வரலாற்றில் வரதட்சணை கொடுமையும் ஒழிப்பும்

விஜயநகர ஆட்சியில் வரதட்சணை ஒழிப்பு

விசய நகரப் பேரரசை ஆண்டவர், மூன்றாம் புக்கருடைய மகனான பிருதா தேவராயர் என்றழைக்கப்பெறும் மூன்றாம் தேவராயர் ஆவார்.

இவர் ‘கஜவேட்டைக்காரர்’ என்ற பட்டப் பெயரையும் உடையவர் ஆவார். சங்கம வம்ச மன்னர்களில் புகழ் வாய்ந்தவர். இவரது பேராசு தெற்கே இலங்கை வரையிலும், ஒரிசா விலிருந்து மலபார் வரையிலும் பரவியிருந்தது.

மூன்றாம் தேவராயரின் நேரடியாட்சியில், வடாற்காடு மாவட்டத்தில் உள்ள வேலூருக்கு அருகின், பாலாற்றங்கரையிலுள்ள, விரிஞ்சிபுரத்தைத் தலைநகராகவும் படைவீட்டைப் பாசறையாகவும் கொண்டு திகழ்ந்தது இராஜகம்பீர ராஜ்யம். இந்த விரிஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் சாசன ஒப்பந்தம், மாப்பிள்ளை எனும் வரனுக்கு தட்சணை (வரதட்சணை) கொடுக்கும் பழக்கத்தைக் கண்டித்திருக்கிறது.

கல்வெட்டு :

நன்றி: திரு. சரவணன் ராஜா

‘ஸ்ரீமன் மஹா இராஜாதி ராஜ பரமேஸ்வா ரான ஸ்ரீவீரப் பிரதாப தேவராய மஹாராஜர், பிரிதிவிராஜ்யம் பண்ணி, அருளா நின்ற ஸகாப் . தம் 1347-இன் மேல் செல்லாநின்ற விஸ்வா வஸு வருஷம் பங்குனி மீ 6க்கு சஷ்டியும், புதன்கிழமையும் பெற்ற அநிழந்து படைளீட் இராஜ்யத்து அஸேஷ வித்ய மஹாஜனங்களும் அக்கரபுஷ்கராணி நோபிதாத(ன்) சந்நிதியிலே நர்மஸ் ஸ்தாபந ஸ்ம பத்ரம் பண்னிக் கொடுத்தபடி இன்றைய நாள் முதலாக இந்த படைவீட்டு ராஜ்யத்து பிராம்மணரில் கன்னடிகர், தமிழர், தெலுங்கர், இலாடர், முதலான அஸெஷ க்ஷேத்ரத்தில் அஸெஷ ஷேத்ரத்தில் அஸெஷயா ஸாவையிலவர்களும் விவாஹம் பண்ணுமிடத்து கன்யா தானமாக (எந்த பணம் பொருள் பெறாமல்) விவாஹ்ம் பண்ணக் கடவராகவும், கன்யாதானம் பண்ணாமல் பொன் வாங்கிப் பெண் குடுத்தால், பொன் குடுத்து விலாஸம் பண்ணினால் இராஜ தண்டத்துக்கும் உட்பட்டு பிராம்மணத்துக்கும் புறம்பாகக் கடவாரென்று பண்ணிரு ஸ்தாயா சமய பத்ரம். தர்ம

இப்படிக்கு. அலெவு விந்ய மஹா ஜனங்கள் எழுத்து, (தெ.இ.க. தொகுதி 1, பக்கம் 83)-

இதிலிருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பொன் வாங்கிப் பெண் எடுக்கும் கொடிய பழக்கம் விஜயநகரப் பேரரசரின் காலத்திலேயே தடைசெய்யப்பட்டுக் கண்டிக்கப்பட்டு உள்ளது தெரிகின்றது. தென்னகப் பகுதியில் அனைத்து மொழிப் பேசும் பகுதிகளிலும், பிராம்மணரும், அவரைச்சார்ந்த பிறரும் பேணி வந்த சமுதாயக் கொடுமைகளுள் ஒன்றான வரதட்சிணை முறை விஜயநகர காலத்தில் வன்மயாகக் கண்டிக்கப்பட்டுள்ளது புலனாகின்றது.

இத்தகைய சமயச்சார்புடைய சமுதாயக் கேடால் உயர்ந்த குடும்பங்களை விட உருக்குலைந்து, சீரழிந்த குடும்பங்கள் பலவாகும். இன்றைய அரசு மேற்கொண்டுள்ள வரதட்சணை ஒழிப்பு சட்ட நடவடிக்கைக்கு முன்னோடியாக விஜய நகரப் பேரரசர் முன்றாம் தேவராயரின் விரிஞ்சிபுர சாசனம் மூலம் தமிழகத்தில் தான் முதன் முறையாக வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

– திருக்கோயில் #Heritager Heritager.in