ஆலய நிர்மாண பிம்பலக்ஷண சிற்பநூல் – எம். முத்தையா ஸ்தபதி,

500

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆலய வழிபாடு, மூர்த்தி (விக்கிரஹ) வழிபாடுகளை ஏற்படுத்தி நமக்கு வழிகாட்டி உள்ளார்கள்‌. இது நெடுங்காலமாக இருந்து வருகிறது.

அவ்வித ஆலயங்களை உண்டாக்கி முறைப்படுத்தி கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி ஆலயங்களை உருவாக்குவதற்கும்‌ அதில்‌ மூர்த்தகளை ஸ்தாபித்து ஒரே மனதாக வழிபடுவதற்கும்‌ மனம்‌ சாந்தி அடைவதற்கும்‌ ஏற்றவிதமாக சில்பநூல்களை உண்டாக்கி உள்ளார்கள்‌. அந்த நூல்களை உபயோகித்து கட்டியவைதான்‌ நாம்‌ காணும்‌ அறிய பொக்கிஷங்களான கலைக்‌ கோயில்கள்‌. அதில்‌ கண்கவர்‌ சில்பங்களையும்‌ நம்‌ பண்டைய நாகரீகங்களையும்‌ புனித தன்மையையும்‌ காணப்படுகின்றது. ஒவ்வொன்றும்‌ காரணத்துடன்‌ அமைக்கப்‌ பட்டுள்ளது. கோவிலையே ஒரு சரீரமாகவும்‌ கெற்பக்ருஹம்‌ என்றால்‌ கருவறை என்று பெயர்‌. அது இருட்டாகவும்‌ அர்தமண்டபம்‌ மஹாமண்டபம்‌ பிராகார மண்டபம்‌ கோபுரம்‌ முதலியவை உருவ அங்கங்களாகவும்‌ கோபுரம்‌ பாதமாகவும்‌ ஆக கோவில்‌ எல்லா பாகங்களும்‌ ஆண்டவனுடைய ங்கங்களாக பாவித்து அதில்‌ எந்த இடத்திலும்‌ புனிதத்தன்மை மாறாமல்‌ ஒருமித்த பக்தியுடன்‌ இருப்பதற்‌ காக அமைக்கப்பட்டுள்ளது, இது சம்பந்தமாக சுமார்‌ 28 சில்ப நூல்களுக்கு மேல்‌ உள்ளது. மிக அற்புதமாக பூமியை நிர்ணயம்‌ செய்வது முதல்‌ விக்ரகத்தை பிரதிஷ்டை செய்வது வரை கூறப்பட்டுள்ளது. அதில்‌ அனேக புதையல்கள்‌ உள்ளன. இன்று விஞ்ஞானிகள்‌ கண்டறிந்ததை முன்னோர்கள்‌ அன்றே கண்டு வழிகாட்டியுள்ளார்கள்‌. இன்று காம்பஸ்‌ வைத்து இசை அறிவதை அவர்கள்‌ திக்பரிச்‌ சேதம்‌ தசை அறிதல்‌ எனும்‌ அத்யாயத்தில்‌ மிக சிறப்பாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கை கண்டறிய வழி வகுத்துள்ளார்கள்‌. இன்று பெளண்டே சன்‌ அஸ்திவாரம்‌ போடுகிறார்கள்‌ பொறியாளர்கள்‌. ஆனால்‌ அஸ்இவாரம்‌ குறித்து மிக அருமையாக கூறப்பட்டுள்ளது. ‘ :

குறிப்பாக தஞ்சை பெரிய கோயில்‌ முழுதும்‌ கல்லால்‌ ஆனது, சுமார்‌ 210 அடி உயரம்‌ செய்துள்ளார்கள்‌ இன்றும்‌ அஸ்திவாரத்தில்‌ பழுது ஏற்படவில்லை சுமார்‌ 1000 வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. அதுமாதிரி திருவண்ணாமலை கோபுரம்‌ முதலியவைகளும்‌ எடுத்துகீகாட்டாக உள்ளது மற்றும்‌ ஓல்ப நூல்‌ களில்‌ நகரங்களையும்‌ கிராமங்களையும்‌ எப்படி அமைப்பது என்பது பற்றியும்‌ எந்த இடத்தில்‌ எந்த எந்த தேவாலயங்கள்‌ இருக்கவேண்டும்‌ என்பது பற்றி யு.ம்‌ எத்தனை வீதிகள்‌ வேண்டும்‌ என்பது பற்றியும்‌ மலைமேல்‌ உள்ள நகரம்‌ சமுத்திரத்தை ஒட்டியுள்ள பட்டினங்கள்‌ காடுகள்‌ சூழ்ந்த பகுதியல்‌ உள்ள கிராமங்கள்‌ பட்டினங்கள்‌ இவை குறித்து ஏற்பாடு செய்வதுமாய்‌ செய்துள்ளார்கள்‌. அனேக விதம்‌ கூறப்பட்டுள்ளது. இராஜ வீதிகள்‌ ஸ்வாமி திருவிழா தேர்‌ வரும்‌ வீதிகள்‌ உப வீதிகள்‌ பலவித தொழில்‌ செய்வோர்‌ இருக்கும்‌ இடங்கள்‌ நியாய ஸ்த்தலம்‌ கல்வி பயிலும்‌ இடங்கள்‌ மற்றும்‌ பாதுகாப்பு முதலியவை குறித்து மிகத்‌ தெளிவாக இன்ற ஆச்சிரியப்படும்படி உள்ளது.

