உலகம் தோன்றிய காலம் தொட்டு தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்து, தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றை சுருக்கமான, கருத்துகளின் தொகுப்பே இந்த நூல். இந்த மாவட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவு, மக்களின் கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களை அடுக்கி படிப்போரை வியக்க வைத்திருக்கிறார் நூலாசிரியர். ‘அகழில் மிகப் பழமையான சமண கல்வெட்டுகள் தமிழின் மிகப் பழமையான கல்வெட்டு, குன்னம் கிரானைட் பாறைகள், வழுதாவூர் படிவப் பாறைகள், திருவக்கரை கல்மரங்கள், ஓடைதேரி மண்டையோடு, பெருங்கற்கள், பாறை ஓவியங்கள் என பல அறிவியல்பூர்வ ஆதாரங்களை வைத்து ஆதித் தமிழ் நாகரிகம் வளர்ந்த இடங்களில் விழுப்புரம் மாவட்டம் முக்கிய இடத்தை வகிப்பதை சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியதாகும். ‘260 கோடி ஆண்டுகளுக்கு முன்பு’, ‘முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்’ உள்ளிட்ட 27 கட்டுரைகள் அரிய, வியத்தகு செய்திகளை உள்ளடக்கியுள்ளன. பல்லவர், சோழர், காடவராயர், விஜயநகர ஆட்சி, செஞ்சி நாயக்கர்கள் ஆட்சி, முகலாயர் ஆட்சி, பிரெஞ்சியர், ஆங்கிலேயர் என அந்நியரின் ஆட்சியில் எவ்வளவு போர்களை விழுப்புரம் சந்தித்தது என்பதையும், விடுதலைப் போரில் மாவட்டப் பங்களிப்பை நூலில் சரியான முறையில் விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய பிரபலங்கள் பட்டியல் நூலுக்கு மெருகூட்டுகிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
விழுப்புரம் மாவட்டம் கல்தோன்றிய காலம் முதல் – கோ.செங்குட்டுவன்
₹350
உலகம் தோன்றிய காலம் தொட்டு தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்து, தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் வரலாற்றை சுருக்கமான, கருத்துகளின் தொகுப்பே இந்த நூல். இந்த மாவட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவு, மக்களின் கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களை அடுக்கி படிப்போரை வியக்க வைத்திருக்கிறார் நூலாசிரியர். ‘அகழில் மிகப் பழமையான சமண கல்வெட்டுகள் தமிழின் மிகப் பழமையான கல்வெட்டு, குன்னம் கிரானைட் பாறைகள், வழுதாவூர் படிவப் பாறைகள், திருவக்கரை கல்மரங்கள், ஓடைதேரி மண்டையோடு, பெருங்கற்கள், பாறை ஓவியங்கள் என பல அறிவியல்பூர்வ ஆதாரங்களை வைத்து ஆதித் தமிழ் நாகரிகம் வளர்ந்த இடங்களில் விழுப்புரம் மாவட்டம் முக்கிய இடத்தை வகிப்பதை சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Weight | 0.25 kg |
---|