சோழர் செப்பேடுகள் – நடன.காசிநாதன்

100

இந்நூல்களில் ஆசிரியர் நடன.காசிநாதன் மேனாள் தொல்லியல் துறை இயக்குனர். ஆகையால் இந்நூல்களில் காணப்படும் விவரங்கள் முழுமையாக, அதிகார பூர்வமானவை. முதல் நூலில் ஆசிரியர், அண்மைக் காலங்களில் கிடைத்த சில புதிய முக்கியச் சான்றுகளை, பழைய சான்றுகளுடன் தொகுத்து அளித்துள்ளார். இவற்றில் முக்கியமாகக் கருதப்படும், பெரம்பலூர் சான்றுகளின் விவரங்கள் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதானவையாக இருக்கும்.

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்நூல்களில் ஆசிரியர் நடன.காசிநாதன் மேனாள் தொல்லியல் துறை இயக்குனர். ஆகையால் இந்நூல்களில் காணப்படும் விவரங்கள் முழுமையாக, அதிகார பூர்வமானவை.

முதல் நூலில் ஆசிரியர், அண்மைக் காலங்களில் கிடைத்த சில புதிய முக்கியச் சான்றுகளை, பழைய சான்றுகளுடன் தொகுத்து அளித்துள்ளார். இவற்றில் முக்கியமாகக் கருதப்படும், பெரம்பலூர் சான்றுகளின் விவரங்கள் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதானவையாக இருக்கும்.

சிறிய நூலேயாயினும், அரிய பல விஷயங்கள் கொண்டதாக உள்ள நூலின் இரண்டாவது, மூன்றாவது அத்தியாயங்களில், தமிழின் தொல்லெழுத்துகளான கிரந்த, பிராகிருத எழுத்துகளின் அமைப்பும் படிக்கும் முறையும் தரப்பட்டுள்ளன. தவிரவும், கல்வெட்டுகளில் பிராகிருத மொழியின் பங்கு விகிதம் மற்றும் எவரால் கையாளப்பட்டது என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது. உருவ எழுத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட எழுத்துவகைகளைக் குறித்து திறம்பட ஆசிரியர் ஆய்ந்து விளக்கமளித்துள்ளார்.

நான்காவது இயலில், பெரிய கோவிலின் அரிய கல்வெட்டுகளைப் பற்றி விவரித்துள்ளார். ஐந்தாவது இயல் முக்கியம் பெறுகிறது. ஏனெனில் இதில் ஆசிரியர், பரசுராமனின் சூளுரையையும் விளக்கப்பட்டுள்ளது.
“பாண்டியன் தலை கொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளானவர்கள் என்று வரும் <உடையார்குடி கல்வெட்டுச் சொற்றொடரை ஆராய்ந்து, முடிவாக, கொலைக்குக் காரணத்தை ஊகிக்கிறார். அதற்கான ஆய்வில் புராணக் கதைகளையும் மற்ற ஆதாரங்களையும் காட்டி, முடிவுக்கு வருகிறார். தீர்க்கமாக பார்க்கவேண்டிய கருத்து.
இரண்டாவது நூலான சோழர் செப்பேடுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், அதன் இறுதி அத்தியாயமேயாகும். சோழர் செப்பேடுகள் சரித்திரத்துக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்துள்ளன. இவ்வாசிரியர் முன்னரே 13 செப்பேட்டு வாசகங்களைப் பதிப்பித்துள்ளார்.

மிகுதியிருந்த செப்பேடுகளின் வாசகங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. முறையே சுந்தர சோழனின் அன்பில் செப்பேடு, முதல் ராஜராஜனின் பெரிய லெயிடன் செப்பேடு, முதல் ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு, வீரராஜேந்திரனின் சாரலா செப்பேடு மற்றும் குலோத்துங்கனின் சிறிய லெயிடன் செப்பேடுகளை இங்கு தந்துள்ளார்.
இவற்றையெல்லாம் விட மிக முக்கியமாக, முதலாம் இராஜாதிராஜனின் திரு இந்தளூர் செப்பேட்டு வாசகம் முழுமையாகத் தரப்பட்டுள்ளது ஆய்வாளர்களுக்கு மிக்க பயன் தரக்கூடியது. இது கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் தனது முப்பத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் வெளியிட்டது.

இந்தத்தொகுப்பு எண்பத்தைந்து செப்பேடுகளைக்கொண்டது. செப்பேட்டின் வளையத்தில், “பரகேஸரி வர்மன் ராஜேந்திர தேவனுடையது என்று சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள விவரத்தையும் மேலும் இவ்வளையத்தில் கோத்த செப்பேடு எண்பத்தாறு என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் ஆசிரியர் தெரிவிக்கிறார்.

Weight 0.25 kg