காஞ்சியில் கைத்தறி தொழிலை வளர்த்த பாண்டியன் கல்வெட்டு

காஞ்சிபுரம் என்றாலே பட்டுத்தறிக்கு பெயர்பெற்றது. காஞ்சி நகரம் மட்டுமல்ல இம்மாவட்டம் முழுவதும் நெசவுதொழில்தான் முதன்மையான தொழிலாக இருந்துள்ளதற்கான தடயம் கல்வெட்டு வாயிலாகக் கிடைத்துள்ளது. 

தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற கிராமம். தற்பொழுது முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் இவ்வூர் மிக பழமையானது.

அது மட்டுமல்ல நெசவுதான் முக்கியமான தொழில். தற்போது இங்கு நெசவுதொழில் அதிகம் இல்லை. இங்குள்ள பழமையான பல வீடுகள் தறி அமைப்பதற்கான அமைப்புடன் உள்ளதே இதற்கு ஆதாரம்.

இதற்கான முக்கிய ஆதாரம் இந்த சிற்றூரில் உள்ள மூன்று பழமையான சிவன் கோவில்களில் ஒன்றான தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் விபரம் பொறிக்கப்பட்டுள்ளது.

[mc4wp_form id=”1834″]

கல்வெட்டு வரிகள்:

(கி.பி. 14ஆம் நூற்றாண்டு)

“கோமாற பன்மர் திரிபுவனச் சக்கரவத்திகள்
ஸ்ரீவீரபாண்டிய தேவர்க்கு யாண்டு 14வது
படப்பையான தழுவக் குழைந்த நல்லூரான
சக்கரவத்தி நல்லூர் குடி ஓடிப் போகையில்
இவ்வூர் குடி ஏற்றுகை ……
ன இருந்த கைக்கோளற்க்கு மாதம் ஒன்றுக்குத்
தறி ஒன்றுக்குக் காலே அரைக் காற்பணங்
கொள்ளவும் புதுசாக ஏற்றுந்தறிக்கு
மாதம் ஒன்றுக்குத் தறி ஒன்றுக்குக் காற்பணம்
ஓராட்டை நான்று … கொள்ளவும் இப்படிக்குக்
கல்லு வெட்டிநாட்டினேன் நாயினார் ஆரியச்
சக்கரவத்திகள் வாசல் (மு)த்தணனேன்
இப்படி ஒழியக் கொண்டாருண்டாகில் தன்தாய்க்கு
த் தானே மிணாளன்”

அதன் விபரம்:

படப்பை என்ற இந்த ஊரானது நெசவுதொழில் மிகுந்த பகுதியாக இருந்தது. அப்படி இருக்க 14 ஆம் நூற்றாண்டில் கடும் பஞ்சம் காரணமாக மக்கள் இவ்வூரை விட்டு வெளியேறினர். இதனை கேள்விபட்ட அந்த காலகட்டத்தில் காஞ்சியை ஆட்சி புரிந்த மன்னன் வீரபாண்டியன் அந்த மக்களை மீண்டும் குடி அமர்த்தி நெசவி தறி ஒன்றுக்கு பணம் கொடுத்து குடி அமர்த்தினான் என்பது கல்வெட்டு குறிப்பு.

இந்த கல்வெட்டை ஓய்வுபெற்ற தொல்லியல்துறை அலுவலர் ராமச்சந்திரன் ஐயா உறுதி செய்துள்ளார்கள்.

குறிப்பு : நாங்கள் ஆய்வுசெய்தவரை இந்த கல்வெட்டு பற்றி இதுவரை பதிவு செய்யப்படவில்லையென்றே தோன்றுகிறது. பதிவிட்டிருந்தால் தெரிவியுங்கள்.

 

சுகுமார்பூமாலை

[mc4wp_form id=”1834″]

Leave a Reply