வேலூரின் காதல் சின்னம்! – சரவணன்இராஜா

வேலூர் மாவட்டம் முழுவதும் வரலாற்று சின்னங்கள் பரவிகிடைக்கின்றன, அதில் ஒரு காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆற்காடு.கி.பி.1692ல் மொகலாய பேரரசர் அவுரங்கசீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சியை விரிவுபடுத்ததன் சிறந்த தளபதிகளை தேர்வுசெய்து, வரிவவல் செய்யும் அதிகாரம்மிக்க படைதலைவர்களாக அனுப்பபட்டவர்களே நவாப்புகள், அவ்வாறு முதலாவதாக வந்த சுல்பிக்கார் அலி என்பவர் விஜயநகர் மற்றும் மராட்டிய அரசுகளை முறியடித்து கர்நாடக முதல் ஆந்திர, மற்றும் தென்தமிழகம் வடஆற்காடு முழுவதும் ஆட்சியை விரிவுபடுத்தினார், ஆற்காட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதால் பின்னர் வந்த நவாப்புகள், ஆற்காடு நவாப்புகள் என்றே அழைக்கப்பட்டனர்.

வேலூர் மாநகரத்தில் இருந்து 25 கி.மி.தென்திசையில் பாலற்றங்கரையில் இருபுறமும் அமைந்த இரண்டுஊர்கள் ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை. இந்த இரண்டு ஊர்களுக்கும் செஞ்சிகோட்டைக்கும் ஒரு நெருங்கிய தொடர்புடைய சரித்திரம் வரலாற்று பக்கங்களில் மறைந்துள்ளன.

பிரதானமாக மூன்று மலைகளின் மேல் இருக்கும் கோட்டையை தவிர பல கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், மண்டபங்கள் என கலைச்சுவடுகள் அழியாமல் பல சரித்திர மாறுதல்கள் கண்டது செஞ்சி, சமணர்கள் வாழ்விடமாக ஆறாம் நூற்றாண்டு வரை இருந்திருக்கின்றது.,அதன் பின்னர் பல்லவர், சோழர், இராஷ்டிரகூட மன்னர்கள் ஆட்சிக்கு பின்னர், 1330 வரை கோனார்கள் ஆட்சியிலும், பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் செஞ்சியை கைப்பற்றினார்கள்.அதன் பின்னர் 150 ஆண்டுகள் நாயக்கர்கள் ஆண்டனர். பின்னர் பிஜப்பூர் சுல்தான் வசம் வீழ்ந்தது செஞ்சி .பின்னர் சிவாஜி கி்.பி.1677 செஞ்சிகோட்டைகளை கைப்பற்றினார்.

 

சகோதரர் சாந்தாஜி கி.பி.1683ல். செஞ்சி அரசனார், அதன் பின்பு அவர் தம்பிராஜாராம் செஞ்சியை ஆள தொடங்கினர்.
தென் இந்தியாவிலும் மொகலாய சாம்ராஜியத்துக்கு பெரும் தலைவலியாக உள்ள மாராட்டியர்களை வென்று வர அவுரங்கசீப் ஒரு பெரும்படையை தன்னுடைய பிரதான தளபதிகளை அனுப்பிவைத்தார்

தரைப் போரில் மராட்டியர்களை வென்ற மொகலாயபடைகளால் கோட்டையில் பதுங்கிய ராஜாராமை பிடிக்க முடியவில்லை, எந்ததிசையிலும் அணுக முடியாதபலமான கோட்டை பதினோறுமாத முற்றுக்கைக்கு பின் வீழ்ந்தது ,சரியாக கி.பி.7-02-1698 தேதியில் மிகுந்த போரட்டத்தின் பின்னர் கைப்பற்றப்பட்டது.

