மணிமுடி – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி கதைகள் #19

அத்தியாயம் 1

இரத்தவாடை எங்கும் இரத்த வாடை வீசியது குருதியும் மனித தசைகளும் பின்னிப்பிணைந்து மண்ணில் காட்சியளித்தது கை கால் தலை போன்ற அனைத்து மனித உறுப்புகளின் மேலும் களிறுகளின் கால்பட்டு கூழாகி போயிருந்தது. ஈழமே இடு காடாக காட்சியளித்தது இவை அனைத்தையும் கண்டு பலத்த பசியுடன் ருசிக்க வட்டமிடும் பல பிணந்திண்ணி வல்லூர்களில் ஒன்று கீழிறங்கி ஒர் இழப்படை வீரனின் கண்களை கொத்தியது. பாதி உயிருடன் கிடக்கும் அவன் துடித்தான் அச்சமயம் ஏதோ ஒன்றின் வருகையைக் கண்ட அக்கழுகு சிறகுகளை அடித்துப் பறந்து சென்றது. வெண்ணிறப் போர்புரவி ஒன்று  தேரினை இழுத்துக்கொண்டு அவ்விடத்தை வேகமாக கடந்து சென்றது அத்தேரில் வீற்றிருந்த ஒருவனின் படர்ந்த உடலிலும் கைகளிலும் ரத்தக் கரை படர்ந்து கிடந்தது மேலும் அவனின் கீழ் எவனோ ஒருவனை சங்கிலியால் பிணைத்து தேரில் படுக்க வைத்து இருந்தான்.

ஒவ்வொரு முறை அவன் புரவியின் கயிற்றை வீசும் போது புரவி வேகத்தை கூட்டியது. அது எவ்வளவு வேகம் எடுத்தாலும் தேர் ஓட்டுபவன் சற்றும் தடுமாறாமல், ஒரு கையை இடையிலும், மற்றொரு கையினால் புரவியை இயக்கியபடி நின்றிருந்தான். காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அத்தேரானது சில நாழிகைகளுக்குப் பிறகு போர் வீரர்களும் கூடாரங்களும் பல அமைந்திருக்கும் ஒரு இடத்துக்குள் நுழைந்தது. இவனின் தேரைக் கண்ட படை வீரர்கள் காயங்களுக்கு  மருந்திட்டு கொண்டிருந்தவர் சிலர் போன்ற அனைவரும் ஒன்றுகூடி அவனை வரவேற்றார்கள். இரண்டு பக்கங்களில் படை வீரர்களின் அணிவகுப்பில் நடுவழியில் இம் மனிதனின் தேர் நுழைந்தது.

இளவரசர் ராசாதிராசன் வாழ்க! மாமன்னர் இராசேந்திரர் வாழ்க!சோழம், சோழம் போன்ற பல முழக்கங்களுக்கு நடுவே பயணித்த தேரானது ஒரு பெரும் கூடாரத்தின் வந்து நின்றது. தேரில் இருந்து இறங்கிய ராசாதிராசன் தான் கைது செய்துகொண்டு வந்தவனின் கால் சங்கிலியை தன் உடைவாளை உருவி துண்டித்தான். சங்கிலியானது தகர்ந்தது. பிறகு வாளை உறையில் பொருத்தியவன் கீழ் இருப்பவனை தேரில் இருந்து எழுப்பி நடக்க வைத்தான் கைகளில் சங்கிலியுடன் அந்த மனிதன் முன்செல்ல பின்னால் கம்பீரமாக நடக்கலானான் ராசாதிராசன். இருவரும் முன் இருந்த கூடாரத்தை அடைந்தார்கள் உள்நுழைந்த இராசாதிராசன்  அரசே கைது செய்து கொண்டு வந்துள்ளேன் என்று எதிரே இருப்பவரிடம் பணிந்து மண்டியிட்டான்

     

அத்தியாயம் 2

மண்டியிட்ட ராசாதிராசன் தலை நிமிர்ந்து பார்த்தான். படைத்தலைவர்கள், படைத் தளபதிகள் பலர் சூழ நடுவில் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். மாமன்னர் ராசேந்திர சோழர். அவர் வாளின் முனையில் படிந்திருந்த இரத்தக்கறையை ஒரு பட்டுத் துணியை கொண்டு துடைத்தபடியே எழுந்து நின்றார். வாளினை உரையில் போட்டுவிட்டு இராசாதிராசன் அருகில் வந்தவர் அவன் தலையை தொட்டு ஆசிர்வதித்தார். பிறகு சங்கிலிகளிள் பிணைக்கப்பட்டு மண்டியிட்டுக் கிடக்கும் ஈழவேந்தன் ஐந்தாம் மகிந்தனை கண்டவர் இராசாதிராசனிடமிருந்து அவன்முன் நகர்ந்தார். அவரது பெரும் உடலின் நிழல் தன்மேல் விழுவதை அறிந்த ஈழ மன்னனான ஐந்தாம் மகிந்தன் மெல்ல தன் தலையை நிமிர்த்தி பேரரசர் ராசேந்திரனை பார்த்தான். அவர் முகத்தின் கம்பீரமும் உடல் வளர்ச்சியும் அவனை நடுங்கச் செய்தது.

