தமிழக வணிகக் குழுக்களும், தமிழர் பொருளாதார வரலாறும் – தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி

இந்தியப் பெருங்கடலில், பண்டைய மற்றும் மத்திய கால வாணிபச் செயல்பாடுகள்:

நிலவுடைமைச் சமூக அமைப்பில் அதன் வளர்ச்சி நிலையின் அடையாளங்களில் ஒன்றாக வணிகக் குழுக்கள் அமைகின்றன. கில்டு (guild) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதையே தமிழில் வணிகக் குழு என்று குறிப்பிடுவது மரபாக உள்ளது.

தமிழ்நாட்டில் நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சிக் கட்டமாக மத்தியகாலத் தமிழகம் அமைகிறது. இக் காலத்தில் ஆட்சிப்பரப்பு விரிவடைந்திருந்தது. அத்துடன் வேளாண் பொருளாதாரம் வளர்ச்சி யுற்றிருந்தது.

இத்தகைய சமூகச்சூழலில் உள்நாட்டு வாணிபமும் அயல்நாட்டு வாணிபமும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருந்தன. வணிகர்கள் தமக்குள் குழுக் களை அமைத்துக்கொண்டு செயல்பட்டனர். சோழர் காலக் கல்வெட்டுக்களும், பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுக்களும் இவ்வணிகக் குழுக்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. ‘அய்நூற்றுவர்’, ‘அஞ்சு வண்ணம்’, ‘பதினெண் விஷயம்’, ‘பதினெண் பூமி’, ‘நகரம்’, ‘நானாதேசி’ என்ற பெயர்களில் செயல் பட்ட வணிகக்குழுக்கள் குறித்த செய்திகள் கல் வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. (மொத்தம் 18 குழுக்கள் செயல்பட்டுள்ளன).

ஒரு நாட்டின் சமூக வரலாற்றாய்வில் வாணிபக் குழுக்கல் குறித்த ஆய்வு அவசியமான ஒன்று, வாணிபப் பொருட்கள் சரக்கு மதிப்பை மட்டும் கொண்டவையல்ல. அச்சமூகத்தின் நாகரிகம் பண்பாடு ஆகியனவற்றுடன் நெருக்கமான தொடர்புடையன வாணிபக் குழுக்கள், வாணிபப் பொருட்கள் தொடர்பால பெயர்களை மட்டும் பட்டியலிடாது அவை குறித்து ஆழமாக ஆராய வேண்டியது அவசியம்.

வாணிபக் குழுக்கள் தொடர்பாக தென் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும் கிடைத்த கல்வெட்டுக்களை அவர். இக்கட்டுரையில் அவர் ஆராய்கிறார். கட்டுரையின் தொடக்கத்தில் இக்கல்வெட்டுக்கள் கிடைத்துள்ள நிலப்பகுதிகளை வகைப்படுத்தி அட்டவணை வடிவில் சுட்டிக் காட்டுகிறார். அதன்படி பார்த்தால் ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி 16-ஆம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தைச் சார்ந்ததாக ஆத்திரம் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் மொத்த எண்ணிக்கை 314 ஆகும். இவற்றுள் 118 கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டிலும், கர்நாடகத்தில் 113 கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. காலவரிசைப்படி இவற்றைத் தொகுத்துள்ள கரோஷிமா, சோழர்களின் ஆட்சி உச்சக்கட்டத்தில் இருந்த 11,12- ஆம் நூற்றாண்டில் இக்கல்வெட்டுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன் என்ற வினாவை எழுப்புகிறார்.

கடந்த கால ஆய்வுகளில் மணிக்கிராமம் என்ற வணிகச் குழுவின் நடவடிக்கைகள் குறித்த புதுக்கோட்டை மாவுட்டப் பகுதிக் கல்வெட்டுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. உண்மையில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங் களில் புதுக்கோட்டை மாவட்டத்தை விட அதிக எண்ணிக்கை யிலான கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. எனவே எதிர்கால ஆய்வுகளில் இப்பகுதிகளில் கிடைக்கும் கல்வெட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும்.

