோல், பங்கிட்ட கோல் எனவும் அழைக்கப்பட்டது.

       இக்கோள்  16 சாண் அளவுடையது ஆகும். ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் இக்கோலைக் கொண்டே அளக்கப்பட்டது, என்று கூழம்பந்தல் கோயில் கல்வெட்டு கூறுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலத்தில் கி.பி 1086லும், மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது கி.பி 1216 லும், சோழ நாடானது முழுவதும் அளக்கப்பட்டது. எல்லை மாறும் போதெல்லாம் வள நாடுகளும்  அளக்கப்படும். அவற்றை அளக்கும் கோல் இறையிறுக்குங்கோல் எனப்பட்டது. அக்காலத்தில் குடிதாங்கி கோல் என்ற கோல் இருந்ததாக கூறப்படுகிறது.

நிலவகையும், அளவும், தரமும்

      நிலங்கள் நீர் நிலம்,கொல்லை, காடு என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. இவற்றில் நீர் நிலம், கொல்லை என்பது நன்செய், புன்செய் என்று அழைக்கப்படும். 100 குழி கொண்டது ஒருமா என்றும், 2000 குழி கொண்டது ஒரு வேலியாகவும் அழைக்கப்பட்டது.  இச்செய்தியை உலகமாதேவி சுவர கல்வெட்டால் அறியமுடிகிறது. 

நுட்பமான நில அளவு 

        அக்காலத்தில் நிலத்தின் சிறு பகுதியும் விடாமல் மிக நுட்பமாக அளக்கப்பட்டது. சோழர் ஆட்சிக்காலத்தில் நிலங்கள் நுண்ணிய முறையில் அளக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, நிலவரி ஒழுங்குபடுத்தப்பட்டு, வசூலிக்கப் பட்டது என்பது சிறப்பான ஒன்றாகும். அந்த காலத்தில் சோழ அதிகாரிகள் திறமையோடு பணியாற்றினார் என்பது தெரிய முடிகிறது.

கிராம ஆட்சி

ஊர் சபை அமைப்பும் கடமைகளும்

          முதலாம் ராஜேந்திர சோழன் தன் முன்னொரு காலத்தில் எவ்வாறு ஊராட்சி முறையை பின்பற்றினார்களோ,அதன் சிறப்பியல்புகளையும், ராஜேந்திர சோழனும் வாழையடி வாழையாக பின்பற்றி வந்தான். ராஜேந்திர சோழன் காலத்தில் ஊராட்சி முழுமையும் ஊர் சபை யாரால் தான் நடத்தப்பட்டு வந்தது. இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆணையின் கீழ் வாழும் மக்கள் ஆட்சி துறையில் தேர்ச்சி பெறவும், தங்கள் ஊரின் நன்மை தீமைகளை அறிந்து அதில் அக்கறை காட்டவும், ஏற்பாடுகளை செய்து கொள்ளவும், ஊர்கள்தோறும் சபைகளை நிறுவி இருந்தார். கிராம ஆட்சிமுறை சோழர்கால ஆட்சி முறையில் சிறந்த ஒன்றாக கூறப்படுகிறது.

      தற்போது உள்ள சுய ஆட்சி முறையை ஒத்ததாகும். சோழர் கால கிராம ஆட்சியில்தான் மக்களால் மக்களுக்காக ஏற்பட்ட மக்கள் அரசை நாம் காண முடியும். ஊர் சபை உறுப்பினர்கள் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அப்போது ஊரும் பல பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பகுதியும் குடும்பம் 0 என வழங்கினர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உறுப்பினர் மட்டும் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஊர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அளவிற்கு ஏற்றார்போல் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் 30 குடும்பங்களை கொண்டதாகவும், தஞ்சை மாவட்டத்திலுள்ள செந்தலை ஏறக்குறைய 60 குடும்பங்களை உடையதாகவும் காணலாம்.

    பெரிய ஊர்களில் அதிக உறுப்பினர்களாகவும், சிறிய ஊர்களில் குறைந்த உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரின் தகுதிகள் என்னவென்றால். காணிக்கடன் செலுத்துவதற்கு ஏற்ற கால் வேலி நிலமும், சொந்த மண்ணையும் கொண்டவராகவும், மறைகளையும் ஆகமங்களையும் கற்றவராகவும், அதை பிறருக்கு உணர்த்தும் வல்லமை கொண்டவராகவும், கருமம் ஆற்றுவதில் திறமை கொண்டவராகவும், 35 வயதிற்கு மேற்பட்டவராக 25 வயதுக்கு கட்டுப்பாட்டுக்குள் நல் வழியில் சம்பாதித்த பொருளை பெற்று தூய வாழ்க்கையினை பின்பற்றுவோராகவும், மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டு, நர்வாக சபை  உறுப்பினராக  இருத்திராதவராய் இருப்பவரே சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் உரிமையுடையோர் ஆவர்.

     நிர்வாக சபை உறுப்பினராக இருக்கக்கூடிய தகுதிகள் என்று இவைகள் உள்ளது. அதுமட்டுமல்லாது, இந்நிர்வாக சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகாதவர்கள் என்று பட்டியலும் உண்டு. எத்தகைய கையூட்டு வாங்கினோரும், கிராம துரோகியாக ஒதுக்கப்பட்டவரும்,பொதுமக்களிடம் கூடினவரும், கழுவாயால் தூயவர் ஆன போதும் தன் வாழ்நாள் முடியும் வரை அவர்கள் கிராம சபை நிர்வாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படும் தகுதி இழந்தவர்களாக கருதப்படுவர்.

குடவோலை முறை

       இதுபோன்ற தகுதிகள் கொண்டவர்களே காரிய நிறை வேற்றுவதற்குரிய  கழக உறுப்பினராக, குடவோலை முறையில் ஆண்டுதோறும் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். தேர்ந்தெடுத்து குறிக்கப்பட்ட நாளில் அரசாங்க அதிகாரியாக ஒருவர் சபை கூடுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாளிகையில்  ஊரில் உள்ள இளைஞர் முதல் முதியவர் எல்லோரும் பொதுமக்களும் கூட்டுவர்.   கூட்டத்தில் மத்தியில் ஒரு குடம் வைக்கப்படும். குழிமியுள்ள நம்பியர்களுள் வயது முதியவர் ஒருவர் அதை எடுத்து, அதனுடன் ஒன்றும் இல்லை என்பதை எல்லோருக்கும் அறியக் காட்டி.