போர் முடிந்தது மகிந்தா இனி ஐய்யம் வேண்டாம். உயிருக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை என்று ராசேந்திரர் கூறுவதை கேட்டவன், அறிவேன் சோழா என்‌ மறைவிடத்திலேயே கொல்லாமல் இங்கு ஏன் என்னை கைது செய்து அழைத்து வந்தான் உன் புதல்வன் என்று நான் அறிவேன்.

ராசேந்திரரின் முகம் புன்னகையோடு மகிந்தனை பார்த்தது மிகச்சிறப்பு மகிந்தா சரி நேரத்தை கடத்தாமல் எங்கு இருக்கிறது என்று கூறு,  எது? என்றான் மகிந்தன் துடுக்காக சோழத்திற்கு சொந்தமான பாண்டியனின் மணிமுடியும்,  இந்திரா ஆரமமும் என்றார் ராசேந்திரர்.

என்னைக் கேட்டால் உன் பாட்டன் முதலாம் பராந்தகன் காலத்தில் மூன்றாம் இராசசிம்மன் பாண்டியன் என்‌ முன்னோரிடம் கொடுத்தான் பல ஆண்டுகள் ஆகிறது நான் எப்படி அறிவேன்?.

நகைத்தார் ராசேந்திரர் தன் மீசையை முறுக்கியவர் அவர் பின் திரும்பி தன் படைத் தலைவர்கள் தளபதிகள் ஆகியோரை கண்டார் அனைவரும் நகைத்தார்கள்

பிறகு திரும்பி மகிந்தனை கண்டவர் வேண்டாம் மகிந்த என் வாளுக்கு வேலையை வைத்து விடாதே பலகாலமாக சிங்களவர்கள் பாண்டியர்களின் மணிமுடியை காக்கும் பூதங்கள் என்று நான் அறிவேன் நீயாக கூறிவிட்டால் நலம் இல்லையேல் விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும் மறவாதே

மிரட்டுகிறாயா சோழா என்று வஞ்சப் பார்வை பார்த்தான் ஈழ வேந்தன் மகிந்தன்.

அவன் அப்படி கூறியதைக் கண்டு சற்றும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ராசேந்திரர் மெல்ல அவன் காதருகில் சென்று ஏதோ கூறினார் அதைக் கேட்ட மகிந்தனின் முகம் திகலடைந்தது கண்கள் இரண்டும் விரிந்தது.

 

அத்தியாயம் 3

வேண்டாம் ராசேந்திரா, அதை மட்டும் செய்து விடாதே கூறி விடுகிறேன் என்று கண்ணீர் விட தொடங்கினான், மண்டியிட்டு கிடந்த ஈழவேந்தன் ஐந்தாம் மகிந்தன். அவன் தலை தொங்கியது கண்களில் நீர் சுரந்தது என்னை மன்னித்து விடுங்கள் நான் கடைமை தவறி விட்டேன் என்று தன் முன்னோர்களிடம் மனம் வருந்தினான். பிறகு மெல்ல தலை நிமிர்ந்து அவன், தலைமுறை தலைமுறையாக சிங்கள அரச வம்சத்தினர் பாதுகாத்து வந்த பாண்டியனின் மணிமுடியையும்,  தேவர்களின் தலைவன் பாண்டியர்களுக்கு வழங்கிய ஆரத்தையும் மறைத்து வைத்திருக்கும் இடத்தை கனத்த இதயத்துடன் கூறலானான்.

சிலநிமிடங்கள் அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த இராசேந்திரர் தன் பிடறி மயிரை தடவியபடியே இதில் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் நான் சொன்னபடி செய்வேன் மகிந்தா என்று எச்சரித்தார்.

