செம்மொழித் தமிழ் இலக்கணக் கலைச்சொற் களஞ்சியம்: சொல்லதிகாரம் – சி. சுப்பிரமணியன், சு. இராசாராம்

1,700

செவ்வியல் இலக்கணக் கலைச்சொல்லை அறிதல், அக்கலைச்சொல் இடம்பெறும் நூற்பாவின் அதிகாரம், இயல், எண் அறிதல், அதன் கருத்தியல் வளர்ச்சிப் படிநிலைகளை உரையாசிரியர் வழி விரிவாக அறிதல் என்பனவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

செவ்வியல் இலக்கணங்களான தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் ஆகியவற்றுள் காணப்பெறும் கலைச்சொற்களை இனங்கண்டு, அக்கலைச்சொல்லிற்கான கருத்தியல் பொருண்மை அவ்விரு இலக்கணங்களிலும் எங்கெல்லாம் பேசப்பெறுகின்றதோ அவற்றின் வகை, நுணுக்கங்கள் என அனைத்தையும் பயனாளர் புரிந்து கொள்ளும் வகையில் தன்னுள் கொண்டிருக்கின்றது இவ்விலக்கணக் கலைச்சொற்களஞ்சியம்.

செவ்வியல் இலக்கணக் கலைச்சொல்லை அறிதல், அக்கலைச்சொல் இடம்பெறும் நூற்பாவின் அதிகாரம், இயல், எண் அறிதல், அதன் கருத்தியல் வளர்ச்சிப் படிநிலைகளை உரையாசிரியர் வழி விரிவாக அறிதல் என்பனவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மரபிலக்கணக் கொள்கையும் கோட்பாடும் வளர்ந்த வரலாறு, காலந்தோறும் இலக்கணப் பொருண்மை அடைந்துள்ள மாற்றம், செவ்விலக்கியங்களில் இலக்கண விதிகளின் ஆளுகை, உரையாசிரியர்களின் உரைத்திறன் எனப் பல தளங்களில் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்குத் துணைசெய்வதாய் இந்நூலின் போக்கு அமைந்துள்ளது.

பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் முதலானோர் இக்கலைச்சொற் களஞ்சியத்தின் முதன்மைப் பயனாளர்கள்.

இவ்விலக்கணக் கலைச்சொற் களஞ்சியம் தமிழ் இலக்கண மரபையொட்டி எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. இம்மூன்று தொகுதிகளிலும் 1306 இலக்கணக் கலைச்சொற் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. கூடுதல் விளக்கம் கருதி நூலாசிரியர் தரும் கலைச்சொற்களுடன் உரையாசிரியர் அறிமுகப்படுத்தும் கலைச்சொற்களும் தரப்பெற்றுள்ளன.

இக்கலைச்சொற்பதிவுகள் ஒவ்வொன்றும் – நூலாசிரியர்களின் எளிய விளக்கம், நூற்பா, எழுத்துப்பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, பொருள், உரை என்னும் உள்ளடக்கத்தைக் கொண்டன. இவற்றுள் பதிவு சார்ந்த விளக்கம் நூலாசிரியரின் நூற்பாக் கருத்தையும் உரையாசிரியர்களின் உரைக்கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு விரிவாகத் தரப்பெறுகின்றது.

Weight 1.5 kg