அந்த போரில் சொருப் சிங் என்ற ராஜாபுத்திரதளபதியின் வீரம் மற்றும் போர்தந்திரங்கள் பெரியதாக அறியப்பட்டு, அவுரங்கசீப் கி.பி.1700 ,செஞ்சியை ஆளும் பொறுப்பை அளித்து, அவர் அப்போதைய ஆற்காடு நவாப்பாக இருந்த சதத்துல்லாகானின் கீழ் வரிவவல் செய்து ஆட்சி புரியும்படி நியமிக்கப்பட்டார். (1711-1714 ஆண்டுகளில் இங்கிலாந்து கம்பெனி அனுப்பிய கடிதங்களில் சொருப்சிங், ஒரு ராஜபுத்திர இளவரசர்என்றும், முகலாயர்களின் குடும்பதிற்கு உறவினரென்றும் தெரிவிக்கின்றன), இவரது மூத்தமகன் தேஜஸ் சிங் எனப்படும், இராஜாதேசிங்கு செஞ்சிக்கு புகழ் வர காரணமாக இருந்தவர் .இவரை பற்றிய எண்ணற்ற நாட்டுபுறபாடல்களும் கதைகளும் உண்டு. இளம்வயதிலேயே மிகுந்த வீரமும் எளிமையாகவும் இருந்த தேசிங்கு மக்களால் மதிக்கபட்டார்.

அடிக்கடி நிகழும் நவாப்களின் மாறுதல்களையும், மாகாணம் முழுவதும் நிலவும் நிர்வாக சீர்கேட்டையும் தனக்கு அனுகூலமாக எடுத்து கொண்ட சொருப்சிங் திறை செலுத்துவதை தவிர்த்து வந்தார், நவாப் பல முறை கேட்டும் தராமல் அலட்சியபடுத்தி வந்தார் இந்நிலையில் 1714,சொருப்சிங். மறைந்தார். அவரது மூத்த மகன் தேசிங்கு ஜனவரி 1714, டெல்லி அரசை அலட்சியம் செய்துதானே அரசரானார் .அப்போது அவர் வயது 18 தான்.,

தேசிங்கு கப்பம் கட்ட மறுத்ததாலும் ,அடிமைதனத்தை எதிர்த்தாலும் டெல்லி பேரரசு, ஆற்காடு நவாப் சதத்துல்லா கானை செஞ்சி மீது போர் தொடுக்க ஏவியது. ஆற்காட்டுக்கும் செஞ்சிக்கும் போர்மூண்டது. தன்னுடைய வீரத்தால் ஆற்காடு படைகளை திணறடித்தது செஞ்சி படையணி. பல சிற்றரசர்கள் நவாபுக்கு உதவியதால், அப்பெரும்படையிடம் தோற்றது செஞ்சி. கி.பி.1714 அக்டோபரில் செஞ்சியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் கடலி என்னும் இடத்தில் தேசிங்கு போரில் இறந்தார்.ராஜபுத்திர மரபுபடி அவர் மனைவி இராணிபாய் தன் கணவர் உடல் தகனம் நடந்த இடத்திலேயே உடன்கட்டை ஏறி தீக்கிரையனாள்.

மக்களால் பெரிதும் நேசிக்கபட்ட தேசிங்கும், ராணி உடன்கட்டை ஏறிய காட்சியும் போர்குணம் கொண்ட சதத்துல்லாகானை அதிர்ச்சி அடையசெய்தது. மக்கள் அவர்மேல் கொண்ட அபிமானம் அச்சம் கொள்ளவைத்தது .செஞ்சி ஆட்சியை சத்தியர்கான் என்பரிடம் அளித்துவிட்டு ஆற்காடு திரும்பினர் நவாப்.

அவர்கள் நினைவாக ஆற்காடு மறுகரையில் இரு நினைவுமண்டபம் அமைத்தார் இராணியின் நினைவாக இந்த இடம் ராணிப்பேட்டை என்ற பெயரே நிலைத்துவிட்டது. கடினமான மனதிலும் ஈரம் உண்டு என்று நிருபித்த சதத்துல்லாகான் அமைத்த இராஜதேசிங்கு, இராணிபாய் நினைவிடம் இன்றைய நிலையில், அதன் மேடைகள் தகர்ந்து மண்ணில் புதைந்துள்ளன. ஆமை வடிவிலான பீடம் மேல் அமையபெற்றகலைநயத்துடன்உள்ளபச்சைவண்ணகற்கள்உடைக்கபட்டுசிதறிகிடக்கின்றன.

சரித்திரபுகழ்கொண்டநினைவிடம்முட்களும்,புதர்களும், வழ்ந்தவண்ணம் தன் அடையாளம் தொலைத்து கேட்பாரற்று கிடக்கின்றது.

இத்தகைய சரித்திர பிண்ணனிகொண்டு ராணிப்பேட்டை நகர் உருவாக காரணமான இந்த நினைவிடம் காப்பாற்ற பட காத்திருக்கிறது.

Leave a Reply