இல்லை சத்தியமாக இல்லை அங்குதான் உள்ளது நான் கூறி விட்டேன் அல்லவா நீ அப்படி செய்ய மாட்டாய் அப்படித்தானே

ஆம் என்று கம்பீரத்துடன் கூறினார் ராசேந்திரர்

அதைக்கேட்டு பெருமூச்சு விட்ட மகிந்தனின் தலை தொங்கியது 

எதிரே நிற்கும் இளவரசன் ராசாதி ராசனை பார்த்து பகலவன் மறைவதற்குள் மீட்டு வா என்று கட்டளையிட்டார்.

அதைக்கேட்டு இராசாதிராசன் பணிந்து உத்தரவு அரசே என்று வெளியேறினான்

நாங்களும் செல்கிறோமே மன்னா என்று பின் நின்று இருந்த அரையன் ராசராசனின் குரலைக் கேட்டு திரும்பிய பேரரசர் புன்னகையுடன் வேண்டாம் படைத் தலைவரே எவர் தொலைத்தாரோ அவர்தான் மீட்க வேண்டும் என பண்புடன் கூறினார் படைத்தலைவர் மாமன்னரின் பேச்சில் உள்ள அர்த்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொண்டு புன்னகையுடன் தலைகுனிந்து ஆமோதித்தான்.

கூடாரத்தில் இருந்து வெளியே வந்த இராசாதிஇராசன் தேரினை ரோகானா மலைப் பகுதியை நோக்கி செலுத்தினான்.

அத்தியாயம் 4

அடர்ந்த காட்டுகளை  கொண்ட ரோகானா மலைப்பகுதியில் பலவிதமான மிருகங்களின் சத்தமும் பட்சிகளின் சத்தமும் எங்கும் நிறைந்திருந்தது. அங்கு பெரிதாக வளர்ந்து நிற்கும் பல மரங்களின் கீழ் சோழப் படைகள்ளிடமிருந்து தப்பிவந்த ஈழப் படைவீரர்கள் தஞ்சமடைந்து இருந்தார்கள். தங்கள் உடம்பில் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு மருந்திட்டு ஓய்வெடுக்கும் அவர்களுக்கு ஏதோ ஒரு சத்தம் கேட்டது பதறிப்போன அனைவரும் அருகில் இருக்கும் பெரும் மரத்தின் மேல் சரசரவென்று ஏறி தங்களை காத்துக்கொள்ள நினைத்தார்கள். சோழப்படை வரும் என எதிர்பார்த்த அவர்கள் தன்னந்தனியே ஒரு இளைஞன் காட்டுப்பாதையில் குதிரை தேரில் செல்வதை கவனித்தார்கள். செல்வது யாரென்று நன்றாக தெரிந்தது அவர்களுக்கு போர்களத்தில் இவர்களை நடுநடுங்க செய்த ராசேந்திர சோழரின் புதல்வன் இராசாதிராசன் தான் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். அவன் செல்லும் திசையையும் விரையும் வேகத்தையும் கண்ட ஒரு ஈழப் படைவீரன் சட்டென்று மரத்திலிருந்து கீழிறங்கி ஒரு குறுக்குப் பாதையில் ஓடினான். ரோகானா காட்டுப்பகுதியில் ஒரு பெரும் குன்றின்மேல் தனித்து அமைந்திருக்கும் ஒர் குடிசையின் வாசலில் நின்றிருந்தார்கள் ஈழப் படையின் நான்கு தளபதிகள் உடலில் ஆங்காங்கே ரத்த காயங்களுடன் காட்சியளித்த அவர்கள் மெல்ல குனிந்து எதிரே குடிசையின் வாயிலில் நிற்கும் சிறு பாலகனின் பாதங்களை வணங்க செய்தார்கள் மேலெழுந்த நால்வரின் முகம் சோர்வுற்று கிடந்தது கண்களில் நீர் வழிந்தது.

எங்களை மன்னித்துவிடுங்கள் இளவரசே கடமை தவறி விட்டோம் அரசரை இழந்து விட்டோம் என்றான் ஒரு படைத் தளபதி.

