மூத்தோள் – நவீன மனிதனின் ஆதி தாய்

தற்போது உலகில் வாழும் அனைத்து மனித பெண்களும் ஒரே ஒரு பெண்ணிலிருந்து தோன்றியவர்கள் என்றால் நம்பமுடிகிறதா?

அவளை, “Mitochondrial Eve – இழைமணி ஏவாள் ‘ என அறிவியல் உலகம் அழைக்கிறது.

மனிதருக்கு இரண்டு வகை DNA அணுக்கள் உள்ளன. ஒன்று nucleus dna மற்றொன்று Mitochondrial DNA. இதில் தாயிடமிருந்து, பெண் குழந்தைகளுக்கு மட்டுமே Mitochondrial DNA தகவலானது கடத்தப்படும். ஆண் குழந்தைகள் மூலம் இத்தகவல் கடத்தப்படுவதில்லை. எனவே இந்த அணுவின் தகவல் உலகில் தற்போதுள்ள அனைத்துப் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருப்பதால், தற்போது இருக்கும் பெண்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவர்கள் என அறிவியல் கூறுகிறது.

அம்மாவின் மூலம் ஆண்களும் m-DNA வை பெறுகின்றனர். ஆனால் இவை மற்ற சந்ததிக்குக் கடத்தப்படுவதில்லை. பெண்பிள்ளைகள் மட்டுமே இதனை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்துகின்றனர். இதன் முக்கியக்காரணம் “இழைமணி” எனப்படும் மைட்டோகாணடிரியா செல்கள் செயல்படத் தேவையான ஆற்றலை அளிக்கும் “ஆற்றல் நிலையங்களாகும்”. கிட்டதட்ட பேட்டரி போல விந்தணுவில் செயல்படும். ஆண் விந்தணுக்கள் பெண் அணுக்களை அடைய இந்த ஆற்றலை முழுவதும் பயன்படுத்திவிடுகின்றன. எனவே ஆண் விந்தணுவில் செயலற்றுப்போகும் m-DNA கருவுக்குக் கடத்தப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

பெண்கள் எந்த நாட்டிலிருந்தாலும், எந்த இனம், நிறமாக இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் m-DNA காணப்படும் ஒற்றுமையானது அவர்கள் ஒரே ஒரு மூத்த தாயின் வழிவந்தவர்கள் எனக் கட்டுகிறது. இவளைப் போலக் குறைந்தது 6 ஏவாள்கள் இருந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால் அந்த சந்ததிகள் இப்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

இதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மனித இனம் அழிவு நிலைக்குச் சென்று, ஒரு குறிப்பிட்ட நவீன மனித இனக்குழுவிலிருந்து மீண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது, இன்று 700 கோடியாக இருக்கும் மக்கள் தொகை அன்று வெறும் ஆயிரம் என்ற அழிவுநிலை அளவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பெண்களைப் போல தற்போதுள்ள ஆண்களுக்கு, ஒரே ஒரு தொடக்கநிலை ஆதாம் தந்தை இல்லை, Y DNA படி பல மூலங்கள் உள்ளன. “வேற்றுமைகள் பலவாகிலும், நாமனைவரும் ஒரு தாய் மக்கள்” எனத் தற்கால மரபியல் கூறுகின்றது.

#வந்தேறி_மனிதன் #மூத்தோள்

Leave a Reply