பல்லவர் மணற்பாறை கோவில்கள் – காஞ்சி வரலாற்று தேடல் #2

பார்க்கவுள்ள இடங்கள்:

அதிகம் அறியப்படாத காஞ்சியிலுள்ள நான்கு பல்லவர்கால மணற்பாறை கோவில்கள்.

நாள்: ஞாயிறு 26 ஜனவரி 2020

காலை. 7 மணி – மாலை 4 மணிவரை

காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால மணற்பாறை எனும் Sandstone கோவில்களைப் பற்றியத் தேடல்.

கச்சிப்பேடு என்று இலக்கியங்கள் கூறும் காஞ்சிபுரம் தமிழகத்தின் முக்கிய சங்க கால மாநகரம் ஆகும். காஞ்சியின் வரலாற்று அடையாளமாக கருதப்படும் பல்லவர் கால மணற்பாறை கோவில்கள் பற்றிய ஒரு வரலாற்று தேடல் இந்நிகழ்வு.

வரலாற்று தேடல்:

கால வெள்ளத்தில் கரைந்து வரும் வரலாற்று சின்னங்களை நோக்கியத் தேடல்.

அறிவியல் போன்றே வரலாறு மற்றும் மரபுச்செய்திகள் என்பது மக்களின் அடிப்படை உரிமை. வரலாற்றினை மக்கள் அறிந்துகொள்ளுவது அவர்களது கடமையும் கூட.
கடந்த நூற்றாண்டின் துவக்கம் கொண்டே பல வரலாற்று அறிஞர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவை பெரிதும் மக்கள் கைகளுக்கு செல்லாமல் நூலகங்களிலும், அச்சகங்களிலும் தூங்கிக் கிடக்கின்றன.

அவற்றை படித்து பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ள தொல்லியல் சின்னங்களை ஆர்வலர்களே தேடிச் செல்லவேண்டும். இதுவே வரலாற்று தேடல் என்ற இந்த நிகழ்வின் அடிப்படை ஆகும். இதனை கடந்த 4 வருடங்களாகப் பல மாவட்டங்களில் செய்துவருகின்றோம்.

மறைந்து வரும் மரபு சின்னங்களைக் காப்பாற்ற, மக்கள் எடுக்கும் ஒரு முதல் முயற்சி, வரலாற்றை நோக்கி தங்களின் தேடலினைத் துவங்குவதாகும்.

பயணத் திட்டம்:

இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள கட்டணம் ஏதுமில்லை. வாகன ஏற்பாடுகள் ஏதுமில்லை. 2-3 கி.மீ நடைபயணம் இருக்கும்.

உங்களுக்கு தேவையான தண்ணீர், உணவு மற்றும் குறிப்பேட்டை கொண்டு வாருங்கள்.

இந்நிகழ்வை ஒருங்கிணைப்பது, நமது ஹெரிட்டேஜர் மின்னிதழ் குழுவினர். அழைக்கவும் 9786068908.

நிகழ்வுக்கு வரும் நண்பர்கள் நேரிடையாக கோவிலுக்கே வரலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் குழுவாக செல்ல விரும்பும் நண்பர்கள் எங்களோடு கலந்து கொள்ளலாம். காஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து வாகனம் மூலம் கோவிலை அடையலாம்.

குழந்தைகளை அழைத்து வாருங்கள்… வரலாற்று தேடலை துவங்குவோம். நிகழ்வுக்கு வரவிருக்கும் நண்பர்கள் கீழ்கண்ட படிவத்தில் தெரிவியுங்கள்.

படிவம்: https://forms.gle/C2XDq9qac7aHQU8L7

நிகழ்வு பக்கம்: https://www.facebook.com/events/2163882147254614/

தேடித் தெரிந்து தெளிவுறுவோம்..

An Exploration event to Historical places in Kanchipuram. It is a free event. Only to share transport cost to travel inside kanchipuram.. Kids are most welcome.. Please call us to register at 9786068908 or use the below form
Kaanchi Varalaatru Thedal Registration Form. (Must)https://forms.gle/C2XDq9qac7aHQU8L7

Heritager: Let’s Explore, Experience and Enlighten

Leave a Reply