எதிரே ஒரு மூதாட்டியின் முன் நின்றிருந்த ஈழத்தின் இளவரசனான காசிப்பன் சிறு பாலகன் மழலைப் சற்றும் குறையாத வகையில் புன்சிரிப்புடன் மாமா அப்பா, அம்மா எங்கே? அக்கா வேண்டும் என மழலை வழிய அவன் கேட்டது நான்கு தளபதிகளின் இதயத்திலும் வேல் பாய்ந்தது போல் இருந்தது .அதற்கு மேல் பேச சக்தியற்றவர்கள் இளவரசரின் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று குடிசையில் நின்றிருந்த ஒரு மூதாட்டியிடம் கூறிவிட்டுச் குன்றிலிருந்து கீழே இறங்கி காட்டுக்குள் நடக்கலானார்கள். அவர்கள் செல்வதை கண்டு கொண்டிருந்த மூதாட்டி இளவரசனான காசிப்பனை தூக்கி அணைத்து முத்தமிட்டு குடிசைக்குள் அழைத்துச் சென்றார் குடிசையின் கதவு சாத்தப்பட்டது. ஈழத்தின் வருங்கால அரசனை பத்திரமாக ஒரு இடத்தில் ஒப்படைத்து வந்த நான்கு சிங்களப் படைத் தளபதிகளும் காட்டுப் பகுதிக்குள் சென்று ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்தார்கள் ஆங்காங்கே அமைந்திருக்கும் பாறைகளின் மேல் அமர்ந்திருந்த நால்வரின் மனம் குமுறியது போரில் புறமுதுகிட்டு ஓடி வந்ததும் சிங்கள மன்னனான மகிந்தனை காக்க இயலாததும் அனைவரது சிந்தையிலும் இரணமாக உறுத்திக் கொண்டிருந்தது அங்கு சற்று நேரம் குடிகொண்டிருந்த பெரும் அமைதியை கலக்கச் செய்தான் நால்வரில் ஒருவன்.

ரத்தம் கொதிக்கிறது சோழர்களை நினைத்தால் உள்ளம் எரிமலை போல் வெடிக்கிறது நம் நிலத்தை பிடித்த அவர்கள் அனைவரையும் அழித்து ஒழிக்க வேண்டுமென கூறி பல் கடித்தான்.

ஆம் நாம் சேனையை இழந்தாலும் நம் உயிரும் ஊனும் உள்ளது எப்படியாவது நம் இளவரசரை காத்து ஆளாக்கி வருங்காலத்தில் சோழர்களை அழிக்க வேண்டும்

எதற்கு அவ்வளவு காலம்? சீக்கிரம் நம்மால் செய்யக்கூடிய விடயம் ஏதேனும் உண்டா சோழ மன்னனான ராசேந்திரனின் உள்ளம் கதரும்படி என்றான் மூன்றாமவன்! 

அவசரம் வேண்டாம் நண்பர்களே நாம் தோல்வியுற்று வந்துள்ளோம் சோழப்படை சிங்களத்தை முழுவதுமாக கைப்பற்றிவிட்டது நம்மை சுற்றி அவர்களின் பெரும் போர் கலங்கள் மிதந்து கொண்டிருக்கிறது இப்போதைக்கு எவரும் கண்டுபிடிக்க இயலாத இப்பகுதியில் பாதாளத்திலேயே நாட்களை கழிப்போம். சோழர்கள் நாடு திரும்பட்டும் வருங்காலத்தில் நிலைப்படை கண்ணில் மண் தூவி விட்டு நம் காரியத்தை கச்சிதமாக சாதிக்கலாம் என்று நான்காவது  படைத்தளபதி.  பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அவன் அருகில் ஏதோ ஒரு சலசலப்பை உணர்ந்தான். சிவந்து இருந்த அவனது கண்கள் மட்டும் அந்த திசையில் திரும்பியது மெல்ல தனது இடையில் கைவைத்து அவன் இடலவாளை உருவி அவ்விடத்திற்கு விரைந்து வாளினை ஓங்கினான்

தளபதியாரே நான்தான் என்று அலறினாள் அங்கிருந்த சிங்கள வீரன் ஒருவன்

      

                   அத்தியாயம் 5

வேண்டாம் தளதியாரே வேண்டாம் நான்தான் என்று கதறிய சிங்களப் படை வீரனை கண்ட சிங்களப் படை தளபதி

நீயா இங்கு என்ன செய்கிறாய் இவ்விடம் எப்படி உனக்கு தெரியும் என்று வினவினான்

நான் மன்னரின் மெய்க்காவல் வீரனாக இருந்துள்ளேன் மன்னர் வருகைதரும் போதெல்லாம் இந்த ரகசிய இடத்துக்கு என்னை கூட்டி வருவார் ஆதலால் நீங்கள் இங்கு இருப்பீர்கள் என்று கணித்தேன்

வாளினை உரையில் போட்ட தளபதி பழையபடி பாறையின் மேல் சென்று அமர்ந்துகொண்டு தரையையே பார்த்துக் கொண்டிருந்தான்

என்ன விடயம் எதற்காக இங்கு வந்துள்ளாய்? எப்படி தப்பித்தாய்? என்று கேட்டான் இரண்டாம் தளபதி.

