விஜயநகர நாயக்க அரசுகள் வளர்த்த தமிழும் தமிழ் புலவர்களும் – நாயக்கர் காலத்தில் தமிழ்

விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் அவையில் தமிழ் புலவர்களும் பல தமிழ் நூல்களும் இயற்றபட்டன. குறிப்பாக தமிழில் வழங்கி வந்த பல நூல்கள் இக்காலக்கட்டத்தில் மொழி பெயர்க்கப்பட்ட்டுள்ளன.
கிருஷ்ண தேவராயர் ஆதரித்த தமிழ் புலவர்கள் பின்வருமாறு.
 
குமாரசரசுவதி,
அரிதாசர்,
தத்துவப் பிரகாசர்,
கச்சி ஞானப் பிரகாசர்
பெருமண்டூர் மண்டல புருடர்
வடமலையார்
ஞானப்பிகாசர்
 
கிருஷ்ணதேவராயர் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள்:
 
தமிழ் நாவலர் சரிதை
இருசமய விளக்கம்
 
மொழிப் பெயர்ப்பு நூல்கள் 
பலநூல்கள் தமிழிலிருந்து தெலுங்கு மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, 64 நாயன்மார்கள் புராணமானது, “சொக்கநாதர் சரித்திரம்” என தெலுங்கில் மொழிப் பெயர்க்கப்பட்டது. தெலுங்கு எழுத்தில் தமிழ் மொழி நடையில் ஆண்டாள் எழுதிய “திருப்பாவையும்”, மற்றும் வைணவ நூலான “நாலாயிரம் திவ்ய பிரபந்தமும்”, விஜயநகர் அவையில் உருவாக்கப்பட்டு, தெலுங்கு வைணவர்களால் பெரிதும் போற்றப்பட்டது. விஜயநகர காலத்தில் தமிழ் நூல்களே வைணவத்தை பரப்பப் அடித்தளமாக இருந்தன. 
 
நாயக்கர்கள்:
 
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்ற தஞ்சை செவ்வப்ப நாயக்கர், சிவாக்ர யோகிகளை போற்றி “சைவ சந்நியாச பத்ததி” எனும் சமய நெறி நூலை எழுதவைத்தார்.
 
மதுரை கிருஷணப்ப நாயக்கர், திருவிந்தானை போற்றி, சோமசுந்தர கடவுளின் திருவிளையாடலை போற்றும் “சுந்திர பாண்டியம்” என்ற நூலை எழுத வைத்தார். திருமலை நாயக்கர், குமரகுருபரரைப் போற்றி “மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை” அரசவையில் பாடவைத்தார். புலவர் மணியாகிய அழகிய சிற்றம்பலக் கவிராயர், வெங்கப்ப நாயக்கர் மீது பிரபந்தம் பாடி ஒரு ஊரையே பரிசாகப் பெற்றார்.
 
திருமலை மன்னன் அவையிலிருந்த வடமலையப்பர் மீது பாகை அழகப்பன் கவிபாடினார். மதுரை நாயக்கர்களின் தளபதியாக இருந்த, கூளப்பநாயக்கர் மீது பாடப்பட்ட விரலிவிடு தூது.
நாயக்கர் கால தமிழ் புலவர்கள்:
வில்லிபுத்தூரார்
காளமேகப் புலவர்
அருணகிரிநாதர்
பரஞ்சோதி முனிவர்
அருணாசலக் கவிராயர்
 
பாளையக்காரர்கள்:
மேற்கண்ட நூல்கள் நேரடியாக நாயக்க ஆட்சியாளர்களால் போற்றப்பட்டவையாகும். பாளையக்காரர்களின் தனி வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது ஜெகவீர பாண்டியர், எட்டையப்பர் போன்று ஒவ்வொருப் பாளையக்காரரும் தமிழ் கவிகளைத் தனித்தனியே போற்றியுள்ளனர்.
 
மேலும் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாக்கில் தோன்றிய, அந்தாதி, கோவை, பரணி, கலம்பகம், தூது, சதகம், மாலை, பள்ளு, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், குறவஞ்சி இன்னும் பல.. போன்ற “தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கிய வகை பாடல்கள்” செழிப்புற்று விளங்கியது, விஜயநகர நாயக்க மன்னர்கள் காலமாகும்.
மூலம் நூல்: தமிழும் தெலுங்கும் – முனைவர். தா.சா. மாணிக்கம், தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)
உதவி ஆய்வுகள்: சிற்றிலக்கியத்தில் ஒரு ஆய்வு – சே. வளனரசு.