      கீழே வைத்து பின்பு ஒவ்வொரு ஊரையும், முப்பது பகுதியாக பிரித்து. ஒவ்வொரு பகுதியில் உள்ள ஒவ்வொருவரும் தமக்கு தகுதி உடையார் என்று தோன்றி, ஊரின் பெயரை ஓலையில் எழுதிய ஓலை களில் ஒன்று சேர்த்து. இந்த பகுதியை சார்ந்த ஓலை என்பது விளங்க அப்பகுதி வாய்வழி ஒன்றை சேர்த்து கட்டி குடத்தில் இடுவர். இந்த பகுதி எனப்படுவது குடும்பு என்ற பெயர்படும். இவ்விதம் அவ்வூரிலுள்ள 30 பகுதியினரும் தமது ஓலையை குடத்தில் இடுவர். பின்னர் அம்முதியவர் அங்கு நடைபெறுவதை  அறியாத ஒரு சிறு குழந்தையை அழைத்து, குடத்தில் இருக்கும்  ஓலையைக்கட்டி எடுப்பித்து தனியாக பிரித்து. வேறு ஒரு குடும்பத்தின்  ஒரு ஓலை மட்டும் அச்சிறுவனை கொண்டு எடுக்கச் செய்து. அதனை தாம் பெற்றிருந்த கரணத்தால் கொடுப்பார். இங்கு கரணத்தான் என்று குறிக்கப்படுபவர் கிராம கணக்கணாவான். அவன்  தன் ஐந்து விரல்களை விரித்து தன் கையில் ஒன்றும் இல்லை என்பதை பிறர் அறிய காட்டி.

    ஓலையை வாங்கி அதில் எழுதப்பட்டுள்ள வேட்பாளர் பெயர் அங்குள்ள அனைவருக்கும் கேட்கும்படி படிப்பான்.வேட்பாளர் யார் என்று உணர்ந்த பின்னரே அவரை குறிக்கப்பட்ட பெயரை உடையவர் குடும்ப கிராம சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உறுதி செய்யப்படும்.இவ்வாறு மாற்றிய குடங்களையும் குறுகிய முன்புபோல எடுத்தவர்கள் பெயர்களும், ஓலைகளில் எழுதி கொள்வதுமாக ஊர் சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஊர் சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் கிராம மக்கள் முன் வைத்து நடத்தப்பட்டது என்பது பெரிய புராணம் பாடல்,கல்வெட்டு போன்றவை வழி உணரமுடிகிறது.

வாரியங்கள்

        இதுபோன்று ஊரில் உள்ள எல்லாக் குடும்புகளுக்கும் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்ஊர்ச்சபையின் உட்பிரிவு கழகங்கள் அமைக்கப்படும். கழகங்கள் வாரியம் என பெயர்படும். வாரியங்களுக்கு அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது அங்கத்தினரின் வயது கல்வி,அறிவு போன்றவை முக்கியமானதாக கருதப்படும். இவர்களில் 30 வயதில் கல்வியிலும் அறிவிலும்  முதிர்ந்தோர் 12 சம்வத்சர வாரியராகவும் தேர்ந்தெடுப்பர். மற்றவர்கள் பன்னிருவர் தோட்ட வாரியம், ஏரி வாரியம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

        பின்னர் இம்முறையே 30 ஓலைகளை தேர்ந்தெடுத்து. குடத்தில் இட்டு குலக்கி அவர்களில் 12 எடுக்கச் செய்து, அறுவரக பொன் வாரியம், பஞ்சவார ராக அமர்த்துவர். எனவே இக்காரிய நிறைவேற்று கழகம், சம்வத்சர வாரியம் தோட்ட வாரியம், ஏரி வாரியம், பஞ்சவாரியம்  என ஐந்து வகையான வாரியத்தை கொண்டதாகும். கிராம சபையில் 5 உட்கழகங்கள் இருந்திருந்தது அறியமுடிகிறது. சபையின் உறுப்பினர் தம்மை தேர்ந்தெடுத்த நாளில் இருந்து 350 நாள் வரை ஓராண்டு காலம் எவ்வகை ஊதியமும் பெறாது, தன் கடமைகளை ஆற்ற வேண்டும். கடமையை ஆற்றுவதற்கு உரிமையும் அதிகாரம் கொண்டவராகவும், இவர்களுக்கு ஆளுங்க கணத்தார்,கணப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர்.

      கழக உறுப்பினர் ஏதேனும் குற்றம் செய்தால் உடனே பதவியிலிருந்து நீக்கப்படுவார். நியாய விசாரணை செய்து குற்றத்திற்கு ஏற்ற தண்டனை விதித்தாலும், கோயில் காரியங்கள் ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிட்டும், ஊரை சுற்றி பார்த்து நன்மை தீமைகளை போன்றவற்றை  கவனிப்பது சம்வத்சர வாரிய கடமையாகும். ஏரி, குளம்,ஊருணி, வாய்க்கால் முதலிய நீர் நிலைகளில் பழுது படாமல் பாதுகாத்தும்,  விளைச்சலுக்கு வேண்டிய நீரை சரிவர பாய்ச்சு வித்தல் போன்ற காரியங்களை செய்தல் ஏறி வாரிய கடமையாகும்.

     புஞ்சை, புறம்போக்கு நிலங்களைப் பற்றிய எல்லாவற்றையும் கண்காணிப்பது தோட்ட வாரியம் கடமையாகும். பஞ்ச காலங்களில் மக்களுக்கு உணவு தேவையான வகையில் பூர்த்தி செய்யப்பட்டு, ஊரிலுள்ள தானிய விளையில் ஒரு சிறு பகுதியை பெற்று,  பாதுகாப்பாக வைப்பது  பஞ்ச வாரிய கடமையாகும். தானிய விலையில் ஆறிலொரு கடமையை மன்னனுக்கும், மீதமுள்ள ஐந்து கூறு நிலமுடையாருக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.

   பொன்னை உரை காண்பதும், அரசரால் வெளியிடப்படும் பொற்காசுகள், செப்புக்காசுகள் போன்றவற்றை ஆராய்ந்து கண்காணிப்பது போன்றவை பொன் வாரியத்தார் கடமையாகும். இதில் ஒன்பது உறுப்பினர் பணிபுரிந்தனர்.   இவ்வொன்பதில் படைவீரர் இருவரும், சங்கர பாடிகள் மூவரும், இடம் பெற்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஏழரை மஞ்சாடிப் பொன் ஊதியமாக அளிக்கப்பட்டது. சிறுவரும் வயது கடந்தவர்கள் வாரியத்தில் உறுப்பினராக முடியாது. உறுப்பினர்கள் ஓர வஞ்சனை இன்றி மக்களின் பொன்னை  மாற்றியாக வேண்டும்.

