கிராதகா!! அழகான காட்டுமிராண்டிகள் – பெருநிலத்தின் கதை

23 ஆம் புலிக்கேசி படத்தில் பின்வரும் இக்காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும் என எண்ணுகிறேன்.

பணி நேரத்தில் துயில் கொள்ளும் காவலனின் மூக்கில் மீசையை விட்டு குடைந்து, கிராதகா என்று வடிவேல் முறைத்துவிட்டு செல்லும் காட்சி. தமிழில் வழங்கும்¢ வழுச் சொற்களில் சில, பூர்வீகக் குடிகளை குறிக்கும் சொற்களாகும். அதில் ஒன்று தான் “கிராதகா” எனும் சொல்லும்.

 

இது கிராந்தி எனும் இமயமலைத் தொடரின் வாழும் திபத்திய பர்மா இன மக்களைக் குறிக்கும் சொல் ஆகும். இவர்களை கிராதா என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கிராதா என்றால் “மலையில் வாழும் காட்டுமிராண்டி மக்கள்” என்று பின்னாளில் பொருள் கூறப்படுகிறது.

இவர்களைப் பற்றி மகாபாரத காப்பியத்தில் மற்ற பன்னிரண்டு மேலுலக ஆதிக் குடிகளில் (Mlechha tribe) ஒன்றாகக் குறிபிடுகிறது. இவர்கள் கௌரவர்களுடன் இணைந்து பாண்டவர்களுடன் போர் செய்ததாகக் குறிப்புகள் உள்ளன.

மகாபாரத போரில் பாசுபதாஸ்திரத்தைப் பெற சிவனை வேண்டி தவம் செய்யும் அர்ஜுனன், காட்டில் உணவு வேண்டி காட்டுபன்றியை வேட்டையாடுகிறான். அங்கு வரும் கிராதகனாக வடிவில் வரும் சிவன், அர்ஜுனனோடு சமர் புரிகிறான். இதனைப் பற்றி மகாபாரதமும், கிரதார்சுனியப் புராணமும் குறிப்பிடுகிறது.

சில இடங்களில் சிவனின் மனைவி பார்வதி, கிராதக இனத்தைச் சேர்ந்தவர் என இதிகாசங்கள் குறிப்பிடுகின்றனர். வால்மீகியின் கூற்றுப்படி, இவர்கள் குழி பறித்து மற்றும் பொறி வைத்து அதில் விலங்குகளை விழச்செய்து வேட்டையாதுவதில் வல்லவர்களாக திகழ்ந்தனர்.

ஆதி இந்தியக் குடிகளில் ஒன்றாக இமயச் சாரலில் வாழும் இம்மக்களுக்கு “முந்தும்” என்ற ஆதிச் சமயத்தைப் பின்பற்றி வருகின்றனர். இவர்களின் இயற்கை வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்தாலும் இது ஆவி வழிபாடு, சைவம், பௌத்தம் ஆகியவற்றின் கலவையாக உள்ளது.

தொல்லியல் ஆய்வுகள் மூலம் இம்மக்களின் சுமார் 12,000 வருட பழமையான தொல்லியல் எச்சங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன.

யசுர்வேதம் “அழகானவர்கள்” எனக்குறிப்பிடப்படும் இவர்களை, கிராதகா வசைமொழியாக மாறியது எப்படி?

Leave a Reply