வேலூரின் பழங்கால நீர் மேலாண்மை –

வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோட்டையும், கோயிலும், சம்புவராயர், விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் கலைப்பாணிக்கு ஒர் சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.  தமிழ் நாட்டில் உள்ள கோட்டைகளிலேயே சிறந்ததாகவும், கலை நயமும், உறுதியும் கொண்டதாக நிமிர்ந்து நிற்கின்றது.  கௌடில்யாரின்  விஸ்வகர்ம சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள 12 வகையான ேகாட்டைக்குள் “ஏகமுக துர்க்கம்” அதாவது ஒேர வாயில் கொண்ட ேகாட்டையாக நீர் சூழ்ந்தாக கட்டப்பட்டுள்ளது. 

சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும்  கொண்ட அகழி அமைக்கப்பட்டுள்ளது.  3 கீ.மீ சுற்றளவில் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அகழியின் வெளி புறச்சுவர்கள் சுமார் 3 முதல் 5 மீட்டர் வரை கட்டப்பட்டுள்ளது.  தேன் அகழி கோட்டையைச் சுற்றிலும் 67 மீட்டர் அகலத்தில் உள்ளது.

கோட்டையின் தோற்றமும் வரலாறும்

            16 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் விஜய நகர ேபரரசின் வழிதொன்றிய சதாசிவ ேதவ மகாராயர், சம்புவராயர் காலத்தில் ஏற்படுத்திய கோயிலுடன் இணைத்து ேகாட்டையும், நகரமும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.  தேற்கு சான்றாக கோட்டையும், மதிற்சுவர்களும், கோவில் ேகாபுரமும், கல்யாண மண்டபமும், திருசுற்று அமைப்புகளும் விஜயநகர பாணியில் அமைக்கப்பட்டுருப்பதை காணலாம்.  அேத சமயம் உள்ேகாட்டை சுவர்களும், ேகாயில் உட்புறத் தூண்களும் மிகவும் சாதரணமான சம்புவரையர் கால கலைப் பாணியை கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம். விஜயநகரப் பேரரசு தென்னாட்டில் மதுரை, தஞ்சை செஞ்சி சந்திரிகிரி  போன்ற நகரங்களுக்கு தனித்தனியாக தலைவர்களுடன் கூடிய சிறந்த படைகளை அனுப்பி முகமதியர்களின் ஆதிக்கத்தை முறியடித்து அந்நகரங்களில் தங்கள் ஆட்சியை நிறுவுமாறு செய்தது, வெவ்வாறு அனுப்பப்பட்ட படைத்தளபதிகளே நாயக்கர்கள் என அழைக்கப்பட்டனர்.  அத்தகைய படைத்தலைவர்கள் ஆங்காங்ேக தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொண்ட பகுதிகளில் சிறிது சிறிதாக குறுநில மன்னர்கள் ேபால் ஆட்சி செய்ய தொடங்கினர்.

         சதாசிவ ேதவ மகாராயர் காலத்தில் வேலூர் நகர தளபதியாக திகழ்ந்த சின்ன பொம்மு நாயக்கர் தலைமையில் கோட்டையும், கோயிலும், நகரமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  கி.பி.1646 வரை வேலூரில் விஜய நகர ஆட்சி தொடர்ந்து வந்துள்ளது.  அதனாேலயே இவ்வூர் “ராய வேலூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.  பின்பு பீஜப்பூர் சுல்தானான அடில்சாகி என்பவர் வேலூர் கைப்பற்றி சுல்தான்கள் ஆட்சியை நிறுவினார். இவர்களின் ஆட்சி கி.பி.1676 வரை நடந்தது. இதனிடைேய மராட்டியத்தில் வீரசிவாஜி பல ேபார்களை நிகழ்த்தி முகமதியர்களின் பல ேகாட்டைகளை வெற்றி கொண்டார். 

கி.பி.1676-ல் சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரான துக்கொஜிராவ் என்பவர் சுல்தான்களை தோற்கடித்து வேலூரில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார்.  தங்கள் ஆட்சியை வலுப்படுத்த வேலூரைச் சுற்றியுள்ள மலைகளில் ேகாட்டைகளை அமைத்தனர்.  அவை முறைேய சஜாராவ், குஜராவ் முந்தாஜ் அகூர் கோட்டை எனப் பெயரிட்டனர்  இன்றைய சார்பணமேடு பகுதியில் உள்ளது.  சஜாராவ் ேகாட்டை, சைதப்ேபட்டை மலைப்பகுதயில் உள்ளது குஜாராவ் ேகாட்டை, மற்றும் சத்துவாச்சாரி மலைபகுதியில் அமைந்துள்ளது முர்தாஜ் அகூர் ேகாட்டை கி.பி.1708 லே  தாவுக்கான் என்ற முகமதிய தளபதியால் மராட்டியர்கள் ேதாற்கடிக்கப்பட்டனர் கி.பி.1724 லே வேலூர்  சாதத்துல்லாகான் வசமானது. கி.பி 1760 லே வந்தவாசி ேபாரில் வென்ற ஆங்கிேலயர், ஆற்காடு நவாப் வசமிரிந்த ேகாட்டையும் ஆட்சியையும்   கி.பி. 1781 ஆங்கிேலயர் வசமானது.