இக்கல்வெட்டுக்களில் பல்வேறு வகையான செய்திகள் இடம் பெற்றுள்ளன. சில கல்வெட்டுக்கள் வணிகக் குழுக்களின் பெயரால் அமைந்த கோவில்கள் குளங்களைக் குறிப்பிடுகின்றன. சான்றாக, மியான்மர் நாட்டில் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டு ‘நானாதேசி விண்ணகர்’ என்ற பெயரிலான கோவிலையும் கோட்டை மாவட்டத்தில் கிடைத்துள்ள, முளி சந்தைக் கல்வெட்டு அய்நூற்றுவர் பேரேரி’ என்ற நீர் நிலையையும் குறிப்பிடுவதைக் கூறலாம்.

சில கல்வெட்டுக்கள் வணிக குழுவைச் சேர்ந்த ஒருவன் கொடை வழங்கியதைக் குறிப்பிடுகின்றன. தஞ்சை மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உள்ள கல்வெட்டொன்று. திசை.ஆயிரத்து அய்நூற்றுவன் என்ற வேங்கடன் சிங்கம் என்பவன், கோவிலில் நந்தாவிளக்கு எரிக்க நிலக்கொடை வழங்கியதைக் குறிப்பிடுகிறது.

பல கல்வெட்டுக்கள். வணிகக் குழுக்கள் கூடியெடுத்த முடிவுகள், ஒப்பந்தங்கள் ஆகியனவற்றைக் குறிப்பிடுகின்றன. எறிவீரப்பட்டினம்

தமிழ் வணிகக் குழுக்களின் கல்வெட்டுகளில் எறி வீர பட்டினம் என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. இச்சொல் குறித்து கல்வெட்டாய்வாளர்கள் வேறுபட்ட விளக்கங்களைக் கடந்த காலத்தில் அளித்துள்ளனர்.

வணிக நகரம் என்று நா.சுப்பிரமணியனும், கோட்டைக்குள் உள்ள சந்தை என்று வெங்கட்ராம அய்யரும், எறி வீரர்களால் (போர் வீரர்கள்) பாதுகாக்கப்படும் சந்தை நகரங்கள் என்று இந்திரபாலாவும் கருதுகின்றனர்.

நகரத்திற்கும் பட்டிணத்திற்கும் இடைப்பட்ட தொலை தூரத்தில் அமைக்கப்பட்ட அங்காடி நிலையங்களாக, ஹால் என்ற அய்ரோப்பியர் கருதுகிறார். சிறப்புரிமை பெற்ற நகரம் என்றும், இங்கு வணிகர்களது பாதுகாக்கப்பட்ட பண்டகசாலை இருந்தது என்றும் செம்பகலெட்சுமி கருதுகிறார்.

இவ்விளக்கங்களில் இந்திரபாலாவின் விளக்கம் சற்று வேறுபாடானதாக உள்ளது. இலங்கையிலும் இந்தியாவிலும் கிடைத்துள்ள கல்வெட்டுகளை ஒப்பிட்டு ஆராயும் போது இக்கருத்தைப் பெறமுடிகிறது. வீரகுடி என்ற பெயரிலான போர் வீரர்கள் வணிகர்களுக்கு எதிரானவருடன் போரிட்டு வணிகர் களைப் பாதுகாத்து உள்ளனர். இதனால் வணிகக்குழுக்களின் கல்வெட்டுக்களில் ‘நம்மகன்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர். உள்ளுர் ஆட்சியாளன் ஒருவனால் சிறையில் அடைக்கப்பட்ட வீரகுடியார் ஒருவனைப் பணம் கொடுத்து வணிகர்கள் மீட்டுள்ளனர்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலத்தில் வீரகுடியார் போன்று படைக்கலம் ஏந்தியோர் எல்லா வாணிப நகரங்களிலும் 84

ஓர் அங்கமாக இருந்துள்ளனர். எனவே எறிவீரபட்ட ஒரு நகரமாகக் கருத வேண்டியதில்லை.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் காணக்கிடைக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை வடமொழிக் கல்வெட்டுக்கள். தென்கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் சில தமிழ்க் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை ஏழு ஆகும். தென் தாய்லாந்தின் கோவில் ஒன்றின் அருங்காட்சியகத்தில் செவ்வக வடிவில் தட்டையான கல்(3.7 × 7.5 X 3 செ.மீ) ஒன்றுள்ளது. தொல் தமிழ்க் கல்வெட்டு (பிராமி) ஒன்று இக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அது வருமாறு:

