தூய தொல்குடிகள்

 
இந்தியாவில் முதல் முதலில் வாழ்ந்த மக்களை, First Indians என ஆய்வுலகம் குறிப்பிடுகிறது. இவர்கள் இந்திய நிலபரப்பு முழுவதும் வாழ்ந்ததால் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் இந்தியாவை வந்தடைந்த ஆப்ரிக்க இனமாகக் கருதப்படுகிறது. இவர்களை தென்னவர்களின் தொல்குடி மரபுவழி முன்னோர் (Ancient Ancestral South Indians). அதாவது தற்கால திராவிடர்களின் முன்னோர் என்பது பொருள்.
 
 
மேலும் இந்த தொல்குடி மரபினரின் மரபணுவில், 70,000, 45,000, 15,000 என பல்வேறு காலகட்ட மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணு தொடர்பே நாம் பழைய இனமாக இருந்தாலும், நேரடியாக ஆபிரிக்கர் போலல்லாமல் வேறுபட்ட முக, உடல் அமைப்பை நமக்கு அளிக்க ஒரு காரணமாகக் கூறப்படுகிறது
 
முன்பு திராவிடர் என அழைக்கப்பட்டவர்களை, ஆய்வாளர்கள் தற்போது புதிய கற்கால விவசாயிகள் (Neolithic Farmers), மரபுவழி தென் இந்தியர்கள் ASI Ancestral South Indians என அழைக்கிறது.
 
இவர்கள் தனி இனமாகக் குறிப்பிடாமல் இந்தியத் தொல்குடி மாந்தரும் (Ancient Ancestral South Indians), பழங்கால ஈரானிய முதல் விவசாயிகள் (Ancient Iranian Farmers) இணைந்து தெற்காசியாவில் உருவாகிய இனம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கலப்பு சுமார் 8-4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம் என மரபணு ஆய்வுகள் கூறுகின்றன.
 
பத்தாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, முதன் முதலில் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட சிறுது காலத்திலேயே இந்த ஈரானிய முதல் விவசாயக் குடிகள், மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து பிரிந்து இடம்பெயர்ந்து இந்தியப் பரப்புக்குள் வந்துவிட்ட இனம், என மரபணு ஆய்வுகள் கூறுகின்றன.
 
தொல்குடியினர் முதல், தென்னிந்தியப் பிராமணர் வரை மேற்கண்ட திராவிட கூறுகள் அதிகம் காணப்படுகிறது. மரபணு ஆய்வுகளின்படி இடை ஜாதி முதல், தாழ்த்தப்பட்ட ஜாதி வரை திராவிடர் எனப்படுவோர் மரபணுவில் 65% முதல் 75% வரை தொல்குடி மரபைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதம் 35% முதல் 25 % பழங்கால விவசாய மரபைச் சேர்ந்தவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
 
முன்பே கூறிய இழைமணி ஏவாள் m-DNA கருத்தியல்படி தென்னிந்தியாவில் திராவிட மொழிப் பேசும் எல்லா மாநிலத்திலும் ஆண்களை விடப் பெண்கள் அதிக சதவிகிதம் தொல்குடியைச் சேர்ந்தவர்கள், உயர் சாதியை விடத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மரபினர் அதிக சதவிகிதம் தொல்குடி மரபை உடையவர்கள்.
 
இந்திய இனங்களிலேயே அதிக சதவீத தொல்குடி மரபை உடையவர்கள் இருளர்கள், மற்றும் பணியர்கள். இவர்கள் மரபணுவும், 80-85 தொல்குடி மரபையும், மீதம் 20% பழங்கால விவசாய மரபையும் உடையவர்கள்.
 
இந்தியாவிலும் தமிழகத்திலும் கலப்பில்லாத தூய தொல்குடி மரபினர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிற்கால ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படலாம். அவ்வாறு இருந்தால் அவர்கள் சென்டினல் தீவு மக்களை போன்று இருந்திருப்பர் என ஆய்வாளர்கள் கருதுகின்றார்.
 
ஆனால் சென்டினல் தீவு மக்களும் தூய இனம் அல்ல, ஓரளவு தற்கால தென்கிழக்கு ஆசிய மரபணுவைக் கொண்ட கலப்பினத்தவர்கள் தாம்.
 
இதன் படி உலகில் மனித இடப்பெயர்வு மிகவும் பழமையான, தொடர்ச்சியான, சிக்கலான, அறுதியிட்டு கூறமுடியாத திசை மற்றும் காலத்தை உடையதாகவும் இருக்கின்றது. தற்கால மரபணு ஆய்வுகள் ஓரளவு இதற்கு வெளிச்சம் கொண்டுவர உதவுகின்றன.
 
படம்: அந்தமான் தீவு மக்களான சென்டினல் தொல்குடியினர் பற்றி எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்.
 
Source: The Sentinelese people, 1974 – Photo by Raghubir Singh, Nat Geo Image Collection