நான் மட்டுமில்ல தளபதியாரே நம் படையின் சிலர் காட்டுக்குள் ஒளிந்து இருக்கிறார்கள். நமது ஆதரவாளர்கள் உணவும் மருந்தும் வழங்கி வருகிறார்கள்

ம்ம்ம் என்று சோக பெருமூச்சுவிட்டான் அந்த தளபதி.

தளபதி அவர்களே நான் ஒரு முக்கிய விடயத்தை கூற தான் இங்கு வந்தேன்

என்ன என்று நான்கு தளபதிகளில் ஒருவன் குரலில் சோகம் தொனிக்க கேட்டான்.

நம் காட்டுக்குள் அவன் தேரில் செல்வதை கண்டேன்

எவன்? இன்று ஆர்வம் காட்டினான் ஒர் தளபதி.

இராசாதிராசன் என அந்த படைவீரன் சொல்லி முடித்ததும் நான்கு படைத்தலைவர்களும் சட்டன எழுந்தார்கள் அதிலொருவன் சிங்கள வீரன் அருகில் சென்று நின்று

என்ன கூறுகிறாய் அவர்களது படையை கண்டாயா

இல்லை தளபதியாரே தன்னந்தனியே ஒற்றை புரவி கட்டிய தேரில் சென்று கொண்டிருந்தான்

தன்னந்தனியாக வா எந்த திசையில்

நம் கழுகு பாதையில் தெற்கு திசை நோக்கி சென்றான்

நால்வரும் ஒருவருக்கொருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்

நீ செல்லலாம் முடிந்தவரை நம் படையை பாதுகாப்பாக இருக்கச் சொல் என தளபதி ஒருவன் கூற அந்த சிங்களப் படை வீரன் வந்த பாதையிலேயே திரும்பிச் சென்றான் அவன் சென்ற பிறகு நால்வரும் ஒன்று கூடினார்கள்

நண்பர்களே நம் எதிரியின் மைந்தன் தன்னந்தனியாக கழுகு பாதையில் தெற்கு நோக்கி செல்கிறான் அவன் எதற்காக செல்கிறான் என்று தெரியுமா

எதற்கு..?

பாண்டியர்களின் மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் மீட்க இராசேந்திரன் தன் இளவரசனை தன்னந்தனியே அனுப்பி வைத்து அவன் ஆளுமையை மற்றவர்களுக்கு காட்ட நினைக்கிறான்

இல்லை நிச்சயம் இராது நம் மன்னர் அதைப்பற்றி கூறியிருக்க மாட்டார் அதைப்பற்றி அறிந்து நம்மைப்போன்ற வரையும் வெளியில் சொல்லக்கூடாது என்று ஆணையிட்டுள்ளார் மறந்து விட்டாயா

இல்லை நண்பா எப்போது நம் மன்னரின் கைகளுக்கு விலங்கு போட்டு விட்டார்களோ சோழர்கள் இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள் ஏன் நம் நாட்டையே தீயக்கு இறையாக்க கூட தயங்க மாட்டார்கள். ஏதோ ஒன்றின் காரணமாக தான் நம் மன்னர் அதை கூறியிருப்பார்.

அவ்விடத்தில் காவலுக்கு வீரர்கள்..?கேட்டான் ஓர் தளபதி.

நம் சிங்கள படை முழுவதும் அழியும் நிலை ஏற்பட்டதும் ஒட்டு மொத்த வீரர்களையும் திரட்டி போர் புரிந்துவிட்டோம்.அனைவரும் மாண்டுவிட்டார்கள். தளபதி ஒருவனின் குரலில் அவமானம் தொனித்தது.

 மன்னரின் கட்டளைக்காகவே நாம் தப்பித்தோம். அதுவும் இளவரசரை காக்கவே கலங்காதே நண்பா இல்லையேல் நாமும் நாட்டிற்காக வீரமரணம் அடைந்திருப்போம் என ஆறுதல் கூறினான் மற்றொருவன். 

சரி நாம் இப்போது என்ன செய்வது என கேட்டான் மூன்றாமவன்.

நம்மை வீழ்த்தி சிங்களத்தை கைப்பற்றிய சோழ மன்னனுக்கு கடும் துயரத்தௌ அழிக்கப்போகிறோம் தன்னந்தனியே வந்திருக்கும் அவன் மகனை கொன்று உடலை அவனது தேரிலேயே கட்டி ராசேந்திரனின் முகாமிற்கு அனுப்பி வைப்போம். மணிமுடியையும் ஆரத்தையும் வேறு இடத்திற்கு மாற்றி வைப்போம் என கூறி அவன் மூவரின் முகத்தையும் பார்த்தான்.