பெரும்பத்தன் கல்

பெரும் என்பது பெரிதானது என்பதையும் பத்தன் என்பது பொற்கொல்லரையும் குறிக்கும். இக்கல்லின் உரிமையாளரின் பட்டமாகவோ பெயராகவோ இது இருக்கலாம். பொற்கொல்லர் ஒருவருக்கு உரிமையான இக்கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்தின் அடிப்படையில் கி.மு. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டைக் குறிப்பிடலாம். தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தமிழ்க் கல்வெட்டு இதுவாகும். தமிழ்நாட்டில் இருந்து பொற்கொல்லர் ஒருவர் இடம்பெயர்ந்து இப்பகுதிக்கு வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

குளம் ஒன்றை ஒருவர் உருவாக்கி அதை ‘மணிக் கிராமத்தார் சேனமுகத்தார்’ என்ற வணிகக் குழுக்களின் பாதுகாப்பில் ஒப்படைத்துள்ளார். இச்செய்தியைக் கூறும் கல்வெட்டு தாய் லாந்தின் அருங்காட்சியகம் ஒன்றில் உள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் மணிக்கிராமம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தழைத்து வளர்ந்திருந்த தமிழ் வணிகக்குழுவாகும். தென் கிழக்கு ஆசியாவில் தமிழ் வணிகர்களின் வாணிப நடவடிக்கைக்கு இக்கல்வெட்டு, சான்றாக அமைகிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு எனலாம்.

வடமேற்கு சுமத்திராவில் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட் டொன்று கி.பி.1088-ஆம் ஆண்டு காலத்தியது. இது ‘அய் நூற்றுவர்’ என்ற வணிகக்குழுவைக் குறிப்பிடுகிறது.

அய்நூற்றுவர்

இடைக்காலத் தமிழகத்தின் ‘அய்நூற்றுவர்’ என்ற பெயரிலான வணிகக் குழுவும் ஒன்றாகும். வணிகக் அய்நூற்றுவர் தொடர்பான கல்வெட்டுக்கள் பலவற்றில் குழுக்களில் மெய்கீர்த்தி இடம் பெற்றுள்ளது. வட மொழியில் இதை பிரசஸ்தி என்பர். கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் இது இடம் பெறும். அய்நூற்றுவர் தொடர்பான மெய்கீர்த்தியில் காலத்தால் முந்தியதாக இராமனாதபுரம் மாவட்டம் கமுதியில் கிடைத்துள்ள கல்வெட்டில் இடம் பெற்றுள்ள மெய்கீர்த்திப் பகுதி அமைகிறது. இதன் காலம் பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகும்.

கர்நாடகத்தில் பெல்காம் மாவட்டத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. ஆயிரத்தைச் சார்ந்தது. இக் கல்வெட்டிலும் அய்நூற்றுவரின் மெய்கீர்த்தி இடம் பெற்றுள்ளது. கமுதிக் கல்வெட்டில் அய்நூற்றுவர் என்ற பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் அதில் அடங்கிய குழுவினரின் பெயர்களான ‘செட்டி’ ‘செட்டிபுத்திரன்’ ‘கவரை’ என்பன குறிப்பிடப்பட்டு உள்ளன. வாசுதேவன் மரபில் வந்தோராகவும், பரமேஸ்வரியின் மகன்களாகவும் மெய்கீர்த்தி குறிப்பிடுகிறது. கமுதிக் கல்வெட்டு பெல்காம் பகுதிக் கல்வெட்டை ஒத்ததாகவே உள்ளது.

மதுரை மாவட்டம் சமுத்திரபட்டியில் கிடைத்துள்ள 1050- ஆம் ஆண்டுக் காலத்தியக் கல்வெட்டு, கமுதிக் கல்வெட்டை விட விரிவானது. ஆனால் பெல்காம் பகுதிக் கல்வெட்டில் காணப்படும் மிகைப்படுத்தப்படும் கூற்றுகள் இதில் காணப்படவில்லை. கன்னட மொழிக் கல்வெட்டுக்கள் சிலவும் அய்நூற்றுவரைக் குறிப்பிடு கின்றன. இக்கல்வெட்டுச் செய்திகள் பரந்துபட்ட பகுதியில் செயல்பட்ட வணிகக்குழுவாக அய்நூற்றுவர் என்ற வணிகக் குழுவை அடையாளம் காட்டுகின்றன. பல்வேறு மக்கள் குழுவினர் அல்லது நிர்வாகசபைகள் கூடி எடுத்த முடிவுகள் அல்லது உடன் படிக்கைகள் மேற்கூறிய கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. 55 கல்வெட்டுகளில் இருந்து பெறப்பட்ட செய்திகளின் அடிப் படையில் பார்க்கும் போது பத்து வகையான குழுக்களைக் கண்டறிய முடிகிறது.

