அடிமைகளால் உருவாக்கப்பட்ட அங்கோர் வாட் – டேவிட் லிவிங்ஸ்டன

“அங்கோர் வாட்” என்றவுடன் நம் நினைவிற்க்கு வருவது அக்கோயிலின் கட்டக்கலை, நீர்மேலாண்மை முறை மற்றும் அதைக் கட்டிய மன்னனின் பெருமை போன்றவை மட்டுமே இவற்றை மட்டுமே நாம் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறோம். இதே மனநிலையில்தான் அனைத்து கற்கோயில்கலையும் கண்டு நாம் வியப்படைகிறோம். இத்தகைய பெருமைகளை மட்டுமே ஆய்வாளர்கள் பேசியும், எழுதியும் வருகிறார்களேயொழிய வரலாற்றின் மறுபகுதியைப் பற்றி பேசுவதில்லை அது கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது.

ஒரு பேரரசின் பெருமை என்பது அக்குடிமக்களின் வாழ்வாதாரம், கலை, பண்பாடு, போன்றவற்றை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும், ஆனால் நமக்கு கொடுப்பதோ மன்னர்களின் பெருமைமிக்க வரலாறு மட்டுமே குடிமக்களின் நிலை எப்படி இருந்தது என்று நாம் கவலைபடுவதில்லை. இப்படி கண்டுக்கொள்ளப்படாத, கண்டுக்கொள்ள விரும்பாத வரலாற்று பக்கத்தை புரட்டினால் பல விடயங்கள் நம்மை அதிர்ச்சியடையச்செய்யும். அப்படிபட்ட பக்கத்தைதான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இன்றைய கம்போடியாவில் உள்ளது. வெவ்வேறு காலக்கட்டத்தில் இப்பகுதியை ஆண்ட பேரரசுகளின் காலம் பற்றி பார்ப்போம்.

1. கி.பி முதலாம் நூற்றாண்டு முதல் 550 வரை புன்னன் (funan) பேரரசு
2. கி.பி 550 – 802 வரை சென்லா (Chenla) அரசு
3. கி.பி 802 – 1431 வரை கேமர் பேரரசு (Khmer empire)
4. கி.பி 15 ஆம் நூற்றுண்டு முதல் 1863 வரை இருண்டகாலம், புத்த மதம் செழித்த காலம்.
5. 1863 – 1953 பிரெஞ்சு ஆட்சி

இவற்றில் நாம் பார்க்கவிருக்கும் பேரரசு கி.பி 802 – 1431 வரை ஆட்சிபுரிந்த கேமர் பேரரசு பற்றி தான் ஏனெனில், இந்த பேரரசு காலத்தில் தான் அங்கோர் நகரம் உருவாக்கப்பட்டது இது ஒரு நதிக்கரை நாகரிகம் என்பது நினைவில் கொள்க. இந்த பேரரசை நிறுவியவர் “இரண்டாம் ஜெயவர்மன்” இவர் ஆட்சியில் தான் அங்கு இந்து மதம் (சைவ, வைணவம்) முதன் முதலில் நுழைந்தது.

இவர் தன்னைத்தானே “Chakravartin” என அறிவித்துக் கொண்டார் அதன் பொருள் “king of the world “ or “ King of the god” இந்தப் பெயரை சூட்ட வட இந்திய – Jandapada லிருந்து வந்த பிராமண புரோகிதரால் ஜாவாவில் சடங்கு (யாகம்) நடத்தப்பட்டது.

எங்கெல்லாம் வைதீக மதம் பரவியதோ அங்கு மனுதர்மம், வர்ணாசிரமம் கடைபிடிக்கப்பட்டிருக்கும். கம்போடியாவிலும் அதேதான் நிகழ்ந்தது அவற்றைப் பிறகு பார்ப்போம்.

கோயில் உருவாக்கம் மற்றும் அடிமைகள் :

இரண்டாம் ஜெயவர்மனுக்கு அடுத்து 11, 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இரண்டாம் சூரியவர்மனால்தான் இக்கோயில் கட்டிமுடிக்கப்பட்டது. அங்கோர் வாட் என்பது ஒரு சமஸ்கிருத சொல் அதன் பொருள் “நகர கோயில்” என்பதாகும். இக்கோயில் தென்னிந்தியாவில் உள்ள பல்லவ, சோழ கட்டிடக்கலையை ஒத்துள்ளது. இதனை பிராமணர்களின் ஆலோசனைபடி கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மேலும் இப்பகுதிக்கு தென்னிந்தியாவிலிருந்து பிராமணர்கள், மத குருமார்கள் குடியேறியதாகவும் இந்த அழைப்பு அரசனால் விடுக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இக்கோயில் மிகப்பெரிய பரப்பளவில் மேம்பட்ட நீர்மேலாண்மையுடன்¢ கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்டி முடிக்க அதிகப்பட்டியான அளவில் மனித உழைப்பு தேவைப்பட்டது. அதற்கு அடிமைகள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்களின் கடின உழைப்பால், இரத்தத்தினால்தான் இந்த அங்கோர் வாட் கோயில் உருவானது. இக்காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியை இப்பேரரசு ஆண்டுவந்ததால் அதிக அளவிலான அடிமைகளை கட்டமைக்முடிந்தது.

