கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் – முனைவர். அம்பை மணிவண்ணன்

200

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கோயில் ஆய்வுகள் பெருகிவரும் இன்றைய சூழலில் கோயில் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில், அவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் கோயில் ஆய்வு நெறிமுறைகளைச் சொல்லும்படியான நூல்கள் தமிழில் இதுகாரும் தோன்றவில்லை என்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் “பாண்டிய நாட்டு வைணவக் கோயில்களில் கலையும் கட்டடக் கலையும்” எனும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நான் மேற்கொண்டபோது கோயில் ஆய்வு நெறிமுறைகள் தொடர்பான நூல்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடற்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. இனிவரும் காலத்தில் கோயில் ஆய்வு செய்யும் ஆய்வாளர் களுக்கு இத்தகைய இடற்பாடுகள் நேரா வண்ணம் நெறிமுறைகள் தொடர்பாக ஒரு நூலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அச்சூழலில் தோன்றியது. அதன் காரணமாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக எழுந்ததுவே உங்கள் கரங்களில் திகழும் இந்நூல்.

இந்நூலின்கண் கோயில் ஆய்வு தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் முழுமையாக இடம்பெற்றுள்ளன எனச் சொல்வதற் கில்லை, என்றாலும் தமிழில் கோயில் ஆய்வு நெறிமுறைகளை அறிமுகம் செய்யும் முதல் நூல் இதுவாகும். இதுபோன்று கோயில் ஆய்வு நெறிமுறைகள் தொடர்பாகப் பல ஆய்வு நூல்கள் வெளிவர வேண்டும் என்பது என் அவா. கோயிற்கலைகளில் நல்ல பயிற்சியுள்ள பெரும் பேராசிரியர்கள் இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” என்னும் இந்நூலில் கோயிற்கலைக் கூறுகளைப் பற்றி விளக்கியுள்ளதோடு ஆய்வில் பயன்படுத்தப்பட வேண்டிய நெறிமுறைகளும் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நூல் முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கு மட்டுமேயல்லாது கோயில் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்கண் விளக்கப் பட்டுள்ள செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தொடர்புடைய வரைபடங்கள், நிழற்படங்கள் அந்தந்த இடங்களிலேயே ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன. மேலும் பின்னிணைப்பாகத் தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சங்களின் பட்டியலும், முக்கியமான கலைச் சொற்களும் அவற்றின் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அம்பை மணிவண்ணன் என்பவர் இந்து சமயக் கோயில்கள் சார்ந்த தமிழ் நூல்களை எழுதி வரும் எழுத்தாளர். தேனி மாவட்டம், அம்பாசமுத்திரம் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் தமிழ், வரலாறு பாடங்களில் முதுகலைப் பட்டங்களையும், தமிழில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர். மதுரை மாவட்டம், மேலூர் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் கோயிற்கலை மற்றும் சமயம் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். ஆய்வு நூல்களாகவும் சில நூல்களை வெளியிட்டுள்ளார்.

நூல் உள்ளடக்கம்:

1. ஆய்வும் ஆய்வாளரும் (The Research and the Researcher)

தமிழகக் கோயில் ஆய்வுகள்

ஆய்வின் தொடக்கம்

ஆய்வு நெறியாளரைத் தேர்ந்தெடுத்தல் ஆய்வுத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்

ஆய்வு – ஒரு விளக்கம் ஆய்வின் வகைகள்

ஆய்வாளரின் அடிப்படைப் பண்புகள் ஆய்வும் நிதியும்

1.7.1 ஆய்வுக்கு உதவித்தொகை வழங்கும்

நிறுவனங்கள்

2. ஆய்வுத் திட்டம் (Research Plan)

முன்னுரை

தகவல் வாயில்கள்

நூலகங்கள்

ஆவணக்காப்பகங்கள்

மைசூர் கல்வெட்டுத்துறை

கலைக் கூடங்கள், அருங்காட்சியகங்கள்

நிழற்படங்கள் கிடைக்கும் இடங்கள்

கலை வரலாற்று வல்லுநர்கள்

தகவலாளிகள்

வலைத்தளங்கள்

கருதுகோள்

கருதுகோளை உருவாக்கும் வாயில்கள் 2.2.2 நல்ல கருதுகோளின் இலக்கணம்

ஆய்வின் நோக்கம்

ஆய்வு எல்லை

நில எல்லை

கால எல்லை

ஆய்வுப்பரப்பு

சான்று மூலங்கள்

முதல்நிலைச் சான்றுகள்

துணைநிலைச் சான்றுகள்

துணைநூற்பட்டியல்

குறிப்பு அட்டை அடிக்குறிப்புகள்

பிற்சேர்க்கைகள்

2.9.1 நிழற்படங்கள்

2.9.2 அளவுமுறைகள் 2.9.3 வரைபடங்கள்

2.9.4 தரைப்படங்கள் 2.9.5 அட்டவணைகள்

கோயில் களஆய்வு நெறிமுறைகள் Field Study)

