ஐநூற்றுவரும், வளஞ்சியரும், நகரத்தாரும்

பாதுகாப்புக்காக மதில் நிறைந்த நகரங்கள் அமைத்து பொருட்களை பெருமளவில் குவித்து வணிகம் செய்த ஐநூற்றுவ குழுவினரில் ஒரு பிரிவினர் நகரத்தார் ஆயினர். அவர்களே இன்றைய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

மற்றொரு ஐநூற்றுவ பிரிவினர் ஐந்நூற்றுவர், வளஞ்சியர் என்று கல்வெட்டுகளில் குறிபிடப்படுகின்றனர். இவர்கள் கடற்கரையோர துறைமுக பட்டணங்களில் ஏறுமதி செய்து, வணிகம் காத்தவர் வளஞ்சியர், பட்டணவர், பட்டணஞ்செட்டி ஆயினர். அவர்களே கவறைகள் என்ற பலிஜர் வளஞ்சியர். எறிவீரப்பட்டணங்கள், வணிக நகரங்களையும், தாவளங்களையும் வளஞ்சியர் கூட காத்தனர். முன்னொரு காலத்தில் இருந்த நிகமா, மணிக்கிராமத்தர் (வணிக கிராமத்தார்) – வாணியர் போன்றோரின் இடைக்கால தொடர்ச்சி இவர்கள். தொல் பழங்காலத்திலிருந்து கரையார், பரதவர் போன்ற கடல்சார் குழுவினருடன் சேர்ந்து கடல் வணிகம் செய்தவர்கள்.

சாத்துக்கள் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துச்சென்றவர்கள் சாத்துச்செட்டிகள்.

ஐநூற்றவ வளஞ்சியர் பெரும்பாலும் தென்னகம் தமிழகம் முழுவதும் தாவளம் அமைத்து அந்தந்த பகுதிகளை சுற்றியுள்ள, சிறு வியாபாரிகளான “ஊர் செட்டிகளுக்கு” பொருட்களை அளிக்கும் Whole Sale Distributor போல செயல்பட்டவர்கள்.

வணிகம் செய்த வணிகர் ஆகிறார். வணிகர் ஒருவராகவும் இருக்கலாம்; பலராகவும் இருக்கலாம்; கூட்டு சேர்ந்த நிறுவனத்தாராகவும் இருக்கலாம்.

வட தமிழகத்தில் பலப்பட்டரை என்று வளஞ்சியரில் சில பிரிவினரை குறிப்பிடுவதுண்டு. இதன் பொருள் பெரிதாக யாருக்கும் தெரியாது.

பல கூலங்களை வைத்து வணிகம் செய்வது பலபட்டடை எனப்பெற்றது. அக்காலத்தில் மளிகைப் பொருள்களும் பிற நுகர் சரக்குகளும் கொண்ட கடைகளின் ஒட்டுமொத்தப் பெயர் இன்றைய பல சரக்கு அங்காடிகளே இந்தப் பல பட்டடை என்பது. இவ்வாறு வணிகம் செய்த தமிழ்ப் புலவர் ஒருவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனப் பெயர் பெற்றார்.

இப்பலபட்டடையார் செட்டி மக்களாக இருந்தனர். இதுவே, இன்றைய செட்டியார் கடைகள்.

தஞ்சாவூர் கொங்கனேசுவரர் கோயில் செப்பேட்டில், “பல பட்டடைச் செட்டியார் வற்த்தகாள் துலுக்கர்லெப்பை பதினெட்டுப் பட்டடை வற்த்தகாள் அனைவரும் (20) என்றுள்ளது. இன்னார் செட்டிக் குழுவினர், 18 வகை இசுலாமியக் குழுவினர். இக்குழுக் களில் நாகை வணிகர் இருந்தனர். இஃதும் ஒரு வணிகக் குழு வாகும். இன்னோர் உள்நாட்டில் வணிகம் புரிவோர். பல பட்டடைப் பேட்டை என்றொரு அங்காடி கூடும் வணிகக் களம் உண்டு.

வணிகர் எட்டு குணங்களைப் பெற்றிருப்பார் – பெற்றிருக்க வேண்டும் என்று பிங்கலம் என்னும் சொற்களஞ்சிய நூல் கூறியுள்ளது. அவை எட்டும் இவை:

1. தனிமை ஆற்றல்,
2. வெறுப்புக் கொள்ளாமை,
3. செய்யத் தக்க இடம் தெரிந்து செய்தல்,
4. நேரத்தில் செயலாற்றல்,
5. எதிர் காலத்தில் நேர்வதைத் தெரிந்து கொள்ளுதல்,
6. பெரும் இழப்பு வந்தாலும் அஞ்சாது மேலும் முயலுதல்.
7. பொருளை ஈட்டுதல்,
8. இல்லத்தார்க்கும் உறவினர்க்கும் பகுத்துக் கொடுத்தல்.

எனவே உங்கள் ஊரில் உள்ள “செட்டியார் கடைகள்” பல நூற்றாண்டுகள் கடந்த தென்னக தமிழ் வணிக வரலாற்றின் எஞ்சிய அடையாளமாக இருக்கலாம்.

Our Whatsapp group: https://chat.whatsapp.com/EPHbtNtUgsVAWSn8795ZQo

Heritager.in

#வளஞ்சியர் #ஐநூற்றுவர் #வணிகக்குடி