     ஆணிக்கல்லை பொன்னை உரைக்கும் கட்டளை கல்லாக பயன்படுத்தினர். இதுபோன்று உரைத்து எடுக்கப்பட்ட பொன் துகளை, பொன் வாரியத்தார்  ஏரி வாரியம் பெருமக்களிடம் ஒப்படைத்தார். தங்கள் கடமைகளை நேர்மையாகவும் நாணயமாக ஆற்றவேண்டும் என்பது விதிக்கப்பட்டுள்ள விதி. இவர்கள் மூன்று திங்களுக்கு ஒரு தடவை ஆட்டை  (ஆண்டு) வாரியத்தினர் முன்னிலையில், நாங்கள் எனக்கு இட்ட கட்டளையை மீறி, உரை காணவேண்டி  வந்த பொண்ணை களவாடி இருப்போமானால், என்றென்றும் பசிப்பிணியால் துன்புற்று வாழ்வோமாக என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு. அதன் வழி நடப்பது போன்ற வாரியங்களையன்றி கழனி வாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம்,  தடிவழி வாரியம், ஆட்டை வாரியம், உதாசீன வாரியம் என்ற பல வாரியங்களும் சில கிராமங்களில் இருந்தன. ஊர் கணக்குகளை கண்காணிக்க பொறுப்புக் கணக்குவாரியத்திடம் விடப்பட்டது.

படை

    ஒரு நாட்டின் அரசியலுக்கு படையே அடிப்படை. படை இன்றி நாடு இல்லை  நாடு இன்றி படை இல்லை என்பது குறிப்படத்தக்க ஒன்று. இன்று எல்லோராலும் வெறுக்கப்பட்ட போதிலும் இக்காலத்தில் படை இல்லாத நாடே  இவ்வுலகில் இல்லை.

படை வகை

    படையானது நில படை, கடற்படை என இரு வகைப்பட்டது. அக்காலத்தில் ஆகாய படை விமானப்படை இல்லைநிலப்படை,ஊர்தி படை பற்றி, கறி படை,பரிப்  படை, தேர்ப் படை, காலாட்படை என நான்கு வகை. காலட்படை கருவி பற்றிய, விற்படை , வாட்படை,வேற்படை என மூன்று வகைப்பட்டது.

    ராஜேந்திரன் காலத்தில் தேர்ப்படை இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் காணப்படவில்லை. வீரர்கள் போர்க்களத்தில் தேரைச் செலுத்தி சென்றதாகவும், தேர் படையை தாக்கியதாகவும், எந்தவித குறிப்பும் காணப்படவில்லை . மன்னர்கள் யானை மீது இருந்தும், குதிரை மீதும் போர் புரிந்தனர் என்று மட்டும்தான் கூறினாரே தவிர. தேர் பற்றிய குறிப்பு காணப்படவில்லை. எனவே, ராஜேந்திரன் காலத்தில் தேர்ப்படை வெளிப்படையாக கருதப்படவில்லை.

படை வகையும் பெயரும்

      பரிவார மெய்க்காப்பாளர், உடனிலை குதிரைச் சேவகர், என கல்வெட்டு செய்தி கூறுவதால். மன்னன் தனது தற்காப்பு பொருட்டு மெய்க்காப்பாளர், குதிரையொற்றன், குதிரை படையொற்றன் தன்னுடன் கொண்டிருந்தான் என்று அறியமுடிகிறது. அக்காலத்தில் போர்க்கருவிகள் எறிபடை, குத்துபடை, எய்ப்படை, வெட்டு படை, அடிப்படை, தடு படை என ஆறு வகையாக இருந்தது. வில்,அம்பு எய்ப்படையாகும். வேல், ஈட்டி, குந்தம் போன்றவை குத்துப்படையாகும். வாள், வெட்டு படையாகும். மழு,தண்டு முதலியன அடிப்படையாகும். கவசம் கேடயம் முதலிய தடுபடையாகும்.

    இது போன்ற ஒவ்வொரு படைக்கருவியிலும் நன்கு தெரிந்த தனித்தனி படைகளும் இருந்தன. இதனை பராந்தகன் கொங்க வாளர்,வலங்கைப் பழம்படைகளிலார், சிறுதனத்து வடுக காவலர், பண்டித சோழ தெரிந்த வில்லிகள் எனவும். மூலப்பரிவார விட்டேறு எனவும்,  கைக்கோளர் பெரும்படை எனவும், வாள் பெற்ற கைக்கோளர் எனவும், சாசனங்களில் குறிக்கப் பட்டிருப்பது அறியமுடிகிறது. போர் செய்ய மன்னன் நாள் பார்த்தாலும் அவன் படை வீரர்கள் குறிபார்த்தல் மரபு. நாளும் கோளும் பார்த்து போருக்குச் சென்றால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். படை தங்கியிருந்த இடம் கடகம் என்றும் பாசறை என்றும் அழைக்கப்படும்.

வேளைக்கார படை

     இப்படைகள் மட்டுமல்லாது ராஜேந்திரனிடம் வலங்கை வேளைக்காரர் படைகள் இருந்தது. வீரத்தின் இருப்பிடமாய் திகழ்ந்த இவர்கள் மன்னனுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தக்கவர்கள். இவர்கள் வேலைக்காரன் எனக் குறிக்கப்பட்டது கண் இமை காப்பது போல் இவர்கள் மன்னனை காப்பர்.  தீங்கு விளைவிக்கும் தன்மை அவர்கள் இன்னவாறு செய்வேன் இன்றைக்கே தருவேன் என வஞ்சினம் கூறி சொன்னவாறு செயல்படுவதை செய்து முடிக்கும் திறன் உடையவர்கள். வேலைக்கார எனக் குறிக்கப்பட்டனர் எனவேதான் திருவகுப்பி நாலுடையார் தம் அடியார்க்கு கேடு விளையாமல் முருகனை வேளைக்காரன் என்றது். முன்னின்று காத்து ஓம்பும் தமிழ்நாட்டு தெய்வமாம் முருகப்பெருமான் வேலைக்காரன் என்றும் இதனால் வேலைக்காரன் எத்தனை மேம்பட்டவர் என்பதை நம்பவில்லை.