(Methodology of Temple முன்னுரை

3.1. நெறிமுறைகள்

3.1.1 திட்டமிடுதல்

3.1.2 தகவல் சேகரித்தல்

3.1.3 அனுமதி பெறுதல்

3.1.4 களஆய்வு நாட்களைத் திட்டமிடுதல் அடையாள அட்டை

3.1. பொருட்களை ஆயத்த நிலையில் வைத்தல்

3.1.7 களஆய்வு உதவியாளர்

3.1.8 களஆய்வில் கடைபிடிக்க வேண்டியவை

3.1.9 இடர்ப்பாடுகளும் அவற்றைத் தவிர்த்தலும்

3.2 உற்றநோக்கல்

3.3 நேர்காணல்

3.3.1 நேர்க்காணல் வகைகள்

3.3.1.1 கட்டமைப்புடைய நேர்காணல்

3.3.1.2 கட்டமைப்பில்லாத நேர்காணல்

3.3.2 நேர்காணலுக்கு ஆயத்தமாதல்

3.3.3 உத்திகள்

3.3.4 நேர்காணலின் பயன்கள்

3.4 களஆய்வு அனுபவங்கள்

4. கட்டடக்கலை ஆய்வு (Architectural Study)

முன்னுரை

நெறிமுறைகள்

4.1.1 அமைவிடம்

4.1.2 திசையமைப்பு

4.1.3 தரையமைப்பு 4.1.4 அரசபரம்பரையின்

கலைப்பாணிகள்

கட்டடக்கலைக் கூறுகள்

4.2.1 விமானம்

4.2.1.1 அதிட்டானம்

4.2.1.1.1 உபபீடம்

4.2.1.1.2 பிரநாளம்

4.2.1.2 பித்தி

4.2.1.2.1 அரைத்தூண்

4.2.1.2.2 தேவகோட்டம்

4.2.1.2.3 சாளரங்கள்

4.2.1.2.4 கோட்ட பஞ்சரம்

4.2.1.2.5 கும்பபஞ்சரம்

4.2.1.3 பிரஸ்தரம்

4.2.1.3.1 எழுதகம்

4.2.1.3.2 கபோதம்

4.2.1.3.2.1 கூடுகள்

4.2.1.3.3 யாளிவரி

4.2.1.3.4 விமானத் தளங்கள்

4.2.1.3.5 விமானத் தேவதைகள்

4.2.1.3.6 விமானத் தளச் சிற்பங்கள் 107

4.2.1.4கிரீவம்

4.2.1.5 சிகரம்

4.2.1.6 கலசம்

4.2.1. அஷ்டாங்க விமானம்

4.2.2 மண்டபங்கள்

4.2.3 பிரகாரங்கள்

4.2.4 கோபுரங்கள்

4.2.5 தெப்பக்குளங்கள்

5. சிற்பக்கலை ஆய்வு (Sculptural Study)

முன்னுரை

சிற்பக்கலை ஆய்வு

நெறிமுறைகள்

5.2.1 கலைப்பாணிகள்

5.2.1.1 பல்லவர் கலைப்பாணி

5.2.1.2 சோழர் கலைப்பாணி

5.2.1.3 பாண்டியர் கலைப்பாணி

5.2.1.4 விசயநகரர் கலைப்பாணி

5.2.2 புராண, இதிகாசங்கள் பற்றிய அறிவுவளம்

5.2.3 நாட்டுப்புறக் கதைகளில் தெளிவு

5.2.4 சிற்பங்களின் அமைப்பு முறைகள்

5.2.5 சிற்பங்களின் அமைதிகள் 5.2.5.1 ஆசனங்கள்

5.2.5.2 அணிகலன்கள்

5.2.5.3.ஆயுதங்கள்

5.2.5.4 கைகளது நிலை

5.2.5.5 வாகனங்கள்

அணுகுமுறைகள்

5.3.1 கருத்தமைதியும் தொனிப்பொருளும்

5.3.2 சிற்பங்களும் மெய்ப்பாடுகளும்

5.3.3 சிற்பங்களும் குறியீடுகளும்

5.3.4 சிற்பங்களும் இயக்க ஆற்றலும்

5.3.5 சிலேடைச் சிற்பங்கள்

சிற்பக் கலைக் கொள்கைகள்

சிற்ப ஆய்வுக் களங்கள் (Sculptural Research Field)

முன்னுரை

விமானச் சிற்பங்கள்

கோபுரச் சிற்பங்கள்

கருவறைச் சிற்பங்கள்

மண்டபச் சிற்பங்கள்

நாட்டார் வழக்காற்றில் சிற்பங்கள் அரச-அரசி உருவங்கள்

நடனச் சிற்பங்கள்

பாலியல் சிற்பங்கள்

செப்புத் திருமேனிகள்

6.11 தேர்ச் சிற்பங்கள் கண்டச் சிற்பங்கள்

6.13 சமயப்பூசல் சிற்பங்கள்

6.14 திருவிழாக்கள்

6.1 தலபுராணங்கள்

6.16 கல்வெட்டுக்கள்

ஓவியக்கலை ஆய்வு (Study of Paintings)

முன்னுரை

விசயநகரநாயக்கரது ஓவியப்பாணி ஓவியம் தொடர்பான நூல்கள்

தமிழகக் கோயில்களும் ஓவியங்களும் 7.3

ஓவியமும் ஆய்வும்

துணைநூற் பட்டியல்

அரசவம்சங்களின் பட்டியல்

கலைசொல் விளக்கம்

Weight 0.300 kg