அனைவரும் சிவந்த கண்களுடன் மனதில் கொலை வெறியுடன் காட்சியளித்தார்கள்.

                  அத்தியாயம் 6

 

 

மாமன்னன் ராசேந்திரனின் ஆணையை ஏற்று ரோகானா மலைப்பகுதிக்கு தேர் ஓட்டி வந்த இளவரசன் ராசாதிராசன் கதிரவன் உச்சியில் இருக்கும் வேளையில் மகிந்தன் கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தான். அடர்ந்த செடிகளும் வளர்ந்த மரங்களும் கடந்த ராசாதிராசன் புரவியும் அவனைப் போலவே வீரம் நிறைந்ததாக தெரிகிறது மெல்ல நகர்ந்த தேர் நின்றது கீழ் இறங்கிய இளவரசன் தன்னைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் நோட்டமிட்டான் கூடாரத்தில் மகிந்தன் கூறிய இடம் தான் இது என்று உறுதி செய்தபின் மேலும் செல்ல வேண்டிய திசை நோக்கி அடி எடுத்து வைத்து சென்றான். சிறிது நேரம் கழிந்ததும் பெரும் பாறைகள் நிறைந்த இடத்தை வந்துசேர்ந்தவன் எதிரே தெரியும் ஓர் பெரும் குகையையும் அதன் முன் பல பலவென மின்னிக் கொண்டிருக்கும் சிவலிங்கம் ஒன்றையும் கண்டு அருகில் சென்று விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினான். பிறகு அவன் பார்வையின் பின் அமைந்திருக்கும் குகையின் மேல் விழுந்தது.இரண்டு பாதைகள் ஒன்றில் மாற்றோரை சிக்க வைக்க நிரம்ப பொறிகள் இருப்பதையும் ஒன்றில் சிங்களவர்கள் நுழைய பாதுகாப்பான வழி இருப்பதாக கூறிய மகிந்தன் வலப்புற வழியில் நுழைய சொன்னான். இராசாதி இராசன் ஓர் நொடி யோசித்தான் பிறகு ஈழ வேந்தன் கூறிய பாதையில் செல்ல முடிவெடுத்தான். ஓரு வேலை நாம் பொறியில் சிக்கினாலும் தந்தை கண்டறிந்து வேறு பாதையில் நுழைவார் என்று உயிரை துட்சமன அவ்வழியை தேர்வு செய்தான்.

குகையின் மேல் வழியும் ஊற்றுநீர் குகையின் வாயிலில் சொட்டிக்கொண்டிருந்தது ராசாதிராசன் தன் காலினை கீழே படர்த்திருக்கும் சிறு குட்டையில் பதித்து உள் நுழைந்தான்.பொறிகள் ஏதுமில்லை சிங்கள மன்னன் மெய் கூறியுள்ளான் என புரிந்து கொண்டான் இராசதிஇராசன்.அவ்விருண்ட குகையானதில் கதிரவனின் கருணையால் ஆங்காங்கே துளைகளில் ஒளி உள்புகுந்து வெளிச்சத்தை தந்தது குகை முடியும் இடத்திற்கு வந்து சேர்ந்தவன் மகிந்தன் சொல்படி இங்கு ஒரு சிற்பம் இருத்தல் வேண்டும் என தேடலானான். சிற்பம் சிக்கியது கீழ் சுவற்றில் அமைந்திருந்த அச்சிற்பம் ஒன்றின் மேல் சிம்மம்  சிலை செதுக்கப்பட்டு இருந்தது. தன் காலினை கொண்டு சிற்பத்தை எட்டி உதைத்தான். சிம்மத்தின் தலை நகர்ந்தது. அடுத்த நொடி எதிரே சுவற்றில் ஒரு பகுதி காற்றின் அழுத்தத்தினால் கீழே விழ சர்ரென்ற சத்தத்துடன் ஓர் அம்பானது ராசாதி ராசனின் முகத்தை நோக்கி பாய்ந்தது. அவ்வம்பு எவ்வளவு வேகமாக பாய்ந்ததோ அதே வேகத்துடன் இராசாதிராசனின் கை அதை பற்றியது. அம்பின் கூர்முனை தன் கண் இமைகளின் முன் நிற்க அதை விளக்கி ஆராய்ந்தான் அம்பின் முனையில் நஞ்சு தடவப்பட்டு இருப்பதை அறிந்த சோழ இளவரசன் சிங்களவர்களையும் பாண்டியர்களையும் நினைத்து  ஏளனமாக நகைத்தான். பிறகு அவ்வம்பை இரண்டாக தவிர்த்து தூர எறிந்தான் பிறகு எதிரில் சுவற்றில் இருக்கும் துளையின் அருகில் சென்றவன்