தானைத் தலைவர்கள்

படைக்கு தலைவன் படைத்தலைவன் என்பான். அனைத்து படைக்கும் தலைமையேற்ப்பவன். இவன் காலத்தில் மாதண்ட நாயகன் என்றும், ஒவ்வொரு படைக்கும் தலைமை ஏற்பதை தண்டநாயகன் என்றும், சேனாதிபதி என்றும் அழைத்தனர். படைத்தலைவன், படைமுதலி, சேனை முதலி, பெரும் படைத் தலைவன், பெரும்படை முதலி, சேனாவரையன், சேனாதிராயன் என்றும் அழைக்கப்பட்டார்கள். ராஜேந்திரன் காலத்தில் விக்ரம சோழியவரையனாகிய அரையன் ராஜராஜன், கிருட்டிணன் ராமனான மும்முடிச் சோழ பிரம்மராயன், வல்லவரையன் வந்தியத்தேவன், ராஜேந்திர சோழ பல்லவராயன், ராஜராஜ மாராயன் போன்றோர்கள் தலைவர்களாக பணியாற்றினர்.

கடற்படை

கடல்கடந்த நாடுகளை வென்று அடிமைப்படுத்த விரும்பும் மன்னன், கடற்படை இன்றி எங்கும் செல்ல இயலாது. ஆதலால் தமிழ்நாட்டினர் பண்டைய காலத்தில் முதல் கடற்படை வைத்தது உறுதியாகிறது. கடல் ஆண்டு இவ்வுலகில் பரந்து விரிந்த பேரரசை நிறுவிய, ஆங்கிலேயர்கள் தங்களது கடற்படையின் வலிமையைக் கொண்டு. செயற்கரிய பல செயல்களைச் செய்தனர் என்று வரலாறு கூறுகிறது. இந்தியாவின் பரந்துள்ள பெரிய பேரரசை நிறுவிய, முகலாய பேரரசு விழுந்து பட காரணமாக இருந்தவற்றில் கடற்படை வலிமை இன்மையும் ஒன்றாகும், என்று அறியமுடிகிறது. கடற்படையின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்து சோழர்கள் கடற்படையை நிறுவி இருந்தனர் என்பது போற்றத்தக்க ஒன்று.
பண்டைய காலத்தில் ஆட்சிபுரிந்த கரிகால் சோழனும், கப்பல் படை கொண்டு ஈழத்தினை வென்று, சிங்களவரை கொண்டு வந்து காவிரிக்குக் கரை கட்டிய வீரவரலாறு நாம் மறக்க முடியாது. விஜயாலய சோழன் குடியமர்ந்த மன்னனாம் முதல் பராந்தக சோழன் மதுரையும், ஈழமும் வென்று மதுரை ஈழமும் கொண்ட கோப்பரகேசரி என்று பெயர் பெற்றான். சுந்தர சோழனும் ஈழத்தின் மீது போர் தொடுத்து, சோழர் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை உருவாக்கிய முதலாம் ராஜராஜ சோழனும், கப்பற்படை அனைத்தும் செப்பம் செய்து ஈழத் தீவினையும்,மாலத் தீவினையும் வென்று மங்கா புகழ் பெற்றான். இக்கடல் ஆண்ட காவலர்களின் கால்வழி வந்தவனான ராஜேந்திரன் அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திய திறத்தை அறிய முடிகிறது.

இவன் காலத்தில், சோழர் கடலாதிக்கம் இங்கிலாந்து நாட்டின் கடலாதிக்கத்துக்கு ஒப்பாக கூறப்படுகிறது. இவன் வெற்றி புகழ் மலாயா தீபகற்பத்தின் மண்ணும், கடார நாட்டின் கடல் அலைகளும், சுமத்ரா தீவின் சோலைகளும், ஈழத்தின் தடைகளும் பாடிக்கொண்டிருந்தனர். இவன் எண்ணிறந்த போர்க் கலங்களை கட்டுவித்து, போர்வீரர்களுக்கு கடற்போரில் பயிற்சி அளித்து கடல் கடந்து வெற்றிகள் பல பெற்ற இந்திய மன்னர்களில் தலைசிறந்த கடல் ஆண்ட காவலனாக போற்றப்படுகிறான். இவனது கடல் ஆதிக்கம்,சோழர்களின் கடல் வாணிகம் பெருகவும், பொருளாதார முன்னேற்றம் அடையவும் வழி வகுத்தது. இவ்வாறு, ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் பெற்ற வெற்றிகள் என்பது கூறிக் கொண்டே போகவேண்டும்.

சமயம்

சோழரின் ஆட்சி காலத்தில் சைவமும் வைணவமும் தழைத்தோங்கி இருந்தது. சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடும், அதற்கு ஆதரவு கொடுத்து வந்தனர். எம்மதமும் சம்மதம் என்ற பரந்த கொள்கையை பறைசாற்றிய சோழ மன்னர்கள் சமண சமயத்திற்கும், புத்த சமயத்திற்கும் வழிபாட்டு உரிமை அளித்தனர். இருப்பினும் பெளத்தமும், சமணமும் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்தது. இவைகள் செல்வாக்கை இழந்தது தவிர முழுமையாக அழிந்து விடவில்லை. ராஜேந்திரன் காலத்தில் சைவ சமயத்தில் பல பிரிவுகள் இருந்தது.

கல்வி

அக்காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மரத்தடியிலும், வீட்டு திண்ணையிலும், பள்ளிக்கூடம் நடைபெற்றது. ஊர் பொது நிலத்தில் இருந்து வரும் வருவாயைக் கொண்டு ஆசிரியர்களுக்கு விகாரங்கள், மடங்கள், கோவில்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. பிற்கால சோழர் காலத்தில் தமிழுடன் வடமொழியும் போதிக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலம் கற்றலும், ஆங்கிலத்தில் உரையாடுவதும், எழுதுவதும் பெருமை என எண்ணபட்டதுபோல். பண்டைய காலத்தில் வட மொழி கற்பது பெருமையாக எண்ணப்பட்டது. ஆதலால்தான், சோழ மன்னர்களில் பலர் வடமொழியிலும், தமிழிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அதில் முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் வடமொழியில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். இவர்கள் கல்வெட்டுகள் வடமொழியிலும், தமிழிலும் வெளியிடப்பட்டு இருப்பதால் இதனை அறிய முடிகிறது. சோழ வேந்தர்கள் கல்விக்கூடங்களுக்கு தாராளமாக மானியங்களை வழங்கினர். உயர்கல்வி, கோவில், மடப்பள்ளி ஆகிய இடங்களில் போதிக்கப்பட்டது. பெரிய அளவிலான நூல் நிலையங்களும் இங்கு அமைக்கப்பட்டது. மீமாம்ஸை வியாகரணம், வேதாந்தம், பாணினி வியாகரணம், பொதுத் உயர்கல்வியின் பல்துறைகள் பற்றிய அறிவார்ந்த பாடங்கள் போதிக்கப்பட்டது. கல்விக்கூடங்களில் சான்றோர்கள் பலர் ஆசிரியராக நியமிக்கப் பட்டனர். மாணாக்கர் அனைவரும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இலவச கல்வியும், உணவும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