முதலாவதாக பெரும் வணிகக் குழுவில் 18 வணிகக் குழுக்க இடம் பெற்றுள்ளன. 24 இடங்களில் ‘அய்நூற்றுவர் குழுவும் இடங்களில் ‘செட்டி’ குழுவும் இடம் பெற்று முதலாவது. இரண்டாவது இடம் வகிக்கின்றன. இரண்டாவதாக, நிவு உடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அய்ந்து குழுக்கள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாவதாக குறிப்பிட்ட வட்டாரத்தில் செயல் படும் வணிகர்களாக இருபத்தியிரண்டு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களுள் பலர் குறிப்பிட்ட பொருளை மட்டுமே விற்ப சான்றாக எண்ணெய் விற்பவர்கள் ‘வாணியர்’ என்றும் மீன்விற்பவர் ‘கரையர்’ என்றும் சுட்டப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கிராமத்தில் மட்டுமே வாணிபம் செய்பவர் ‘தலசெட்டி’, ‘திசை செட்டி எனப் பட்டனர். பல்வேறு பெயர்களில் வெற்றிலை வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.

நான்காவதாக வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் விளங்கிய குழுவினர் இடம் பெற்றுள்ளன. அய்ந்தாவதாக வணிகர்களைப் பாதுகாத்த வீரர்கள் அடங்கிய குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இக்குழுக்களின் எண்ணிக்கை 21 ஆகும்.

ஆறாவது குழுவில் ‘அஞ்சுவண்ணம்’, ‘பரதேசி’ என்ற பெயர் களிலான இரு வெளிநாட்டு வணிகக் குழுக்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

உள்ளுர் கடைக்காரர்களாக எட்டு பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கைவினைஞர்களும், நகை வணிகர்களும் எட்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களது எண்ணிக்கை ஆறு ஆகும். வாசனைத்திரவியம் விற்பவர் ஒருவரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

எழுத்தர்கள், தூதர்கள் என ஒன்பதாவது பிரிவில் அய்வர் இடம் பெற்றுள்ளனர். ‘ஓலை வாரியன்’ என்ற பெயரில் எழுத்தரும் ‘ஒட்டன்’ என்ற பெயரில் தூதுவனும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தரகர் என்ற தொழிற்பெயரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது, அஞ்சுவண்ணம்

வெளிநாட்டு வணிகர்களைக் கொண்ட குழு என்று பல ஆய்வாளர்கள் அஞ்சுவண்ணம் குழு குறித்து விளக்கம் அளித்து நீள்ளனர். இவர்களில் யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர் ஆகியோர் அடங்குவர். விசாகப்பட்டினத்தில் கிடைத்துள்ள மூன்று கல்வெட்டுக்களில் அஞ்சுவண்ணம் குழுவைச் சேர்ந்த வணிகர் ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்காவின் மாதோட்டம் என்ற பகுதியில் இருந்து வந்துள்ளார். இவர் கட்டிய பள்ளி (பெரும்பாலும் மசூதியாக இருக்கலாம்) அய்நூற்றுவர் என்ற பெயரைத் தாங்கியுள்ளது. அப்பகுதியை ஆண்ட மன்னன் அவருக்குச் சில முன்னுரிமைகளை வழங்கியுள்ளான். அய்நூற்று வருக்கும் அஞ்சுவண்ணத்துக்கும் இடையேயான நெருக்கமான உறவை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது.

மணிக்கிராமம்

தமிழ்நாட்டில் புதுக்கோட்டைப் பகுதியிலும் கேரளத்திலும் மணிக்கிராமம் என்ற பெயரிலான வணிகக்குழுவின் வாணிப நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. புதுக்கோட்டைப்பகுதிக் கல்வெட்டுக்களின் காலம் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டு ஆகும். இதற்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் திருச்சி மாவட்டத்தின் கோவில்பட்டியிலும், பிரான்மலையிலும் இவ்வணிகக் குழு தொடர்பான சில பதிவுகள் கிடைக்கின்றன.