அத்துளையில் அமைந்திருக்கும் ஓர் தங்க பெட்டியை வெளியே எடுத்து திறக்கலான். முதலாம் பராந்தகனின் காலகட்டத்தில் ராஜ சிம்ம பாண்டியனால் ஈழத்தில் பதுக்கப்பட்ட பாண்டிய மணிமுடியின் நவரத்தின கற்களும் அருகில் தேவர்கள் தலைவன் பாண்டிய அரச வம்சத்து கொடுத்த ஆரமும் பல பலவென மின்னி ராசாதிராசனின் கண்களை கூசச் செய்தது அச்சமயம் தனது பின் ஏதோ சத்தம் வருவதை அறிந்த இளவரசன் பெட்டியை மூடிவிட்டு பின் திரும்பி கண்டான்.

அத்தியாயம் 7

கையில் வாளுடன் நான்கு சிங்களப் படைத் தளபதிகளும் கொலைவெறியுடன் இளவரசன் ராசாதிராசனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அடேய் சோழனே, எங்களைக் கடந்து தான் நீ அதை எடுத்துச் செல்ல இயலும் போர்க்களத்தில் வென்ற நீ இங்கு தோற்க போகிறாய்.  உன்னை கொன்று உன் சவத்தை நீ வந்த அதே குதிரை தேரில் பூட்டி உன் அப்பனிடம் அனுப்பி வைக்கப் போகிறோம் என்று நான்கு தளபதிகளில் ஒருவன் ஆவேசப்பட்டதைக் கண்ட சோழ இளவரசன் தன் இதழ்களை விரித்து புன்னகைத்தான். அவன் கை இரத்தக்கறை படிந்து இருக்கும் அவனது வாளிடம் சென்றது பிறகு நான்கு சிங்கள தளபதிகளும் இளவரசனை நோக்கி வாளுடன் பாய்ந்தார்கள்.

அடேய் ஆம் நான் சொல்வது உண்மை தான் நம் நான்கு தளபதிகளும் நிச்சயம் அவனை தேடி சென்று இருப்பார்கள் என்று முன்பு தளபதிகளிடம் இளவரசரின் வருகையை கூறிய சிங்கள வீரன் முன்னம் மறைந்திருந்த அதே கழுகு பாதையில் அருகில் அமைந்திருக்கும் காட்டுக்குள் தன் சக வீரர்களிடம் கூறிக் கொண்டிருந்தான். 

என்ன சொல்கிறாய் அந்த சோழ இளவரசனின் வலிமையை தான் நாம் போர்க்களத்திலேயே கண்டோமே அவனை வீழ்த்துவது சுலபமா?

அதைக்கேட்டு எரிச்சலடைந்த சிங்கள வீரன் அட யாருடா இவன் ?என்று முகம் சுழித்தான் பிறகு நீ வேண்டுமானால் பார் தளபதிகள் நிச்சயம் அவனை ஏதாவது செய்வார்கள் பார் என மார்தட்டிக் கொண்டிருக்கும் நேரம் கழுகு பாதையில் ஏதோ ஒரு சத்தம் வருவதை அறிந்து அங்கு கூடியிருந்த சிங்கள வீரர்கள் அனைவரும் கவனத்தை அங்கு திருப்பினார்கள். முன்பு கடந்து சென்ற அதே வெண்ணிறப் புரவியில் திரும்பியது அதன்மேல் இராசாதிராசன் வீற்றிருந்தான் பிறகு அவர்கள் கண்ட காட்சி சிங்கள வீரர்களின் மனதில் நடுக்கத்தை உண்டாக்கியது.

தன் நான்கு படைத் தளபதிகளும் தேரின் பின் சங்கிலியால் பிணைக்கப்பட்ட இழுத்துச் செல்லப் பட்டார்கள் அவர்களில் சிலருக்கு கை கால் இல்லை  இறுதியாக கட்டப்பட்டிருந்த தளபதியின் முண்டம் மட்டுமே சென்றதை கண்ட சிங்கள வீரர்களின் கால்கள் அவர்களை அறியாமலே நடுங்கியது.

