இராஜராஜ சோழர் காலக் கதைகள் – இராஜாராஜ சோழரின் சதய விழா வரலாற்றுச் சிறுகதைப் போட்டி 2023

தளி அறக்கட்டளை மற்றும் Heritager.in | The Cultural Store சார்பாக இராஜாராஜ சோழரின் 1038 சதய விழாவை முன்னிட்டு, இராஜராஜ சோழர் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், கோயில் சமூக, பொருளாதராம் மற்றும் நிர்வாகம் போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு “இராஜராஜ சோழர் காலக் கதைகள்” என்ற போட்டிக்கு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பலாம்.

அனுப்பவேண்டிய கடைசி நாள்: 25.10.2023 (இராஜாராஜ சோழரின் சதய விழா அன்று)

வரலாற்றுச் சிறுகதைகள் எழுத பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். 20 பேர்கள் மட்டுமே அனுமதி, படிவம் கீழே.

வரலாற்று சிறுகதைகள் போட்டி 2023 விண்ணப்பப் படிவம் (google.com)

சிறுகதைக்கு நிபந்தனைகள்.

 1. கதைக்களம் இராஜராஜ சோழர் காலத்தில் நடந்த நிகழ்வை, மேற்கண்ட ஆவணங்களில் வரும் செய்தியை ஒட்டி முழு புனைவாக இருக்கலாம்.
 2. கதையின் தலைவன் இராஜராஜ சோழர் ஆக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆவணச் செய்திகளில் குறிப்பிடப்படும் யாரை வேண்டுமானாலும் மையப்படுத்திக் கதையை எழுதலாம்.
 3. ஆனால் குறைந்தது கதையின் ஏதோ ஒரு பகுதியில் இராஜராஜ சோழர் பற்றி வரவேண்டும்.
 4. அறிவியல் தொழில் நுட்பம், மாயாஜாலங்கள், அதீத கற்பனை உலகில் அமைந்த கதைக்களமாகக் கூட இருக்கலாம்.
 5. முழுக்க முழுக்க புனைவுக் கதையாக இருப்பினும் சோழர் கால சமூக நிர்வாக நிலையைப் பற்றிய வாலாற்று தகவல்களை அறிந்து அதன்படி, கதையை எழுப்பினால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 6. கதையின் இறுதியில் “ மூலங்கள்” என்ற தலைப்பில் கதையில் கூறப்பட்ட வரலாற்று தகவல்களை தனி குறிப்பாக இணைத்து எழுத வேண்டும்.
 7. வரலாற்று தகவல்களைத் தங்கள் கதையில் தேவையான அளவு பயன்படுத்தும் கதை எழுத்தாளருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 8. கதையில் பயன்படுத்தபாட்டுள்ள வரலாற்று தகவலுக்கான மூலங்களை அளிப்பது சிறப்பு
 9. கதை 5 பக்கங்களுக்கு குறைவில்லாமல் 20 பக்கங்கள் மிகாமல் இருக்கவேண்டும். அல்லது 3000 சொற்களுக்கு குறைவில்லாமல்.
 10. இக்கதை வேறெங்கும் வெளியிடப்பட்ட ஒன்றாகவோ, வேறு யாருடைய கதையைப் போன்றோ இருக்கக்கூடாது. இதானால் எழும் எவ்வித பிரச்சனைகள் அனைத்துக்கும் பொறுப்பு போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளரை சேர்ந்தது
 11. சிறுகதைகளை அனுப்பக் கடைசி நாள் 25.10.2023 எழுத்து மற்றும் வாக்கியப் பிழைகள் இல்லாமல், முதலில் வரும் கதைகளுக்கு, போட்டியில் முன்னுரிமை அளிக்கபடும்.
 12. இராஜராஜ சோழர் பற்றிய வரலாற்று தகவலுக்காக சில புத்தகங்கள், ஆவணங்கள் இதற்காக உருவாக்கப்படும் குழுவில் வழங்கப்படும். அதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு புனைவுக் கதையை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.
 13. புதிதாக சிறுகதை எழுத விருப்பமுள்ளவர்களுக்கு பயிற்சிகள் தரப்படும்.
 14. வெற்றி பெற்ற சிறுகதைகள் பின்வருவனவற்றில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
  1. வரலாற்று தகவலை ஒட்டி இருத்தல் – Adherence to Historical Accuracy
  2. கதை விவரிப்பில் புதுமை – Narrative Creativity
  3. கதைகளில் வரும் மாந்தரை வர்ணனை – Character Development
  4. கதை வடிவமைப்பு Elegant Prose
  5. கதைகளில் வரும் உணர்வுப்பூர்வனமா பகுதிகள் Emotional Resonance
  6. வாசிப்பாளர் விருப்பும் விறுவிறுப்பான கதைக்களம் Engaging Plot
  7. கதைக்கு தேவையான காட்சி அமைப்பு Theme Integration
  8. வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, கதையில் உள்ள புதுமை Originality
  9. இணையம், சமூக வலைத்தளம், ஆகியவற்றில் கிடைக்கும் வாசிப்பாளர்களின் வரவேற்பு
  10. இறுதியாக போட்டி ஏற்பாட்டாளர்கள், நடுவர்கள் தரும் தீர்ப்பே இறுதியானது.
 15. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு தலா ரூ. 1500, ரூ. 1000, மற்றும் ரூ. 500 அளிக்கப்படும்.
 16. அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
 17. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் தளி அறக்கட்டளை நூலாக வெளியிடப்படும்.
 18. போட்டியில் சமர்பிக்கப்பட்ட கதைகளின் வெளியீட்டு உரிமை தளி அறக்கட்டளைக்கு உரியது.

சிறுகதை எவ்வாறு எழுதவேண்டும் என்பதை கீழ்கண்ட தளத்தில் அறியலாம்.

சிறுகதை எழுதுவது எவ்வாறு?