வேலூரில் நாணயக் கண்காட்சி மகேஸ்வரி பாபு

நாணயங்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்துவருகின்றது. இந்த நாணயங்கள் அரசர்களின் காலங்கள் சங்ககால நாகரீகங்களை வெளிப்படுத்தும் காட்சியங்களாக அமைந்துள்ளன. நாணயங்கள் பல நூற்றாண்டு எனில் அஞ்சல் தலைகள் சில நூற்றாண்டுகளாக பல நாடுகளின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் சரித்திர சான்றுகளாகத் திகழ்கின்றன.

தன்னார்வலர்கள் சரித்திர ஆர்வலர்கள் பொழுதுபோக்குக்கு என சிலர் நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகளைச் சேகரிக்கத் தொடங்கினர். இவர்கள் பல நாடுகளில் பல இடங்களில் தனக்கென சங்கங்கள் அமைத்து பெரும் அளவில் அதில் ஈடுபட துவங்கினர்.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆர்வலர்கள் ஒன்று சேர்த்து சங்கம் ஒன்றை துவக்க முடிவு செய்து 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூர் கோட்டையில் கூடி வேலூர் கோட்டை நாணயவியல் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பாளர் சங்கம் அமைத்தனர். அன்று 20 பேருடன் தொடங்கிய சங்கம் இன்று 100 உறுப்பினர்களை கொண்டதாக வளர்ந்துள்ளது.

மேலும் பொதுமக்களை முகநூல் வாயிலாக அழைத்து வேலூரைச் சுற்றியுள்ளச் தொன்மையான சரித்திர தடயங்களை மரபுநடை மூலமாகக் காண்பிக்கப்பட்டது. இந்த ஆண்டும் பிப்-15, 16, 17, வேலூர் டவுன்ஹாலில் நாணயவியல் கண்காட்சி நடைபெற்றது. சங்கத் தலைவர் திரு.அஷ்ரப் அலி எழுதிய வியக்கத்தக்க வேலூர் முன்னாள் எம்.பி.முகமதுஅலி வெளியிட ஸ்பிரிங்ஸ்டே பள்ளி தாளாளர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். திரு. அஷ்ரப் அலி தனது 40 ஆண்டுக்கால களப்பணியில் வேலூரைச் சுற்றியுள்ள தொன்மை தடயங்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இக்கண்காட்சியில் சங்ககால நாணயங்கள் தொடங்கி பல்வேறு நாடுகளின் அஞ்சல்தலைகள், தேசத்தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

வேலூர் சரவணன் ராஜா அவர்களின் சேகரிப்பிலிருந்து கின்னஸ் சாதனை படைத்த மலேசியாவின் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட உலகின் மிகப்பெரிய பணத்தாலும் ருமேனியா நாட்டின் 1917ஆம் ஆண்டு வெளியிட்ட உலகின் மிகச் சிறிய பணத்தாலும் இடம்பெற்றன. வந்திருந்த பார்வையாளர்களை இவை ஆச்சரியப்படுத்தின. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு வந்த மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது ஒரு நல்ல மாற்றமே.

Leave a Reply