நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர்

நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர்

www.heritager.in

வல(ள)ஞ்சியர், நாளு தேசிகன், நகரம், வைசிய வாணிய நகரத்தார், வைசியர், செட்டிகள், மணிகிராமம், நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பெயர்களில் வணிகர் சங்கங்கள் பணியாற்றின.

ஐய ஒளே'(ஐஹொளே) ஐயாபொழில், ஆரியபுரா அல்லது நான தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகர் சங்கம் தக்கணத்திலும் தமிழகத்திலும் பல கிளைகளோடு பணியாற்றி வந்தது. இது வீர பளஞ்ச மதத்தைப் பாதுகாத்து வந்தது. இதன் உறுப்பினர் ஐம்பொழில் பரமேசுவரி எனப்பட்ட ஜயபொழில் நாச்சியார் என்ற அம்மனே வணங்கி வந்தனர். அவருள். ஆயிரம் மாவட்டத்தார். பதினெண் பூமியார், முப்பத் திரண்டு வளர்புரத்தார், பதினென் பட்டினத்தார், கடி கைத்த வளத்தார் (64 வணிக அவையார்) எனப்பல.

இத்தகைய வணிகர் வருணனையைப் பட்டினப்பாலே யிலும் காணலாம். உட்பிரிவுகள் இருந்தன. அவர்கள் பல நாடுகளில் சுற்றி நிலவழியாலும் கடல் வழியாலும் ஆறு நாடுகளில் நுழைந்த தாகக் கூறியுள்ளனர். அவர்கள் சையாம், சுமத்திரா, பர்மா, இலங்கை நாடுகளிலும் வாணிகம் செய்தனர்.

இச்சங்கத்தின் தலைமையிடம் தக்கணத்தில் ஐஹொளே என்ற ஊரில் இருந்தது. அதனால் இச்சங்க உறுப்பினர் ‘ஐயவளெபுர பரமேசுவரி மக்கள் எனப்பட்டனர். இவர்கள் பலமொழி பேசுவோர்; பல நாட்டினர், இவருள் சுதேசி வணிகர், பரதேசி வணிகர், நாளுதேசி வணிகர் என்று முப் பெரும் பிரிவினர் இருந்தனர். இவர்கள் நெல் முதலிய தானிய வகைகளையும் மிளகு, எள், பாக்கு, குதிரைகள், யானைகள், நவரத்தினங்கள் முதலிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வாணிகம் செய்தனர். இவர்கள் சங்கவேலைகள் ‘ஐநூற்றுவர் அடங்கிய சபையால் செயற்படுத்தப்பட்டன என்று கொள்ளலாம். இச்சபையர் காட்டுர் என்ற ஊரை வீரபட்டணம் எனப் பெயர் மாற்றினர்; நாட்டாரைக் கொண்டும் நகரத்தாரைக்கொண்டும் ஒரு கிராமத்தை வணிகர் கிராமமாக மாற்றிக்கொண்டனர். இத்தகைய வணிகர் கிராமங்களில், சபையாரைப் போலவே, ஊராட்சி நடத்தினர்; பிற ஊர்களில் கோவில் திருப்பணிகளும் பிற அறங்களும் செய்தனர். சங்கத்து ஒவ்வோர் உறுப்பினரும் சில சமயங்களில் சங்க நிதிக்காக ஆண்டு தோறும் குறிப் பிட்ட தொகையைச் செலுத்தி வந்தனர்; சில சமயங்களில் தாங்கள் விற்ற பொருள்களின் அளவுக்கேற்றவாறு குறிப் பிட்ட தொகையைக் கொடுத்து வந்தனர். சில சமயங்களில் தங்கள் இலாபத்தில் ஒரு பகுதியை அறத்திற்குப் பயன் படுத்தினர். — – – – ** * இச்சங்கத் தலைவன் நானதேசித் தலைவன், பட்டன. சுவாமி, பட்டணக்கிழார், தேசிகன் தண்ட நாயகன் எனப்பல பெயர்களைப் பெற்றிருந்தான். நாடு சுவாமி, மணி காரர், பல கடைகளை மேற்பார்க்கும் அதிகாரி எனப் பல அதிகாரிகள் இச் சங்கத்தில் பணியாற்றினர்.

இச்சங்க உறுப்பினர் மிகுந்த ஒற்றுமையுடன் பணி செய்தனர். தன் வருமானத்தை மறைத்த உறுப்பினன் கடவுளுக்கும் அரசனுக்கும் இனத்துக்கும் துரோகி என்று பழிக்கப்பட்டான். இதன் உறுப்பினர் நகரத்தார் என்றும் அழைக்கப்பட்டனர். எனவே, இவரது வணிகர் சங்கம் நகரம் எனவும் பெயர் பெற்றது. சபையின் உட்பிரிவுகளைப் போலவே நகரமும் பல வாரியங்களைப் பெற்றிருந்தது. நகர கரணத்தார், நகர மத்தியஸ்தர் என்ற அலுவலர் நகரத்தில் வேலை செய்தனர்.”