கோவில்பட்டியில் கிடைத்துள்ள கல்வெட்டில், ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள கணக்கர், கொடும்பாளுர் மணிக்கிராமம் நகரம் சார்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மணிக்கிராமம் வணிக அமைப்பின் மையமாக கொடும்பாளுர் இருந்துள்ளது. ஆயினும் மங்கோலி கல்வெட்டின்படி பார்த்தால், வெற்றிலை, எண்ணெய், பழம் என ஒரு குறிப்பிட்ட பொருளின் விற்பனையில் ஈடுபட்டுள்ள குழுவைக் குறிக்கும் சொல் என்று கருத இடமுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் வலிகண்டபுரம் கல்வெட்டு இது தொடர்பாக இரு முக்கிய செய்திகளைக் குறிப்பிடுகிறது.

நானாதேசி

பதினெண் விஷயம் வணிகக் குழுவை ஒத்த மற்றொரு வணிகக்குழுவைக் குறிக்க நானாதேசி என்ற சொல் பயன்படுத்தப் தமிழக வரணத்தி

பட்டுள்ளது. அய்நூற்றுவர் என்ற பெயரிலான பரந்துபட்ட வணிக நடவடிக்கைகளைக் குறிப்பிடும் போ நானாதேசி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நகரம்

கே.ஆர்.ஹால் என்பவரின் கருத்துப்படி உள்ளூர் வ களும், பிறதொழில் புரிவோரும், ஊர் ஊராகப் பயணம் செய் வணிகர்களும் வந்து செல்லும் போது அவர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான இடமே நகரம் ஆகும். நகரம் என்பது அடிப்படையில் பல்வேறு வணிகர்களின் அமைப்பு அல்லது அவை என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.

முதலாவதாக இக்கல்வெட்டில் இடம் பெறும் நகரத்தார் தம்மை வாணிப நகரத்தார் (எண்ணெய் வணிகர்) என்று அடையாளப்படுத்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பொருளை விற்கும் வணிகக்குழுவும் தனக்கென ‘நகரம்’ என்ற அமைப்பைக் கொண்டிருந்தது என்ற கருத்திற்கு இது வலுவூட்டுகிறது.

இரண்டாவதாக அராகலூர் எண்ணெய் வணிகர்கள், தம்மை ‘பதினெண் பூமி வாணிப நகரத்தார்’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளுகின்றனர். இதன் வாயிலாக அய்நூற்றுவருடனான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பல்வேறு வணிகர்களையோ ஒரு குறிப்பிட்ட வணிகக் குழுவையோ ‘நகரம்’ என்ற அமைப்பு உள்ளடக்கியிருந்தாலும் ஒரு நகரத்தில் உள்ள ‘நகரம்’ என்ற வாணிபக்குழு அய்நூற்றுவர் என்ற வாணிபக் குழுவின் உறுப்பாகும்.

வணிகக்குழு ஒவ்வொன்றும் தனக்கெனப் பொறிகளை (இலச்சினைகள்) கொண்டிருந்தது. வணிகக் குழுக்கள் தொடர்பான கல்வெட்டுக்களில் இவை இடம் பெற்றுள்ளன. இவற்றை யெல்லாம் தொகுத்து கல்வெட்டறிஞர் இராசகோபால் ஆய்வு செய்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் அய்நூற்றுவர்

அய்நூற்றுவர் வணிகக்குழு, இலங்கையில் செயல்பட்டமைக் கான கல்வெட்டுச் சான்றுகள் அந்நாட்டில் கிடைத்துள்ளன.