கோவில்‌ இல்லா ஊரில்‌ குடியிருக்க வேண்டாம்‌ என்பதற்‌ இணங்க சிறிய ளர்கள்‌, கிராமங்களில்‌ எப்படிப்பட்ட ஆலயம்‌ இருக்கவேண்டும்‌ பெரிய ஊர்கள்‌ பட்டினங்களில்‌ எப்படிப்பட்ட ஆலயங்கள்‌ இருக்கவேண்டும்‌ என்பது பற்றியும்‌ கூறப்பட்டுள்ளது. அதுபோலவே ஆகமங்களிலும்‌ ஆலயவழிபாடு செய்வதற்கு என்ன என்ன விதமாக செய்ய வேண்டும்‌ எப்படி திருவிழா முதலிய வழிபாடுகள்‌ செய்யவேண்டும்‌ என்பது பற்றியும்‌ மிகச்‌ சிறப்பாக கூறப்படுவதே ஆகமங்‌ களாகும்‌. இவைகள்‌ நமது நாட்டின்‌ மிகப்பெரிய சொத்தாகும்‌. இவைகள்‌ பண்நெடுங்காலத்தில்‌ இருந்தே வழக்கத்தில்‌ இருந்து வந்திருக்கிறது. மத்ய காலத்தில்‌ இவை குறைந்தும்‌ இப்பொழுது மீண்டும்‌ மக்களிடம்‌ ஆர்வம்‌ மிகுத்திருக்கிறது. வெளிநாட்டவரும்‌ இதைப்பற்றி ஆராட்சி செய்ய ஆரம்பித்து பல ஆயிரம்‌ மக்கள்‌ நமது ஆலயங்களின்‌ அமைப்பும்‌ கலை நுட்பங்களையும்‌ கண்டு ஆச்சர்யமடைகிறார்கள்‌. இந்நூல்கள்‌ பரம்பரையாக ஒருப்குதியினரிடம்‌ இருந்தும்‌ பிறருக்கு தெரியாமலும்‌ இருந்து வந்திருக்கிறது. இதை எல்லோருக்கும்‌ உபயோகப்படும்‌ வண்ணம்‌ இப்பொழுது ஏற்பாடு செய்திருக்கிறது.

முதலில்‌ சில்ப கையேடு எனச்‌ சிறிதாகவே போட்டு வெளியிட மூயற்சித்‌ தேன்‌. ஆனால்‌ பலவிசயங்களை எழுத எழுத ஒரு நூல்வடிவம்‌ ஆகியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்‌ துறையின்‌ மூலம்‌ எல்லா ஸ்தபதிகளையும்‌ கூட்டி ஒரு கலந்துரையாடல்‌ செய்தோம்‌. அதில்‌ பலபேர்கள்‌ எங்களுக்கு சில்பசாஸ்த்திரம்‌ முறையாக எல்லோரும்‌ தெரிந்து கொள்ளும்‌ படியாக சுருக்கமாகவும்‌ விபரமாகவும்‌ ஒரு நூல்‌ வெளியிட்டால்‌ எங்களுக்கு உபயோகமாய்‌ இருக்கும்‌ என்று கேட்டுக்‌ கொண்டார்கள்‌. அதற்காக ஆரம்பித்ததுதான்‌ இது கொஞ்சம்‌ பெரிய புத்தகமாகவே தயாராகிவிட்டது. இது எல்லா சில்பிகளுக்கும்‌ ஸ்தபதிகளுக்கும்‌ நமது கோயில்‌ நிர்வாகத்தினருக்கும்‌ உதவியாக இருக்கும்‌ என நினைக்கிறேன்‌. இந்நூல்‌ வெளியிட நமது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர்‌ அவர்களும்‌ அரசும்‌ மிகுந்த ஆர்வமாக இருந்தார்கள் . அதற்கு என்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌

 

Weight 1 kg