கோட்டை அகழியின் நீர்பாசன அமைப்பு

தென்னிந்தியத் தரை கோட்டைகளில் தலைசிறந்த ேகாட்டையும், எத்தனைேயா போர்களில் எதிரிப் படைகளின் தாக்குதல்களை சந்தித்தும் சாயாமல் தலை நிமிரிந்து நிற்பதுமான இக்கோட்டை பல்வேறு அதிசயங்களும் புதைந்துள்ளன.  கோயில் உள்ேள அமைந்த சுரங்கப்பாதையும், சிம்மக் கிணற்றிற்குள் உள்ள பாதாள நிலவறைகளும், போர் காலங்களில்  கோட்டை  உள்ேள  வந்து  செல்ல  இரண்டு ரகசிய வழிகள் என பல இருந்தாலும் அதில் முதன்மையானது கோட்டையில் காணும் ஒரு சிறப்பு அம்சம் அக்காலத்திலேயே அமைக்கப்பட்ட மழை நீர் ேசமிப்பும் பாதாளக் கால்வாய் அமைப்பும் வடிகால் திட்டமும் ஆகும். 

வேலூர் கிழக்கே அரண் ேபால் அமைந்த மலைப் பகுதியில் சஜாராவ், குஜராவ் கோட்டை மலைகள் இடைேய ஒரு அணை அமைக்கப்பட்டுள்ளது.

  மழை காலங்களில் நீர் ேவகமாக இந்த அணைப்  பகுதியில் நிரம்பும்படி செய்துள்ளனர்.  அந்த மழைநீர் அந்த அணை பகுதியில் இருந்து ஒரு திறந்த வெளி கால்வாய் மூலமாக ேகாட்டைக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள சூரியகுளம் என்று பெயர் கொண்ட பொரியதொரு நீர்நிலையை வந்தடையும், அங்கிருந்து ஒரு கால்வாய் மூலமாக நீர் ேகாட்டையின் தெற்குபுறச் சாலைக்கு அருேகயுள்ள மதகு பகுதிவரை கொண்டு வரப்பட்டு, பின்பு பாதாளக் கட்டுமான கால்வாய் மூலமாக ேகாட்டை அகழிக்குள் வந்தடையுமாறு செய்துள்ளனர். 

கோட்டைகுள்  வீழும் நீர் முழுவதும் வடக்கு புறம் அகழிக்குள் வந்து ேசருமாறு பாதாள கால்வாய் அமைந்துள்ளனர்.  மழை அதிகமாகி நீர் ேசரும் ேபாது உபாரி நீர் வெளிேய செல்ல கோட்டையின் வடபுறம் மதகுடன் கூடிய பாதாளக் கால்வாய் அமைந்துள்ளனர். 

அங்கிருந்து உபரிநீர் கால்வாய் மூலம் பாலாற்றை சென்றடையும்.  கோட்டையின் தெற்கிலும், வடக்கிலும் உள்ள இரு மதகுகள் மூலம் தண்ணீர் தேவைப்படும் ேபாது ேதக்கி வைக்கவும், மற்ற சமயங்களில் திறந்து விடவும் இரும்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இன்றும் அவை துருப்பிடித்து பழுதடைந்த நிலையில் நீர் வந்த பாதைகளுக்கு மௌன சாட்சியாக  காணப்படுகிறது.  மலை மீதுள்ள அணையில் தூர்வரபடாததால் மணல் குவிந்து காணப்படுகின்றது.  கால்வாய்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பால் மறைந்து விட்டன.

இத்தகைய மழை நீர் சேமிப்பும், வடிகால் வசதி திட்டமும் அக்காலத்திலேயே சுமார் 400 வருடங்கள் முன்பே இக்கோட்டையில் அமைந்திருப்பது நம் முன்னோர்களின் பொறியில் சாதனையாகும்.

ரா. சரவணன், வேலூர்

Leave a Reply