போகர் மலை தொல்குடிச் சின்னங்கள் – A.T மோகன்

சேலம் நாமக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள பனமரத்துபட்டி அருகில்,  நாமக்கல் மாவட்ட கடைசி கிராமமான கெடமலையை ஒட்டி அமைந்துள்ள மலை ”போதமலை” எனும் போகர் மலை…

இந்த மலை சுமார் 3967 அடி உயரமும், அடர்ந்த காடுகள், அழகிய ஓடைகள், பயன் தரும் மூலிகைகள், மான், மயில், முயல், குரங்கு வனம் சார்ந்த உயிரினங்கள் என அருமையான இயற்கை சார்ந்த இடம்…

இனி பயணம்..

[ngg src=”galleries” ids=”2″ display=”basic_imagebrowser”]நாங்கள் அதிகாலை 6.00 மணிக்கு பனமரத்துபட்டியில் இருந்து எங்கள் பயணத்தை துவக்கினோம் மொத்தம் அதில் இயற்கை ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என மொத்தம் 25 நபர்கள் , அதில் குறிப்பாக வேலுதரன் சார், கலை, சிவா,  செல்வமணி, உதயகுமார், ராஜ் பன்னிர் செல்வம் , குமரவேலு, மூர்த்தி ஆராய்ச்சி மாணவர்கள் என பயணம் துவங்கியது..

வழியெங்கும் வண்டுகளின் ரீங்காரம், குயில் ஓசை,  மயில்களின் கூவல், ஆந்தைகளின் அலரல் என திக் திக் எனவும் இனிமையான சுற்றுச்சு+ழலலுடன் பயணப் பட்டோம்..

வழியில் காலை எட்டுமணிக்கு காலை உணவு புளியோதரை ஊறுகாயுடன் நண்பர் மூர்த்தி ஏற்பாடு, சாப்பிட்டு உடன் மீண்டும் மலையை ஏறினோம்.

 

சு+ரியன் உச்சி தொடும் நேரத்தில் போதமலையின் மேலூர் கிராமத்தை  அடைந்தோம். பிறகு கொண்டு சென்ற பைகளை எல்லாம் அங்கே நண்பரின் வீட்டில் வைத்து விட்டு வழித்துணையாக உள்ளுhர் மாணவர்கள் பிரகாஷ், ஜோதி குழுவின்

உதவியுடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்..

சுமார் ஒரு மணி நேரம் முட்புதர்கள் வழியாக தவழ்ந்து சென்று மலை முகட்டை அடைந்தால். 5000 வருடங்களாக அவ்வு+ர் மக்களால் நன்கு அறியப்பட்ட, இந்த அரியத் தொல்குடி சின்னங்கள் எங்கள் கண்ணிலும் பட்டதும். 

ஒவ்வொரு கல்திட்டையும் சுமார் இரண்டு அடிவிட்டமுள்ள இடுதுளைகளுடன், உயரம் 4.5 அடியுடனும் , அகலம் 4.5 அடி, நீளம் 6 முதல் 7 அடி வரையிலான கல்திட்டைகள் சுமார் 28 உள்ளன. அதில் சில சரிந்தும், உடைந்து காணப்பட்டது, நல்ல நிலையில் 10க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன..

 

பிறகு அங்கே இருந்து திரும்ப தொடங்கி மேலூர் நண்பர் வீட்டுக்கு வந்து சேர மணி மதியம் இரண்டு ஆகிவிட்டது. அங்கே குடிசையில் சுட சுட சைவம், அசைவம் என கிராமத்து சமையல் வாசனையுடன் தயாரிக்கப்பட்டது. அனைவரும் ருசித்து சாப்பிட நேரம் பகல் மூன்றை தொட்டது. கிராமத்தில் உள்ள நண்பர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டு, மீண்டும் வந்த வழியாக நடைபயணத்தை மேற்கொண்டோம். அடிவாரம் வந்து அடையும் போது இருட்ட தொடங்கி விட்டது. சுமார் நான்கு மணி நேரம் நடைக்கு பிறகு அடிவாரம் வந்தடைந்தோம்.

பிறகு எங்களோடு இந்த தேடலை நடத்திய, நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்து இல்லம் நோக்கி புறப்பட்டோம். இதை நாம் தான் கண்டுபிடித்தோம், அப்படி யாராவது சொன்னால் அது நகைப்புக்குறியது. எனவே காட்டுக்குள் மலை பிரதேசத்தின் நடுவில் உள்ள இந்த இடுதுளைகளுடன் கூடிய சுமார் 28 கல்திட்டைகளை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் பணியில் நாங்களும் சிறு தொண்டு ஆற்றினோம்.

– யு.வு. மோகன்

சு+ழியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்

Leave a Reply