கோதண்டராமன் எனப் பெயர் கொண்ட சோழ மன்னன் யார்?

கி . பி . 907- ஆம் ஆண்டில் சித்தூர் மாவட்டம் திருக்காளத்திக்கு அண்மையிலுள்ள தொண்டைமான் பேராற்றூரில் சோழ அரசரான  முதலாம் ஆதித்தன் இறந்தனன் என்று தெரிகிறது. அக்காலத்தில் அவ்வூர் தொண்டைமானாடு என்று வழங்கப்படுகிறது .
ஆதித்தனின் புதல்வனாகிய முதற் பராந்தக சோழன் தன் தந்தையை நினைவை போற்றி, ஆதித்தேசுவரம் கோதண்ட ராமேசுவரம்  என்ற பெயரில் பள்ளிப்படைக் கோவிலை கட்டியுள்ளார்.

சோழ அரசரான ஆதித்தனுக்குக் “கோதண்டராமன்” என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதனை என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

பராந்தகன் தன் தந்தையின் பள்ளிப்படையாகிய கோதண்டராமேசுவரத்தில் புரட்டாசித் திங்களில் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்கும், மாவிரதிகளுள்ளிட்ட அறுசமயத்தவசிகள் இருநூற்றுவர், அந்தணர்முந்நூற்றுவர், அன்பரான பல சமய ஐந்நூற்றுவர், ஆகிய ஆயிரவர்க்கும் அவ்விழா நாட்களில் நாள்தோறும் அன்னதான உணவளிப்பதற்கும் முதலாக நூற்றைந்து கழஞ்சு பொன் கொடுத்துள்ளார்.

கோதண்டராமன் என்ற சொல்லுக்கு தமிழில் வில்லாளன் தமிழ்  அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர்.