நமது தமிழகத்தில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகளோடு சிறந்த முறையில் வாணிகம் செய்து வருபவரும், கோவில் திருப்பணிகளில் அளவற்ற ஊக்கம் காட்டி வருபவரும் தனவைசியரே யாவர். இவர்கள் இன்று நகரத்தார் என்று வழங்கப் படுகின்றனர். இவர்கள் 96 நகரங்களை அமைத்துக் கொண்டு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சிலப்பதிகார காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததாகவும், அந்நகரம் கடல் கொந்தளிப்பில் அழிந்தபோது திருச்சிராப்பள்ளி-புதுக் கோட்டைப் பகுதிகளில் குடியேறியதாகவும் கூறுகின்றனர்.

வேந்தன்பட்டி முதலிய நகரங்களில் வாழ்கின்ற நகரத் தாருள் ஒரு சாரார் தம் திருமண இதழ்களின் தொடக் கத்தில் ‘ஐந்நூற்றீசர் திருவருளே முற்கொண்டு’ என்னும் தொடரை அச்சிட்டு வருகின்றனர். நகரத்தார் ஏழு கோவில் களைச் சேர்ந்தவர். அவருள் ஐந்நூற்றிசரை வழிபடுவர் மாத்துார்க் (மாற்றுார்?) கோயிலார் என்பது தெரிகிறது. உறையூர், அரும்பாக்கூர், மண்ணுரர். மணலூர், கண்ணுார்,கருப்பூர், குளத்தூர் என்ற ஏழுர் வகையார்க்கும் ஐந்நூற்றீசர் குலதெய்வம் என்பது கூறப்படுகிறது. மாத்துார்க் கோவில் சிவனுக்கு ஐந்நூற்றீசர் என்பது பெயராகும். –

இளையாற்றங்குடிக் கோவிலைச் சேர்ந்தவருள் அரும்பாற் கிளையரான பட்டணசாமியார் என்பவர் ஒரு வகையினர். இராசா சர். முத்தையா செட்டியார் பட்டணசாமியார் மரபினராவார். இளையாற்றங்குடிக் கோவிலுள் பட்டண சாமி கோவில் ஒன்று இருக்கின்றது. ஐந்நூற்றுவர் சங்கத் தலைவன் பழங்காலத்தில் பட்டணசாமி என்று அழைக்கப் பட்டான் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ?

இவை அனைத்தையும் நோக்கச் சோழர்கால நகரத்தாருள் இவர் முன்னேரும் ஒரு பகுதியினராக இருந்திருக்கலாம் என்று கருதுதல் பொருத்தமாகும். இதே போல இன்று பல பிரிவுகளாக இவ்வணிக குழுவினர் தென்னகத்தின் பல பகுதிகளில் வாழ்கின்றனர்.

சுமத்திராத் தீவில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டில் ( சகம் 1010 , கி.பி. 1088 ) திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வாணிகச் சங்கம் சோழநாட்டில் நடைபெற்று வந்ததாகக் குறிப்புக் காணப்படுகின்றது .

வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினைப்பற்றி முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டூர்க் கல்வெட்டு ஒன்று விரிவான செய்திகளைக் கூறுகின்றது . வீர வளஞ்சிய சமயத் தைப் பாதுகாப்பவர்கள் இவர்களே என்றும் , இவர்கள் வாசதேவன் , கந்தழி , வீரபத்திரன் ஆகிய கடவுளரிடம் தோன்றி யவர்கள் என்றும் , பட்டாரகி (துர்க்கை )யை வழிபடுபவர்கள் இவர்கள் என்றும் அக் கல்வெட்டுக் கூறுகின்றது . இவர்களுள் பல பிரிவினர் உண்டு . நான்கு திசைகளின் ஆயிரம் வட்டங்கள் , பதினெண் நகரங்கள் , முப்பத்திரண்டு வேளர்புரங்கள், அறுபத்து நான்கு கடிகைத்தானங்கள் ஆகியவற்றினின்றும் இவர்கள் வந்தவர்கள் . இவர்கள் குழுவில் செட்டிகள் , செட்டிப் பிள்ளைகள் , கவரர்கள் , கந்தழிகள் , பத்திரகர்கள் , காவுண்ட சுவாமிகள் , சிங்கம் , சிறுபுலி , வலங்கை , வாரியன் ஆகியவர்களும் சேர்ந்திருந்தனர் .

நானாதேசிகள் மயிலார்ப்பு ( மயிலாப்பூர் ) என்னும் இடத்தில் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள் . ஐயப்பொழிலாக இருந்த காட்டூரை வீரப்பட்டினமாக மாற்றவேண்டும் ; எல்லா வரிகளினின்றும் அதற்கு விலக்கு அளிக்கவேண்டும் ; குழுவினர் பெற்றுவந்த ஊதியத்தை இரட்டிப்பு மடங்காக்கவேண்டும் . அன்று முதல் உருவிய வாளுடன் வரிதண்டுவோர்கள், வரிக்காகச் சிறைபிடிப்போர்கள் , வரி
கொடாதவர்களைப் பட்டினி போட்டோ , அல்லது வேறு எந்த வகையிலோ துன்புறுத்துபவர்கள் ஆகிய வணிகர்கள் இந்நகரத்தில் வாழக்கூடாது . அப்படி வாழ்வார்களாயின் அவர்கள் வளஞ்சியர் குலத்தினின்றும் விலக்கப்படுவார்கள் .