‘ராஜமகாவிஹாரா’ என்ற பௌத்தப் பள்ளியில் மூன்று தமிழ்க் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுக்களில் இரு கல்வெட்டுக்கள் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒரு கல்வெட்டு சோழ இளவரசியின் கோவில் கொடை தொடர் பானது. இரண்டாவது கல்வெட்டு, கம்மாளருக்கும், வண்ணாருக்கும் ஏற்பட்ட பிணக்கு தொடர்பாக அரசு அதிகாரிகள் விசாரித்து உடன்பாடு ஏற்படுத்தியதைக் குறிப்பிடுகிறது. இந்த புத்த விஹாரின் சுவரில் காணப்படும் சிவலிங்கமும் தூண்களின் அமைப்பும் சைவக்கோவில் ஒன்று கண்டியை ஆண்ட மன்னர் களால் புத்த விஹாரமாக மாற்றப்பட்டதை உணர்த்தி நிற்கின்றன. மூன்றாவது கல்வெட்டு செவ்வக வடிவிலான கல்லில் பொறிக்கப் பட்டுள்ளது. இக் கல்வெட்டை கரோஷிமாவின் வழிகாட்டுதலில் ஆய்வறிஞர்கள் ஒய்.சுப்பராயலுவும், ப.சண்முகமும் படித்துள்ளனர். அதன்படி அய்நூற்றுவர் வணிகக்குழுவின் நடவடிக்கைகளும் அக்குழுவுடன் தொடர்புடைய போர்க்குழுவும் அக்கல்வெட்டில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வணிகக்குழுவினரின் பயணத்தின் போது வீர குடியார் என்ற படைவீரர் குழு பாதுகாப்பளித்துள்ளது. இவ்வாறு பாதுகாப்பு வழங்கியமைக்காக அவர்களுக்குப் பரிசும் சிறப்புரிமைகளும் வழங்கியுள்ளனர். வீரகுடி என்ற படைப்பிரிவினரின் பெயரால் அந்நகரில் உள்ள கோவிலுக்கு வீரமாகாளம் எனப்பெயரிட்டு உள்ளனர். லோகமாதா, அய்நூற்றுவன் பள்ளியில் உள்ள லோகப் பெருஞ் செட்டியார் கோவில் என்ற பெயரிலான கோவில்களுக்கு மகமைப்பணம் வாங்கவும் விளக்கெரிக்க எண்ணெய் வாங்கவும் இவர்கள் உரிமை பெற்றுள்ளனர்.

லோகமாதா அல்லது பரமேஸ்வரி என்றழைக்கப்படும் பெண் தெய்வம் நானாதேசி என்ற பெயரிலான வணிகக்குழுவின் காவல் தெய்வமாக விளங்கியுள்ளது.

மேலும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் அய்நூற்றுவன் பள்ளி என்ற சொல், அய்நூற்றுவர் என்ற வணிகக் குழுவால் நிறுவப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்ததை உணர்த்துகிறது.

அநுராதபுரம் ஊரிலும் தமிழ் வணிகக்குழுக்கள் தொடர்பான சான்றுகள் உள்ளன. தமிழ் வணிகக் குழுவினர் புத்தபள்ளிகளைக் கட்டியுள்ளனர். வணிகக் குடிஇருப்பு ஒன்றையும் ஏழைகளுக்கு குறில் தங்

உதவும் இல்லம் ஒன்றையும் நானாதேசி என்ற வணிகக்குடி நிறுவியுள்ளது. கொழும்பு அருங்காட்சியகத்தில், சைவம், புத்த என்ற இரு சமயங்களையும் சார்ந்த உலோகப்படிமங்கள் இடம் பெற்று உள்ளன. பதினொன்று, பன்னிரண்டு பதிமூன்றாவது நூற்றாண்டுக் காலத்தில் இந்து, பெளத்த சமயப் பண்பாடுகளுக் கிடையிலான ஊடாட்டத்தை இப்படிமங்கள் வெளிப்படுத்து கின்றன.

சைவ சமயம் சார்ந்த உலோகப்படிமங்களில் வீரபத்திரர் என்ற கடவுளின் படிமமும் ஒன்று. இப்படிமத்தின் பீடத்தில் ‘நானா தேசிகன்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதன் எழுத்தமைதி 12. ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். நானாதேசிகளும் குறிப்பாக அவர்களுடன் இணைந்திருந்த வீரகுடியாரும் வணங்கிவந்த போர்க் கடவுள் என்று இதைக் கூறலாம். வீரபத்திரர் வழிபாடு தமிழ் நாட்டை விட இடைக்கால ஆந்திரத்திலும், கர்னாடகத்திலும் செல் வாக்குப் பெற்றிருந்தது. இவ் உலோகப்படிமம் நானாதேசிகளுக்கு உரிமையானதா அல்லது அவர்களால் கோவிலுக்கு வழங்கப் பட்டதா என்பது விவாதத்திற்குரியது. எப்படியிருந்தாலும் இப் பகுதியில் நானாதேசிகள் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந் தார்கள் என்பது உண்மை.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் நானாதேசிகள் இங்கிருந்தமை, அப்பகுதி புத்தமடாலயத்துடன் அவர்கள் தொடர்பு கொண்டிருக் கலாம் என்று கருத இடமளிக்கிறது.

