உலகின் மிகப் பழமையான பானை

 
 
  
 
நமக்கெல்லாம் பானை என்றாலே மெசபடோமியாவின் பீர் பானைகளையும், கிரேக்கத்தின் ஒயின் பானைகளையும் அல்லது எகிப்தையோ நோக்கித்தான் தலைகள் திரும்பும்.
 
நாகரிக வளர்ச்சியை, நாம் மேற்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கிழக்கே சுமார் 16 ஆயிரம் ஆண்டுகள் பழமையானப் பானை ஓடுகள் நமக்கு கிடைத்துள்ளன. ஆம், பொதுவாக நமது எண்ணங்களில் பானை எனபது மெசபடோமியாவில் உருவாகியது என்று தான் இருக்கும். ஏனென்றால் பானைகளைச் சக்கரம் வைத்து உருவாக்கியது அங்குதான் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் உலகின் மிகப் பழமையானப் பானை ஓடுகள், நாகரீக மனிதன் வந்து குடியேறியக் கடைசி இடமான கிழக்காசியாவில் நான் கிடைத்துள்ளது.
 
நீங்கள் படத்தில் பார்ப்பது சக்கரமோ அல்லது எவ்வித கருவிகளோ துணைகளின்றி கைகளால் செய்யப்பட்ட ஜப்பான் நாட்டின் “ஜோமன் பானைகள் (Jomon Pottery)” ஆகும். தொல்லியல் ஆய்வுகள் மூலம் சுமார் 16,000 முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என கருதப்படுகிறது. ஜப்பானில் பானை செய்ய ஆரம்பித்து சுமார் 2,500 ஆண்டுகளுக்கு பிறகு தான் மெசபடோமியாவில் பானைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
இவர்கள் வெறும் பானை ஓடுகளை செய்வது மட்டுமல்லாமல் சுடுமண் பொம்மைகள் செய்வதிலும் முன்னோடியாக திகழ்ந்துள்ளனர். இவர்கள் உருவாக்கிய 10 ஆயிரம் வருட பழமையான சுடுமண் பொம்மை “டோகோ” எனப்படுகிறது.(இரண்டாவது படத்தில் உள்ள) இச்சுடுமண் பொம்மை ஜப்பானின் முக்கியக் கலாச்சார சின்னமாகக் கருதப்படுகிறது.
 
#வந்தேறி_மனிதன்

Leave a Reply