எண்ணாயிரம்

முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் சதுர்வேதிமங்கலம் என்ற ஊரில் மறை நூல், (வேதம்) விடுதிகள் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது. இது விழுப்புரத்திற்கும், திண்டிவனத்திற்கு இடையே உள்ள ஊராகும். இவ்வூர் சபையார் மத்திய அரசின் அலுவலர் முன்னிலையில், கல்லூரி மாணவர்களுக்கு அரசன் ஆணைப்படி உண்டி வசதியும், ஆசிரியர்களுக்கு ஊதிய வசதியும், அளிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தது எண்ணாயிரம் கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டின் உதவியால் அக்காலத்தில் உயர்கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும், கற்பிக்கப்பட்ட பல துறைகளைப் பற்றியும், பேராசிரியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தின் மூலம், பல்வகை பாடங்கள் போதிக்கப்பட்ட பேராசிரியர் சிறப்பினை பற்றியும், மாணவர்களின் பராமரிப்புச் செலவுகள் பற்றியும் தெளிவாக அறிய முடிகிறது.

பொருளாதார நிலை

சோழர்களின் அரசியல் நிலை போன்று பொருளாதார நிலையும் போற்றுதற்கு உரிய முறையில் அமைந்திருந்தது. சோழப் பெருமன்னர்கள் நாட்டின் பொருளாதாரத்தை பெருக்குவதில் பெரும் முயற்சி கைக்கொண்டனர். செழுமை மிக்க சோழநாட்டில் உழவர் பெருங்குடி மக்கள் உணவின் உற்பத்தியைப் பெருக்கினார். உணவில் பஞ்சத்தைப் போக்கினர். வணிகர்கள் திறம்பட வணிகம் புரிந்தனர். தொழிலாளர்கள் பெயரளவில் பொருள்களை உற்பத்தி செய்தனர். நாட்டின் பொருளாதார நிலை உயர்ந்து, மக்கள் அனைவரும் நன்கு செழித்து வளர்ந்தனர்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதார வளர்ச்சியே முதன்மையானது, இதனை சோழ மன்னர்கள் நன்கு அறிந்து அவ்வகையில் பொருளாதார நிலையை மென்மேலும் உயர்த்தினர். ராஜேந்திர சோழன் சோழ நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த பெருமளவில் பாடுபட்டான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

நாணயங்கள்

ஒரு நாட்டின் வாணிக வளர்ச்சிக்கு நாணயங்கள் முக்கியமான ஒன்றாகும். சோழ மன்னர் காலத்தில் அழகிய நாணயங்கள் வெளியிடப்பட்டது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் செம்பாலும், வெள்ளியாலும், பொன்னாலும் செய்யப்பட்ட நாணயங்கள் வழக்கத்தில் இருந்தது என்பது கல்வெட்டுச் செய்திகளும், இதுவரை கிடைத்துள்ள நாணயங்கள் வழியும் அறியமுடிகிறது. சோழ மன்னர்கள் தங்கள் நாணயங்களில் தங்களது இயற்பெயரையோ, சிறப்பு பெயரையோ வைத்திருந்தனர். இதனைக் கொண்டு எந்த மன்னன் காலத்தில் வெளியிடப் பட்டது என்பதை அறியமுடிகிறது.

சோழர்கால நாணயங்கள் பற்றி அறிந்துகொள்ள டாக்டர் கன்னிங்காம், சர் வால்டர் எலியட், டாக்டர் ஹீல்டஷ் போன்ற அறிஞர் பெருமக்களின் நூல்கள் பெரிதும் பயன்படுகிறது. இந்திய நாணயயியல் கழகம் வெளியிட்டுவரும் கட்டுரைகளும், பண்டைய நாணயங்கள் பற்றி விரிவான செய்திகளை எடுத்துக் கூறுகிறது.

அஃக சாலை

ராஜேந்திரன் காலத்தில் செம்பினாலும், பொன்னினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தது. செப்புக்காசுகள் நிறைந்த அளவில் புழக்கத்தில் இருந்தன. ஈழக்காசு எனப்பட்ட காசுகளும் அக்காலத்தில் இருந்தது. இவை மாற்றுக் குறையாத பொற்காசுகளாகும்.

காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றாது என் அதிகாரிகளால் ஆராயப்பட்ட பொன்னும் அப்பொழுது வழக்கத்திலிருந்தது. அப்போது தூய வெள்ளி காசு துளையிடப்பட்டதாக தெரிகிறது. அக்கால சோழ மன்னர் நாண யங்கள் அனைத்தும் ஒரே எடை உள்ளவனாக செய்யப்பட்டது, என்று பண்டாரக கன்னிங்காம் தமது நூலில் குறித்துள்ளார். சோழர் காலத்தைச் செப்பு நாணயங்கள் அதிக அளவிலும், பொன், வெள்ளி நாணயங்கள் குறைந்த அளவிலும் இன்று காண முடிகிறது. சோழ நாணயங்களில் சோழர்களின் முத்திரையான புலியின் அருகில் சேர பாண்டிய சின்னங்களான வில்லும், மீனும் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றைச் சுற்றிலும் வெளியிட்ட மன்னனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழன் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்த தங்க நாணயமும் கண்டெடுக்கப்பட்டது. இது இராஜேந்திரன் காலத்தியது என்பது சிறிதும் ஐய்யமில்லை. முதலாம் ராஜேந்திரன் ஆட்சி காலத்தில் ராஜேந்திரன் மாடை ராஜேந்திர சோழ காசு என்ற பெயர்களில் நாணயங்கள் வெளியிடப்பட்டது, கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்திற்கு முன்பே மதுராந்தக தேவன் மாடை என்ற பெயரைக் கொண்டு ஒரு நாணயமும் சோழநாட்டில் வழக்கில் இருந்ததாக அறிய முடிகிறது.

இது உத்தம சோழன் என்ற பெயர் பெறும் மதுராந்தக சோழ மன்னன் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட பொற்காசு என்பதை அறியமுடிகிறது. மன்னன் தனது பெயரால் காசு, மாடை என்னும் இரு வகையான நாணயங்களை வெளியிட்டார் என்பதனையும், இவ்விரு வகையான நாணயங்களும் வழக்கத்திலிருந்தது அறியமுடிகிறது. முதலாம் குலோத்துங்க சோழனுக்கு முன்பு ஆட்சி புரிந்த சோழ மன்னர்கள் அனைவரும், இவ்விரு வகையான நாணயங்கள் புழக்கத்தில் கொண்டு இருந்தனர் என்பது அறிஞர்கள் கருத்தாக காணப்படுகிறது.

