குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும்

 

 

குறுக்கெழுத்துப் போட்டி

சனிக்கிழமை நமது அடிப்படை தமிழ் இலக்கிய அறிவை சோதித்து பார்த்துவிடுவோம்.

குறுக்கெழுத்துப் போட்டி – நூல்களும் ஆசிரியர்களும்

ஆக்கம்:
பெ. தாமரை & கா. விசயநரசிம்மன்

இடமிருந்து வலம்

1. ஆண்டாள் அருளியது
2. கணிமேதாவியாரால் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றும், மருந்தின் பெயர் கொண்டதுமான நூல்
5. பௌத்த சமயத்தைக் கூறும் காப்பியம்
6. திருமுருகாற்றுப்படையைப் பாடியவர்
7. பதினெண்மேல்கணக்கைச் சார்ந்த நீண்ட பாடல்கள்.
13. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றும், சமண சமய கொள்கை நூலுமாகும்
14. நிகண்டுகளில் ஒன்று

வலமிருந்து இடம்

12. எட்டு திருமணங்களைக் காட்டுவதால் ‘மணநூல்’ என்றும் அழைக்கப்படும் காப்பியம்.
16. மூத்த திருப்பதிகம் பாடிய அருளாளர் (இயற்பெயர்)

மேலிருந்து கீழ்

1. திருமூலர் அருளியது.
3. மாணிக்கவாசகரால் பாடப்பட்டது
4. நக்கீரரால் எழுதப்பட்ட பதினோராம் திருமுறை நூல்
10. குறிஞ்சித்திணைப்பாடல்களைப் பாடியவர்

கீழிருந்து மேல்

8. இவரை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு.
9. தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாங்குடி மருதனாரால் பாடப்பட்டது
11. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
14. தோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட ஐஞ்சிறு காப்பிய சமண சமய நூல்
16. பண்டைய தமிழரின் பெருமைகளைக் காட்டும் புதையல்!

 

விடைகள்:

 

Leave a Reply