விஜயநகர காலத்தில் இருந்த உறுப்புப் பலி

14 ஆம் நூற்றாண்டு விஜயநகர காலத்தில் காலபைரவர் வழிபாடு சிறந்து விளங்கியது. கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள சீதி எனுமிடத்தில் உள்ள காலபைரவர் கோவில் கல்வெட்டு ஒன்று இவ்வழிபாட்டுமுறை பற்றி கூறுகிறது.

இந்த காலபைரவர் வழிபாட்டில், விவசாயக்குடி மக்கள் உறுப்பு பலி அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த உறுப்பு பலி அளிப்பதற்கு என்றே தனியே விவசயாக் குடும்பங்கள் இருந்தன. கால பைரவருக்கு வேண்டிக்கொண்டு, விவசாயக் குடியைச் சேர்ந்த ஆண்கள், தங்களின் ஆள்காட்டி விரலை துண்டாக வெட்டி, பலியாக அளித்தனர்.

ஆண்கள் அந்த உறுப்பு பலி தந்த பிறகு விவசாய பணிகளை மேற்கொள்ள இயலாது, குடும்பத்திற்கு வருவாய் பாதிக்கும் எனக் கருதினால், அதற்கு மாற்றாக அந்த குடும்பத்தில் பிறந்த பெண்கள், மோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் என இரண்டு விரல்களை காலபைரவருக்கு பலியாக அளித்தனர். உலகம் முழுவதும் விவசாயக்குடிகளில் இவ்வாறு உயிர் அல்லது உடல் உறுப்பு பலி அளிக்கும் வழக்கம் இருந்துள்ளது.
மேலும், பலி கொடுக்கும்போது, அதிக இரத்த வராத முறையில் விரல்களை வெட்டுவதற்கு என்றும், அவர்களுக்கு மருந்து அளித்து மருத்துவம் பார்க்க என்று ஒரு குழுவும் இருந்துள்ளது. இவர்களுக்கு அக்கோவிலில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, நிரந்தரமாக பணி அளிக்கப்பட்டிருந்தது என்பது தான் சிறப்பான செய்தி. இன்று திருப்பதி கோவிலுக்கு மொட்டை அடிக்க ஆட்கள் உள்ளதை போல அன்று விரலை நறுக்குவதற்கு ஒரு குழு கோவிலில் இருந்துள்ளது.

இதைவிட தூக்கு தலைபலி, அரிகண்டம், நவகண்டம் போன்ற எண்ணற்ற பலிகள் தென்னகம் முழுவதும் இருந்துள்ளன. இதுபோன்ற பலிகளின் எச்சமே இன்று எலுமிச்சை வைத்து நசுக்குவதும், பூசணிக்காய் என்ற காய்கறி பலியாக மாறியுள்ளன.
ஆய்வாளர்கள்: முனைவர். கிருஷ்ணா நாயக் மற்றும் கரீம்
#Heritager Buy Books at: www.heritager.in

Organ sacrifice in the Vijayanagara period

Kalabhairava worship flourished during the 14th century Vijayanagara period.

In this Kalabhairava worship, the peasants used to sacrifice their organs. There were separate farming families for this organ sacrifice. Praying to Kala Bhairav, they cut their index finger into pieces and offered it as a sacrifice.

After men sacrifice that organ they become
Unable to do agricultural work. So,instead the women born in that family offered two fingers, the ring finger and the little finger, as a sacrifice to Kalabhairava. All over the world there was a culture of sacrifice of life or body parts among peasants.
The descendants of the farmer eventually continued with the tradition of sacrificing their index finger through the generations and thus became known as the ‘beralu kodo vokkaligaru’ or ‘farmers sacrificing the index finger in the Lord’s honour clan’.

There was also a group stationed in the temple that says to cut the fingers in a way that doesn’t bleed too much while sacrificing, and to treat them with medicine. The important news is that food was arranged for them in the temple and they were given this as a permanent job.

There was a group in the temple to chop off the finger, just as there are people in temples today to shave head tonsuring.

More than this, there have been innumerable sacrifices like Head sacrifice ( Arikandam) and (Navakandam) body parts sacrifice throughout the South. The remnants of such sacrifices are today crushed with lemons and the vegetable sacrifice of pumpkins.