இப்பகுதியில் நிகழ்ந்த சமய, பண்பாட்டுச் செயல்பாடுகள் காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் இருந்து யாத்திரிகர்கள் வந்ததாலும், கோவில் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளன. இவை வாணிப நடவடிக்கைக்குச் சாதகமானவை. பொற்கொல்லர்களும் பதினென் விஷயமும்

நாகப்பட்டிணம் நகரில் மலாய் அல்லது சுமத்திரா நாட்டு மன்னன் ஸ்ரீ விஜயா என்பவன் பௌத்தப் பள்ளி ஒன்றைக் கட்டி யுள்ளான். சின்னலெய்டன் செப்பேடு (1090) இப்பள்ளியை ‘ராஜேந்திரசோழப் பெரும்பள்ளி’, ‘அக்கசாலைப் பெரும்பள்ளி’ என்று குறிப்பிடுகிறது. இவ்விரு பெயர்களும் இருவகையான விளக்கங்களுக்கு இடமளிக்கின்றன. இராஜேந்தி சோழப்பெரும் பள்ளியின் மற்றொரு பெயர் அக்கசாலைப் பெரும் பள்ளி என்று கருதலாமென்றால் முதற்பெயரை அடுத்து ‘ஆன’ (அல்லது) என்ற சொல் கல்வெட்டில் இடம் பெறவில்லை. இராஜேந்திர சோழப்பெரும் பள்ளியில் இடம் பெற்றுள்ள சிறிய பள்ளியாகவும் அக்கசாலைப் பெரும்பள்ளியைக் கருதலாம்.

அக்கசாலை என்பது நாணயம் அச்சிடும் நாணயச் சாலை அல்லது தொழிற்பட்டறையைக் குறிக்கும் சொல்லாகும். இதன் அடிப்படையில் பொற்கொல்லர்களால் நிறுவப்பட்ட பௌத்தப் பள்ளி என்று அக்கசாலைப் பெரும்பள்ளியைக் குறிப்பிடலாம். இவ்வாறு குறிப்பிடுவதற்கு ‘ஸ்வஸ்திஸ்ரீ பதினென் விஷயத்துக்கும் அக்கசாலை நாயகர்’ என்று வரும் கல்வெட்டின் இரண்டாவது வரி தூண்டுகிறது. இவ் உலோகப் படிமமானது இராஜேந்திரப் பெரும் பள்ளியைச் சேர்ந்தது என்பதிலும் திருவிழா உலாவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பதிலும் அய்யமில்லை.

இரண்டாவது வரியில் இடம்பெறும் ‘பதினென் விஷயம்’ என்ற சொல் குறிப்பிடத்தக்க சொல்லாகும். சோழர் ஆட்சியின் போது வணிகக் குழுக்களின் நடவடிக்கைகள் பரவலாக இருந்ததைக் குறித்து, தென் இந்தியக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.பதினென் விஷயம் என்பது ‘அய்யவோள்’ என்ற பெயரில் அறிமுகமாயிருந்த வணிகக் குழுவாகும். இப்பெயர்களில் சில, ஸ்ரீலங்கா, மலாய் தீபகற்பம், சுமத்திரா ஆகிய நாடுகளில் கிடைத்துள்ள தமிழ் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. பதினென் விஷயம் என்ற சொல்லுக்குப் பொருள், பதினெட்டு நாடுகள் என்பதாகும்.

அணிகலன்கள் விற்கும் வணிகர்கள் மேற்கூறிய வாணிபக் குழுக்களில் முக்கிய உறுப்பினர்களாக இருந்துள்ளனர். எனவே பொற்கொல்லர்களுடன் ஆன அவர்களது உறவு இயல்பானது தான். பதினென் விஷயத்தார் அனைவரும் புத்தமதத்தினர் என்ற கருத்து இக்கல்வெட்டின் அடிப்படையில் தோன்றலாம். ஆனால் இந்துக் கடவுளர்களுக்கும் இவ்வமைப்பு கொடை வழங்கியதைப் பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

தம் வெளிநாட்டுத் தொடர்பின் அடிப்படையில் புத்த மதத்தைப் பதினென் விஷயத்தார் பின்பற்றியிருக்க வேண்டும். மேலும் சைவம், வைணவம், மகாயான புத்தம், தேரவாதபுத்தம் அதன் தாந்திரிக வடிவங்கள் ஆகியன ஒவ்வொன்றாக 13-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் தழைத்து வளர்ந்தன.

