தோல்விகளுக்குத் தயார்படுத்துங்கள்

ஒருமுறை என் அப்பா நான் தோற்றபோது என்னை நடத்தியவிதம் மிக நேர்த்தியாக இருந்தது நியாபகம் உள்ளது. நிறைய பேச்சுப்போட்டிக்குச் சென்று இருந்தாலும்இ வெற்றி தோல்விகள் ஒவ்வொரு முறையும் பல்வேறு விதமான உணர்வுகளை நமக்குத் தருகிறது. வெற்றிகள் அதிகம் கொண்டாடப்பட்டதில்லைஇ ஆனால் தோல்வி? அப்படியும் ஒரு வழி உண்டென்பதுஇ அன்று எனக்குப் புரிந்தது.

போட்டி முடிந்து வீடு திரும்பிய கணம்முதல் யாரோடும் பேசவில்லைஇ அமைதியாய் அமர்ந்து எங்கு சரியாக பேசவில்லை என்று எண்ணியதை விடஇ இந்தத் தோல்வி என்னை என்ன செய்யப்போகிறது என்ற பயம் அதிகமாய் இருந்தது. இரவு அப்பா வந்துஇ போட்டியின் முடிவுகள் என்ன? என்று ஒரு சொல் கேட்ட நொடிஇ அத்துணை நேரம் அடக்கிய உணர்வுகள் உடைந்து விசும்பலாய் ஆரம்பித்து அழுகையாய் நிறைந்தது! பயந்தேவிட்டது வீடு! சரிஇ இப்போ இல்லனா அடுத்த முறை வாங்கலாம் … இல்லை நான் நிறுத்தவே இல்லை !

வெளியே போகலாம் என்று சொல்லிஇ கிளப்பிக்கொண்டுபோய் ஒரு உணவகத்தில் அமர்ந்து ஏதும் பேசாமல் உண்டு முடித்தோம். என் அப்பா நிறைய படித்தவரெல்லாம் இல்லை இ ஆனாலும் அப்படி ஒரு புரிதல் இன்று நினைத்தாலும் அழகானது! மீண்டும் அப்பா விட்ட இடத்திற்கே வந்தார்இ எவ்ளோ போட்டிகள் வெற்றி கிடைச்சிருக்குஇ இன்னிக்கு வரலைனா என்ன இப்போ? அடுத்தமுறைஇ அதற்கு அடுத்தமுறை என்று நிறைய இருக்கு.இ இதுக்கு யாராச்சும் அழுவார்களா ? என்று சொல்லி முடித்தார்.

நிறைய தேவையாய் இருந்தது அந்தப் பேச்சு! வெற்றியையும் தோல்வியையும் அவர் பார்த்தவிதம்இ எனக்கு அறிமுகம் செய்தவிதம் எல்லாமே எப்போதும் அந்த புரிதலின் வளர்ச்சி என்றுதான் நான் நினைக்கிறன்.

இன்றைய காலகட்டத்தில்இ பிள்ளைகளை வெற்றிகளுக்கு மட்டுமே தயார்படுத்தும் நிலை உள்ளது. சிறு தோல்வியையோஇ மறுப்பையோ பிள்ளைகள் ஏற்க மறுக்கின்றனர் அல்லது அதற்கான தளம் அவர்களுக்குத் தரப்படவில்லை. வெற்றி மட்டுமே வாழ்க்கை முழுதும் கிடைக்கப்போவதில்லை. எண்ணியது கிடைக்க போராட்டம் வேண்டும்இ ஆனால் அதன் வெற்றி மட்டுமே ஒரு முழுமையான நிறைவைத் தரும் என்ற எண்ணம் நிறைந்து காணப்படுகின்றது இன்று. பெற்றோர்இ சமூகம்இ பள்ளிஇ கல்லூரி என்று எல்லாமும் இதற்குக் காரணம். முதல் மதிப்பெண் பெற்ற பிள்ளை புகழப்படுவதும்இ கடைசி மதிப்பெண் பெற்ற பிள்ளை திட்டு வாங்கிஇ இகழப்பட்டுஇ அவமானப்படுவதும் பிள்ளைகளின் மனத்தில் முதல் என்ற வார்த்தைக்கான புரிதலை மாற்றுகிறதுஇ

முதலில் சாப்பிடுபவன்இ முதலில் விளையாடி முடிப்பவன்இ படித்து முடிப்பவன்இ எழுதி முடிப்பவன்இ வேலைகளைச் செய்து முடிப்பவன்இ என்று எல்லா இடத்திலும் ”முதல்” என்ற ஒற்றை வார்த்தையின் பின்னால் ஓடத் தூண்டுகிறது. பெற்றோருக்கு இந்தப் புரிதல் இல்லாது போனால்இ பிள்ளைகள் அந்த மனநிலைக்குத் தள்ளப்படுவது உறுதி.

