நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்- சா. பாலுசாமி

590

நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகியவற்றை ஆராய்ந்து, இவை அனைத்திலும் உள்ள ஒத்த தன்மைகளைக் கண்டறிந்து, அந்த ஒத்த தன்மை எவ்விதம் கலைக்கோட்பாடாக பரிணமிக்கிறது என்பதை ஆராயும் நூல். நாயக்கர் கால வரலாற்றை சுருக்கமாகச் சொல்லும் இந்நூல், நாயக்கர் காலத்துக்கு முன்பு தோன்றிய கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் அறிமுகப்படுத்துகிறது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்- Naayakkar Kaalak Kalaik Kootpaatukal

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

தமிழகத்தினை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் மூன்று நூற்றாண்டு காலக் கலைப் படைப்புகள் மற்றும் இலக்கியங்களின் வளர்ச்சிப் படிநிலைகளையும் மாற்றங்களையும் நுண்ணணுவினும் நுட்பமாக ஆசிரியர் காட்டியுள்ள பாங்கு வியப்பினை அளிக்கிறது. கலைக்கோட்பாடுகள் இலக்கியத்தையும் கைகோத்து இழுத்துச் சென்றுள்ளன என்பதை நூலின் தொடக்கம் முதல் முடிவுவரை சான்றுகளோடு எடுத்துக்காட்டும் நுண்மாண் நுழைபுலம் மருள வைக்கிறது. தமிழகத்தில் கலை இலக்கிய ஒப்புமை ஆய்வில் மலர்ந்த முதல் நூல் இதுதான் என்பதிலும் தமிழகம் பெற்ற நன்முத்து இது என்பதிலும் எந்த மாறுபட்ட கருத்துக்கும் எள்ளளவும் இடமில்லை.

நாயக்கர் காலக் கலைகளின் வடிவக்கோட்பாடுகளாக,

பெருந்தோற்றம் (Enormousness)
விரிவாக்கம் (Extension)
மரபுத்தொடர்ச்சி (Continuing of Tradition)
பிறபாணிக்கலப்பு (Blending of styles)
மிகு அணியுடைமை (Ornateness)
தன்திறன் காட்டல் (Bravura)
உள்ளடக்கக் கோட்பாடுகளாக,
சமய ஒருமைப்பாடு (Religious integration)
புராண, இதிகாசக் கூறுகள் (Puranic and Epic Features)
மிதுனப்பண்பு (Eroticism)
போர்ப் பண்பு (Martial Quality)
வட்டாரப்பண்பு (Regionalism)
வடிவ – உள்ளடக்கப் பொதுக்கோட்பாடுகளாக,
நாட்டுப்புறக் கூறு (Folk Element)
ஒரு படித்தாயிருத்தல் (Standardization)
முதலியனவும் கண்டறியப்பட்டுள்ளன.

நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகளுக்கான பின்புலங்கள் என்னும் இயலில் இக்கலைக் கோட்பாடுகளின் தோற்றத்திற்கான அக்காலச் சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளும் பல்வேறு பிற காரணிகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகியவற்றை ஆராய்ந்து, இவை அனைத்திலும் உள்ள ஒத்த தன்மைகளைக் கண்டறிந்து, அந்த ஒத்த தன்மை எவ்விதம் கலைக்கோட்பாடாக பரிணமிக்கிறது என்பதை ஆராயும் நூல். நாயக்கர் கால வரலாற்றை சுருக்கமாகச் சொல்லும் இந்நூல், நாயக்கர் காலத்துக்கு முன்பு தோன்றிய கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் அறிமுகப்படுத்துகிறது.

நாயக்கர் காலக் கலைகளில் காணப்படும் முக்கிய தன்மைகளைக் கண்டறிந்து, அத்தன்மைகள் அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் இருக்கின்றனவா? என்றும் ஆராய்கிறது. உதாரணமாக, நாயக்கர் கால திருமால் கோயில்களில் சிவன் தொடர்பான சிற்பங்களும், சிவன் கோயில்களில் திருமால் தொடர்பான சிற்பங்களும் வடிக்கப் பெற்றுள்ளன. தாடிக் கொம்பு செளந்திரராச பெருமாள் கோயில் மண்டபத்தில் திருமால் தொடர்பான மகாவிஷ்ணு, திருவைகுண்டநாதர், இராமர், நரசிம்மர், வேணுகோபாலன், உலகளந்தபெருமாள் ஆகியோரின் சிற்பங்களுடன், நடராசர், தில்லைக்காளி, அகோர வீரபத்திரர் முதலிய சிவபெருமான் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. சிற்பங்களில் இத்தகைய சமய ஒருமைப்பாடு காணப்படுகிறது.

அதுபோலவே நாயக்கர் காலத்தில் தோன்றிய நெல்லிநகர் அருளாளதாசரால் இயற்றப்பட்ட பாகவத புராணம் ஒரு வைணவ நூல். எனினும் அது சிவனைப் போற்றுகிறது. முக்கூடற் பள்ளுவில் சைவ, வைணவ தெய்வங்களைப் போற்றுவதுடன், நாட்டுப்புறச் சிறு தெய்வங்களை வழிபடும் நிகழ்வுகளும், சடங்குகளும் கூறப்பட்டுள்ளன.இவ்வாறு நாயக்கர் காலத்தின் கட்டடம், சிற்பம், ஓவியம் அனைத்திலும் உள்ள பொதுவான தன்மைகள் எவ்வாறு கலைக்கோட்பாடுகளாக உருவாகின என்பதை விளக்கும் அரிய, சிறந்த நூல்

Weight 0.75 kg