வணிகமும் கைத்தொழிலும்

      ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு தேவையான பொருட்களை வினியோகம் செய்வோர் வணிகப் பெருமக்கள் ஆவர். இவர்கள் ஓரிடத்தில் மிகுதியாகக் கிடைக்கும் பொருட்களை நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்று லாபம் பெறுவர். வணிகர் ஒரு நாட்டின் பொருளாதார நிலையினை முன்னேற்றும் பணியில் நல்ல தொண்டு செய்வார். நகரங்களிலும், கிராமங்களிலும் வாணிகம் புரிந்து வாழ்ந்து வந்த வணிகர்கள் பலர் கோவில்களுக்கும், ஏரி, குளம், கிணறு வெட்டுவதற்கு பொருளும் நிலமும் அளித்து மக்களுக்கு தொண்டு செய்ததாக, கல்வெட்டு வழி அறியமுடிகிறது.  வாணிகர்கள் தனித்தும், குழுக்களாக சேர்ந்தும் வாணிகம் செய்து வந்தனர். இவர்கள் மன்னரால் பெரிதும் மதிக்கப்பட்டனர்

      வாணிகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிகம் என இரு வகைப்பட்டதுஉள்நாட்டு வாணிகத்திற்கு வண்டிகளும், பொதிமாடுகளும், சிறுவழிகளும்,பெருவழிகளும் பயன்பட்டன.வெளிநாட்டு வாணிகம் பெரும்பாலும் கடல் கடந்து நடைபெற்றதால் கலங்கள் தேவைப்பட்டது. நம் தமிழர்கள் பண்டுதொட்டு கடல்கடந்த வாணிபத்தில் ஈடுபட்டு இருந்தனர், என்பதை இலக்கிய சான்று வழி அறியமுடிகிறது. 

  • பொன்சொரி கதவு தாளிற்றிறந்து பொன் யவனப் பேழை 
  • அருமணி வயிரம் வேய்ந்த அருங்கலப் பேழை ஐநூற்று
  • எரிமணிசெம்பொன்ஆர்ந்த விராயிரம் யவனப் பேழை 
  • மணியியல் யவனச் செப்பின் மங்கலம் துகிலை வாங்கி

போன்ற இலக்கிய குறிப்புகள்,  தமிழகம் யவனநாட்டுடன் கொண்டிருந்த வாணிகத்தை அறியமுடிகிறது. சோழர் ஆட்சிக்காலத்தில் நிர்வாகம் திறம்பட விளங்கியமையால் அமைதியான ஆட்சி நிலவியது.

நாடு அமைதியாக இருந்தமையால் கைத்தொழில் பொருட்களின் உற்பத்தியும் பெருகியது. சோழ நாட்டுக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்நாட்டு வாணிகம் செம்மையாக நடைபெற்றது. தனிப்பட்ட வணிகர்களும், வணிகர் சங்கங்களும் கடல் கடந்து வாணிகத்திலும் ஈடுபட்டிருந்ததாக கல்வெட்டு வழி அறியமுடிகிறது. சீனம், கிழக்கிந்திய தீவுகள், அராபியா ஆகிய நாடுகள் சோழ நாட்டுடன் வாணிபத் தொடர்பு கொண்டு இருந்தது. சோணாட்டு வணிகர்கள் மேற்கே லட்சத்தீவு, அராபியா, பாரசீகம் ஆகிய நாடுகளுடன் தெற்கே ஈழம்மாளவத்தீவுகள், போன்றவற்றுடனும், கிழக்கில், பர்மா, ஜாவா, சுமித்ரா, சீனா போன்ற நாடுகளிலும் கடல் வாணிகம் செய்து வந்தது. ராஜேந்திரன் காலத்தில் சீனா உடனான தொடர்பு மிக சிறந்ததாக இருந்ததை அறிய முடிகிறது.

ராஜேந்திரன் காலத்திய சமுதாய நிலை

ராஜேந்திரன் காலத்தில் சமுதாயத்தில் பல்வேறு வகைப்பட்ட நிலைகள் காணப்பட்டது. சமுதாய வாழ்வின் அடிப்படையாக கொண்டு நாட்டின் பெருமையும் சிறுமையும் கணிக்கப்பட்டது. அக்காலத்தில் மக்களிடையே பல பிரிவுகள் இருந்தது. ஒவ்வொரு பிரிவும் அதற்கென தனி வாழ்வு முறைகளையும் கொண்டு வந்தது. அப்பிரிவுகளில் அந்தணர், வாணிகர், உழவர், தொழிலாளர், வீரர் போன்றோர் உட்படுவர். சோழர் காலத்திய சமுதாயம் நெகிழ்ச்சி உடையதாக காணப்பட்டது.

சாதி சமய அடிப்படையில் அமைந்த குழுக்கள் செல்வாக்குடன் விளங்கியது. தொழிலை அடிப்படையாகக் கொண்ட சாதி பாகுபாட்டு முறை வாழையடி வாழையாக நாட்டில் நிலவி வந்தது. அவர்கள் தங்களின் சாதி உரிமைகளைப் பாதுகாப்பதில் முனைந்து இருந்தனர். ஆனால், சில பிரிவினர் தொடர்ந்து உயர்நிலையை பெற்றனர். மன்னனின் ஆதரவைப் பெற்றனர். சில பிரிவினர் என்றென்றும் தாழ்ந்த நிலையிலேயே தாழ்த்தப்பட்டனர். இதுபோன்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் சோழர் கால சமுதாயம் எனும் கட்டிடத்தை நாம் பார்க்க முடிகிறது.

நீதி

ராஜேந்திரன்  அறமுறை பிறழாது நாட்டை ஆண்டதால் நீதி நிலைநாட்டப் பட்டது. குற்றம் புரிந்தவர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாகவும், தற்செயலாகவும் நடந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படாமல், நந்தா விளக்கு இடுதல் போன்ற எளிமையான தண்டனை அளிக்கப்பட்டது. சில குற்றங்கள் புரிந்தவரை அவர்களது குற்றத்திற்கு ஏற்ற முறையில், கழுதை மீது ஏற்றுதல், நாடுகடத்தல், உரிமை பொருட்களை கவர்தல், கழுவாய் செய்து சேர்த்தல் போன்ற தண்டனைகள் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி மன்ற உறுப்பினரே நீதி விசாரணைகளையும் நடத்தினர். இவர்கள் சம்வத்சரவாரியர்  என அழைக்கப்பட்டனர். 

