தென்னிலங்கை வளஞ்சியர்.

தென்னகம், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வணிகம் செய்த ஐநூற்றுவரில், வளஞ்சியர் ஒரு முக்கியப் பிரிவினர். இவர்களில் தென்னிலங்கை வளஞ்சியர் என்ற பிரிவு உள்ளது. இவர்கள் இலங்கையை மையமாகக் கொண்ட, தென்னக வளஞ்சியரின் ஒரு பிரிவினர்.வளஞ்சியர் பொதுவாக சோழ ஆதரவாளர்கள். பாண்டிய நாட்டில் வணிகம் செய்த வளஞ்சியர், தென்னிலங்கை வளஞ்சியர் ஆவார்.

ஆனால் பாண்டிய நாட்டுக்கும், சிங்கள நாட்டுக்கும் இருந்த தொடர்பினை பயன்படுத்தி, தென்னிலங்கை வளஞ்சியர் பிரிவு வணிகம் செய்திருக்கலாம். இலங்கையின் புத்த மதக் கோவிலை நிறுவி, புதத்தரின் பல்லை, காத்தவர்கள் இலங்கையைச் சேர்ந்த வளஞ்சியர் ஆவார்.

பாண்டியர் துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள்–நகரத்தார்-மணிக்கிராமத்தார், சாமகபண்டசாலிகள் –நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார்-தென்னிலங்கை வளஞ்சியர் எனப் பல வணிகக் குழுக்கள் இருந்துள்ளன.

தென்னிலங்கை வளஞ்சியர், தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும் என்ற கருத்துப் பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவல்கள், இலங்கைக்கும் தமிழகத்திற்கும் அதாவது மருங்கூர் உட்பட ஏனைய பாண்டியர் துறைமுக மற்றும் வணிக நகரங்களிற்கும் நெடுங்காலத் தொடர்பு இருந்தமையை அதாவது முற்காலப் பாண்டியர் காலமான சங்ககாலத்தில் காலத்தில் தொடர்பு இருந்தமையை உறுதிப்படுத்தப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுகள் வளஞ்சியரை, தென்னிலங்கை வளஞ்சியர் என குறிப்பிடுகின்றன. வேள்விக்குடி கோவிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும் திசையாயிரத்துநூற்றுவரும் கட்டச்செய்தனர் எனக் கல்வெட்டு கூறுகிறது. தென்னிலங்கை வளஞ்சியர் தொடர்பான தகவல்கள் வேள்விக்குடி கோவில் பற்றியும், கண்டியூர் பற்றியும் தொடர்புபட்டுள்ளது. செம்பியன் கண்டியூர் அகழாய்வு மூலம் இலங்கை தொடர்பான சில தகவல்கள் அறியப்பட்டுள்ளன