பாண்டியரின் வரலாற்றை முதலில் எழுதிய மங்கள அரையன் என்னும் வைத்தியக் குல வீரர்கள்

பாண்டியனது ஆட்‌சியில்‌ முற்பகுதியில்‌ எல்‌லாப்‌ படைகட்கும்‌ மாசாமந்தானாக (மகா சாமந்தாதிபதி – பெரும் படைத்தலைவன்) விளங்கியவன்‌ சாத்தன் கணபதி ஆவான். அதனால் சாமந்‌த பீமன்‌ என்று வழங்கப்பெற்றவன்‌. இவன் வைத்திய குலத்தில் பிறந்தவன். இவன்‌ திருப்பரங்‌குன்றத்திலுள்ள கோயிலுக்குத்‌ திருப்பணி புரிந்து அங்குள்ள திருக்குளத்தையும்‌ திருத்தி அறச்செயல்ககளையும்‌ ஒழுங்குபடுத்தினான்‌ என்று அவ்வூரிலுள்ள பாண்டியன் பராந்தகனது ஆறாம் ஆண்டு கல்வெட்டொன்று உணர்த்துகின்றது. இவன்‌ திருப்பரங்குன்றத்தில்‌ சிவபிரானுக்குக்‌ கோயில்‌ அமைத்துத்‌ தன் வேந்தனுடைய ஆறாம் ஆட்சியாண்டில்‌ அதில் கடவுளை நிலைப்படுத்தினான். இவனுடைய மனைவி நக்கன் கொற்றி என்பாள்‌ அவ்வூரில்‌ துர்க்கைக்கும்‌ ஜேஷ்டா என்ற சேட்டைக்‌கும்‌ வெவ்வேறு கோயில்‌ அமைத்தாள் அக்கல்வெட்டின்‌ பிற்பகுதியால்‌ அறியப்படுகின்றது

அவனுடைய தம்பி ஏனாதி சாத்தன் சாத்தன் . பெரு வீரனான இத்தலைவன்‌ தமிழ்ப்‌ புலமையுடையவனாகவுமிருந்து பாண்டி வேந்தர்‌ பலருடைய வரலாறுகளைப் பாடி அதனை வேள்விக்குடிச் செப்பேடுகளில்‌ தமிழ்ப் பகுதியில் சேர்த்த பெருமை வாய்ந்தவன்‌, எனவே, அறம்புரிந்த அரசனுடைய முன்னோர்கள்‌ வரலாற்றைச்‌ செப்பேடுகளில்‌ வரைந்துவைக்கும்‌ வழக்கத்தைப்‌ பாண்டி நாட்டில்‌ முதலில்‌ தோற்றுவித்‌தவன்‌ இவனேயாவன்‌. ஏனாதி என்ற பட்டம் பெற்றுள்ளதால், இவனும் ஒரு படைக்குத் தலைவனாக இருந்துள்ளான்.

எனவே மன்னர்களின் செப்பேடு எழுதும் மக்கள் கூட தனிப்பட்ட முறையில் சாதனை படைத்த மக்களாகவே இருந்திருக்க வேண்டியுள்ளது.

மேலும் இந்த வேள்விக்குடி செப்பேட்டில் உள்ள பிராமணருக்கு நிலத்தை மீட்டுக் கொடுக்கும் ஆணையை நிறைவேற்றும் அதிகாரம், கரவந்தபுரத்து வாசியான மூவேந்த மங்கல பேரரையன் ஆன வைத்திய சிகாமணி மாறன் காரி என்பான் நியமிக்கப்பட்ட செய்தியும் காணப்படுகிறது. மேற் குறிப்பிட்ட அனைவருமே மருத்துவம் பார்க்கும், வைத்திய குலத்தைச் சேர்ந்த வீரர்கள். நாவிதர் என்றும், வைத்தியர் என்றும் என்ற மருத்துவ தொழில் புரிந்தோர், தமிழகத்தில் மங்கல அரையன், மங்கள ராஜன் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அரசருக்குக் கீழே குறுநில ஆட்சியாளர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களே வட பகுதியிலும் ஆந்திரப் பகுதியிலும் நியோகி நயீ பிராமணர், மங்களா, மங்கலி என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் ஒரு சாரார் சடங்கு நிகழ்வுகளின் போது, மங்கள இசை வாசிப்போராகவும் இருந்துள்ளனர். எட்கர் தர்ஸ்டன் குறிப்புகள் படி 1900 களில் இந்த மங்கள இசை வாசிப்போர் இசை வேளாளர் என அழைக்கப்பட்டுள்ளனர். இதனைப் பற்றி முன்பே பதிவிட்டுள்ளேன்..

Support and Share.

Buy Books on www.heritager.in