கி.மு 3 நூற்றாண்டை சேர்ந்த இலங்கையில் தமிழ் வணிகரின் அரண்மனை

கர்நாடக கோட்டிகம் கைபீது, மதுரை நாயக்கரை, வளஞ்சியர் வர்ண (வணிகர் குல) கரிகபாடி வம்சம் என்று அழைக்கிறது. இதில் கரிகபாடி என்பது, அரசர் என்பதைக் குறிக்கும் குலத் தலைவர் அல்லது அரண்மனையின் தலைவர் என்பதனைக் கூறிவரும், கிருஹபதி என்பதன் மரூஉ ஆகும்.
கிருஹபதி என்பதன் பொருள், பணக்கார வீட்டு உரிமையாளர், ஒரு குழுவின் தலைவர், நில உடைமையாளர், அல்லது வணிகர் நிறுவனத்தின் தலைவர் உரிமையாளர் என்பதை குறிக்கும் சொல் ஆகும். கிருஹபதி வணிகர்களுக்கு வழங்கப்படும் பெயராக உள்ளது. கிட்டத்தட்ட உடையார் என்பதற்கு இணையான சொல். பிராமண, சத்திரிய, வைசிய எனக் குறிப்பிடும் இடங்களில், வைசிய எனபதற்கு பதிலாக கஹபதி வருகிறது. செட்டி கஹபதி என்பது வணிகரை குறிக்கும்.

ஆரம்பக்கால கட்டத்தில் அனைத்து குல தலைவர்களும் கிருஹபதி என்ற அழைக்கபட்ட போதிலும், நாட்டின் அரசனுக்கு வணிக க்ருஹபதிகள் அளித்த வரி மற்றும் பொருள் வளத்தால் வணிகத் தலைவர்களை மட்டும் பெரும்பாலும் குறிப்பிடும் சொல்லாக மாறியது. இது குப்தர்கள் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். வரலாற்று ஆய்வாளர்கள், எல்லா வீடு உடமையாளரும் அல்ல, மாறாக ஒரு வலிமையையும், பெருமையும் மிக்க தலைவர்களே கிருஹபதி என அழைக்கப்பட்டனர், என்கின்றனர்.

இலங்கையில் கரையார் குல வணிகரின் அரண்மனையில் பழஞ்சிங்களம் பேசிய தமிழ் கரையார் கடல் வணிகர்களின் பிராமி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில்

Ilubaratahi Dameda-Samane karite
Dameda-Gahapatikana pásáde
Sagasa ásane
Nasatasa ásane
Ka _ _ _ Tisaha ásane
_ _ _ ásane
Kubira Sujhataha
Návika Káravaha ásane

பரத நாட்டை சேர்ந்த தமேத (தமிழ்) சமணர் (பௌத்த சாமியார்), தேமேத கஹபதி ( தமிழ் க்ருஹபதி) க்கு கட்டுவித்த ஆசனம். அதிலுள்ள கட்டுமனாங்களை நோக்கும் போது, அங்கே மரத்தால் ஆனா மேல்தளம் அமைக்கப்பட்ட ஒரு பெரிய வீடு அல்லது அரண்மனையை, அது அந்த கடல் வணிகர் பயன்படுத்தி இருக்ககூடும் என்றும். கீழ்த்தளம் அந்த சாமியார் பயன்படுத்தி இருக்ககூடும் எனத் தெரிகிறது.

இங்கு தமிழ் தமேத என குறிப்பிடப்படுகிறது. தமேத, த்ரமில, த்ரமிட, திராவிட என்பன தமிழ் என்பதன் திரிபு.
அந்த வணிகர், கரையார் குல கடல் வணிகர் குபேர (குபீர) சுஜாதா என அழைக்கப்பட்டுள்ளார். இந்த அரண்மனை அல்லது தங்குமிடம் வணிகர்கள் கூடி கூட்டம் நடத்திய இடமாக இருக்கலாம் எனப்படுகிறது. அதன் உரிமையாளர் தமிழ் கரையார் குல கடல் வணிகர் கிருஹபதி என அழைக்கபட்ட குபீர சுஜாதா ஆவார்.
குபீர, குருவீர, குவேர, குவீர என்பவை குபேரனை குறிப்பவை, குவை என்ற தமிழ் சொல் மூலமுடைய, வணிகரின் பட்டம் எனக் கருதலாம்.

இது சிங்கள மொழி கல்வெட்டாக இருந்தாலும், தமிழர் சார்புடைய கல்வெட்டு என்று அறிக. மேலும், சிங்கள ஆய்வாளர்கள் இலங்கையில் கிடைத்த முற்கால பௌத்த சமய கல்வெட்டுகள் மொழி அடிப்படியிலோ, மக்கள் அடிப்படையிலோ தமிழோடு தொடர்புடைய ஒன்றாக உள்ளது. எனவே இலங்கையில் பௌத்தம் வளர்த்தது தமிழரே என்கின்றனர்.

Evolution of Social Structures in India Through the Age