வட இந்தியர்களின் முன்னோர் திராவிடர்கள்.

வட இந்தியர்களின் முன்னோர் திராவிடர்கள்.
 
தற்கால இந்திய மக்களின் பெரும்பான்மை மரபணு இந்தியாவில் வாழ்ந்த தொல் மாந்தருடையது என்பது ஆய்வுத் தகவல். இந்த தொல் மாந்தர்கள் ஒரு காலத்தில் ஈரானின் மேற்கு பகுதி முதல் தென்னிந்தியா வரை பரவியிருந்த ஒரு இனமாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
 
இனவரைவியல் அடிப்படையில் திராவிடர் என்றால் இந்தியா முழுமையிலும் இருந்த வேட்டைக்குடி தொல்மாந்தரும் (AASI), நியோ லித்திக் விவசாயக்குடி (Iranian Farmers – First Farmer) சேர்ந்த ஒரு கலவை மக்களே. இவர்கள் அதிகம் சந்தித்துக் கொண்டது முதலில் வடநாட்டில் தான். இந்திய மக்களை அடிப்படை இவர்களைச் சேர்ந்ததே. இவர்கள் வடநாட்டில் சந்தித்துக் கொண்டபோது, தென்னக இந்தியாவிலிருந்தது, தொல்குடி வேட்டை மக்கள் (AASI). அவர்கள் பேசிய மொழி வேறாக இருந்தது என்பது அறிஞர்களின் வாதம்.
 
வட இந்தியாவில் சந்தித்துக்கொண்ட இம்மக்கள், பின்பு தென்னிந்தியாவிற்கு இடம் பெயருகின்றனர். இவர்கள் இடம்பெயரும் போது இன்று துளு, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, மற்றும் வேறு சில திராவிட மொழிகளுக்கு முந்தைய வடிவ மொழியுடன் தென்னகம் வருகின்றனர். இவர்களுடன் விவசாய முறைகளும் தென்னிந்தியா பக்கம் நகருகிறது. அதனால் தான் திராவிட மொழிகள் வட திராவிட மொழிகள், தென் திராவிட மொழிகள் எனப் பகுகப்படுகின்றன.
 
வட இந்தியாவில் வேட்டைகுடிகளுடன் கலந்து உருவாகிய தொன்மை திராவிட மூதாதை மக்கள் (ASI) மீண்டும் தென்னிந்தியாவிலிருந்த வேட்டைக்குடிகளுடன் கலந்து தொன்மைத் தென்னக மக்களை (திராவிட) உருவாக்குகின்றனர். அப்போது முந்து மொழியானது தற்போதைய திராவிட மொழிகளின் வடிவத்தை பெறுகின்றது. இவர்களுடன் முழுமையாகக் கலந்த விவசாயக் குடிகளாகவும், முழுமையாக கலக்காத மக்கள் தொல்குடிகளாகவும் இயங்கத் துவங்குகின்றது. இவர்கள் இருவரும் கலந்து பின்னாளில்
 
இதன் பிறகு, மற்றோரு இனமான ஆரியர்கள் வட இந்தியாவை ஆக்கிரமிக்கத் துவங்குகிறது. இவர்கள் மத்தியத் தரைக்கடல் பகுதியை ஆக்கிரமிக்கும் பொழுதே, இந்த துண்டக்கண்டம் பக்கம் நகர்ந்து தொல் விவசயக்குடி, மற்றும் தொல் வேட்டைக் குடியுடன் கலந்த திராவிடக் குடியுடன் இவர்கள் கலந்து, தொன்மை வடஇந்திய (ANI) மக்களை உருவாக்குகின்றனர்.
 
கிழக்கு பக்கமாக இருந்து வந்த முண்டா இன மக்களும் கங்கைச் சமவெளியில் இவர்களுடன் கலந்து அவர்களும் ஒரு கலவையை உருவாக்குகின்றனர். பெரும்பாலும் நாகர் இன மக்களாக இவர்களை அடையாளம் காணலாம். இவர்களும் தென்னக பக்கமாக பல்வேறு காலகட்டத்தில் நகருகின்றனர். இதனால் தான் வட மற்றும் தென்னக மொழிகளில் பல முண்டா வடிவ சொற்கள் இன்றும் உள்ளன.
 
கி.முவில் இந்திய அரசு ஆட்சிமுறை தோன்றிய காலங்களில் பெருமதங்களும் தோன்றி, இவர்கள் தென்னக பக்கமாக நகர்ந்து தொன்மை திராவிடருடன் கலந்து, தற்கால தென்னிந்தியத் திராவிட மக்களை உருவாக்குகின்றனர். திராவிட மொழிகள் பிரிந்து தன்னிச்சை மொழிகளாக உருவாகின்றது. இக்கால கட்டத்தில் தான் வட இந்தியர்கள் தென்னக மக்களைத் திராவிடர்கள் என பெயரிட்டு அழைக்கத் துவங்குகின்றனர். திராவிட மக்கள் வட இந்தியரை வடவர்கள் என அழைக்கின்றனர். இது அனைத்துமே திசையைக் குறிக்கும் சொற்களாகும். எந்த மரபணு தனி இனத்தையும் அது குறிக்காது.
 
