சங்ககால சிறுகதைகள் போட்டி – (புறநானூறு)

புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்டு புனைவுச் சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்பலாம். சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மின்னூலாக வெளியிடப்படும்.

போட்டியின் விதிமுறைகள்:

  1. Unicode எழுத்துக்களில் Word வடிவில் கதைகளை அனுப்ப வேண்டும்.
    கதையின் நீளம் குறைந்த பட்சம் 3000 முதல் அதிகபட்சம் 5000 சொற்கள் இருக்கலாம்.
  2. புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்ட கதை கரு இருக்க வேண்டும்.
  3. கதையின் முடிவில் நீங்கள் கையாண்ட சங்ககால பாடல் குறிப்புகளை இடவேண்டும்.
  4. சங்க இலக்கியங்களில் இருந்து கதையின் பின்புலத்திற்கு (Background Elements) தேவையான குறிப்புகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கதையின் கரு புறநானூற்று பாடல்களை அடிப்படையாககொண்டே இருக்கவேண்டும்.
  5. கதைக்களம் சங்க கால வாழ்வை ஒட்டி அதனை பிரதிப்பலிப்பாக இருக்க வேண்டும்.
  6. கதை மாந்தரின் தன்மை சங்க கால மக்களின் வாழ்வியலை ஒத்துக்காணப்பட வேண்டும்.
  7. புறநானூறு மற்றும் சங்கப்பாடல்களை ஒருமுறையாவது படிப்பது நலம்.
  8. Fantasy எனப்படும் அதீத கற்பனை கதையாக இருந்தாலும் கதைக்களம் சங்க கால வாழ்வில் நடப்பதாக இருக்க வேண்டும்.
  9. உங்கள் கதை வேறு எங்கும் பதிவு செய்த ஒன்றாக இருக்ககூடாது
  10. சிறந்த கதைகள் தொகுத்து வெளியிடப்படும்
  11. கதை உங்கள் சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.
  12. கதையை போட்டிக்கு அனுப்பிவிட்டு வேறு எங்கும் பதியக் கூடாது,.
  13. விதிமுறைக்கு உட்படாத கதைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  14. எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளை திருத்தி அனுப்புக. பிழைகள்  அதிகம் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  15. கதையினை கதை வடிவில் தருக. உரையாடல்கள், வாக்கியங்கள், தேவையான இடங்களில் நிறுத்தல் குறிகள் போன்றவை. கண்டிப்பாக இருக்கவேண்டும்.
  16. எழுத்தாளர்கள் தங்களின் சரியான பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி அனுப்பவேண்டும். உங்களுடைய தொடர்பு எண்ணை இடவும்
  17. மின்னஞ்சல் அனுப்பும் பொழுது “கதையின் தலைப்பு” “சங்க கால சிறுகதைகள்” “உங்கள் பெயர்” ஆகியவற்றை Subject ல் இட்டு அனுப்பவேண்டும்.
  18. குழந்தைகளும் படிக்ககூடிய வகையில் கதைகள் அமைதல் வேண்டும்.
  19. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31 அக்டோபர் 2020
 
மின்னஞ்சல்: [email protected]
 
ஒருங்கிணைப்பு: வரலாற்று நாவல் வாசகர் வட்டம் மற்றும் தளி மரபாளர் குழு
 
தொடர்புக்கு: 9786068908
 
சிறுகதை பயிற்சி குழுவில் இணைய: https://forms.gle/4pNBrUujHdtUL1D88

5 Comments

  1. கதையானது 3000 முதல் 5000 வார்த்தைகளில் சிறப்பாக வடிவமைக்க குறைந்தது 15 நாட்களாகும். அவ்வகையில் நேரம் செலவழிக்கும் போட்டியாளர்களுக்கு ஏதேனும் பரிசு உண்டா? அல்லது பயன் என்ன?

  2. வணக்கம், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதனை தொகுத்து, அதற்கென்று படங்கள் இட்டு மின்னூலாக வெளியிடப்படும்.

  3. Sir, i have writtena story for ‘sangakala sirukadhai potti’.. and sent through e-mail. But didn’t get anymore acknowledgement regarding this.. and im not sure that u have received or not..

Leave a Reply