இக்கோயிலை கட்டுவதற்கு 3,06,372 அடிமைகள், 6000 யானைகள், 3000 எருது வண்டிகள், 5000 கட்டடக் கலைஞர்கள், சிற்பிகள் கொண்டு 37 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டதாக கட்வெட்டு கூறுகிறது.

மற்றும் கி.பி 9 நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் (இக்கோயில் கட்டுவதற்கு முன்) 40,000 அடிமைகள் இருந்ததாக கூறுகிறது. கேமர் பேரரசு ஆட்சியில் அடிமைகளின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம் என்றாலும் இங்கு பலதரபட்ட அடிமைகள் இருந்துள்ளது புலனாகிறது.

அவை

1. போரில் பிடிபட்ட கைதிகள்.
2.சட்டவிரோதமாக விலைக்கு வாங்கபட்ட மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகள்.
3. மலைகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் (mountain tribes).
4. வரி செலுத்த முடியாமல் அடிமையாக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் குடிமக்கள்.

வணிகம்

கேமர் பேரரசின் மிகப்பெரிய பலம் அதன் வணிகத்தை (அரசி, மீன் வணிகம்) சார்ந்தே இருந்தது. இங்கு அமைந்துள்ள மேக்காங் ஆறு (Mekong River) வணிகத்திற்கும், விவசாயத்திற்கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நதியின் மூலம் மிகப் பெருமளவில் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு வடக்கு, தெற்கு பகுதி முழுவதும் சென்று வாணிபம் செய்தன்ர். இந்த வணிகம் உள்நாட்டில் மட்டுமல்லாமல் “1,100 – Sea routes” மூலம் தென்னிந்தியா உட்பட அனைத்து தென்கிழக்காசியா முழுவதும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். இவை பண்டமாற்று முறையில் தங்கம், வௌ¢ளி கொண்டு வர்த்தகம் நிகழ்ந்துள்ளது.

அரிசி, மீன் மட்டுமின்றி காண்டாமிருக கொம்பு, தந்தம், தேன், அரக்கு, ஏலக்காய், மிளகு, இறகுகள், பட்டு, காதிதம், உலோகபொருட்கள், பீங்கான் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த வணிகம் செழிப்பாக இருக்க முக்கிய காரணம் அவற்றை உற்பத்தி செய்த தொழிலாளர்களே அதற்கான பலன் இந்த தொழிலாளர்கள் பெற்றார்களா, அவர்களின் சமூக அந்தஸ்த்து எப்படி இந்தது என்பதை பார்போம்.

சமூக கட்டமைப்பு

இந்த சமூக கட்டமைப்பு மூலமே வணிகம் செய்து பொருளாதார பலம் பெற்றது இந்த கேமர் பேரரசு. இந்த கட்டமைப்பு இந்தியாவில் இருந்த நிலப்பிரபுத்துவம் (feudalism) மற்றும் வர்ணாசிரம படிநிலை போலவே உள்ளது. சமூக படிநிலையில் முதலில் உள்ளவர் Chakaravartin (அரசர்), இரண்டாம் நிலையில் “Royal family” இந்த அரச குடும்பத்தில் உள்ளவர்கள் இந்திய பிராமணர்கள் மற்றும் கேமர் பிராமணர்கள். இவர்கள் மத குருமார்களாகவும், ஆலோசகர்களாகவும், நில உரிமையாளர்களாகவும் இருந்துள்ளார்கள். இவர்கள் அதிகாரம் படைத்தவர்கள் உயர் செல்வந்தர்கள், இந்த பிராமணர்கள் மன்னனின் மகளை திருமணம் செய்தும் சில சமயம் அரசர்களாகவும் இருந்துள்ளார்கள்.