வடவர் என்போரின் மரபணுவில் தென்னிந்தியரின் மரபணு பாதி அல்லது பாதிக்கும் மேல் உள்ளது. தற்கால தென்னிந்தியரும் வடக்கிருந்து வந்த தொன்மை திராவிடரின் வருகையால் தொல்குடி வேட்டைக்குடிகளுடன் சேர்ந்து உருவாகிய ஒரு சமூகம். மீண்டும் வரலாற்றுக் காலத்திலும், ஈரானிய படையெடுப்பு, அலெக்ஸாண்டர் படையெடுப்பு முதல் பல்வேறு மேற்குலக மக்கள் வட இந்திய பக்கம் வந்து ஏற்கனவே இருந்த தொன்மை வட இந்தியருடன் (திராவிட+ஆரிய இனமக்களுடன்) கலந்து இன்றைய வட இந்தியரை உருவாக்குகின்றனர்.
 
ஆதி காலத்தில் தொல்குடி வேட்டைக்காரர்கள் – ஒன்றுபடாத பல்வேறு தொன்மை மொழிகளைப் பேசியுள்ளனர். இதன் எச்சம் சென்டினல் தீவு மக்களிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு மொழி அடிப்படையில் இரண்டுக்கும் மேற்பட்ட மரபுகள் உண்டு. இன்றை இந்தியர் எந்த மொழி பேசியிருந்தாலும், மூதாதையர் தொல்குடிகள் மொழி, திராவிட மொழி, வட மொழி, முண்டா மொழி ஆகிய மொழிளில் ஒன்றையே அல்லது பலவற்றையோ அவர்களின் மரபு கலப்பு (Ancestry) பொறுத்து பல்வேறு காலகட்டத்தில் பேசி இருப்பர்.
 
வடஇந்தியவில்சந்திதிக்கொண்ட விவசாயக்குடியும், வேடைக்குடியும் சேர்ந்து திராவிட மொழிகளின் முந்து வடிவத்தைப் பெறத் துவங்கியது. விவசாயம் ஒரு நிலையான உணவை வேட்டைக்குடிகளுக்கு அளிக்கத் துவங்கியதால், வெகு விரைவிலேயே தொல்குடி வேட்டை மக்களை விவசாயத்தையும் அதை சார்ந்த திராவிட மொழிகளையும் கையாளத் துவங்கிறது. இதனால் இந்திய முழுமைக்கும் தொல் தமிழ் அல்லது திராவிட மொழிகள் பரவியது.
 
அதே நேரத்தில் வெவ்வேறு இனமக்களும் இவர்களுடன் கலந்து மொழி, கலப்பு இன மக்களை உருவாக்கினர். அந்த கலப்பு இனம் உருவாவது, ஈரானிய அல்லது ஆரிய அரசாட்சி முறையோ ஏற்றுக்கொண்ட போது மாற்றமடைந்தது. அரசு ஆதரவுடன், தொழில் செய்யும் உரிமை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குத் தொடரும் சாதிகளாக மாற்றமடைந்தன. சாதி மாற்றி திருமணம் செய்ய தடைகளும் இதனால் தான் பின்னாளில் ஏற்படுகிறது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தேவதாசி முறை. அனைத்து சாதி மக்களிடமிருந்து கோவில் பணிக்காகத் தேவதாசி மகளிரைத் தேர்ந்தெடுத்தனர், அல்லது நேர்ந்துவிட்டனர். ஆனால், பின்னாளில் அதுவே மரபு ரீதியாக அம்மா, மகள் என வழிவழியாக வரும் ஒரு தனி சாதியாக உருமாறியது.
சரி மேற்கண்ட கேள்விக்கு மரபணு ரீதியில் பதில் என்ன என்றால், வட இந்தியரின் மூதாதையர்களில் ஒருவர் தொன்மை தென்னிந்தியரே. அதே போல, தற்கால தென்னிந்தியர் அல்லது திராவிடரின் முன்னோர்கள் பல்வேறு காலகட்டத்தில் தென்னியவிற்கு குடிபெயர்ந்த மக்களின் கூட்டு இனம். எனவே, வட இந்தியரும் தென்னிந்தியரும் பல மூலத்திலிருந்து கிளைத்து, பின்பு கலந்து உருவாகிய மக்கள். இது பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் செயலாகும். எனவே, திராவிடர் இல்லாமல் வட இந்தியர் உருவாகவில்லை, அதே போல ஆதித் தொல்குடிகள் இல்லாமல், திராவிடர்கள் உருவாகவில்லை.
திராவிடர், வடவர் என்பதை ஆய்வுலகம் தற்போது,
 
1. இந்தியாவின் முதல் குடிகள் – First Indians (தற்போது இவர்கள் தனி குழுவாக இல்லை)
 
2. இந்தியாவின் தொல்குடிகள் (Ancient Ancestral South Indians – AASI)
 
3. தொன்மைத் திராவிடர்கள் (Ancestral South Indians – ASI)
 
5. தற்கால திராவிடர்கள் (South Indians – SI )
 
6. தொன்மை வட இந்தியர்கள் (Ancestral North Indians ANI)
 
7. தற்கால வட இந்தியர் (North Indians- NI) என அழைக்கின்றது.
தெலுங்கரை மட்டும் திராவிடர் என்போரும், திராவிட கட்சியையும், ஆய்வுலகில் கூறும் திராவிடரையும் கலந்துகட்டி குழப்புவோரும் சற்று தள்ளி நிற்க.