நடுவீட்டுத்தாலி எனும் தமிழர் திருமண வழக்கம்

வீட்டில் தாலி கட்டுதல் திருமணமாகுமா?

வீட்டில் தாலி கட்டிக்கொள்ளுதல் திருமணமாகுமா?

கதாநாயகன், கதாநாயகி மட்டும் வீட்டில் வைத்தே தாலிக்கட்டி, திருமணத்தை முடிப்பதை பல திரைப்படங்களில் கண்டதுண்டு.

இவ்வாறு பொது இடத்திலோ, மண்டபத்திலோ நடக்காமல் சிலரை மட்டும் அழைத்தோ அல்லது, யாரையுமே அழைக்காமலோ, வீட்டிலேயே தாலிக்கட்டும் திருமண வழக்கம் தமிழகப் பண்பாட்டில் இருந்துள்ளது. அதனை “நடுவீட்டுத் தாலி” என்பர். இதனை ஆடம்பரமாக நடக்காமல் எளிமையாக நடக்கும் திருமணம் எனலாம், இரகசிய திருமணம் எனவும் கொள்ளலாம்.

குறிப்பாக, விதவை மறுமணத்தில் இவ்வாறு பலரை அழைக்காமல், வீட்டில் உள்ள மற்றொரு மணமான பெண், தாலி கட்டுவர், மாப்பிள்ளையோ வீட்டின் உள்ளோ, வீட்டின் அருகிலோ இருப்பர்.

தமிழகத்தில் சில சமூகத்தினரிடையே “நடுவீட்டுத்தாலி” என்ற இவ்வழக்கம் இருந்துள்ளது.

Buy Books: www.heritager.in