போட்டி என்பதெல்லாம் சரிஇ ஆனால் அது அடுத்த தலைமுறையை அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டும். ஆனால்இ மதிப்பெண்இ பரிசு என்ற பெயரில் அவர்களை அவர்கள் வளர்த்துக் கொள்வதற்குப் பதில்இ வீழ்ந்த இடத்தில் நின்று அதற்காக வருந்தி இ அதிலிருந்து மீள முடியாமல் வெறுத்துப்போய் நிற்கிறார்கள்.

சிறுசிறு மறுப்புகளுக்கும்இ விளையாட்டில் தோல்வியையும் இ வாழ்க்கையில் கல்விமுறை மட்டுமே அவர்களின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்க போவதில்லை என்றும்இ நினைப்பதெல்லாம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தையும்இ பிறரின் திறமைகளை மதிக்கவும்இ அதை நேர்மறையாக நோக்கவும்இ சொல்லித்தாருங்கள். சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வாழப் பெற்றோரின் பங்களிப்பு அவசியம். யாரோடும் ஒப்பிட்டுப் பேசும்போது இ அவர்களையும் சேர்த்துப் பிள்ளைகள் வெறுப்பார்கள். நிறைய போட்டிகளற்ற விசயங்களுக்கு அவர்களை அறிமுகம் செய்து பாருங்கள்.

நானும் படிக்கும்போது இ நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால் இ அவை எவையும் இப்போது எதற்கும் பயன்படுவதில்லை. ஆனால்இ அன்று ”வெற்றி” என்ற ஒன்றை நோக்கி மட்டுமே செலுத்தப்பட்டுப் பெறப்பட்டது. படித்த புத்தகங்கள்இ பழகிய மனிதர்கள்இ நட்புகள்இ விட்டுக்கொடுத்த நொடிகள்இ அன்பு இ புரிதல் இவை எதற்கும் போட்டியோஇ பரிசோ இ அங்கீகாரமோ இல்லைஇ ஆனால் இவை நம் வாழ்வின் மிக முக்கிய பங்கு வகிப்பவை.

முந்தைய பதிவை படிக்கும் போது இ சிலர் என்ன நினைத்திருப்பீர்கள் இ எல்லாம் சுலபமாகச் சொல்லலாம் இ அவனவன் கஷ்டம் அவனவனுக்குத்தானே தெரியும்? வீட்டிற்கு வரும் எல்லாரும் முதல் கேள்வியாக என்ன கேட்கிறார்கள்இ பையன் ஃபெண் நல்லா படிகின்றானா?இ என்ன ரேங்க் ? என்ன பரிசு வாங்கி இருக்கான் இந்த வருஷம்இ மற்ற கோச்சிங் என்ன போறான்? இப்படிக் கேள்விகளை இந்த சமூகம் அடுக்கிக்கொண்டே போகும். ஆமாம் என்று சொன்னாலும்இ இல்லை என்று சொன்னாலும் கஷ்டம்தான். எல்லாப் பிள்ளையும் ஒன்றைப் போலவா உள்ளனர்? எல்லாருக்கும் எல்லாமும் தெரிய என்ன அவசியம்?

இப்படிக் கேட்கின்ற யாரும் யோசிக்காத விஷயம்இ அல்லது கேட்காத விஷயம் பிள்ளையோ பெண்ணோ அன்பாய் இருக்கின்றனா? எல்லோருடனும் சகஜமாக பழகுகின்றானா? எல்லா விசயங்களையும் பெற்றோரோடு பகிர்ந்துகொள்கிறானா? அவனை இவர்கள் எப்படி வழி நடத்துகிறார்கள் போன்ற முக்கிய கேள்விகளை!

சிறு வயதில் மதிப்பெண்இ போட்டியின் பின் ஓடவிட்டுஇ வளர்ந்தபின் சம்பாத்தியத்தின் பின் ஓடவிட்டுஇ பிறகு பிள்ளை என்னைப் பார்க்கவில்லைஇ வெளிநாடு சென்றுவிட்டான் இ என்னை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டான் என்று புலம்புவது எப்படி நியாயம். அவர்கள் எதன் பின்னோ ஓடவே பழக்கப்படுகிறர்கள் பெரியவர்களால்.

நிறைய இழந்துவிட்டோம்இ பெரியவர்களால் வழிநடத்தப்படும் குடும்பம்இ அனுபவங்களைக் கதைகளாய்ச் சொல்லிய திண்ணைஇ பகிர்ந்துகொள்ளும் சந்தோசம் தரும் சகோதரத்துவம் இ விளையாட்டின் வழி தோல்வியையும் இ விட்டுக்கொடுத்தலில் வெற்றியும்இ இன்னும் நிறைய… கிடைக்குமா என்று தெரியவில்லைஇ ஆனாலும் உறவுகளும் அதன் வழி கற்றலும் நின்றுவிட்டது.

 

– வித்யா லட்சுமி

Leave a Reply