கண்ணவர் என்றால் என்ன?

வரலாற்று அடிப்படையில் நேரடி காலச்சன்றுகள் பல அளிக்கத் தவறினாலும் அக்காலத்தின் பொது நிலையை காண உதவும் கண்ணாகத் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன.
 
கண், எனும்போது ஒரு செய்தி நினைவுக்கு வருகின்றது, தொகைப்பாடல்கள் (சங்க இலக்கியம்) முழுவதும் அரசர்கள் பற்றியும், மக்களைப்பற்றியும் கூற விழையும் போது நல்லாட்சி தரும் காரியத்தில் அரசனுக்கு உறுதுணையாக இருந்து கடமையாற்றும் அமைச்சர்களைக் “கண்ணவர்” அதாவது, “கடனறி காரியக் கண்ணவர்” என பரிபாடல் குறிப்பிடுகிறது. இதற்கு, அரசருக்குக் கண் போன்று விளங்கி, நாட்டை ஆள உதவுவதாகப் பொருள்.
 
“மட மயில் ஓரும் மனையவரோடும்,
கடன் அறி காரியக் கண்ணவரோடும்–நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின்– பழ மதிச்
சூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,” எனும் பாடல் விளக்குகிறது. பரி 19
 
அதாவது, மன்னனும், மயில்போன்ற அவனது அரசிகளும் அதனுடன் ஆட்சிப் பொறுப்பில் அவனுக்குக் கண்ணாக விளக்கும் அமைச்சர்களும் திருப்பரங்குன்று மலைமீது வலம் வந்ததாக குறிப்பிடுறது. 

Leave a Reply