மன்னர் மருதுபாண்டியர்களின் பக்தியும் தொண்டும் – திரு. த. விஜயகுமார்

தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முதல் முதலில் தொடங்கியவர்கள் மன்னர் மருது சகோதரர்கள் மட்டும் ஆங்கிலேயரை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1780 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

 

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற ஊரில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 ஆண்டில் பெரியமருது பிறந்தார் . 1753 -ல் சிறிய மருதுபாண்டியர் பிறந்தார்.

அந்த காலத்தில் பெரிய மருது பாண்டியருக்கு ராசபிளவை நோய் மூலம் உடல்நிலை குறைவு ஏற்பட்டு அரண்மனையிலே வருத்தத்துடன் இருந்தார். மன்னர் மருதுபாண்டியர்கள் ஏற்படுத்திய புலவரவையில் இருந்து ஒரு புலவர் இந்த செய்தியை கேட்டு மருதுபாண்டியர்கள் சந்தித்து மன்னரிடம் உங்கள் நோய்க்கு ஒரே தீர்வு குன்றக்குடியின் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு வருங்கள் என்று கூறினார். அன்று இரவே பெரிய மருது தூங்கிக்கொண்டு இருக்கும் பொழுது பாலக்குமாரன் ஒருவர் மயில் தோகையுடன் வந்து பிளவை நோயின் மீது திருநீறு வைத்து விட்டதாக கனவு கண்டு திடீரென்று எழுந்து பார் க்கும் பொழுது அச்செயல் கனவாகவோ நினைவாகவோ இருக்கும் என மகிழ்ந்தார் . மறுநாள் பிளவை நோய் ஏற்பட்ட வடு காணாமல் போய்விட்டது. முருகப்பெருமானின் அருளால் தன் பிளவை நோயை நீக்கிய நன்றி கடனாக பெரிய மருதுபாண்டியர் தன் படைகளுடன் புலவர்களை அழைத்து கொண்டு அங்கு திருபணி மேற்கொள்ள முடிவு செய்தனர் முதல் வேலையாக தாங்கள் தங்குவதற்கு ஒரு அரண்மனை கட்டினர்.

மருதுபாண்டியர்கள் தன்னோடு இருந்த காடன் செட்டியாருடனும் குன்றக்குடியில் தங்கி கோவில் திருபணிகளை தொடங்கினார் . குன்றக்குடி மலை அடிவாரத்தில் அடர் ந்து இருந்த காடுகளை வெட்டி சீர் செய்தனர் . சண்முகநாதன் எழுந்தருளியிருக்கும் பீடத்தின் கீழ் இடம் பெற்றிருந்த தகட்டை செப்பம் செய்வித்து முருகப்பெருமானை எழுந்தருள் வித்தனர்.

மலைக்கோவில் மூலவர் கருவறை மயில் மண்டபம், உற்சவமூர்த்தியுள்ள அலங்கார மண்டபம், உயர்ந்த சுற்று மதில்களும் இராஜகோபுரமும் ஆகியவற்றை மருதுபாண்டியர்கள் குன்றக்குடியில் செய்த திருப்பணிகள் ஆகும். மலையின் தெற்கே மிக பெரிய தென்னந்தோப்பை உண்டாக்கினர்.

குன்றக்குடி கோவில் பராமரிப்பு செலவுக்காக செம்பொன்மாறிக் கிராமத்தை தானமாக அளித்தனர். கீழரத வீதியில் இப்போது பேருந்து நிலையமாக விளங்கும் இடம் மருதுபாண்டியர் அரண்மனை இருந்த இடமாகும். மருதுபாண்டியர் களின் புலவர் அவையில் இருந்த சாந்துப்புலவர் அவர் கள் குன்றக்குடி முருகனின் பெருமைகளும் மருதுபாண்டியர் செய்த கோவில் திருபணிகளும் பற்றி “ மயு+ரகிரிக் கோவை ’’ என்ற நூலைப் பாட்டுவித்தனர்.

குன்றக்குடி சண்முகநாதன் கோவில் சம்மந்தமான மூன்று ஓலைச்சாசனங்கள் பெரிய மருதுபாண்டியர்; 1790 -ஆம் ஆண்டு வெளிடப்பட்ட ஓலைச்சாசனம் ஒரு பகுதியாகும்.

“மலையில் காடுசெடிகளை வெட்டி, கோயில் குளம் உண்டாக்க உதவிகரமாக இருந்து திருடர் பயம் தீர காவலுக்குக் கைப்பிடியாக கொண்டு வந்த தளவாய் வௌ¢ளையன் அம்பலகாரனுக்கு அம்பல் மரியாதையும் அம்பலத்தோடு உம்பலம்பெரிய கண்மாய்ப் பாசனத்தில் இரண்டுகாணி நஞ்சை நிலமும் செடி வெட்டுக்காக மேற்படி பாசனத்தில் 3 3-8 காணி நன்செய் நிலமும் வசுதந்தர பாத்தியமாக விடப்படுவதால் ஆண்டு அனுபவித்துக் கொண்டு கோயில் ஊழியம் உழைப்பைத் தவறாது பார்த்துக் கொள்ள வேண்டும்’’காடாக புதர் மண்டிக் கிடந்த குன்றுப் பகுதியில் செடி கொடிகளை அழித்து அழித்து கோவில் குளம் உண்டாக்கி உதவியாய் இருந்தவருக்கு பெரிய மருது பாண்டியர் நிலம் வழங்கினார் .