நீதித்துறையில்  மன்னன் தீர்ப்பே இறுதியானது. குற்றம் புரிந்தவர்கள் குற்ற புத்தகத்தில் பதிவு செய்யப்படுவர்.  இவர்கள் ஊராட்சி தேர்தலுக்கு போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள். குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினர் நிர்வாகத்தினை கவனிப்பார். இவர்கள் பல வாரியங்களாக பிரிந்து வெவ்வேறு துறையினை கவனிப்பார். சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவோர் சில குறிப்பிட்ட தகுதிகள் படைத்தவரா இருக்க வேண்டும் என்பதும், எந்த காரியநிறைவேற்று கழகத்திலாவது உறுப்பினராக இருந்து கணக்கு காட்டாது இருந்தோறும், எத்தகைய லஞ்சமும்பொற்றோரும் தகுதியற்றவராக கருதப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மருத்துவ சாலை, ஆதுல சாலை

பண்டைக்காலம் முதலே மருத்துவர் கலை சிறப்பு பெற்றிருந்தது. ஆயக்கலை 64இல் மருத்துவக்கலை ஒன்றாகும். மனிதனுக்கு நல்ல வாழ்விற்கும் மருத்துவம் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. தமிழ்நாட்டு இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் மருத்துவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. மருத்துவர், அறவோன், மருத்தன், வைத்தியன், சரியை கிரியை செய்வான் எனவும் அழைக்கப்பட்டனர். நற்றிணை என்னும் நூல் மருத்துவனை அறவோன் என்று கூறுகிறது. சங்க காலத்திலேயே மருத்துவர்கள் பலர் சிறந்து இருந்தனர் என்பதை மருத்துவர் தாமோதரனார்”, மருத்துவர் நல்லச்சுதனார் ஆகிய சான்றோர்கள் சங்க காலத்தில் வாழ்ந்த அறியமுடிகிறது.

     சோழர் காலத்தில் மருத்துவமனைகள் இருந்ததாக கல்வெட்டுகளும் இலக்கியங்களும் அறியமுடிகிறது.மருத்துவமனைகளில் இருவகையான மருத்துவர்கள் பணியாற்றினர். ஒருவர் கை நாடி பார்க்கும் பொதுப் பிரிவு மருத்துவர் என்றும், மற்றவர் அறுவை சிகிச்சை மருத்துவர் என்றும் இவர்களை சல்லியக கிரியை பண்ணுவான் என கல்வெட்டு கூறுகிறது. இவர்களுக்கு பணி மகளிர் துணைப்புரிந்தனர். சோழர்காலக் கல்வெட்டுக்கள் சுவர்ணன்அரையன் சந்திரசேகரன், கோதண்டராம அசுவத்தாமபட்டன், மங்களாபதி ராஜன் சீராளன் போன்ற மருத்துவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது.           

    அக்காலத்தில் மருத்துவ கல்லூரிகள் நடைபெற்றதாகவும் கல்வெட்டு சான்று கூறுகிறது. இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் நாடெங்கும் மருத்துவமனைகள் நிறுவப்பட்டு இருந்தது என்பதை கல்வெட்டுவழி அறியமுடிகிறது. ராஜேந்திரனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில், இவனது காலத்தில் பராந்தகன் குந்தவையால் நிறுவப்பட்ட, மருத்துவ சாலை ஒன்று தஞ்சையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் நிர்வாகத்திற்காக, ராஜ நாராயண சதுர்வேதிமங்கலம் பெருங்குறிஞ்சி சபையினர் 9 மாநிலத்தினை  70 காசுகளுக்கு விற்று, இறையிலிட்டு தந்தனர். இம்மருத்துவமனையில்  சரவணன் அரையன் மதுராந்தகன்  என்பவன் மருத்துவ பணி புரிந்தான் என்று செய்தி குறிப்பிடத்தக்க ஒன்று. 

    கோவில் வருமானத்தின் ஒரு பகுதி மருத்துவ சாலை பராமரிப்புக்காக செலவிடப்பட்டது என்பது கல்வெட்டு வழி அறியப்படுகிறது. பண்டாரவாடையில்  காணப்படும் ராஜேந்திரன் காலத்திய கல்வெட்டு ஒன்று. தஞ்சையின் சுந்தர சோழ விண்ணகர் ஆதுரசாலை மக்களின் பிணியை தீர்த்ததாகவும், சவர்ணன் அரையன்  மதுராந்தகனுக்கு வைத்திய போகமாக நிலம் அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. திருவாமாத்தூரூரில் உள்ள ராஜேந்திரனின் 18 ஆம் ஆண்டு, தொண்ணூற்று மூன்றாம் நாளின் கல்வெட்டு ஒன்று, அவரின் மருத்துவத்துறைக்கு நில தானம் அளிக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

.     இதன் மூலம் அக்காலத்தில் மக்களுக்கு மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டது அறியமுடிகிறது. ராஜேந்திரன் காலத்தில் மக்கள் நிலை சங்க காலத்தைப் போன்று நல்ல நிலையில் இருந்தது என்பதை  காண முடிகிறது. பார்ப்பனர், வணிகர், அதிகாரிகள், அமைச்சர் போன்றோர் உயர்நிலை பெற்றனர் என்பதும், வேளாண்மைத் தொழில் தலையாயதாக போற்றப்பட்ட போதிலும் மற்ற பலவகை தொழில்களும் முன்னேறின என்பதும், வாணிகம்,உழவு சிறந்து இருந்தது. இவ்வாறு இருந்ததால் மக்கள் எல்லா வசதிகளும் பெற்று வாழ்ந்ததுடன் கலை ஆர்வம் கொண்டதும் புலனாகிறது. 

    மன்னன் மக்களை நல்ல முறையில் வழிநடத்தினான். நாட்டில் முடியாட்சி நிலவிய போதிலும் அவர்கள் உள்ளூர் பெருமக்களே நிர்வகிக்கப்பட்டு, அரசாங்க அதிகாரிகளாலும் மேல் பார்வை செய்யப்பட்டது. மக்களிடையே பொருளாதார அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும், ஏற்றத்தாழ்வு காணப்பட்டன என்பதையும்,  தமிழ் மொழியுடன் வடமொழியும் மன்னனால் ஆதரிக்க பட்டன.  கோயில் சமுதாயத்தின் மன்றமாக, பொழுது போக்கிற்கிடமாக முக்கியமான இடத்தை பெற்றதோடு கோயிலைச் சுற்றிய சமுதாயம் இன்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அறியப்படுகிறது.     ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு மூலம் இவன்  ஆட்சிக்காலத்தில் மக்கள் நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. 

