ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்

[embedyt] https://www.youtube.com/watch?v=VL120G0maHg[/embedyt]

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன.

– ஆர். பாலகிருஷ்ணன்

தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்வதில் தொல்லியலின் பங்கு பற்றி நன்கு விளக்குகின்றார் நிவேதிதா. கடந்த சில பத்தாண்டுகளில் உருவான தொல்லியல் சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளையும் உத்திகளையும் எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறார். நல்ல தருணத்தில் வந்துள்ள வரவேற்கத்தக்க நூல்.

– சு. தியடோர் பாஸ்கரன்

இந்நூல் மூலமாக தொல் தமிழ் காலத்தையும் நம் முன்னோர்களின் மொழியாற்றல், கைவினை, போர்க்கலை போன்ற ஒப்பற்ற நாகரிகப் பெருமைகளையும் அறிந்துகொள்ள முடியும்.

– ஆ. பத்மாவதி

Leave a Reply