பகலவன் சாய இன்னும் சிறிது நிமிடங்களே மீதமிருக்க சோழப் படை வீரர்கள் முகாமிட்டு இருந்த இடமே திருவிழா போன்று காட்சி அளித்தது. ஈழத்தினை வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாட பீப்பாய்களில் மதுவும் மாமிசமும் மேளதாளங்கள் என சோழர்கள் கொண்டாடுகிறார்கள். படைகள் சூழ நடுவில் பெரும்போர் யானையின் மேல் அமமர்ந்திருந்தார் மாமன்னர் ராசேந்திர சோழர் அவரை மகிழ்விக்க எதிரே‌ இரு வீரர்கள் கடுமையாக வாட்போர் செய்து கொண்டிருந்தார்கள். அவ்விடத்தை சூழ்ந்து உற்சாக ஒலி எழுப்பு மகிழ்ந்தார்கள் அனைவரும் பிறகு கூட்டமானது யாரோ ஒருவரின் வருகைக்கு விரைந்து வழிவிட்டு நின்றது முன்பு போல இரண்டு திசையிலும் படை வீரர்கள் சூழ நடுவில் நுழைந்தது ராசாதிராசனின் தேர். திங்கள் சாயும் பொழுதில் வளர்ந்ந திங்களை போல் உதயமாகி உள் நுழைந்தவனை கண்ட ராசேந்திரர் தன் மகனின் கம்பீரத்தையும் வீரத்தையும் பார்த்து மனம் குளிர்ந்தார் இளவரசனின் தேர் பின்பு இழுத்துச் செல்லப்பட்ட சிங்கள தளபதிகளையும் அவன் கையில் வைத்திருந்த தங்க பெட்டியையும் கண்ட படைவீரர்கள் அனைவரும் சோழம் சோழம் சோழம் என வாழ்த்து பாடினார்கள். 

படைவீரர்களின் சத்தத்தில் அன்று ஈழமே முழுகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இளவரசன் நெருங்குவதை அறிந்து மன்னரின் முன் வாட்போர் செய்த வீரர்கள் பணிந்து விலக செய்தார்கள் அவ்விடத்தில் ராசாதிராசனின் தேர் வந்து நின்றது தேரிலிருந்து கீழே இறங்கியவன் கையில் வைத்திருக்கும் பாண்டியனின் மணிமுடியையும் இந்திர ஆரத்தையும் மன்னரிடம் கொண்டு சென்றான்.  பணிந்து மரியாதை செய்தவன் மன்னரை சுமந்து நிற்கும் களிறிடம் செல்ல அது தன் துதிக்கையை நீட்டியது.  அவனது பாதத்தை அதன் மேல் வைத்தான். துதிக்கையை மேல் தூக்கி இளவரசனை மன்னரிடம் கொண்டு சென்றது அக்களிறு. பெட்டியை பயபக்தியுடன் மன்னரிடம் கொடுத்த இராசாதிராசனை  கீழே இறக்கியது அக்களிறு. தங்க பேட்டியை கையில் வாங்கிய ராசேந்திரர் மெல்ல அதை திறந்தார் அவர் கண்களில் நீர் தேங்க தொடங்கியது.  பல தலைமுறைகளாக தன் முன்னோர்களின் ஆசையை நிறைவேற்றியவரின் உள்ளம் நெகிழ்ந்தது. அப்பெட்டியை இரண்டு கைகளால் மேல் உயர்த்தி அனைவரிடமும் காட்டினார் படைவீரர்களின் குரல் ஓங்கியது அச்சத்தமானது சோழநாடு வரை எதிரொலித்தது ராசாதிராசனின் முகம் தன் தந்தையின் திருப்தியை கண்டு மகிழ்ந்தது. வீர சொர்க்கம் அடைந்த முதலாம் பராந்தகர் முதல் ராசராச சோழர் வறை அவ்விடத்தில் தோன்றி அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்கள் மனம் குளிர ராசேந்திரனை வாழ்த்தவும் செய்தார்கள்.

             

– ஆதித்த கோமகன்

             

சரித்திர குறிப்புகள்

பல வருடங்களாக சோழர்களால் கைப்பற்ற முடியாத பாண்டியனின் மணிமுடியையும், ஆரத்தையும் ராசேந்திரர் மன்னர் பதவி ஏற்ற பிறகு முதல் போராக அமைகிறது.அதில் ஐந்தாம் மகிந்தனையும் அவன் பெண் மனைவி ஆகியோரும் சோழத்திற்கு கைதிகளாக வந்தார்கள.மகன் காசிப்பன் மட்டும் மறைமுகமாக சிங்கள மக்களால் வளர்க்ப்பட்டான். மகிந்தன் 14 வருடம் சோழ சிறையில் நாட்களை கழித்த பிறகு இறக்கிறான்.அதன்‌ பின்பு காசிப்பன்‌ வெளிவருகிறான்.

Leave a Reply