“மருது நாதிபன் றாமரைப் பொய்கையின் மற்றவனே
கருதிய வாயிரத தூண்மண்ட பத்திற் கடம்பணிவேள்;
வருதிசெய் தோகை மலையி லரச வனத்தினிதம்
பருதியை நோக்கு மலர் போற் கிளிசென்று பார்ப்பதென்னே’’

இந்த மயூரகிரிக் கோவை பாடலில் குன்றக்குடி ஆயிரங்கால் மண்டபம் மருதுபாண்டியர் அவர் களால் எழுப்பப்பட்டது என்று பாடல் மூலம் சொல்லப்படுகிறது.

“அருணிதிப்; பாலினு மேற்பா ரினுமறி யாமையினுன் மருது துரைபணி சேர்ந்தன் மயூர வரைந்திருவேயிருவரை யேந்தி யொருவரை யுட்கொண்டி ருந்தவளோர் வரைதலை மேற்கொண் டன ளென்று வெஞ்சொல் வழங்கினரே”

என்று மயூரகிரிக் கோவை பாடலில் மருதுபாண்டியர் அவர்களால் குன்றக்குடி முருகன் கோவில் திருபணி மேற்கொள்ளபட்டது என தெரியவருகிறது.

“வள்ளிமயில் சேர் மயின்மலைக்
கேமருதையன் செய்த
வௌ¢ளிமயிலை விரும்புங்குகனளுள்
வேந்தன் மறந் பொற்
தௌ¢ளி மயிலிலென்
பொன்மயிலைப்புணர்ந்த தேகினும்
புள்ளி மயிலின மேமற வீரன்பு போற்றுதலே’’

என்று மயூரகிரிக் கோவை பாடலில் மருதுபாண்டியர் அவர்களால் குன்றக்குடி முருகன் பெருமானுக்கு செய்து அளித்த வௌ¢ளிமயில் வாகன சிறப்பை பற்றி போற்றப்படுகிறது.

“மேல் எதிர் தும் ஆயிரம்கட் கோபுரமும் மிதக்கலங்கி விலங்கு வாழ்க
மால் அனயை மருதுபாண்டியன் செய்திடுக் கோபுரமும் மதுர மேன்மைப்
பாலை கொள் கடலை விடு தாபுரியும் படிபடிகள் பண்பி எனுங்கிக்
சாலும் கெடுக் தடமருதா புரியும் ஒரு கொடியினலன்பு தழிஇச்செல்வோமே”

என்று மயூரகிரிக்கலம்பக வரிகளில் மருதுபாண்டியர்கள் முயற்சியால் மலைமேல் இராஜகோபுரம் கட்டிய பெருமை விளங்கும் பாடல் ஆகும்.
மன்னர் மருதுபாண்டியர்கள் முருகப் பெருமான் மீது உள்ள பத்தியால் குன்றக்குடி முருகர் கோவில் மட்டும் இல்லாமல் மற்ற முருகன் கோவில்களிலும் திருப்பணிகள் செய்ய தனி கவனம் செலுத்தி வந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவஞான சுப்பிரமணிய சுவாமி கோவில் மருது பாண்டியர் களால் கட்டப்பட்ட கோவில் ஆகும். இந்த முருகன் கோவில் பராமரிப்பிற்கென கண்ணாம்பூர் எனும் கிராமத்தை மானியமாக மருதுபாண்டியர் அளித்தனர் .

மானாமதுரையில் இருந்து மிளகனுhர் வழியாக நரிக்குடி செல்லும் வழியில் மானுhர் என்ற கிராமத்தின் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதி முன் மண்டபத்தை மருதுபாண்டியர் கள் கட்டினார்கள், மேலும், மாநூர் முருகன் கோவில் திருபணிகள் செய்து புதிய தேர் ஒன்று அளித்தனர்.

பழனியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் பழனிமலை பண்டார சந்நதி ஆதீனத்திற்கு பெரிய மருதுபாண்டியன் 1793-ல் இருகிராமங்களில் சில நிலங்களை அளித்து அம்மடத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பூஜை வழிபாடுகள் செய்ய உத்தரவிட்டார் .

மருதுபாண்டியர்கள் உலக புகழ் பெற்ற காளையார் கோவில் ராஜகோபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிவில் சேர்வைகாரர் மண்டபம், திருபத்துதூர் பைரவர் கோயில், மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் போன்ற பல நூற்றிர்க்கும் மேற்பட்ட கோவில்களில் திருபணிகளை, மண்டபம் கட்டுதல், தேர்கள் செய்தல், அன்ன சத்திரம் கட்டுதல் போன்ற பல ஆன்மீக பணிகளை தன் ஆட்சி காலத்தில் சிறப்பாக செய்தனர் . இந்தியாவில் சுதந்திரம் அடையும் நோக்கில் ஆங்கிலேயரை எதிர்த்து முதல் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் பயன்படுத்திய வேலும் வளரிகளும் ஆங்கில படைகளின் துப்பாக்கிகளும் ஆங்கிலேயர்களின் தலைகளை சிதறடிக்கச் செய்தது.

ஆதாரம்: 1. குன்றக்குடித் தலவரலாறு தேவஸ்தான வெளியீடு பக்கம் – 17, 26, 27, 28, 29
2. குன்றக்குடி அரண்மனை ஓலைச்சாசனம் ஆய்வு நூல் பக்கம் – 256, 262
3. சாந்துப்புலவர் , மயூரகிரிக் கோவை பாடல் 82, 200, 407
4. அமராவதி புதூர் அ. இராமநாதன் செட்டியார் மயூரகிரிக்கலம்பகம் – பாடல் – 80
5. மருதுபாண்டிய மன்னர்கள் – மீ. மனோகரன்.

Leave a Reply