எனவே, சோழர் காலத்திலயே இவர்கள் தங்கள் இருக்கும் பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரத்தை பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.

இடங்கையினரைப் பற்றிய தனிக்
குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப்படுவதில்லை ; வலங்கையினருடன் வைத்தே அவர்களைப் பற்றிய செய்திகள் கொடுக்கப் பட்டுள்ளன . எனவே , படைகளுடன் இடங்கையினரும் ஏதேனும்
ஒரு தொடர்பு கொண்டிருந்தனரோ என்று ஊகிக்கவேண்டி யுள்ளது . எனினும் , அவர்கள் பெரும்பாலும் வணிகர்களாகவும் , தொழிலாளராகவுமே பிழைப்பை நடத்தி வந்தனர் எனத் தெரிகின்றது . இவ் வூகத்துக்குச் சான்று ஒன்றும் உள்ளது .

சிங்கள மன்னன் விசயபாகுவின் பொலன்னருவைக் கல்வெட்டு ஒன்று ஒரு செய்தியைக் கொண்டுள்ளது . அவன் புனிதச் சின்னமான புத்த பகவானின் பல் ஒன்றை வைத்து அதன்மேல் கோயில் எழுப்பினான் . அக் கோயிலுக்கு மூன்று கை திருவேளைக்காரன் தலதாயப் பெரும்பள்ளி என்று பெயர் சூட்டி அதை வேளைக்காரரின் பாதுகாப்பில் விட்டுவைத்தான் . அவ்
வேளைக்காரர்கள் மாதாந்திரத்தோங்கூடி , எங்களுக்கு மூதாதை களாயுள்ள வளஞ்சியரையும் எங்களோடு கூடிவரும் நகரத்தார் உள்ளிட்டாரையும் கூட்டி கலந்து பேசி , மன்னனுடைய விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டு , கல்வெட்டில் வலங்கை , இடங்கைச் சிறுதனம் பிள்ளைகள் , தனம் வடுகர், மலையாளர், பரிவாரக்
கொந்தம் பலகலனையுள்ளிட்ட திருவேளைக்காரோம் என்று கையொப்பமும் இட்டார்கள். கலனையென்றால் தொழி லாளர்கள் என்று பொருள்.

மாதாந்திரத்தாரின் மூதாதையரான் வளஞ்சியரும் , மாதாத் திரத்தாருடன் இணைத்துப் பேசப்படும் நகரத்தாரும் வாணிகம் நடத்தியவர்கள் . வளஞ்சியருக்கும் நகரத்தாருக்கும் உள்ள வேறு பாடு என்ன எனத் தெரியவில்லை . மாதாந்திரத்தாரின்
அல்லது மூல அலுவலகம் வடக்கே பீஜப்பூரின் அண்மையிலுள்ள ஐயப்பொழிலில் அமைந்திருந்தது . வளஞ்சியர்கள் இம்மூல இடத்தைச் சார்ந்தவர்கள் ஆவர் . எனவே , மாதாந்திரத்தாரின் மூதாதையர் வளஞ்சியர் எனக் குறிக்கப்பட்டுள்ளனர் . ஐயப்பொழிலைத் தலைமையிடமாகக் கொண்டு நடைபெற்ற வாணிக நிறுவனத்துக்கு நானாதேசி திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்றும் பெயர் . மாதாந்திரத்தார் படைத்தலைமையின் நிருவாகக் குழுவாவர் . ஆகவே , இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வேளைக்காரர்கள் வாணிகத் துறையுடன் தொடர்பு கொண்டவர்கள் என ஊகிக்க இடமுண்டு .

கோயில்களைப் படையினரிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக் கும் வழக்கம் அந்நாளில் தமிழகத்திலும் இருந்துவந்ததாகப் பல கல்வெட்டுச் செய்திகளின் மூலம் தெரிந்துகொள்ளுகின்றோம். முதலாங் குலோத்துங்கன் காலத்தில் சேரன்மாதேவி பக்தவச்சலன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட சில அறங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மூன்றுகை மாசேனை என்ற பெயருள்ள படை ஒன்றினிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஐந்நூற்றுவர் பிரிவில் உள்ளோர் செட்டிகள் என்றும் அழைக்கபடுகின்றனர். பேரி செட்டிகளுள் ஆயிரத்தான் செட்டி , ஐந்நூற்றான் செட்டி எனப் பிரிவுகள் உண்டு .

மூலம்:

  1. தமிழக ஆட்சி
  2. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

படம்: கருத்துப்படம்