மூன்றாவதாக உள்ளவர்கள் அரச அதிகாரிகள் இவர்கள் அரசரின் உறவினர்கள் இவர்களே பேரரசு முழுவதும் உள்ள நிர்வாக பணிகளை பார்த்துக் கொள்பவர்கள். மேலும் பேரரசு முழுவதும் உள்ள கிராம கோயில்களை பிராந்திய கோயிலுடனும் அங்கிருந்து மைய்ய கோயிலுக்கும் இணைத்து – (Network) – தகவல்கள் அரசனிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்தார்கள். மற்றும் இக் கோயில்களும் பூசாரிகளும் மக்களிடமிருந்து வரியாக (tax) தானியங்களை வசூலித்துவந்தார்கள்.

நான்காவது படிநிலையில் உள்ளூர் வியாபாரிகள், சிற்ப கலைஞர்கள், கைவினை கலைஞர்கள் இருந்துள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு.

ஐந்தாவதாக விவசாய தொழிலாளர்கள் இவர்கள் கிட்டத்தட்ட அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். இவர்களின் வேலை தானியங்கள், அரசி உற்பத்தி செய்வதே. இவர்கள் கட்டாயமாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்த முடியாமல் போனால் அடிமைகளாக்கப்படுவார்கள். அரிசி வணிகத்திற்கு காரணமாக இருந்த இவர்களுக்கு மேல்மட்டத்தில் இருந்தவர்களைப் போலல்லாமல் உரிமையின்றி
வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களின் வீடுகள் அவர்கள் பணியாற்றும் வயல்களில் கூரையால் அமைத்து ஏழ்மையில் இருந்தார்கள். ஆனால் அதிகார வர்க்கத்தில் இருந்தவர்களோ தங்கம், வௌ¢ளி பாத்திரங்களில் உணவு உண்டு வந்திருக்கிறார்கள்.
கடைசி படிநிலையில் உள்ளவர்கள் அடிமைகள் இவர்களுக்கு எந்த உரிமையும் சுதந்திரமும் இல்லை. முன்பே பார்த்தது போல இதில் பலதரபட்ட அடிமை இருந்துள்ளர்கள். இவர்கள் கட்டடங்கள் கட்டுவதுமட்டுமில்லாமல் அதிகார வர்க்கத்திற்கும், கோயில்களுக்கும் அடிமைகளாக இருந்தார்கள். குறைந்த பட்சம் ஒரு குடும்பம் 10 முதல் 20 வரை அடிமைககளையும் அதிகபட்சமாக 100 அடிமைகளையும் பெற்றிருந்தார்கள். இவர்கள் தப்பிக்க முயன்றால் மீண்டும் கண்டுபிடித்து பச்சை குத்தி சங்கிலியால் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்படுவார்கள்.

பேரரசு வீழ்ச்சி

இப்படி அடிமைகளின் இரத்தத்தை குடித்து கொழுத்துண்ட இந்த நிலப்பிரபுத்துவ Indianized பேரரசு 13, 14 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சிக்கு பலதரபட்ட காரணங்கள் உள்ளன அவற்றை பின்வருமாறு பார்ப்போம்

சுற்றுசூழல் மற்றும் பொருளாதார பாதிப்பு

அங்கோர் நகரம், கோயில்கள், விவசாய நிலங்கள், நீர் பானங்கள் அமைப்பதற்க்காக பெருமலவிலான “காடுகளை அழித்ததால்” பருவகால மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீர் குறைந்தது. அதனால் போதிய அளவு அரிசி, தானியங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் போனது மீன்களும் இறந்து போனது.

இதன் காரணமாகவும், அண்டைநாடுகளுடனான போரின் காரணமாக வணிக சிக்கல்கள் ஏற்பட்டு பொருளாதாரம் பாதிப்படைந்தது. இதனால் இராணுவ படையை பராமரிக்க முடியாமல் போனது.

மத மாற்றம்

பேரரசின் இறுதி பகுதியில் அரசன் மகாயான பௌத்தத்தை தழுவியபோது மக்கள் அரசுக்கு எதிராக தேரவாத பௌத்தத்தை பின்பற்றினார்கள் இதன் காரணமாக பேரரசில் மாற்றம் நிகழ்ந்தது மக்கள் ஞானத்தை தேடினார்கள், அரசனை “God of King” கடவுளாகப் பார்ப்பதைத் தவிர்த்தார்கள். அரசின் கட்டளைகளுக்கு ஒத்துழைக்காமல் இருந்தார்கள்.

இதுபோன்ற பல காரணங்களாள் அண்டை நாடுகளின் படையெடுப்பாலும் பொருளாதார சிக்கல்களினாலும் சமாளிக்க முடியாமல் வீழ்ச்சியை சந்தித்தது.

Leave a Reply