மேற்கூறிய பௌத்தப்பள்ளியை சுமத்தராவின் மன்னனா விஜயன் கட்டியதும் கைவினைஞர்கள் வணிகர்கள் உடனா அதன் தொடர்பும் சோழர் காலத்திய வணிகர்களின், பன்னாட்டு உறவை வெளிப்படுத்தி நிற்கின்றன. நாகப்பட்டி

நூலின் இரண்டாவது பகுதி சீன மட்பாண்ட ஓடுகள் குறித்த நான்கு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் கடைசி இரண்டு கட்டுரைகள் கோட்ட பட்டிணம் தொடர்பானவை. கோட்டப்பட்டிணம்

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில், ஏவுகணை ஏவும் நிலையமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகில் உள்ள ஊர் கோட்டபட்டணம். தற்போது அய்ம்பது குடியிருப்புகளைக் கொண்டு சிறிய கிராமமாகக் காட்சியளிக்கும் இவ்வூர் ஒரு காலத்தில் முக்கிய வணிக நகரமாகவும், துறைமுக நகரமாகவும் விளங்கியுள்ளது. இப்பகுதியில் கிடைக்கும் மட்பாண்ட ஓடுகள் சீனாவுக்கும் தென் இந்தியாவிற்கும் இடையிலான வாணிபத் தொடர்புக்குச் சான்று பகர்கின்றன. கி.பி.1408-இல் வெளியிடப் பட்ட சீன நாணயம் ஒன்று இங்கு கிடைத்துள்ளது. சீன மட்பாண்ட ஓடுகள் மட்டுமின்றி தாய்லாந்து மட்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.

நூலின் மூன்றாவது பகுதி தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இடைக்காலத் தமிழகம் கொண்டிருந்த வரலாற்றுத் தொடர்பை வெளிப்படுத்துகிறது.

பண்பாட்டு உறவு

வியட்நாம், லாவோஸ், மலேசியா, தாய்லாந்து இந்தோனேசியா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் பண்பாட்டு உறவை கே.வி.ரமேஷ் ஆய்வு செய்துள்ளார். சமஸ்கிருதம், பிராகிருதம் தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுச் செய்தி களை அவர் பயன்படுத்தியுள்ளார். இவை தாய்லாந்தில் காணப் படுகின்றன.

சிவசுப்பிரமணியன் சீனச் சான்றுகளில் புதுச்சேரி குறித்த பதிவுகளை கரோஷிமா ஆய்வு செய்துள்ளார். ‘தென்இந்தியாவைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்’ (1939) என்ற தமது ஆங்கில நூலில் நீலகண்ட சாஸ்திரியார், சீனமொழி ஆவணம் ஒன்றின் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தந்துள்ளார். இதில் சில பிழைகள் காணப்படுவதாகக் கூறி கரோஷிமா தாமே ஒரு மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார். பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர்களின் தலைநகரான மதுரை, தில்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் பெரியபட்டிணம் அவர்களது ஆதரவைப் பெற்று முக்கிய துறைமுகமானது. ஆனால் சோழநாட்டின் துறைமுகமாக 14-ஆம் நூற்றாண்டு முழுவதும் புதுச்சேரி விளங்கியது. பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த சீன மட்பாண்ட ஓடுகள் புதுச்சேரியில் கிடைப்பது இதற்குச் சான்றாகும்.

பெரியபட்டிணம்

இராமேஸ்வரம் பகுதி மண்டபத்தில் இருந்து தென்கிழக்கில் உள்ள ஊர் பெரியபட்டிணம். சோழ மண்டலக் கடற்கரையில் ஒரு முக்கிய துறைமுகமாக விளங்கிய பெரியபட்டிணம் என்ற துறைமுகம் எது என்பதை கரோஷிமா தமது கட்டுரையில் அடையாளம் காண்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைய காயல் என்ற துறைமுகம் தன் செயல்பாட்டை இழந்ததையும் இக்கட்டுரையில் ஆராய்கிறார். இபான்பத்துதா என்ற அரேபியப்பயணி ஃபத்தான் என்று குறிப்பிடும் துறைமுகம் பெரியபட்டிணம் என்பது இவரது கருத்தாகும்.