இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு – நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

275

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

“புராதன இந்தியாவின் நாட்டியக்கலை சம்பந்தமான சகல விடயங்களையும் உள்ளடக்கிய, மிகப் பழமையான நூல் நாட்டிய சாஸ்திரம். நாட்டியக் கலையானது இந்தியா முழுவதற்கும் உரித்தான பொதுச் செல்வம். இக்கலை யானது ஆதியில் ஆரியர் அல்லாத மக்கள் கூட்டத்தினர் மத்தியில் வளர்ந்து, பரிணமித்தது. நாட்டியம் உட்பட இந்தியத் துணைக் கண்டத்தின் கலாசார வளர்ச்சியானது ஏற்கெனவே உள்ள பூர்விக திராவிடப் பண்பாட்டில் கட்டி எழுப்பப்பட்டது நாம் அறிந்ததே.

இந்திய நாட்டியக் கலைக்கு வேண்டிய சகல அம்சங்களையும் அஃதாவது அன்று வரை அறியப்பட்டவற்றை ஒன்று திரட்டி. விதி முறை களையும் கலைநுட்பங்களையும் உருவாக்கி எழுதப்பட்ட முதல் நூலாக நாட்டிய சாஸ்திரம் கருதப்படுகின்றது. இது ஏறத்தாழ கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் எழு தப் பட்டதென ஆராய்ச்சிகள் நிறுவுகின்றன. பரத முனிவர் என்பார் எழுதியதாக நாட்டிய சாஸ்திரத்தின் தோற்றம் பற்றிய மரபுக் கதை கூறுகின்றது.

அறிஞர் மனோ மோகன் கோஷ் நாட்டிய சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். “பரத எனும் சொல் ஆரம்பத்தில் நடிகனையே குறித்தது. பினனர் நாட்டியத்துக்கு இலக்கணம் வகுத்தவனைக் குறிப்ப தாயிற்று’ என்கிறார் மனோமோகன் கோஷ். மேலும், பரத எனும் சொல் பரந்த பொருள்படவும் நாட்டிய சாஸ்திரத் தில் கையாளப்படுகிறது. காட்சி அமைப்போன், விதூஷகன், நடிகன், தயாரிப்பாளன் என்போர் யாவரும் பரதரே.

புராதன இந்தியாவில் வாழ்ந்த பல்வேறு குல மரபுக் குழுக்கள் போல நாட்டியத்தையே தொழிலாகக் கொண்ட ஒரு குல மரபுக் குழு வாழ்ந்திருக்க வேண்டும். இதற்கு நாட்டிய சாஸ்திரத்திலும் சான்று உண்டு. பரதர் என்பது இக்குலமரபுக் குழுவாக இருக்கலாம் எனக் கருதுவதற்குச் சான்றுகள் உண்டு. இக்குழுவும் அதன் வழித்தோன்றல் களும் வடக்கில் இருந்து தெற்குவரை பரவின எனவும் கருத இடமுண்டு. பரத குலத்தினர் பேணிக் காத்த நாட்டிய இலக்கணங்களே நூல் வடிவமாக, பரதநாட்டிய சாஸ்திரம் ஆகிய து என நாம் கருதுவோமாயின், வரலாற்று உண்மையினின்றும் பெரிதும் விலகியவர்களாகமாட்டோம். வடமொழியானது அறிஞர் மொழியாகவும், அரசியல் மொழியாகவும் இருந்த காலகட்டத்தில் எழுதப் பட்டதனால் நாட்டிய சாஸ்திரம் வடமொழியில் காணப்படுகின்றது.

இயற்கை நெறியில் வாழ்ந்து பூர்விகக் குடிகளின் பண்பாடுகளை முற்றிலும் அழித்தொழித்துவிடாமல், வைதிகக் கொள்கையுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரியமாக்கல் நடைபெறுவதற்கு வடமொழி நாட்டிய சாஸ்திரமும் ஓர் எடுத்துக்காட்டு. இதனாலேயே நாட்டியக் கலையானது நாட்டிய வேதம் எனப்பட்டது. அதே வேளையில் நாட்டியமானது இழிகுலத்தோரின் ‘வேதம்’. என இதற்கு முத்திரை பொறித்து ஐந்தாவது வேதமாகக் கொள்ளப்படினும், இது ஏனைய நான்கு வேதங்களின் “பரம்பரை”க்கும் புறம்பானதான திராவிடப் பரம்பரை யினரது நாட்டியக் கலை என இனம் கண்டுகொள்ள முடிகிறது.

பரத நாட்டிய சாஸ்திரத்தை இன்றைய வழக்கில் கூறுவதெனில், பரத நாடக நூல் எனலாம். நாடகம் எனும் கலையினை மேடையில் நடித்துக் காட்டுவதற்கு வேண்டிய சகல அம்சங்களும் இந்நூலில் கையாளப் பட்டுள்ளன.. இதில் 5,560 சூத்திரங்கள் உண்டு. ஆடல், அபிநயம், இசை, சொற் பொருளாய்வு, சொல்லமைப்பு, வெவ்வேறு பேச்சு வழக்குகள் அவற்றின் ஒலியியல், நாடகம் எழுதுதல், நாடகம் அமைத்தல், தயாரித்தல் ஒத்திகை, நடிப்புக்கலை. திறனாய்வு. பார்வையாளர், தயாரிப்பாளர் என்பனவும் நாடகக் கலைக்கு உதவ வேண்டிய ஏனைய தொழில் நுட்பங்களும், நாட்டிய சாஸ்திரத்தில் அடங்கும்.”

– ஆசிரியரின் குறிப்பிலிருந்து

இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு – நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

Weight 0.4 kg