சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”

சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”.

இன்றைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள “திருப்பாம்புரம்”, சேக்கிழார் பாடலின் மூலம் ஏழாம் நூற்றாண்டிலேயே சிறந்து விளங்கிய ஒரு ஊராக இருந்துள்ளது.

இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் “ஆளவந்தாள்” என்ற பெண்ணொருவர் சில அடியார்களை (அடிமைகள்) வைத்திருந்த செய்தியும், அவர்களை கோயிலுக்கு கொடையாக அளித்த செய்தியும் அக்கல்வெட்டு வாயிலாக தெரிகிறது.

சோழர் காலத்தில் பஞ்சம் ஏற்படுபோதும், கடனுக்காகவும் தன்னை அடிமையாக விற்பது, போர்க்காலங்களில் அடிமை ஆக்கப்படுவது, அல்லது கோவிலுக்கு நேர்ந்துவிட்டு‌ அடிமையாகப்படுவது என பல்வேறு முறைகளில் அடிமை முறை இருந்துள்ளன. ஆனால் பெரும்பாலும் இவ்வகையான மக்களை அடிமையாக வைத்திருந்தவர்கள் ஆண்களாகவே இருந்துள்ளனர்.

ஆனால் சோழர்கள் காலத்தில் “ஆளவந்தாள்” என்ற பெண் ஒருவர் இவ்வாறாக மக்களை உடமையாக வைத்திருந்த செய்தி இவ்வூர் கோவில் கல்வெட்டில் நமக்கு தெரியவருகின்றது. இவர்களை அடிமைகள், அடியாள் எனக் குறிப்பிடாமல் அடியார்கள் எனவே கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன் மூலம் அடிமைகளாக இருந்தாலும், இவர்களை மதிப்புடன் நடத்தியிருக்கலாம் என எண்ணம் தோன்றுகிறது. இந்த அடியார்கள் அனைவரும் உறவினர்கள் என அக்கல்வெட்டு மூலம் அறிய முடிகின்றது. சோழர் காலத்தில் பஞ்சம் ஏற்படும் பொழுது, அல்லது பெற்ற கடனுக்காக தங்கள் குடும்பத்தை அடிமையாக விற்று கொள்ளும் முறை இருந்துள்ளது.

அதேபோல அடிமை முறையில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் அடிமைப் படுத்தப்பட்டனர் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை. எல்லா சமூகங்களில் இருந்தும் மக்கள் பொருளாதார சிக்கலில் போது கடனுக்காக தங்களை தாங்களே அடிமையாக விற்றுக் கொண்டுள்ளனர்.

இன்று அடிமை முறை ஒரு தவறான கொள்கையாக இருந்தாலும் அன்றைய சமூகத்தில் அடிமை முறை இருந்துள்ளது என்பதை வரலாற்று அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் பெண்களின் பல ஆளுமைகள் நமக்குத் தெரியவருகின்றன குறிப்பாக நிலவுடமை, சொத்து உரிமை, பொருளாதார உரிமை, அதிகாரிச்சியாக ஆட்சியில் பங்கு, சமூக பணி மற்றும் சமயத்தில் பங்களிக்கும் உரிமை போன்றவை பற்றி நாம் படித்திருந்தாலும், இவ்வாறு மக்களை பணிக்காக அடியார்களாக வைத்திருக்கும் உரிமை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இருந்துள்ளது, என்பது மிகவும் வியக்கத்தக்க செய்தியாக உள்ளது.

உண்மையில் பெயருக்கு ஏற்றார் போல ஆளவந்தாளாக திகழ்ந்துள்ளார் அந்தப் பெண்மணி.

தொடர்ந்து இவ்வாறான வரலாற்று செய்திகளை அறிய மறக்காமல் இப்பதிவை பகிருங்கள், விருப்பத்தை (👍🙂❤️😡😥) பதிவில் தெரிவியுங்கள். Thali Heritager Magazine எங்களுடைய பக்கத்தை Follow செய்யுங்கள். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையாக வாழ்த்துக்கள். நன்றி…

கருத்துப்படம்: சோழர்கால பெண் சிற்பம்.

#Heritager

Leave a Reply