  ராஜேந்திரனின் வெற்றிப் பயணம் 

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி, கடார நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி பெரும் வெற்றி பெற்று தனது கடல்கடந்த பேரரசை விரிவுபடுத்திய ராஜேந்திரன், இந்திய வரலாற்றிலேயே எவரும் செய்யாத சிறப்பான செயல் வீரனாவார். இந்திய வரலாற்றிலேயே கடல்கடந்த பேரரசை நிறுத்துவதில் நாட்டம் கொண்ட ராஜேந்திரன், தலைசிறந்த கடலாண்ட காவலன் என்பது நாம் அறிந்த ஒன்றாகும். காவிரி நாடனான இவன், கங்கை நாடனான மகிபாலனையும், சாளுக்கிய சிங்கமாம் சய சிங்கனையும், சிங்கள வேந்தனாம் ஐந்தாம் மகிந்தனையும், கடாரத்து காவலனாம் விசயோத்துங்க பெருமானையும், வென்றடக்கி, வெற்றியின் பிறப்பிடமாய் திகழ்ந்து. சோழ ஏகாதிபத்தியத்தை பாரெங்கும் பரப்பிய பெருமை உடையவன் என்பது போற்றத் தகுந்த ஒன்றாகும். 

     வட இந்திய மன்னர்கள் தென்னாட்டில் வெற்றி திருவுலா நிகழ்த்துவதே வழக்கம் என்ற மரபை மாற்றி, தமிழ்நாட்டானும் வடநாட்டில் வெற்றித் திருவுலா நடத்த முடியும் என்ற பெருமையை செயல்படுத்திக் காட்டிய பெரும் வீரன் ராஜேந்திரன். தமிழரின் மானம் காத்த மாவீரன். மலாயா  நாட்டைச் சுற்றிலும் உள்ள நாடுகளை வென்று அங்கு சோழர் புலிக்கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டு, தமிழர் தன் புகழை நிலைநாட்டி விட்டு வந்த இவன். தன் தந்தையினும் சிறந்த வெற்றியாளன் என்பதும், ஏகாதிபத்திய வாதி என்பதும் நாடறிந்த உண்மையாயிற்று. தனது கடல்கடந்த வெற்றிகளின் மூலம் புகழ் கடலின் கரை கண்ட காவலனாம், ராஜேந்திரன் தனது வலிமையினால் இங்கிலாந்து நாட்டை வென்று கடல் ஆதிக்கத்தில் முதன்மை பெற்று விளங்கினார் என்பது போற்றத் தகுந்த ஒன்றாகும். 

    இவனது ஏகாதிபத்தியச் சிறப்பினை கேள்விப் பட்ட மாத்திரத்திலேயே, காம்போஜ நாட்டு காவலனாம் சூரியவர்மன், ராஜேந்திரனது நட்பை நாடினான்.  இவன் சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பி சீனவுடன் நட்புறவு கொண்டிருந்தார்இவன் வாளாண்மையினாலும், தோளாண்மையினாலும் மட்டுமன்று அன்பினாலும் கடல் கடந்த நாடுகளுடன் உறவு கொண்டான். சோழப் பேரரசின் புகழையும், பெருமையையும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக பெருகிக் கொண்டே போனான். மாபெரும் வீரனான இவன் அமைதியைப் பேணி வந்தான். ராஜேந்திரன் நாட்டு மக்கள் நலன் கருதி நாடாண்ட நல்லாட்சியாளனாகவும், தமிழக வரலாற்றில் சிறப்பிக்கப்படுகிறார். வாழையடி வாழை என வழிவழி நிலவி வந்த சோழர் ஆட்சி முறையினை பொன்னே போல் போற்றிஏற்றம் மிக்க பல மாற்றங்களும் செய்த நல்லாட்சியாளன், நம் முதலாம் ராஜேந்திரன்.

        கங்கை கொண்ட வெற்றி முதல் கடாரம் கொண்ட வெற்றி வரை இவனது வெற்றி உச்சத்தை எட்டுகிறது. வீரனாகவும், ஆட்சியாளராகவும் சிறந்து விளங்கியவன் பல கலைகளையும் பேணிக்காக்கும் கலைக் காவலனாகவும் புகழ் பெற்றான். கங்கைகொண்ட சோழபுரத்தில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் கங்கைகொண்ட சோழேச்சரம் அதில் இருக்கும் சிற்பங்களும் இவனது  கலையார்வத்தை பறைசாற்றுகிறது. ராஜேந்திரன் ஆட்சிக்காலம் சிற்பக் கலையின் உச்ச நிலையை காட்டுகிறது. கட்டிடக்கலை, உலோக வார்ப்புக்கலை,இசைக்கலை போன்ற கலைகளை பேணி காப்பவன் இவன் என அறிஞர்களால் போற்றப்படுகிறான். பொன்னிக் கரை கண்ட  கரிகால் பெருவளத்தானின் வழியான இவனும் நாட்டின் வளம் பெற உணவு இல்லாமை போக்க எண்ணிறந்த நீர்ப்பாசனத் திட்டங்களை தீட்டினார்.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் நீல நெடுங்கடல் போல கண்டோர் வியக்கும் வண்ணம் அமைக்கப் பட்ட, சோழ கங்கம் என்ற பெரிய ஏரி அற்புத படைப்பாகும். இந்தியாவிலேயே இதுவரை இதை போன்ற பிரம்மாண்டமான ஏரி வெட்டவில்லை என்பதால், இவன் மக்களின் நல்வாழ்வில் எத்துணை நாட்டம் கொண்டார் என்பதும், வறுமையும், வெறுமையும் நாட்டைவிட்டு ஓட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் என்பது அறிய முடிகிறது.  இவன் காலத்தில் வளமையும், செழுமையும் சிறந்து விளங்கியது. உயரிய கல்வி வளர்ச்சி, பார்ப்பனர்களுக்கும் திருக்கோவில்களுக்கும் வரையாது வழங்கிய வள்ளல் தன்மை, சமயப் பொறை, திருக்கோவில் திருப்பணிகள், மருத்துவம், நீதி, கிராம சபைகள், சமூகநிலை, என பலவாறு சோழராஜ்ஜியத்தை ஒரு கட்டமைப்புக்குள் வழிநடத்திய, ராஜேந்திரனின் செயல்பாடுகள்களை கூறிக் கொண்டே போகலாம்

Join us telegram: www.t.me/teamheritager

(முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1 படிக்க)

 

Leave a Reply